'விபரங்கெட்ட' வினவு செய்தியாளர், சவுதியிலிருந்து…..
Wednesday, January 25, 2012
கருத்து சுதந்திரம், கத்தரிக்காய் சுதந்திரம் என்றெல்லாம் உசுப்பேற்றி பதிவிடும் வினவுக்கு, பின்னூட்டவெறி தலைக்கேறினால் இஸ்லாம் அல்லது முஸ்லிம் குறித்து எதையாவது எழுதி இணைய சுகம் காண்பது வினவுக்கு அவ்வப்போதைய பொழுதுபோக்கு.
வினவுக்கு கீழ்கண்ட மடலை அனுப்பி வெளியிடக்கோரி 24 மணிநேரம் கடந்த பிறகும் பதில்லாத காரணத்தால், இதை பதிவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.இனிமேல் தோழர் வினவு உரிமை,சுதந்திரம் என்று பதிவெழுதுவதில் அர்த்தமில்லை. அதற்கான அருகதையை இழந்து விட்டார்கள் என்று தெரிவிக்க வேண்டி வினவுக்கு அனுப்பிய மடலை பதிகிறேன்.
=======================
அன்புள்ள தோழர் வினவுக்கு,
சவூதி ஓஜர் கம்பெனியில் ஊழியர்களுக்கு அநீதியிழைக்கப்படுவது குறித்து வினவு ஓர் பதிவில்,நிறுவனம் நிர்வாகம் ஊழியர்களை வஞ்சிப்பது குறித்து எழுதியிருந்தால் இந்த மடலுக்கு அவசியம் வந்திருக்காது. சம்பந்தமே இல்லாமல் தலைப்பில் "சௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் அல்லாவின் தேசம்!.."என்று தலைப்பிட்டிருந்ததால் வினவுவின் புத்தியில் உரைக்கும்படி சில விசயங்களைக் குறிப்பிட வேண்டியுள்ளது.
பின்னூட்டமாக எழுதினால் அதைப்பிடித்து தொங்க சிலருள்ளதால் மடலாக அனுப்புகிறேன். நேர்மையாக வினவு தளத்தில் இதை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்.
1) சவூதி அரேபியா என்பது பண்டைய இந்தியாவைப்போல் சிறுசிறு நகரங்களாக சிதறிக் கிடந்த பாலைநில சிற்றரசுகளை 19 ஆம் நூற்றாண்டில் பிறந்த "அப்துல் அஸீஸ் பின் ஸவூத்" என்ற அரேபியர் ஒருங்கிணைத்து உருவாக்கிய தேசம்.அதனால்தான் அவரது பெயரால் "ஸவூதி அரேபியா" என்று அழைக்கப்படுகிறது.
2) ஸவூதி உட்பட அரபு நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தாலும்,இஸ்லாம் பெயரளவிலும், இதன் ஆட்சியாளர்களில் பலர் இஸ்லாத்தின் அடிப்படை மக்களாட்சிக்கு எதிரான மன்னராட்சிமுறையையே பின்பற்றி வருகிறார்கள்.
3) மத்திய கிழக்கு மற்றும் எண்ணெய்வள நாடுகளின் செல்வச் செழிப்பின் பின்னணியில் கோடிக்கணக்கான வெளிநாட்டவர்களின் கடின உழைப்பு காரணமாக உள்ளது.குறிப்பாக இந்நாடுகளிலுள்ள இந்தியர்களின் பங்களிப்பு மற்ற நாட்டினரைவிட கூடுதல் என்பது மறுக்க முடியாது உண்மை.
4) வெளிநாட்டினரை மூலதனமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களில் பல்வேறு வகையான பாகுபாடுகள் உள்ளன. உள்நாட்டு மக்களுக்கு குறைவான உழைப்புக்கு அதிக சம்பளமும் சலுகைகளும் வழங்கப்படுவதாக சொல்லப் பட்டாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவே போதவில்லை என்ற புலம்பல்களும் இருக்கவே செய்கிறது. இதுகுறித்து தேவையெனில் விபரமாக எழுதுவேன்.
5) இந்நாடுகளில் பணியாற்றும் வெளிநாட்டவர்களில் உள்நாட்டு குடிமக்களுக்கு நிகராக அல்லது அவர்களை விடவும் கூடுதல் சலுகைகளும் ஊதியமும் பெறும் வெளிநாட்டவர்களும் உள்ளனர். உதாரணமாக, அமெரிக்க குடியுரிமை பெற்ற மேலாளரின் ஊதியம், இந்திய குடியுரிமைபெற்ற மேலாளரின் ஊதியத்தைவிட, உள்நாட்டு குடிமகன் பெறும் ஊதியத்தை விடவும்கூட அதிகம்.அதேபோல், ஒரே மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் இந்திய நர்ஸ் பெறும் சம்பளமும் சலுகைகளும்,பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து நாட்டு நர்ஸுகள் பெறுவதைவிடவும் குறைவு.
6) ஓமான் மற்றும் ஐக்கிய அரபு குடியரசில் அந்நாட்டு குடிமகன்களைவிட வெளிநாட்டவர்கள் குறிப்பாக இந்திய குடிமக்களின் எண்ணிக்கை அதிகம். ஓமானில் இந்திய முதலாளியிடம் ஊதியத்திற்கு பணியாற்றும் உள்நாட்டு அரபுகளின் எண்ணிக்கை சமீப சிலவருடங்கள்வரை கட்டுக்கடங்காமல் போகவே சிறப்பு சட்டங்களை இயற்றி குடிமக்களுக்கு சலுகை வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டது என்றால் அரபு நாடுகளில் இந்தியர்களின் ஆதிக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பதை அறியலாம்.
7) ஐக்கிய அரபு குடியரசில் மிகப்பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களான ETA, LULU, EMKAY குரூப் போன்றவற்றின் நிறுவனர்களாகவும், உயர் பதவிகளிலும் இருப்பவர்களில் பலர் உள்நாட்டு அரபுக்கள் அல்லர்! அதாவது இந்தியர்கள்! அதாவது உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால் உழைப்பால் உயர்ந்தவர்கள்.
நிற்க,
1970 களில் இந்தியர்களின் கனவுபுரியாக இருந்த துபாய் உள்ளிட்ட அரபுநாடுகள்மீதான மோகம் இந்தியர்களை இன்னும் விட்டபாடில்லை.1990 களில் கணினி மற்றும் இணைய தொழில் நுட்பத்தில் இந்தியர்கள் உலகளவில் தவிர்க்கமுடியாத சக்தியாக உருவெடுக்கும்வரை இந்திய அந்நியச்செலவாணி கையிருப்பை தக்கவைக்க இந்த நாடுகளிலிருந்து பெற்ற இந்தியர்களின் ஊதியங்களே உதவின.
நம்நாட்டில் இடைநிலை ஊழியர்கள் பெறும் மொத்த ஊதியத்தைவிட, வளைகுடா நாடுகளில் கடைநிலை ஊழியரின் ஊதியம் அதிகம் என்பதால், நம்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் ஊதியத்தைவிட அதிகம் என்பதால்தான் 40 ஆண்டுகளாக இந்த அரபுநாட்டு மோகம் இந்தியர்களைப் பிடித்தாட்டுகிறது.
தகுதிக்கேற்ற அல்லது சிலரின் தகுதிக்கு மீறிய ஊதியம் வழங்கும் அரபு நாட்டு நிறுவனங்களும் இல்லாமல் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக அனேக வளைகுடா நாடுகள் உள்நாட்டு குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டிற்கான பல சட்டதிட்டங்களை இயற்றியும், வெளிநாட்டவர்களின் சராசரி ஊதியத்தைவிட இந்த நாட்டு குடிமக்களின் ஊதியம் குறைவே. இருந்தபோதிலும் எந்த அரபு குடிமகனும் "இந்தியனே வெளியேறு!" என்று இயக்கம் நடத்திப்போராட வில்லை என்பது வினவு போன்றவர்களுக்குத் தெரியுமா?
விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்கூட இல்லாத ஒருசில நிறுவனங்களில் நடக்கும் முதலாளியத்துவ அடக்கு முறையை,அந்த நிறுவனங்கள் சவூதியில் இருப்பதால் மதரீதியில் குறைசொல்லி பதிவிடுவது நேர்மையற்றதும், உள்நோக்கம் கொண்டதும், முஸ்லிம்கள் மீதான வன்மமும் ஆகும்.
பின்னூட்டத்தில் ஒரு அன்பர் சொல்லியிருப்பதுபோல், தீவிரவாதிகளுக்கும் முதலாளிகளுக்கும் மதமில்லை. ஜனநாயக,சோசலிச முதலாளிகளைவிட ஓரளவு நியாயமான முதலாளிகள் சவுதி உள்ளிட்ட அரபு நாடுகளில் அதிகம்.இதற்கு அவர்களில் கடுகளவேணும் அல்லாஹ் நம்மைக் கண்கானிக்கிறான் என்ற எண்ணமே காரணம்.
குறிப்பு: இது சவூதிக்கு வக்காலத்து வாங்குவதற்காக எழுதப்பட்டதல்ல.முஸ்லிம்களால் ஆளப்படும் ஓர் தேசம் என்பதால் அதிலுள்ள நிர்வாக குறைகளை இஸ்லாத்தோடு இணைத்து எழுதியதற்கான எதிர்வினைகூடஅல்ல. சிறுவிளக்கமே.
நன்றி.மாற்றுக் கருத்து இருப்பின் தயக்கமின்றி பதிலிடவும்.
=====================
தொடர்புடைய மரைக்காயர் பதிவு:

உண்மையிலேயே வினவுக்கு தொழிலாளிகளின் துயர் தீர்க்கும் சமூக ஆர்வமிருந்தால் அதற்கு வழிசொல்லும் செல்லரித்து வழக்கொழிந்துபோன கம்யூனிச சித்தாங்களைவிட, இஸ்லாத்தில் தீர்வுகள் உண்டு. இதை வினவு நடுநிலையாக அணுகி விமர்சிக்கலாம்.
குறிப்பு: இது சவூதிக்கு வக்காலத்து வாங்குவதற்காக எழுதப்பட்டதல்ல.முஸ்லிம்களால் ஆளப்படும் ஓர் தேசம் என்பதால் அதிலுள்ள நிர்வாக குறைகளை இஸ்லாத்தோடு இணைத்து எழுதியதற்கான எதிர்வினைகூடஅல்ல. சிறுவிளக்கமே.
நன்றி.மாற்றுக் கருத்து இருப்பின் தயக்கமின்றி பதிலிடவும்.
=====================
தொடர்புடைய மரைக்காயர் பதிவு:

18 comments:
வினவு எழுதி இருக்கும் பிரச்னை குறித்து நீங்கள் பதில் சொல்லாமல் , வேறு ஏதோ கதை எழுதுகிறீர்கள்.
ஓஜர் என்ற இஸ்லாமிய நிறுவனம், ஊழியர்களுக்குப் போதுமான வசதிகள் அழிப்பது இல்லை என்பதே பிரச்னை.
நீங்கள் மறுத்து எழுத வேண்டும் என்றால், ஓஜர் நிறுவனம் ஊழியர்களுக்கு அளிக்கும் சலுகைகள், வசதிகள் குறித்து எழுத வேண்டும், புகைப் படங்கள், காணோளிகளைப் பகிர வேண்டும்.
உங்கள் மறுமொழி , வினவு எழுதிய பிரச்சனைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாததால் தான் வெளியட வில்லை என எண்ணுகிறேன்
ராம்ஜி_யாஹு,
வினவு எழுதியிருக்கும் பதிவு முதலாளி-தொழிலாளி பிரச்சினையைமுன்வைத்து அல்ல என்பதற்கு அவர்கள் வைத்துள்ள தலைப்பிலிருந்து அறியலாம். உலகம் முழுவதும் தொழிலாளர்களை வஞ்சிக்கும் முதலாளிகள் உள்ளனர். அதேபோல் சவுதியிலும் இருக்கலாம். ஆனால், அவரது தலைப்பு சொல்லும் தகவல் விஷமத்தனமாக இருக்கிறது. வினவின் பதிவைப் பாருங்கள்.
ஓஜர் இண்டர்நேசனலின் சவுதிகிளை ஓஜர்-சவுதி நிறுவனம் என்பதால் தலைப்பில் அல்லாவின் தேசம் என்று எழுதியிருப்பது உள்நோக்கம் உள்ளது.
இப்பதிவு,அரபுநாடுகளில் வஞ்சிக்கப் படாத தொழிலாளர்களும் உள்ளனர் என்பதையும் உணர்த்தவே எழுதியது.
சவுதி தலைநகர் ரியாதில் இருந்தபோது நான் பார்த்த தொழிலாளர் கேம்ப்-களில் சவூதி ஓஜர் நிறுவன கேம்ப் தரமானது. சவுதியிலுள்ள நிறுவங்கள் பிறநாட்டு நிறுவனங்களைப்போலன்றி சில உபரி கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றனர். குடிப்பழக்கம், துர் நடத்தை போன்ற ஒழுங்கு விதிகளை நிறுவனம் மட்டும் இன்றி லோக்கன் போலிஸும் கண்கானிக்கும். அவ்வகையில் வினவு செய்தியாளரின் தரம்,நடத்தை இவற்றையும் ஒப்பிட்டு செய்தியாளர் சொல்லும் குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்திய தூதரகம் சவூதியில் உள்ளது தானே? வினவு செய்தியாளர் அங்கு முறையிடலாமே! இதற்கு ஏதேனும் தடை உள்ளதா?
ஆக, வினவு பதிவின் நோக்கம் நான் முன்பு சொன்னதுபோல் உள்நோக்கம் கொண்டது.
சவுதியை பொருத்தவரை தொழிலாளிகளின் பிரச்சனக்கு சங்கங்களாகவோ கூட்டாகவோ சென்று மேலதிகாரிகளிடம் பேச அனுமதி இல்லை என்ற போதிலும் சமீப காலங்களில் சில நிறுவனங்கள் தவிற்த்து பெரும்பாலான நிறுவனங்கள் தன் நிலையை மாற்றிக் கொண்டுள்ளது,
குறிப்பாக துறைமுக நகரமான ஜித்தாவில் துறைமுகத்தில் வேலை செய்பவர்களில் அதிகம்பேர் தமிழர்களே,முன்பு இவர்களுக்கு சம்பளம் முதல் சில சலுகைகள் திருப்திகரமானதாக இல்லாமல் இருந்தது ஆனால் தற்போதைய நிலை மறுபட்டுள்ளது.
வினவு கூறியுள்ள அந்த குறிபிட்ட நிறுவனத்தில் பெரும்ப்பாளான ஊழியர்கள் வஙக தேசத்தை சார்ந்தவர்கள். சவுதி அரேபியா தவிற அனைத்து கல்ஃப் நாடுகளிலும் வங்க தேச ஊழியர்கள் புகுந்து சம்பள விகிதத்தை குறைத்த வரலாறை வினவு அறியவில்லையா அல்லது அவரின் சவுதி செய்தியாளர் அறியவில்லையா? அப்படி இருக்கும் நிறுவனத்தில் மற்ற நாட்டினர் மட்டும் குறிப்பாக இந்தியர்கள் அதிக சம்பளத்தை எப்படி எதிர் பார்க்க முடியும்?
தனியாக அழைத்து அடித்தார்கள் என அங்காடி தெரு கதை அளந்துள்ளார். வேலை தவிற்த்து வேறு சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடு பட்டால் இதுபோன்ற தண்டனைகள் வழங்கப் பட்டிருக்கலாம்.
வேலை சரியாக செய்யவில்லை என்ற காரனத்திற்கு எந்த நிறுவனமும் தனியாக அழைத்து அடிக்க வாய்ப்பில்லை.
அல்லாஹ்வின் தேசம் என்றால் இவரின் நோக்கம் இஸ்லாம் அதானே
அப்படியானால் அந்த குறிப்பிட்ட நிறுவனம். லெபனானியருக்கு சொந்தமானது ஆனால் சவுதியுடன் கூட்டாக இதை நடத்துகிறது லெபனான் அரேபிய தேசம் என்றாலும் அங்கும் அதிக அளவில் கிருஸ்தவர்கள்தான் இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல அரசின் நடவடிக்கைகளிலும் அவர்களின் ஆதிக்கம் அதிகம் என்பதை வினவு புரிந்துகொள்ள வேண்டும்.
ஏன இவர் சொன்ன அந்த கருங்காலி கிருஸ்தவராய் இருக்கக் கூடாது?
இஸ்லாமியர்கள் தவிற்த்து வேறு எவரும் சவுதியில் மேல் மேலளராகவோ அல்லது வேறு எந்த உயர் பதவியிலும் இல்லையா?
இறுதியாக
சவுதியை பொருத்தவரை தொழிலளர்களை பிழியும் நிறுவனங்கள் அனைத்திலும் மேல்பதவி வகிப்பவர்கள் இஸ்லாம் அல்லதவர்களே.
சவுதி ஓஜர் தொழிலாளர் பிரச்னை: தீர்வு என்ன?
வினவு வைத்திருக்கும் தலைப்பு: சௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப் படுத்தும் அல்லாவின் தேசம்!
என்னாது? சௌதி ஓஜர் = சவுதி அரேபியா = அல்லாவின் தேசமா?
ஆமாங்க.. அப்படித்தான் போட்டிருக்காங்க. ஏன்னா, லெபனான் மற்றும் சவுதி அரேபியா நாடுகளின் ஆட்சியாளர்கள்தான் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களாம்.
இந்த இரண்டு குடும்பத்தினர்தான் சவூதி அரேபியா நாடு. சவூதி அரேபியா நாடுதான் அல்லாவின் தேசம். நம்புங்க மக்களே! சவுதியிலேயே இருக்கும் வினவு செய்தியாளரே இதை எழுதியிருக்காரு. அவரு சொன்னா சரியாத்தான் இருக்கும்.
அப்படின்னா 'ஓஜர்' என்ற பெயருக்குச் சொந்தக்காரர்களான www.ogerinternational.com என்ற ஃப்ரான்ஸ் நாட்டு நிறுவன குழுமத்திற்கு என்ன நேர்ந்தது?
ஓ... அவங்க வேற இருக்காங்களா? அப்படின்னா ஃப்ரான்ஸ் தேசத்தையும் அல்லாவின் தேசம்னு அறிவிச்சுடுவோம்.
மேட்டர் சால்வ்டு! என்ன வந்தாலும் வச்ச தலைப்பை மட்டும் நாங்க மாத்த மாட்டோம்ல!
ஒருவழியா தலைப்பு மேட்டரை செட்டில் பண்ணியாச்சு.. இனி பதிவுக்கு போவோம்.
சவுதியிலிருந்து வினவு செய்தியாளர் என்ன சொல்றார்னா, அல்லாவின் தேசமான சவுதியின் ஆட்சியாளர்களுக்குச் சொந்தமான சவுதி ஓஜர் நிறுவனத்தில் தொழிலாளர்கள் நசுக்கப் படுகிறார்கள். ஒடுக்கப் படுகிறார்கள். அடக்குமுறைக்கு ஆளாக்கப் படுகிறார்கள். இத்யாதி..இத்யாதி.. உண்மைதானே? ஆமாம். உண்மையாகத்தான் இருக்கும்.
சவுதியிலிருந்து அந்த செய்தியாளரே அந்தக் கொடுமைகளையெல்லாம் நேரடியாக பார்ப்பதால்தானே அப்படி எழுதியிருக்கிறார்?
ஆனா, நமக்கு இதுல புரியாத ஒரு விஷயம் என்னன்னா அந்த செய்தியாளரையும் அடக்குமுறைக்கு எதிரா போராடுற மற்ற உழைப்பாளர்களையும் சவுதி ஓஜர் நிறுவனம் ஆள் வைத்து கடத்திக் கொண்டுபோய் சவூதியில் வைத்து கொத்தடிமைகளாக நடத்திக் கொண்டிருக்கிறார்களா என்ன?
தப்பிச்சு கிப்பிச்சு வர முடியாதபடி சங்கிலி கிங்கிலி போட்டு கட்டி வச்சிருக்காங்களோ என்னவோ!
இதையே நான் வினவு கிட்டே வினவினேனுங்க. அவரு அதுக்கு இன்னும் பதில் சொல்லலை.
ஒருவேளை 'நான்தான் வினவு. நான் மட்டும்தான் வினவுவேன். மத்தவங்கள்லாம் வினவக்கூடாது'ன்னு ஏதும் பாலிஸி வச்சிருக்காரோ என்னவோ! சரி.. அது போகட்டும் விடுங்க!
அடுத்ததாக, இந்த பிரச்னைக்கு சவுதியிலிருந்து வினவு செய்தியாளர் என்ன தீர்வு சொல்கிறார் என்று பார்ப்போம்.
சௌதி ஓஜரின் உரிமையாளர்கள் ஆளும் வர்க்கம் + முதலாளி வர்க்கம் = சுரண்டும் வர்க்கம்.
தொழிலாளர்கள் = சுரண்டப்படும் வர்க்கம் + ஒன்றிணைய வேண்டிய வர்க்கம் + போராட வேண்டிய வர்க்கம்
அதாவது, நம்ம சட்டசபையில் இருக்கிறதல்லவா, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி? அது மாதிரி இங்கே முதலாளி கட்சி, தொழிலாளி கட்சி! முதலாளி கட்சியில எல்லோரும் கெட்ட பசங்க.. தொழிலாளி கட்சியில உள்ளவங்க எப்பவுமே போரடிக்கிட்டே இருக்க வேண்டியவங்க. தொழிலாளி ஒருத்தர் கொஞ்சம் பணம் சேர்த்து முதலாளி ஆயிட்டார்னு வச்சுக்குங்க.. அப்ப அவரும் கெட்ட பையனா ஆயிடுவாரு.
வினவு சொல்வதுபோல தொழிலாளி வர்க்கத்தினர் எல்லோரும் ஒருங்கிணைந்து முதலாளி வர்க்கத்திற்கு எதிராக போராடினால் என்ன ஆகும்? இந்த நான்கு விளைவுகளில் ஏதோ ஒன்று நிகழலாம்:
1. முதலாளி வர்க்கம் அடிபணிந்து தொழிலாளர் வர்க்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக் கொள்ளலாம்.
2. 'நான் அப்படித்தான் செய்வேன். உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ' என்று வீம்பு பிடிக்கலாம்.
3. போராடும் தொழிலாளர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பிவிட்டு வேறு நாட்டு தொழிலாளர்களை வரவழைத்துக் கொள்ளலாம்.
4. 'எனக்கு இந்த நிறுவனமே வேண்டாம்' என்று அதை பூட்டிப் போட்டுவிட்டு வேறு தொழிலைப் பார்க்க போய்விடலாம்.
இதில் முதலாவது விளைவு நிகழ வேண்டுமென்பதுதான் வினவின் கனா. ஆனால் அது நிகழ்வதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவு என்பது கொஞ்சம் யோசித்தாலே தெரியும். மற்ற மூன்று விளைவுகளில் ஒன்று நிகழ்ந்தால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் கதி என்னவாகும்?
எனவே, வர்க்கப் பாகுபாடு, ஒருங்கிணைந்த போராட்டம் என்பதெல்லாம் இந்தப் பிரச்னைக்கு தீர்வே அல்ல. மாறாக, தீர்வைத் தேடும் ஒரு வழிமுறை மட்டுமே. அதுவும் தோற்றுப் போவதற்கான சாத்தியங்களே அதிகம்.
அப்படியானால், இந்தப் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?
தொழிலாளியின் வியர்வை உலருமுன் அவனுடைய ஊதியத்தை அவனுக்கு கொடுத்துவிடும்படி முதலாளிகளுக்கு கட்டளையிடும் இஸ்லாம், தொழிலாளர்கள் முதலாளிகளிடம் நடந்துக் கொள்ள வேண்டிய விதத்தையும் சொல்லித் தருகிறது.
CLICK READ MORE
.
http://maricair.blogspot.com/2012/01/blog-post_25.html
.
அரபிகள் தாராள மனதுக்காரர்கள், அவர்களைக் கெடுப்பதே வெளிநாட்டார்தாம்.
ஒரு ஜோக்
தமக்கு முதல் முறை ரத்தம் கொடுத்த மலையாளிக்கு ஒரு பங்களாவைப் பரிசளித்த அரபிக்கு, இரண்டாம் முறையும் அதே மலையாளி ரத்தம் கொடுக்க,
இம்முறை அவனுக்கு அரபி கொடுத்த பரிசு,
'கடலை மிட்டாயும் ஒரு நேந்திரங்காய் சிப்ஸும்'
அதிர்ச்சியாகி கேள்வி கேட்ட மலையாளியிடம் அரபி சொன்னது,
'என் உடலில் ஓடுவது மலையாளி ரத்தம்டே'
சவூதி, அமெரிக்கா போன்று இந்தியாவும் பணக்கார நாடாகி,
வெளிநாட்டார் வந்து பிழைக்கும் போது தெரியும்,
'இவர்களது லட்சணம்'
சகோ அதிரைக்காரன், உங்கள் மடலை வினவு தளத்தினர் வெளியிடாதது வருந்தத் தக்கது. கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி பேசும் இவர்களே இப்படி என்றால் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்ல?
//பின்னூட்டமாக எழுதினால் அதைப்பிடித்து தொங்க சிலருள்ளதால் மடலாக அனுப்புகிறேன். நேர்மையாக வினவு தளத்தில் இதை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்.//
இதுக்கு என்ன அர்த்தம் என்றே புரியலியே... பின்னூட்டம் போடாமல் என் மடலாக அனுப்பினீர்கள்?
வினவின் தலைப்பில் எந்த விஷமத்தனமும் இல்லை. கட்டுரையில் வேறு எந்த இடத்திலும் அல்லா, முகமது நபி என்று மத சம்பந்தமாக அவர்கள் பேசவே இல்லை.
சவுதி அரேபியாவில் தான் முகமதியர்களின் புனித நகரமான மெக்கா இருக்கிறது. அது தான் அல்லாவின் தேசம் என்கிற வார்த்தை குறிப்பதும்.
அப்படிக் குறிப்பிடுவதன் மூலம் சவுதி அரேபியாவே ஆனாலும் அங்கு இஸ்லாமில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொழில் செய்பவர்களுக்கான எளிமையான விதிமுறைகளைக் கூட பின்பற்ற அங்கிருக்கும் எந்த பன்னாட்டு நிறுவனமும் முன்வரவில்லை என்பதை படிப்பவர்கள் உணர்ந்து கொள்ளவே அந்த வார்த்தை சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
அல்லாவின் தேசம் என்று ஒவ்வொரு இஸ்லாமியரும் சாதாரணமாகக் குறிப்பிடும் பெருமை உண்மையிலேயே அதற்கு இருக்குமானால் அங்கு எந்தத் தொழிலாளியும் துன்பப்படவில்லை என்கிற நிலையல்லவா ஏற்பட்டிருக்கவேண்டும் ? ஏன் அப்படி ஏற்படவில்லை ? ஏனென்றால் அல்லா சொன்னபடி எந்த பன்னாட்டு நிறுவனமும் இயங்கவில்லை.. இயங்காது..
இது தான் அந்த ஒரே ஒரு அல்லா வார்த்தை மறைமுகமாக இஸ்லாமிய நண்பர்களுக்கு சொல்ல வரும் விஷயம் என்று நான் நினைக்கிறேன்.
இஸ்லாமிய நண்பர்களே நீங்கள் யோசியுங்கள். அல்லாவால் முடியாத காரியம் உண்டா ?
வஞ்சூர் அய்யா அவர்களே,
ஈராக்கில் செத்துப் போன மூன்று லட்சம் ஈராக்கிய முஸ்லீம்களுக்கும், விபச்சாரத்திற்கு தள்ளப்பட்ட அவர்களின் மனைவி, குழந்தைகள் ஒரு லட்சம் பேருக்கும், ஆப்கானிஸ்தானில் 1990களிலிருந்து இன்று வரை செத்துப்போன 6 லட்சம் பேருக்கும், இன்னும் பாலஸ்தீனம், எகிப்து, லிபியா, இனிமேல் ஈரான் என்றும் சுமார் ஒரு கோடி முஸ்லீம் சகோதரர்கள் கொல்லப்படும் வரை சுமார் 40 ஆண்டுகள் கடவுள் பொறுத்திருந்து இனிமேல் எப்போது தான் அவர்களைப் பழிவாங்குவார் ? எனக்குப் புரியவில்லை. உங்களுக்குப் புரிகிறதா.
ஆனால் சிறுவயதில் படித்த நான்கு எருமைகள் ஒரு சிங்கத்தை ஒற்றுமையாயிருந்து விரட்டியடித்ததும் பின் தனித்தனியாக பிரிந்து நின்று ஒவ்வொன்றாக சிங்கத்தின் கைகளில் மடிந்து போன கதை ஞாபகம் வந்து தொலைக்கிறது எனக்கு.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
"உரைக்கும் படி" நன்கு
உணர்த்தும் பதிவு!
சகோ.ஜாபர் குறிப்பிட்டதுபோல் சவூதி மட்டுமின்றி பெரும்பாலான வளைகுடா நாடுகளில் இந்தியர்களுக்கு வழங்கப் பட்ட ஊதிய விகிதம் குறைந்ததற்கு, நேபாளம்(மாவோயிஸ்ட்),பங்களாதேஷ்,இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வந்துள்ள தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்திற்கு ஒப்புக்கொண்டதும் ஓர் காரணம். அதாவது ஒரு தொழிலாளிக்கு வேட்டு வைத்தது இன்னொரு நாட்டு தொழிலாளிகளும் அவர்களது நாணயமாற்றுவிகிதத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிய சீனா, ரஷ்யா உள்ளிட்ட சர்வாதிகார நாடுகளின் முதலாளிகளே என்பது வினவு செய்தியாளருக்குத் தெரியாதா?
நியாயமாக,வஞ்சிக்கப்படுபவர்களுக்கு வக்காலத்து வாங்குவதாக இருந்தால் அவர்களது கோபம் இத்தகைய தரகு முதலாளிகள்மீதுதான் திரும்ப வேண்டும்.
//சவூதி, அமெரிக்கா போன்று இந்தியாவும் பணக்கார நாடாகி,
வெளிநாட்டார் வந்து பிழைக்கும் போது தெரியும்,'இவர்களது லட்சணம்'//
அரபுத்தமிழன், நீங்கள் சொல்வதுபோல் தொழிலாளிகள் எல்லோரும் முதலாளி ஆகிவிட்டால், தோழர் வினவு & கோ வின் ஒப்பாரிகள் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்.
உம்."தொழிலாளிகள் அடக்குமுறை ஒழிக!முதலாளிகள் ஒற்றுமை ஓங்குக!" என்றுதானே இருக்கும்.
இன்பன்,
வினவு தளத்தில் பின்னூட்டம் போட்டால் அடுத்த பரபரப்பான பதிவு வந்தபிறகு வாசகர்கள் கவனத்திலிருந்து மறைந்துவிடும். மேலும்,அந்த தளத்தில் பதிவாக வந்த ஆக்கத்திற்கு அதே வகையில் பதிவாக வெளியிடுவதே நேர்மையான செயலாகும்.
வினவு பின்னூட்டத்தில்கூட தங்கள் அறியாமை மற்றும் துவேஷத்திற்கு வருத்தம் தெரிவிக்காமல் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து அனுமதிப்பதன்மூலம் வினவுவின் பிரச்சினை தொழிலாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களல்லர் அவர்களது மதமும் கடவுளும்தான்!
Ambedhan,
வினவின் குறிப்பிட்ட பதிவில் அல்லா என்று விளித்திருப்பதையும் அதிலுள்ள ஏளனத்தையும் கவனிக்கவில்லையா?
அகில உலகையும் பிரபஞ்சத்தையும் அல்லாஹ்தான் படைத்து நிர்வகித்து வருகிறான் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை;குரிப்பிட்டநாடு,மொழி,இனஅடையாளங்களுக்குள் அவர்களின் நம்பிக்கையை சுருக்குவது உரிமை மீறலாகும்.
மற்றவர்கள் உரிமை மீறக்கூடாது, ஆனால் நாங்கள் மீறுவோம் என்பது போன்று உள்ளது வினவு பதிவின் தலைப்பு.
கருத்திட்டு வினவுவின் முரன்பாட்டைப் புரிந்து கொண்ட சகோ.மரைக்காயர், வாஞ்சூர் ஐயா மற்றும் குலாம் ஆகியோருக்கு நன்றிகள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.அதிரைக்காரன்,
நல்ல விளக்க கடிதம் சகோ.
'நெத்தியடி முஹம்மத்' எனும் பெயரில் வினவில் நிறைய முறை அவர்களுக்கு பாடம் நடத்தியும் திரும்ப திரும்ப அவர்கள் புத்தி தம் கருத்தை மக்கள் படித்து சிந்தித்து பயனுற வேண்டும் என்பது அல்லாமல் வெறும் ஹிட்ஸ் நோக்கம் மட்டுமே என்பதை... அவர்கள் தெரிந்தே தான் ஒண்ணும் ஒண்ணும் மூணு என்கின்றனர் என்பதை... நான் ரொம்ப தாமதமாக உணர்ந்து தெளிந்த ஒன்று. அதன் பிறகு அங்கே பாடம் சொல்லிக்கொடுக்க போவதே இல்லை.
இந்த பதிவை பொறுத்த மட்டில் நல்ல விஷயத்தை எழுதியுள்ளார்கள். தலைப்பில் விஷம்.
என்னசெய்வது....
வினவு கட்டண கழிப்பறை கட்டினால் கூட கூட்டம் வராவிட்டால், கூட்டம் வேண்டும் என்பதற்காக அதன் பெயர் பலகையை 'வினவு ஹோட்டல்' என்று மாற்றி வைப்பது வழக்கமான ஒன்றுதானே..?
வ அலைக்கும் ஸலாம். சகோ.ஆஷிக்.
முன்பே சொன்னதுபோல் தொழிலாளி- முதலாளி பிரச்சினையை மட்டும் பேசி இருந்தால் வினவுவின் கருத்துக்கு ஆதரவான குரல்கள் ஒலித்திருக்கும். ஆனால், அவசியமே இல்லாமல் அல்லாஹ்வின் தேசம் என்று அடைமொழி கொடுத்து தலைப்பிட்டதே அவர்களின் நோக்கம் முதலாளிகளின் அநீதியை எதிர்ப்பது அல்ல என்பதாகக் கருதவேண்டி உள்ளது.
Post a Comment