மதம் பிடித்த நாத்திகர்கள்...!
Wednesday, January 18, 2012

நாத்திகர்கள் என்பவர்கள் தங்களை கடவுள் மறுப்பாளர்களாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இவர்களுக்கு ஆப்ரஹாமிய மதங்களென்று அறியப்படும் பாரம்பரிய தொடர்புகளுள்ள யூதம்,கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதம்/மார்க்கம் மற்றும் தென்னிந்தியாவில் வழக்கிலிருந்த 'நடுகல்' வழிபாட்டைச் சிதைத்து,கட்டமைக்கப்பட்ட வந்தேறிகளான ஆரியர் ஆதிக்கம் கொண்ட இந்து மதம்,அதற்கு முன்னதாக ஆசையை ஒழிப்பதற்கு ஆசைப்பட்ட புத்தருக்குப் பின்வந்த புத்தமதம் போன்ற எந்த மதமும் பிடிக்காது!
ஏன் பிடிக்காது என்றால் இவைகளிலெல்லாம் இவர்களுக்கு ஆர்வமில்லை அல்லது இவைபற்றிய விளக்கங்கள் இவர்களின் 'பகுத்தறிவுக்கு' எட்டவில்லை என்பதே காரணம்.ஒப்பீட்டிற்காகச் சொல்வதென்றால் கணினி குறித்த ஆர்வம்/அறிவில்லாதவர் கணினி மறுப்பாளர் என்று சொல்லிக்கொள்வதற்கு ஒப்பானது. நீங்கள் என்னதான் கணினியின் சிறப்புகளை எடுத்துக்கூறினாலும் இவர்களின் பகுத்தறிவில், அதைப்பயன்படுத்துபவரின் குறைகள் மட்டுமே பூதாகரமாகத் தெரியும்,எனினும், இவர்களுக்கு தங்களை பகுத்தறிவாளிகள் என்று சொல்லிக் கொண்டு பிறரின் நம்பிக்கைகளை எள்ளிநகையாடி சிற்றின்பம் காண்கின்றனர்.
உயிரினங்களின் இயற்கை தகவமைப்புக்கேற்ப அவற்றை வகைப்படுத்திய சமூக மிருகமான மனிதன், தன்னைத் தவிர பிறஉயிரினங்களுக்கெல்லாம் அறிவு குறைவு என்று சொல்லிக்கொள்கின்றனர்.(மிருகங்களும் பறவைகளும் நம்மைப்பற்றியும் நமக்கு எத்தனை அறிவு என்றும் கணக்கிட்டு வைத்துள்ளவோ?:) இவ்வாறு மனிதன் தன்னை ஆறறிவு உயிரினம் என்று எப்படி அவனாகவே சொல்லிக் கொள்கிறானோ,அதேபோன்றே நாத்திகர்கள் தங்களை பகுத்தறிவாளிகள் என்று அவர்களாகவே சொல்லிக்கொள்கின்றனர்.
உண்மையில் பகுத்தறிவு என்பது யாதெனில், தீர்க்கமாக நம்பப்படும் ஒன்றை ஆய்வுக்கு உட்படுத்தி அதிலிருந்து கிடைத்த விடைகளையும் தொடர்ச்சியாக மீளாய்வுக்குட்படுத்தி இறுதியாக பெறப்படும் உறுதியான விசயத்தை தீர்க்கமாக நம்புவதே. இதுவரை உலகில் அப்படி எதுவும் உறுதியாக முடிவுக்கு வந்ததாக நமது "n" அறிவுக்கு எட்டவில்லை.
நாத்திகர்களில் எத்தனைபேர்,எந்தெந்தவிசயங்களைப் எவ்வாறு பகுத்தறிந்து அறிவுப்பூர்வமாக நம்பினார்கள் என்ற தகவல் இல்லை. இவர்களது நம்பிக்கைக்கு அடிப்படை, அமெரிக்காவிலோ,ஐரோப்பாவிலோ அல்லது இவர்கள் அறிவுஜீவிகள் என்று நம்புபவர்கள் சொல்வதே சரியானதென்பது மட்டுமே.இவர்களது தேடல் பயணம் முடிவற்று தடுமாறுவதை பகுத்தறிவு என்று பூசிமெழுகுகின்றனர். எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தும் இவர்களின் நம்பிக்கையை நம்பிக்கையாளர்கள் கேள்வி கேட்டால், எதையாவது சொல்லி திசை திருப்புகின்றனர். இந்தளவில் தான் உள்ளது இவர்களின் பகுத்தறிவு.
நாத்திகர்கள் எல்லோருமே இவ்வகையினர் என்று சொல்லிவிடமுடியாது.நாமறிந்த பிரபல நாத்திகரான பெரியார், தனது முன்னோர்களின் மதமான இந்து மதத்தின் பெயரால் நடந்த அட்டூழியங்களைப் பகுத்தறிந்து,இதற்கு தீர்வு இஸ்லாமே என்று நம்பினார். இவரைப் பின்பற்றியவர்களும் அவர் பகுத்தறிந்த ஆய்வு முடிவுகளைப் பரிசீலித்து பெரியார் தாசன்களாக இருந்தவர்கள் எல்லாம் அப்துல்லாஹ் ஆகி உள்ளனர் என்பதிலிருந்து நாத்திகர்களின் நம்பிகை இறுதியாக முடிவடையும் இடம் இஸ்லாம்!
இத்தகைய இஸ்லாம் தோன்றிய நிலப்பகுதிகளில் ஒன்றான சவூதி அரேபியாவைப்போல் நமது இந்தியாவும், வளம்பெற வேண்டும் என்று சுவனப்பிரியன் ஓர் பதிவிடப்போய், நண்பர் கோவி.கண்ணன் எதிர் பதிவிட்டு, ஒரு மொக்கைப்பதிவு போட்டுள்ளார்.இவரது விருப்பம் என்னவெனில் இந்தியா,இந்தியாவாகவே இருக்கட்டும் என்பதே!
சென்னையை சின்ன சிங்கப்பூராக மாற்றுவேன் என்று மு.க.ஸ்டாலினும்,மயிலாடுதுறையை குட்டி துபாயாக மாற்றுவேன் என்று மணிசங்கர் அய்யரும் சொன்னாலோ அல்லது ஜப்பானைப் பார்,அமெரிக்காவைப் பார் என்று குத்தி காட்டினாலும் யாருடைய பகுத்தறிவுக்கும் கோபம் வருவதில்லை.
ஏனென்றால்,இந்நாடுகள் தங்களது அரசியல் அமைப்பின் அடிப்படையாக குர்ஆனை முன்னிருத்தவில்லை! அப்படி முன்னிறுத்தி இருந்தாலும் ஆப்கானிஸ்தான் மாதிரி ஆக்கிரமிக்கப்பட்டோ அல்லது பாகிஸ்தான் மாதிரி தினம்ஒரு குண்டு வெடிக்கவோ செய்யப்படும் என்பது தனிக்கதை.
தன்னை ஓர் அரை நாத்திகராகச் சொல்லிக் கொள்ளும் கோவி.கண்ணனுக்கு சவூதிமேல் ஏன் இவ்வளவு கொலை வெறி என்று தெரியவில்லை. சுவனப் பிரியன் பதிவுக்கு எதிர்ப்பதிவு போட்டதுபோல்,மு.க.ஸ்டாலின்,மணிசங்கர் அய்யர் மற்றும் யாரெல்லாம் ஜப்பானையும் அமெரிக்காவையும் ஒப்பிட்டு முன்னுதாரணமாகச்சொல்கிறார்களோ, அவர்களுக்கெதிராகவும் ஓர் பதிவு போடாதவரை அவரது கொலைவெறி தீரவில்லை என்பதே உண்மை!
பொங்கல் பண்டிகையை தமிழர்கள் அனைவரும் மதப்பாகுபாடின்றி கொண்டாட வேண்டுமென்ற இவரது பதிவில் நானிட்ட பின்னூட்டத்திற்கு இவரது சப்பைக்கட்டுகளையும் முஸ்லிம்கள் மீதான வன்மத்தையும் பார்க்கும்போது, சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதுதான் நினைவுக்கு வருகிறது.இவரது குறிப்பிட்ட பதிவில் பின்னூட்டத்தை தடுத்து வைத்திருப்பதால் அதுகுறித்த என் கருத்துக்களை தனியாக என் பதிவில் பதிவேன்.
20 comments:
ஸலாம் சகோ.அதிரைக்காரன்,
நன்றாக அடித்து ஆடி இருக்கிறீர்கள்.
செமை பதிலடி. நாத்திகர்கள் பற்றி அவர்களின் நடப்பை நன்றாக நாடி பார்த்து எழுதி இருக்கிறீர்கள். அருமையானை ஆக்கம் சகோ.
பகிர்ந்த சுட்டி மூலம், அங்கே சென்று படித்ததில் கோவி.கண்ணன் என்பவரின் இஸ்லாமோஃபோபியா தெளிவாக தெரிகிறது..!
உங்கள் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு அவர் ஒரு பகுத்தறிவாளராக இருந்திருந்தால் மனம் திருந்தி இருந்திருப்பார்.
அப்படி இல்லையேல்... ஒருவேளை நாத்திகராக இருந்திருந்தால் தன் தவறான புரிதலை அறிந்திருப்பார்.
ஹிந்துத்துவா வெறியினால்... கமென்ட் பாக்சை மூடிவிட்டார். இன்னும் உங்கள் கமென்ட்சை அழிக்காமல் விட்டு வைத்து இருப்பதே ஆச்சர்யம்தான்..!
அடுத்த பதிவில் பாருங்கள்... இனி பதிவே போட மாட்டேன் என்று விடை பெறுகிறார். இப்படி செய்து விட்டீர்களே அவரை..?
பொங்கல் பண்டிகை என்பது என்ன..?
விளைச்சளுக்காக சூரியனை கும்பிட்டு அதற்கு படையல் செய்ய... ஓரிறையை மட்டுமே வணங்கும் முஸ்லிம்கள் எப்படி முன்வாருவார்கள்..?
இது தமிழர் பண்டிகையா...? இல்லை....
சைவ/வைணவ பண்டிகையா..?
தம்மை 'நாத்திகர்' என்று ஒப்புக்காக சொல்லிக்கொள்ளும் கோவி.கண்ணன், இந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்து அந்த பதிவில் ஏதும் எழுதவில்லையே, ஏன்..?
"அரிசி விளைய சூரியன் மட்டுமே காரணி அல்லவே..! நீர், நிலவளம், உரம், காற்று என ஏகப்பட்ட காரணிகள் இருக்க சூரியனுக்கு மட்டும் பொங்கல் படையல் ஏன்?" ...என்று தம்மை 'பகுத்தறிவாளர்'(?) என்று சொல்லிக்கொள்ளும் கோவி.கண்ணன் அதை கொண்டாடுவோரை பார்த்து கேட்கவில்லையே, ஏன்..?
மேலும்,
தமிழர்கள் யாரும் அரிசியை மட்டுமே சமைத்து சாப்பிடவுமில்லை.
கூடவே ஏகப்பட்ட காய்கறி, தானிய, பருப்பு, எண்ணெய் வித்து வகையராக்களையும் உப்புடன் சேர்த்து உண்கிறோம். இதற்கெல்லாம் படையல்/நன்றி/வணக்கம் எல்லாம் ஏன் இல்லை என்று அவர் அந்த பதிவில் கேட்கவில்லையே.. ஏன்..?
விளைச்சலுக்கு அதன் காரணிகளுக்கு நன்றி கூறுவதுதான் பொங்கல் என்றால்...
முஸ்லிம்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும், ஒவ்வொரு முறை உண்ணும்போதும்... பிஸ்மில்லாஹ் என்று இறைவன் பெயரால் சாப்பிட ஆரம்பித்து, அல்ஹம்துலில்லாஹ், என்று அந்த ஒவ்வொரு உணவுத்துகளுக்கும் மூல காரணியான இறைவனுக்கு நன்றி கூறி சாப்பிட்டு முடிக்கிறோம் எனில்,
முஸ்லிம்கள் நித்தம் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வேளையும் பொங்கல் கொண்டாடித்தானே வருகிறார்கள்..?
எதற்கு இவர்களை ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் கொண்டாடினால் போதும் என்று இந்த கோ(கா)விகள் சிறுமைப்படுத்துகிறார்கள்..?
அந்த பதிவில் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு இருக்கிறார்.
சீனப்புத்தாண்டை மலாய் முஸ்லிம்கள் கொடாடுகிரார்களாம். ஓகே. இதில், தங்கள் இறைவனுக்கு இணை வைக்கும் சம்பவம் எங்கேப்பா இருக்கிறது..? பித்அத் என்ற தவறை தவிர..? ஏனெனில், ஒரு புத்தாண்டு என்று ஒரு நாளை எப்படி ஒருவர் அறிவியல் பூர்வமாக சொல்ல முடியும்..?
இங்கிருந்துதான் சூரியனை பூமி சுற்ற ஆரம்பித்தது என்று எந்த விஞ்ஞானி கண்டுபிடித்தார்..? அல்லது, எந்த வேதத்தில் இருக்கிறது..? இதனால்... இதுபோன்ற புத்தாண்டு கொண்டாட்டங்களால் யாருக்கு என்ன பயன்/பலன் உள்ளது..? புத்தாண்டு கொண்டாடுவது பகுத்தறிவா...? முஹர்ரம் ஒன்று என்ற ஹிஜ்ரி முதல் நாளை என்றைக்காவது நபி(ஸல்) அவர்கள் கொண்டாடி உள்ளார்களா..? இது பகுத்தறிவா..? தம்மை 'பகுத்தறிவாளர்(?)' என்று ஒப்புக்கு கூறிகொள்ளும் இந்த கோவி என்றைக்காவது இப்படி சிந்தித்தது உண்டா..?
இந்த கோவிக்கு இஸ்லாம் பற்றியும் தெரியவில்லை...
பொங்கல் பற்றியும் தெரியவில்லை...
ஹா..ஹா...ஹா... அல்லது தெரிந்தும் நன்றாக மழுப்புகிறார்...
இந்த அரைகுறை அறிவோடு அல்லது இஸ்லாமியோபோபியாவுடன் இவர் இனி இதுபோன்ற அரைவேக்காட்டு பதிவுகள் ஏதும் எழுதாமல் இருந்தாலே அதுவே தமிழ்ப்பதிவுலகுக்கு அவர் ஆற்றும் தொண்டு..!
கோவியுடன், உங்கள் விவாதம் மிக அருமையாக இருந்தது சகோ. சிறப்பான வாதங்களுடன் நீங்கள் நிறைய எழுதுங்கள் சகோ.
(இந்த பதிவை இன்ட்லியில் சேர்த்து விட்டேன் சகோ.அதிரைக்காரன்.)
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
என்னது கோவி.கண்ணன் நாத்திகரா?
நேஜமாலுமா?
மே..மே...ஹ்ஹ் மே...
வ அலைக்கும் ஸலாம் சகோ.ஆஷிக்,
அவரது பதிவில் கேட்ட கேள்விகளை கண்டுகொள்ளாமல் இருந்தவரிடம், ஏன் கண்டுகொள்ளவில்லை என்று கேட்டபோது தன்மையாகக் கேட்டால் தன்மையாக பதில் வரும் என்றார். அதன்பிறகு நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் எந்த 'தன்மை' ஆக பதில் சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்.
என்ன செய்வது நாத்திகர்களுக்கு தற்போது பகுத்தறிவு பிரச்சாரம் செய்வதற்கு ஒரு விசயமும் இல்லை என்பதால் பொங்கல்+இஸ்லாம் என்று பதிவிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
ஆதிதமிழர்கள் நால்வகை நிலங்களில் வாழ்ந்தனர். அவற்றில் மருத நிலத்தில் மட்டுமே வயலும் வயலைச் சார்ந்த வெளிகளும் இருந்தன. மருதநில தெய்வமாக வேந்தன் / இந்திரன் என்று சங்க இலக்கியக் குறிப்புகள் சொல்கின்றன.
தமிழனின் நால்வகை நிலங்களிலும் எந்த நிலப்பகுதியிலும் சூரியபகவான் என்று இல்லை! ஆக, பொங்கலன்று சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துதல் என்பது மூடநம்பிக்கை மற்றுமின்றி கடவுள் மோசடியுமாகும். இதை எந்தப் பகுத்தறிவாளரும் கண்டு பிடிக்காமல் பொங்கலோ பொங்கல் என்று கோஷம் போடுவது சற்று ஆச்சரியமாக உள்ளது!
ஒருவேளை தைமாசம் பகுத்தறிவு வேலை செய்யாதோ? :))
//என்னது கோவி.கண்ணன் நாத்திகரா?//
எனக்கும் அந்த டவுட் இருந்ததால்தான் அரை நாத்திகர் என்று குறிப்பிட்டேன். நாத்திகர்கள் பல வகைப்படுவர். அவர்களில் மிக முக்கிய நால்வகையினர்
1) நம்பிக்கையில்லாதவர்கள்
2) அரை நம்பிக்கையாளர்கள்
3) அரைகுறை நம்பிக்கையாளர்கள்
4) அரை அரைகுறை நம்பிக்கையாளர்கள்...
:)
அஸ்ஸலாமு அலைக்கும்,
//1) நம்பிக்கையில்லாதவர்கள்
2) அரை நம்பிக்கையாளர்கள்
3) அரைகுறை நம்பிக்கையாளர்கள்
4) அரை அரைகுறை நம்பிக்கையாளர்கள்...//
செம செம சகோதரர்..சிரிச்சு முடியல..எப்படித்தான் யோசிக்குரீங்கலோ..
வஸ்ஸலாம்...
எதிர் பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர் பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர் பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர் பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர் பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர் பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர் பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர் பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர் பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர் பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவு.
'ஹலோ டாக்டர்! தூங்கிக் கொண்டிருந்த சுவனப்பிரியன் திடீரென்று எதிர்ப்பதிவு எதிர்ப் பதிவு என்று புலம்புகிறார். கொஞ்சம் புறப்பட்டு வர முடியுமா?'
'அது வேறு ஒண்ணும் இல்ல. பதிவுலக காய்ச்சல்தான். காலையிலே சரியாகிடும். பயப்படாதீங்க....'
:-)
கோவி கண்ணனின் பிரச்னை அவர் ஆத்திகரா அல்லது நாத்திகரா என்பது அவருக்கே இன்னும் விளங்கவில்லை என்பதுதான் என நினைக்கிறேன். மதில் மேல் பூனையாக அவர் இருந்துக் கொண்டு, 'ஏ அமெரிக்க ஏகாதி பத்தியமே! ஆப்பிரிக்க சர்வாதி காரமே! இனிப்பே! உப்பே! உவர்ப்பே!' என ரேஞ்சுக்கு அகில உலகத்திற்கும் 'அரை'கூவல் விடுப்பதுதான் செம காமடி.
'ஏய்...எல்லாரும் நல்லா பாத்துக்குங்க.. நானும் இணைய நாட்டாமைதான்.. நானும் இணைய நாட்டாமைதான்..' என்று கூவிக் கொண்டிருக்கிறார் அவர்...பாவம்!
assalamu alaikkum. Arumaiyana pathivu sako
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
1.
காணத்தவறாதீர்கள். உலகிலேயே மிக பெரிய, மிக சிறிய திருகுரான் பிரதிகளின் அரிய சிறுகண்காட்சி விடியோக்கள் .
மழலைகள், சிறார்கள் குரான் ஓதும் விடியோக்கள்.
.
2. சுட்டியை சொடுக்கி படியுங்கள்
---- >
புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர் < ----
.
அஸ்ஸலாமு அலைக்கு அதிரைக்காரர் மற்றும் ஆசிக்,
முதலில் உங்கள் இருவருக்கும் எனது கண்டனங்கள். கோவியை நாத்திகன் என்று சொன்னதற்காக. அவரே தான் ஒரு அரைகுறை என்று ஒப்புக்கொண்டார். ஆகவே, அவரை நாத்திகர் என்று சொல்லி, உண்மையாகவே நாத்திகத்தை நம்பும் நண்பர்களை கேவலப் படுத்தாதீர்கள்.
இரண்டாவது, நாத்திகத்திற்கு எதிராக இந்த பதிவு என்றால். நன்று. மிக்க நன்று. ஆனால் கோவி கண்ணனுக்கு எதிராக என்றால். மீண்டும் எனது கண்டனங்கள். அவருக்கு இதெல்லாம் பிடிக்காது. பதிலும் சொல்ல மாட்டார். கக்கூஸ் பத்தி எழுதினீர்கள் என்றால், உடனே பதில் சொல்வார் இல்லாட்டி எதிர் பதிவு போடுவார். ஹி..ஹி... ஹி....
சலாம் சகோ சுவனப்பிரியன்,
/* எதிர் பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர் பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர் பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர் பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர் பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர் பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர் பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர் பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர் பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர் பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவு. */
செம.. LOL .....
அப்புறம், உங்களுக்கும் கோவி கண்ணனுக்கும் இடையில் ஏதும் ஒப்பந்தம் உள்ளதா??? உங்களுடன் மட்டும் தான் விவாதிப்பாராம். அடுத்த முறை சந்தித்தால், பொதுவா எழுதாம அன்புள்ள சுவனப் பிரியனுக்குன்னு கடிதம் எழுதச் சொல்லுங்கள் சகோ.
/* தமிழனின் நால்வகை நிலங்களிலும் எந்த நிலப்பகுதியிலும் சூரியபகவான் என்று இல்லை! ஆக, பொங்கலன்று சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துதல் என்பது மூடநம்பிக்கை மற்றுமின்றி கடவுள் மோசடியுமாகும். இதை எந்தப் பகுத்தறிவாளரும் கண்டு பிடிக்காமல் பொங்கலோ பொங்கல் என்று கோஷம் போடுவது சற்று ஆச்சரியமாக உள்ளது!
ஒருவேளை தைமாசம் பகுத்தறிவு வேலை செய்யாதோ? :)) */
என்னா நக்கலு உங்களுக்கு......
//ஏ அமெரிக்க ஏகாதி பத்தியமே! ஆப்பிரிக்க சர்வாதி காரமே! இனிப்பே! உப்பே! உவர்ப்பே!' //
மரைக்காயரே! உங்கள் கவிதையில் பல சுவைகளும் உள்ளன.நல்ல நகைச்சுவை போங்க! :))
சுவனப்பிரியன்,
COFFEEயை கண்டுபிடிச்சவங்க அரேபியர்கள், காப்பி&பேஸ்ட்டை கண்டுபிடிச்சது தமிழர்கள்னு ஒரு யாராவது மொக்கை பதிவு போட்டுடப் போறாங்க. எதிர் பதிவுக்கு எதிர்பதிவுக்கு.... ஒய் திஸ் கொ.வெ? :)
வ அலைக்கும் ஸலாம் சகோ.ரஹீம் கஸ்ஸாலி.
//என்னா நக்கலு உங்களுக்கு......//
சிராஜ், என்னய வச்சு கேலிகீலி பண்ணலையே? :)
அடடா! இவ்வளவு களேபரம் நடந்துக்கே!
ஹும், கலி 'காலம்' முத்திப் போச்சு.
Post a Comment