சற்றுமுன் காப்பியடித்தது?
Tuesday, May 15, 2007
வலைப்பூ நண்பர்கள் நடத்தும் "சற்றுமுன்" தளம் தொடங்கப்பட்ட புதிதில் உலகெங்கும் நடக்கும் செய்திகளை மொழிமாற்றி அல்லது முன்னுரையுடன் உடனுக்குடன் வெளியிட்டார்கள்.
சமீபத்தில் 'சற்றுமுன்" தளத்தில் வெளியாகும் பதிவுகள் பெரும்பாலும் தட்ஸ்தமிழ் டாட்காம் போன்ற தளங்களிலிருந்து காப்பி அடித்த செய்திகளாகவே இருக்கின்றன. (கஷ்டப்பட்டு செய்தி சேகரிக்கும் தட்ஸ்தமிழ்காரர்கள் வருத்தப்பட மாட்டார்களா?:)
பிறதளங்களை விட தட்ஸ்தமிழ் செய்திகளை தரும் வேகம் சிறப்பானது. மேலும் முன்பு தானியங்கு எழுத்துருவில் இருந்த தளத்தை, சமீபத்தில் யூனிகோட் எழுத்துருவுக்கு மாற்றி இருக்கிறார்கள். ஆகவே, அதில் வரும் செய்திகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்வதைப் படிப்பது சற்றுமுன் தளத்தை எந்த விதத்தில் வேறுபடுத்தும்?
வெவ்வேறு நாடுகளில், நகரங்களிலிருந்து பங்கேற்று ஆர்வமாக எழுதும் வலைப்பூ செய்தியாளர்கள் ஆங்காங்கு நடக்கும் அல்லது நாளிதழ்களில் வெளிவராத உள்ளூர் செய்திகளை பதியலாமே. இதன் மூலம் மற்ற செய்திகளை விட அதிக நம்பகத்தனமையைப் பெற முடியும்.
"சற்றுமுன்" நண்பர்கள் கவனிப்பார்கள் என்ற ஆதங்கத்தில் சொல்லி விட்டேன்.
அப்புறம், சற்றுமுன் வெளியான என் இன்னொரு பதிவையும் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கவும். :-)
8 comments:
வாஸ்தவம்தான் ஐயா...
ஆனால் என் போன்றவர்கள் தமிழ்மணம் பழியென கிடக்கின்றோம். நாங்கள் தட்ஸ்தமிழ் செல்வது சற்றுமுன்னில் வரும் லிங்கை வைத்துதான். அதன் மூலம் தட்ஸ்தமிழுக்கு இது ஒரு இலவச விளம்பரம்தானே ஒழிய, இதில் வருத்தப்பட என்ன இருக்கின்றது.
டெல்லியிலிருந்து
சென்ஷி
என்னய்யா புதுசா சொல்ற!
துக்ளக், குமுதம், ஜூவின்னு போட்டுத் தாக்கிட்டிருந்தது தானே..
சென்ஷி சொன்னது சரிதான்...எனக்கு தட்ஸ்தமிழ் என்று ஒரு தளம் உள்ளதே சற்றுமுன்னை படித்தபிறகு தான் தெரியவந்தது...
அதனால் ஆங்காங்கு காப்பி பேஸ்ட் செய்தாலும் அருமையான விஷயங்களை உடனுக்குடன் வெளியிடுவதில் நன்றாக செயல்படுறாங்க
//வாஸ்தவம்தான் ஐயா...
ஆனால் என் போன்றவர்கள் தமிழ்மணம் பழியென கிடக்கின்றோம். நாங்கள் தட்ஸ்தமிழ் செல்வது சற்றுமுன்னில் வரும் லிங்கை வைத்துதான். அதன் மூலம் தட்ஸ்தமிழுக்கு இது ஒரு இலவச விளம்பரம்தானே ஒழிய, இதில் வருத்தப்பட என்ன இருக்கின்றது.//
சென்ஷி வழிமொழிகிறேன். தாட்ஸ்தமிழ் எனும் தளத்தைப்பற்றி இன்னும் சிலருக்கு எடுத்துச் சொல்கிறது சற்றுமுன்.
இந்தப் பதிவில் மொழிபெயர்ப்பு சரி என்கிறார் ஆனால் காப்பிஅடிப்பது தவறென்கிறார்.
மொழிபெயர்ப்பு எப்படி சரி? அது பயனாளர்களைப் பொறுத்துதான் சரி. மொழிபெயர்ப்புக்கும் தமிழில் வரும் செய்தியை பதிப்பதற்கும் டைப்பிங் மட்டும்தான் வித்தியாசம்.
சரி. இன்று காலை (பதிவை படிக்கும் முன்பு) சற்றுமுன் குழு சில முடிவுகளை எடுத்து எல்லா நண்பர்களுக்கும் மடல் அனுப்பியுள்ளேன்.
முழுக்கட்டுரையும் காப்பி அடிக்காமல் செய்தியின் சாரத்தை போட்டுவிட்டு லிங்க் தர முயல்கிறோம்.
செய்திகளை பகிர்வதே எங்கள் நோக்கம். அவற்றை ரிப்போர்ட் செய்வதல்ல. நேரடி ரிப்போர்ட்டிங் துவங்கி செய்ய இப்போதைஇக்கு எங்களால் முழுவதும் இயலாது.
சற்றுமுன் குறித்த உங்கள் கருத்துக்கு நன்றி. நீங்கள் சொல்கிற இடத்தில் முன்னேற்றம் தேவை. முயல்கிறோம்.
:))
//அதன் மூலம் தட்ஸ்தமிழுக்கு இது ஒரு இலவச விளம்பரம்தானே ஒழிய, இதில் வருத்தப்பட என்ன இருக்கின்றது//
சென்ஷி,
ஸ்மைலி போட்டிருக்கிறேனே கவனிக்கவில்லையா?
(அப்ப்டீன்னா வெட்டிப்பேச்சு பதிவுகள் மூலம் தமிழ்மணத்திற்கு இலவச விளம்பரம் கிடைக்குது என்றும் எடுத்துக் கொள்ளலாமா? :-)
//எனக்கு தட்ஸ்தமிழ் என்று ஒரு தளம் உள்ளதே சற்றுமுன்னை படித்தபிறகு தான் தெரியவந்தது...//
செந்தழலார்,
இணையத்தில் கும்மியடித்துக் கொண்டிருக்கும் :-) நீங்களெல்லாம் இப்படிச் சொல்லலாமா?
(கொஞ்சம் விட்டா நம்மளையும் கழுதையாக்கி விடுவீர்களய்யா)
//என்னய்யா புதுசா சொல்ற!//
அனாணி,
ரிப்பீட்டு
சிறில் அலெக்ஸ்,
சற்றுமுன்னில் எழுதுபவர்களில் தமிழ் வலையுலகில் ஓரளவு பரிச்சயமுள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆங்காங்கு நிகழும் செய்திகளை எடுத்துக் கொண்டு அந்தப் பகுதியில் இருப்பவராக இருந்தால் அச்செய்தியைப் பற்றிய ஆய்வை அல்லது மேலதிக விபரங்களை எழுதினால் வாசகர்களை ஈர்க்கும். உதாரனமாக சமீபத்தில் மதுரை தினகரன் அலுவலகப் படுகொலைகளைப் பற்றிய செய்திகளை மதுரைக்காரர்கள் எழுதலாம். ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி ஊடகங்கள் அவர்களுக்குத் தோதாக செய்திகளை மாற்றிக் கொள்கிறார்கள். இதையே சம்பந்தப்பட்ட பகுதியிலிருக்கும் பதிவர்கள் எழுதினால் ஓரளவு உண்மையான செய்திகளை அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் சற்றுமுன் செய்தியின் நம்பகத்தன்மையும் அதிகரிக்கும்.
//இந்தப் பதிவில் மொழிபெயர்ப்பு சரி என்கிறார் ஆனால் காப்பிஅடிப்பது தவறென்கிறார்.
மொழிபெயர்ப்பு எப்படி சரி? அது பயனாளர்களைப் பொறுத்துதான் சரி. மொழிபெயர்ப்புக்கும் தமிழில் வரும் செய்தியை பதிப்பதற்கும் டைப்பிங் மட்டும்தான் வித்தியாசம்//
உலகச் செய்திகள் தமிழில் மறுநாள்தான் பெரும்பாலும் வெளிவருகின்றன. யாஹுவை விட வேகமாக சற்றுமுன் செய்திகள் வருகிறது என்று முன்பு சொன்னதாக ஞாபகம். அதைத்தான் மொழிமாற்றி எழுதுவது தவறில்லை என்றேன்.
(செய்திகளை காப்பியடிக்கக் கூடாது என்று சொல்லவில்லையே. அப்படியென்றால் ஒரு செய்தியை முதலில் சொன்னவர் மட்டுமே சொந்தமாகச் சொன்னார் என்று அர்த்தமாகும்.)
//சற்றுமுன் குறித்த உங்கள் கருத்துக்கு நன்றி. நீங்கள் சொல்கிற இடத்தில் முன்னேற்றம் தேவை. முயல்கிறோம்.//
புரிந்து கொண்டதற்கு நன்றி ஐயா!
(அப்ப மேலே சொன்னதெல்லாம் வீணாகப் போகவில்லை:-)))
Post a Comment