பயனற்ற கண்டுபிடிப்புகள் (Useless Inventions)

Sunday, July 31, 2005

மூளையைப் பயன்படுத்தி, கஷ்டப்பட்டு கண்டுபிடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகாத கண்டுபிடிப்புகளை தமிழமணம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் இலவச வெட்டி சேவையைத் தொடங்கியுள்ளோம். நமக்குத் தெரிந்த உபயோகமில்லாத கண்டுபிடிப்புகளின் பட்டியல் இதோ. முடிஞ்சா நீங்க புதுசா கண்டு பிடிக்க விரும்புவதையும் எழுதிப் போடுங்கடோய்...

  • A freezer for Eskimos.
  • AC adapter for solar calculators.
  • Air-Bag Motorcycle jacket.
  • Battery powered battery charger.
  • Battery-operated nuclear power plants.
  • Black Highlighter
  • Blinker Fluid.
  • Braille Drivers' Manual
  • Braille toilet paper.
  • Braille tv guide.
  • Braille tv remote control.
  • Breathable space suit.
  • Camcorder with braille-encoded buttons.
  • Candy bars with stannous fluoride added.
  • Car steering triangles -- doubles as anti-theft device.
  • Combs for bald-heads.
  • Cordless plumb line.
  • Dehydrated water.
  • Diet celery.
  • Digital clock-winder.
  • Digital computer.
  • Double-sided playing cards.
  • Ejector seats for helicopters.
  • Electric banana straightener.
  • Electric dog polisher.
  • Fireproof cigarettes.
  • Fireproof matches.
  • Flashbulb tester.
  • Foam rubber toothpicks.
  • Frictionless Sandpaper.
  • How-to cassettes for the deaf.
  • Ice skate sandals, for use in hot climates.
  • Inflatable anchor.
  • Inflatable PC -- The Ultimate Laptop!
  • Leather cutlery.
  • Lie detectors for politicians.
  • Low salt brine.
  • Money with negative face value.
  • Motorcycle seat-belts.
  • Non-intrusive alarm clock (raises a flag instead of ringing a bell).
  • Non-stick Cellotape.
  • Papier mache step ladder.
  • Parachute that opens automatically, upon impact.
  • Reversible garbage disposal.
  • Rubber Kleenex.
  • Screen door on a submarine.
  • Second-hand fireworks.
  • Self stick frying pan.
  • Soap Dissolver.
  • Solar powered flashlight.
  • Solar-powered pacemakers for elderly sunbathers.
  • Sugar coated insulin.
  • Unsinkable submarine.
  • Waterproof sponge.
  • Waterproof teabags.
  • Waterproof toilet paper.

மேலும் சில Made in Japan கண்டு பிடிப்புகள் போட்டோகளுடன் உள்ளன.

Read more...

சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்கிறேன்

Tuesday, July 19, 2005

சட்டம் என்பது அனைவருக்கும் பொது. அது சொல்றது சரியோ தவறோ, கட்டுப்பட்டு நாமெல்லாம் அதை மதித்து நடக்க வேண்டும். ஆனாலும் சில சட்டங்களைப் பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. நமக்கு சட்ட நுணுக்கமெல்லாம் தெரியாது. இருந்தாலும் யாராச்சும் வாசகர்கள் நிச்சயம் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

வருமான வரி:

உதாரணமாக ஒரு இலட்சம் வரை வருமான வரி கிடையாது. இது தற்போதைய சட்டம். பத்து வருடங்களுக்கு முன்பு ரூ.40,000 வரை வரி கிடையாது. ரூ.40,001 - ரூ.60,000 க்கு 20% வரி. ரூ.40,000 வரியில்லை! ரூ.40,001 இருந்தால் 20% வரி.

தெரிஞ்சுக்கத்தான் கேட்கிறேன், ஒரு ரூபாய் கூடினால் 40,000 போக மீதி 1 க்கு 20% வரி. அதாவது 20 பைசா! இதை வருமான வரி அலுவலகத்தில் எப்படி கட்டி இருப்பார்கள்?? அதற்கு எவ்வளவு செலவாகி இருக்கும்?

திருட்டு:

ஒருத்தன் ரெண்டு நாளா சாப்பிட வசதியில்லை. அன்னதானமும் கிடைக்கவில்லை! கடனும் வாங்க வாய்ப்பில்லை.ஹோட்டல்ல சும்மா போய் சாப்பாடு கேட்டா தர மாட்டாங்க. பக்கத்துல எதாவது கடையில கொஞ்சம் திருடி, கையும் களவுமா மாட்டிக்கிட்டா கொஞ்சம் தர்ம அடி கொடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்புவாங்க. அதுக்குப் பேரு மாமியார் வீடு. அங்கும் கொஞ்ச முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போடுவாங்க. மறுநாள் லோக்கல் ஜட்ஜ் 15 நாள் கடுங்காவல் தண்டனை கொடுப்பார். இனி 15 நாளைக்கு மூன்று வேலை சாப்பாடு! கவலையில்லை.

சும்மா சாப்பாடு கேட்டா தரமாட்டாங்க. ஆனால் திருடினால் 15 நாளைக்கு மூன்று வேலையும் சாப்பாடு கிடைக்கும். இது தெரிஞ்சா சாப்பாட்டுக்கு லாட்டரி அடிக்கும் எல்லோரும் திருட ஆரம்பிப்பார்கள். தெரிஞ்சுக்கத்தான் கேட்கிறேன் சட்டங்கள் குற்றத்தை தடுக்கவா அல்லது அதிகரிக்கவா?

இன்னும் நிறைய ஓட்டைகள் இருக்காம். உங்களுக்கு எதாச்சும் தெரிஞ்சா சொல்லுங்க புண்ணியமாப் போகும். யாரிடமும் சொல்ல மாட்டேன்!!!

Read more...

கோர்ட்டுக்கு வந்த வீரப்பன் கைது...!?

Saturday, July 16, 2005

காவல் ஆய்வாளர் சீருடையில், நீதிமன்றத்திற்கு கையெழுத்து போட வந்த நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார். நில ஆக்கிரமிப்பு தொடர்பாக வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் மீது சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றுள்ளார் மன்சூர். முன் ஜாமீன் நிபந்தனைப்படி தினமும் காலையும், மாலையும் ஜார்ஜ் டவுன் 15வது நீதிமன்றத்தில் ஆஜராகி அவர் கையெழுத்துப் போட வேண்டும். இதன்படி கடந்த 2 நாட்களாக இரு வேளையும் மன்சூர் கையெழுத்துப் போட்டார். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை அவர் நீதிமன்றத்திற்கு வந்தபோது அனைவரும் அவரைப் பார்த்து அதிர்ந்தனர். காரணம், போலீஸ் இன்ஸ்பெக்டர் உடையில் மன்சூர் அலிகான் வந்ததே.

மன்சூர் அலிகான் போலீஸ் சீருடையில் வந்ததற்கு மாஜிஸ்திரேட் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக மன்சூர் அலிகான் மீது வழக்கறிஞர் பாஸ்கர் என்பவர் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து உடனடியாக விரைந்து வந்த போலீஸார் மன்சூர் அலிகானை கைது செய்தனர். காவலர் சீருடையை தவறாகப் பயன்படுத்திய சட்டப் பிரிவின் கீழ் மன்சூர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அப்போது மன்சூர் அலிகான் போலீஸாரிடம் கூறுகையில், நான் சைதாப்பேட்டையில் படப்பிடிப்பில் இருந்தேன். இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.
நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட நேரமாகி விட்டதால் சீருடையை கழட்டாமல் அப்படியே வந்து விட்டேன். இன்ஸ்பெக்டர் உடையை வெளியில் அணிந்து வருவது தவறு என்பது எனக்குத் தெரியாது. வேண்டும் என்றே நான் இந்த உடையில் கோர்ட்டுக்கு வரவில்லை என்றார்.

இதையடுத்து மன்சூர் அலிகான் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கு முன்பு ஏகப்பட்ட வழக்குகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மன்சூர் அலிகான், ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்திற்கு இன்ஸ்பெக்டர் உடையில் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நமது பஞ்ச்:

"நல்ல வேலை கற்பழிப்பு சீன்ல நடித்து விட்டு வராம இருந்தாரே!"

நீங்களும் பஞ்ச் விடலாம்!

Read more...

பொம்பள சிரிச்சா...

Sunday, July 10, 2005

வர்த்தக விளம்பரங்களில், பொருட்களின் தரத்தை விட அதனை விளம்பரப்படுத்துபவரின் தரமே முன்னிலைப் படுத்தப்படுகிறது. குறிப்பாக எந்த விளம்பரத்திலும் பெண் மாடல்களின் ஆதிக்கம்தான் மேலோங்கியுள்ளதாக பொதுவான குற்றச் சாட்டு உண்டு. எனக்கு கண்ணை உரு/றுத்திய சில விளம்பரங்கள் பற்றி:

சமையல்:

ஆச்சி மசாலாவுக்கு தேவயானியும், மனோரமாவும் தேவை. உதயம் பருப்பின் தரத்தை சொல்ல சிம்ரன் தேவைப்படுகிறார். இவை கூட பரவாயில்லை பெண்கள் மிகவும் அறிந்த சமையல் பொருள் பற்றியது என்பதால் தேற்றிக் கொள்ளலாம்.

ஆனால் இவற்றை என்னவென்று சொல்வது?

சோப்பு:
சோப்பு விளம்பரங்களில் அழகான பெண்/நடிகை அதை உபயோகிப்பதாக சொன்னால்தான் மக்கள் வாங்குவார்களா?. லக்ஸ் சோப்பு விளம்பரத்திற்கு ஐஸ்வர்யா ராயும், பேன்டீன் சாம்பு விளம்பரத்திற்கு பிரீத்தி ஜிந்தா எல்லாத்தையும் தூக்கி எறியப் போகிறேன் எனச் ஓரக்கண்ணால் சிரித்து இரண்டு முறை சொல்ல வேண்டியுள்ளது. இதற்கு என்ன அர்த்தம்? லைப்பாய் சோப்புக்கு மட்டும் ஆண் மாடல்! ஏன் லக்ஸ் சோப்பை, விஜயை வைத்து விளம்பரப்படுத்தினால் விற்காதா? அல்லது லைப்பாய் சோப்பு ஆண்களுக்கு மட்டுமுள்ளதா?

கூல் டிரிங்ஸ்:

கூல் டிரிங்ஸ்ன்னா கொக்கோ கோலா என்று சொல்ல விக்ரம் மட்டும் போதாது கூட இரண்டு பெண் மாடல்கள் வேண்டும்!

சேவிங் லோசன்:

ஆண்கள் மட்டும் உபயோகிக்கும் சேவிங் லோசன், கிரீம் இவற்றிற்கு கூட பெண் மாடல்கள் தேவைப் படுகிறார்கள். என்ன கன்றாவிடா இது!

விளம்பரங்கள் தவிர்த்து சினிமாவிலும் பெண்மை கேவலப் படுத்தப் படுகிறது. நடிகைகளிடம் கிளாமராக நடிப்பீர்களா என்றால், கதைக்கு தேவை என்றால் கவர்ச்சி காட்டுவதில் தப்பில்லையாம்!

சீ..சீ.. நான் ஆச்சாரமான குடும்ப பெண். டூ பீஸில் நடிக்க மாட்டேன், தேவைபட்டால் சிங்கில் பீஸில் சில காட்சிகள் வருவேன்.! நீங்கள் ஏன் கவர்ச்சியாக நடித்துள்ளீர்கள் எனக் கேட்டால், கதைக்கு தேவைப்பட்டால், கவர்ச்சி காட்டுவதில் தப்பில்லையாம்! என்ன கதையா இது?

காதலனை நோக்கி ஓடி வரும் காதலி ஏன் ஸ்லோ மோசனில் ஓடி வருகிறார் எனத் தெரியவில்லை.

இதையெல்லாம் ஆணாதிக்க வக்கிரம் என்பதா? பெண்ணுரிமையின் வீழ்ச்சி என்பதா?

ஒன்னுமே புரியலே ஒலகத்திலே!


Read more...

அந்த இரண்டு ரூபாய் எப்படி வந்தது?

Saturday, July 09, 2005

பெரும்பாலும் வலைப்பூக்கள் வயது வந்தவர்களுக்கு மட்டும் எழுதப்படுவதால், நாற்பது வயது வரையுள்ள குழந்தைகள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். நம் ஜனாதிபதி. அப்துல் கலாம் அவர்கள் சமீபத்தில் நாகை வந்த போது என்னிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க மிகுந்த வேலைகளுக்கு மத்தியில் (இதுதான் இப்ப தமிழ்மணத்தில் ஸ்டைல்) இப்பதிவை எழுதுகிறேன்.

ராஜாவும், ஹாஜாவும் நண்பர்கள். அவர்களின் தோழி பூஜாவின் கல்யாணத்திற்கு ஒரு அன்பளிப்பு செய்ய விரும்பி தலா 25 ரூபாய் போட்டு ஒரு சிறிய சுவர்க்கடிகாரம் ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள். பணத்தை காசாளரிடம் கொடுத்து விட்டு சென்று விடுகிறார்கள்.

இவர்களைப் பற்றி நன்கு அறிந்த கடைக்காரர், பணத்தைக் செலுத்தி விட்டு தூரத்தில் சென்று கொண்டிருக்கும் அந்த இருவரிடமும், கடைக்கார பையனிடம் ஐந்து ரூபாயை கொடுத்து நான் தந்ததாக சொல்லி கொடு என்று ஐந்து ரூபாயை கொடுத்து அனுப்புகிறார்.

ஐந்து ரூபாயை கையில் வைத்திருக்கும் கடைப்பையன், எப்படியும் அவர்கள் பணத்தை கொடுத்து விட்டு சென்று விட்டார்கள். இதில் எவ்வளவு திருப்பி கொடுத்தாலும் அவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள். ஆகவே, இரண்டு ரூபாயை தனக்கு எடுத்துக் கொண்டு (வேலை முடிந்ததும் கடலை மிட்டாய் வாங்கித் தின்ன?) மீதி மூன்று ரூபாயை அவர்களிடம் கொடுத்து, விபரத்தை சொன்னான். அவர்களும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு, கிடைத்த மூன்று ரூபாயில் ஆளுக்கு ஒரு ரூபாய் ஐம்பது காசுகள் பிரித்துக் கொள்கிறார்கள்.

அன்பளிப்பு வாங்கிய வகையில் ஆளுக்கு ஒரு ரூபாய் ஐம்பது காசுகள் திரும்ப கிடைத்து விட்டன. எனில், ஒவ்வொருவருக்கும் ஆன செலவு:

இருவருக்கு (50.00- 3.00) = 47.00 ரூபாய்
திரும்ப கிடைத்தது = 3.00 ரூபாய்
சிறுவன் எடுத்துக் கொண்டது = 2.00 ரூபாய்
======
மொத்தம் 52.00 ரூபாய்
======

இருவரும் சேர்த்து முதலீடு செய்தது 50.00 ரூபாய். ஆனால் ரூபாய் 52.00 க்கு பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது? எனில் உபரியாக அந்த இரண்டு ரூபாய் எப்படி வந்தது?

Read more...

இந்த வார சிரிப்பு

Monday, July 04, 2005

ஒரு பிரபலமான கம்பெனியில் ஒருவர் மிகுந்த கஷ்டப்பட்டு வேலைக்கு சேர்கிறார். அவரை சேர்க்கும் போது முதல் மூன்று மாதங்களுக்கு உங்கள் அணுகுமுறையை வைத்துதான் பணி நிரந்தரம் கிடைக்கும் என்று சொல்லி சேர்த்தார்கள். அவரும் ஒப்புக் கொண்டு பணி செய்து வந்தார்.

வேலையில் சேர்ந்து ஒரு வாரம் கழிந்தது. வேலை மண்டை காய வைத்தது. அவருக்கு ஒதுக்கப் பட்டிருந்த தொலைபேசியிலிருந்து போன் செய்து டக்கென் சில எண்களை அழுத்தி "Bring me Coffee without suger" என்றார்.

மறு முனையில் போனை எடுத்தவர், அந்நிறுவனத்தின் இயக்குனர். கோபமாக, Idiot, Do you know withwhome you're taking? I am your Director!!" என்றார்.

உடனே, புதிதாக வேலையில் சேர்ந்தவர் மீண்டும், "Do you know with whome you're talking?" என்றார்.

அதற்கு மறு முனையிலிருந்தவர் "No" என்றார்.

"Thanks God!" என்று சொல்லி போனை பவ்வியமாக வைத்து விட்டு வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

இது போன்ற சம்பவம் உங்களுக்கு நடந்திருந்தால், அதையும் எழுதலாமே!

Read more...

அடடா...(1)

Friday, July 01, 2005

வளைந்து செல்லும் மலைப்பாதையில் ஒரு சுற்றுலா பேரூந்து முக்கி முக்கி ஏறிக் கொண்டிருந்தது. அதில் இருந்த அனைத்து பயணிகளும் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு காதல் ஜோடியைத் தவிர! வாகனங்கள் ஒதுங்க அமைக்கப் பட்டிருந்த நிறுத்தம் வந்ததும் அந்த காதல் ஜோடிகள் இறங்கிக் கொண்டார்கள்.

தோளில் கை போட்டுக்கொண்டு சிரித்துக் கொண்டே அவர்கள் அருகிலுள்ள கடையை நோக்கி
செல்லும்போது, மிகுந்த ஓசையுடன் ஒரு பாறை அவர்கள் வந்த பேரூந்தின் மீது விழுந்து பயணம் செய்த அனைவரும் நசுங்கி, இறந்து விட்டார்கள்.

அதிர்ச்சியுடன் திரும்பிய காதலன், "சே! நாமும் அந்த பேருந்தில் இருந்திருக்க வேண்டும்!" என்றான். அதுவரை ஆசையுடன் அவனுடன் வந்த காதலி, முதல் முறையாக அவனை வியப்புடன் நோக்கினாள்.

மேற்கண்ட சம்பவம் ஒரு கற்பனையே. எனினும், இதில் சில விஷயங்கள் இருக்கின்றன. அனேகமாக இதை இணையத்திலோ அல்லது ஈமெயிலிலோ படித்திருப்பீர்கள்.
நீங்கள், இதை ஏற்கனவே படித்திராவிட்டால், கீழ்கண்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்:

பாறை விழுந்து கண் முன்னே நொருங்கும் பேருந்தைப் பார்த்து, சே! நாமும் அந்த
பேருந்தில் இருந்திருக்க வேண்டும் என "ஏன்" காதலன் சொன்னான்?


விடை: யாரும் சொல்லாத பட்சத்தில் பின்னூட்டமிடப் படும்!

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP