அந்த இரண்டு ரூபாய் எப்படி வந்தது?
Saturday, July 09, 2005
பெரும்பாலும் வலைப்பூக்கள் வயது வந்தவர்களுக்கு மட்டும் எழுதப்படுவதால், நாற்பது வயது வரையுள்ள குழந்தைகள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். நம் ஜனாதிபதி. அப்துல் கலாம் அவர்கள் சமீபத்தில் நாகை வந்த போது என்னிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க மிகுந்த வேலைகளுக்கு மத்தியில் (இதுதான் இப்ப தமிழ்மணத்தில் ஸ்டைல்) இப்பதிவை எழுதுகிறேன்.
ராஜாவும், ஹாஜாவும் நண்பர்கள். அவர்களின் தோழி பூஜாவின் கல்யாணத்திற்கு ஒரு அன்பளிப்பு செய்ய விரும்பி தலா 25 ரூபாய் போட்டு ஒரு சிறிய சுவர்க்கடிகாரம் ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள். பணத்தை காசாளரிடம் கொடுத்து விட்டு சென்று விடுகிறார்கள்.
இவர்களைப் பற்றி நன்கு அறிந்த கடைக்காரர், பணத்தைக் செலுத்தி விட்டு தூரத்தில் சென்று கொண்டிருக்கும் அந்த இருவரிடமும், கடைக்கார பையனிடம் ஐந்து ரூபாயை கொடுத்து நான் தந்ததாக சொல்லி கொடு என்று ஐந்து ரூபாயை கொடுத்து அனுப்புகிறார்.
ஐந்து ரூபாயை கையில் வைத்திருக்கும் கடைப்பையன், எப்படியும் அவர்கள் பணத்தை கொடுத்து விட்டு சென்று விட்டார்கள். இதில் எவ்வளவு திருப்பி கொடுத்தாலும் அவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள். ஆகவே, இரண்டு ரூபாயை தனக்கு எடுத்துக் கொண்டு (வேலை முடிந்ததும் கடலை மிட்டாய் வாங்கித் தின்ன?) மீதி மூன்று ரூபாயை அவர்களிடம் கொடுத்து, விபரத்தை சொன்னான். அவர்களும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு, கிடைத்த மூன்று ரூபாயில் ஆளுக்கு ஒரு ரூபாய் ஐம்பது காசுகள் பிரித்துக் கொள்கிறார்கள்.
அன்பளிப்பு வாங்கிய வகையில் ஆளுக்கு ஒரு ரூபாய் ஐம்பது காசுகள் திரும்ப கிடைத்து விட்டன. எனில், ஒவ்வொருவருக்கும் ஆன செலவு:
இருவருக்கு (50.00- 3.00) = 47.00 ரூபாய்
திரும்ப கிடைத்தது = 3.00 ரூபாய்
சிறுவன் எடுத்துக் கொண்டது = 2.00 ரூபாய்
======
மொத்தம் 52.00 ரூபாய்
======
இருவரும் சேர்த்து முதலீடு செய்தது 50.00 ரூபாய். ஆனால் ரூபாய் 52.00 க்கு பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது? எனில் உபரியாக அந்த இரண்டு ரூபாய் எப்படி வந்தது?
9 comments:
இருவரும் செலவு செய்தது -50 ரூபாய்
கடைக்காரரிடம் இருப்பது - 45 ரூபாய்
பையனிடம் இருப்பது - 2 ரூபாய்
திரும்ப கிடைத்தது - 3 ரூபாய்
------------
மொத்தம் - 50 ரூபாய்
சரியாக இருக்கிறது அல்லவா?
முதலீடு = 50 ரூபாய் - திரும்ப வந்தது 3.00. ஆக இவர்களைப் பொருத்தவரை ஆளுக்கு 23.50 செலவு.
23.50 X 2 = 47.00 + 3+ 2 = 52.00 அல்லவா வருகிறது?
பையனுக்குக் கிடைத்த 2 ரூபாய் அவர்கள் செலவுக் கணக்கிலே சேர்க்காமல் ஊழல் செய்கிறீர்களே இது நியாயமா?
பொருளுக்கு செலவு : ஆளுக்கு 22.50
பையனுக்கு கொடுத்தது (அல்லது பையன் எடுத்துக்கொண்டது: ஆளுக்கு 1.00
மிச்சம் : ஆளுக்கு 1.50
இப்ப கூட்டிக் கழிச்சு பாருங்க!
பையன் எடுத்து இவர்களுக்குத் தெரியாதல்லவா? இவர்களைப் பொருத்தவரை திரும்பி கிடைத்தது போக, மீதியெல்லாம் செலவுதானே
உங்கள் வயது என்ன?
பையன் எடுத்து இவர்களுக்குத் தெரியாதல்லவா?-- then why are you bringing that in the calculation? forget it!
sami emaathaathiinga!
50 ரூபாயில் 5 ரூபாய் தானே கழிக்க வேண்டும்...மூன்று ரூபாய் கழிப்பது தவறு.
சுரேஷ் அவர்கள் சரியாக சொல்லி விட்டார். எனினும் சுவாரசியத்தைக் கூட்டவும், மிக சரியான பதிலையும் பெறவே இந்த இழுவை. கலந்துஒ கொண்ட அனைவருக்கும் நன்றி.
யாராவது சுரேஷுக்கு அன்பளிப்பு செய்ய விரும்பினால் பின்னூட்டமிடவும்.
வணக்கம் அதிரைக்காரன்!
உண்மையிலேயே நீங்கள் முன்னர் இந்தக் கணக்கு இங்கே வலைப்பதிவில் போட்டிருந்தது எனக்குத் தெரியாது. என்னிடம் ஒருவர் நேரில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கேட்ட கேள்வியையே, கொஞ்சம் சுவாரசியமாக்கி (??) எழுதி இருந்தேன். அதற்கு ஷ்ரேயா அவர்கள் எழுதிய பின்னூட்டத்தையும், அதற்கு நான் எழுதிய பதிலையும் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள். ஷ்ரேயாவுக்கும் யார் அந்த கேள்வியைப் போட்டார்கள் என்பது சரியாக தெரியாது. எனது பதிவில் பின்னூட்டம் இட்ட மற்றவர்களும் உங்களது பதிவைப் பார்க்கவில்லைப் போலுள்ளது. அதனால்தான், எனக்கு உங்களுடைய பதிவைப் பார்க்க முடியாமல் போனது. என்னிடம் கேள்வி கேட்டவர் ஆட்டுக் குட்டியை வைத்துத்தான் கதை சொல்லி இருந்தார். மற்ற பெயர்கள்தான் நானாக போட்டுக் கொண்டது. உண்மையிலேயே, உங்களுடைய பதிவை மாற்றி எனது பதிவை நான் இடவில்லை. தயவு செய்து புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
இந்த கேள்வியில் எனது சிந்தனையோ, கற்பனையோ எதுவுமே இல்லை. :)என்னை இந்தக் கேள்வி கேட்டவரோட கற்பனையும்கூட இல்லை. காரணம் அவருக்கே சரியா பதில் சொல்லத் தெரியலை. :)) அவர் வலைப்பூக்கள் பார்ப்பவரும் இல்லை. ஒருவேளை உங்கள் வலைபூவைப் பார்த்த வேறு யாராவது அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்களா தெரியவில்லை.
Post a Comment