சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்கிறேன்
Tuesday, July 19, 2005
சட்டம் என்பது அனைவருக்கும் பொது. அது சொல்றது சரியோ தவறோ, கட்டுப்பட்டு நாமெல்லாம் அதை மதித்து நடக்க வேண்டும். ஆனாலும் சில சட்டங்களைப் பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. நமக்கு சட்ட நுணுக்கமெல்லாம் தெரியாது. இருந்தாலும் யாராச்சும் வாசகர்கள் நிச்சயம் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.
வருமான வரி:
உதாரணமாக ஒரு இலட்சம் வரை வருமான வரி கிடையாது. இது தற்போதைய சட்டம். பத்து வருடங்களுக்கு முன்பு ரூ.40,000 வரை வரி கிடையாது. ரூ.40,001 - ரூ.60,000 க்கு 20% வரி. ரூ.40,000 வரியில்லை! ரூ.40,001 இருந்தால் 20% வரி.
தெரிஞ்சுக்கத்தான் கேட்கிறேன், ஒரு ரூபாய் கூடினால் 40,000 போக மீதி 1 க்கு 20% வரி. அதாவது 20 பைசா! இதை வருமான வரி அலுவலகத்தில் எப்படி கட்டி இருப்பார்கள்?? அதற்கு எவ்வளவு செலவாகி இருக்கும்?
திருட்டு:
ஒருத்தன் ரெண்டு நாளா சாப்பிட வசதியில்லை. அன்னதானமும் கிடைக்கவில்லை! கடனும் வாங்க வாய்ப்பில்லை.ஹோட்டல்ல சும்மா போய் சாப்பாடு கேட்டா தர மாட்டாங்க. பக்கத்துல எதாவது கடையில கொஞ்சம் திருடி, கையும் களவுமா மாட்டிக்கிட்டா கொஞ்சம் தர்ம அடி கொடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்புவாங்க. அதுக்குப் பேரு மாமியார் வீடு. அங்கும் கொஞ்ச முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போடுவாங்க. மறுநாள் லோக்கல் ஜட்ஜ் 15 நாள் கடுங்காவல் தண்டனை கொடுப்பார். இனி 15 நாளைக்கு மூன்று வேலை சாப்பாடு! கவலையில்லை.
சும்மா சாப்பாடு கேட்டா தரமாட்டாங்க. ஆனால் திருடினால் 15 நாளைக்கு மூன்று வேலையும் சாப்பாடு கிடைக்கும். இது தெரிஞ்சா சாப்பாட்டுக்கு லாட்டரி அடிக்கும் எல்லோரும் திருட ஆரம்பிப்பார்கள். தெரிஞ்சுக்கத்தான் கேட்கிறேன் சட்டங்கள் குற்றத்தை தடுக்கவா அல்லது அதிகரிக்கவா?
இன்னும் நிறைய ஓட்டைகள் இருக்காம். உங்களுக்கு எதாச்சும் தெரிஞ்சா சொல்லுங்க புண்ணியமாப் போகும். யாரிடமும் சொல்ல மாட்டேன்!!!
2 comments:
//ஒருத்தன் ரெண்டு நாளா சாப்பிட வசதியில்லை. அன்னதானமும் கிடைக்கவில்லை! கடனும் வாங்க வாய்ப்பில்லை.ஹோட்டல்ல சும்மா போய் சாப்பாடு கேட்டா தர மாட்டாங்க. பக்கத்துல எதாவது கடையில கொஞ்சம் திருடி, கையும் களவுமா மாட்டிக்கிட்டா கொஞ்சம் தர்ம அடி கொடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்புவாங்க. அதுக்குப் பேரு மாமியார் வீடு. அங்கும் கொஞ்ச முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போடுவாங்க. மறுநாள் லோக்கல் ஜட்ஜ் 15 நாள் கடுங்காவல் தண்டனை கொடுப்பார். இனி 15 நாளைக்கு மூன்று வேலை சாப்பாடு! கவலையில்லை.
சும்மா சாப்பாடு கேட்டா தரமாட்டாங்க. ஆனால் திருடினால் 15 நாளைக்கு மூன்று வேலையும் சாப்பாடு கிடைக்கும். இது தெரிஞ்சா சாப்பாட்டுக்கு லாட்டரி அடிக்கும் எல்லோரும் திருட ஆரம்பிப்பார்கள். தெரிஞ்சுக்கத்தான் கேட்கிறேன் சட்டங்கள் குற்றத்தை தடுக்கவா அல்லது அதிகரிக்கவா?//
athaanee!
- Raaja
En ya nee ellam padicha aal thana??? vari vithikurathu pathi pesi irukeere...atha pathi kindal panni irukeere...neere nalla oru solution kodukurathu....epadi than pinna vari vithikurathuku ilakku vaikurathu????
Post a Comment