இன்ஷியல் பிராப்ளம் (Initial Problem)
Wednesday, August 31, 2005
இது சாதாரண மேட்டர்தான். பெரும்பாலும் இதுக்கு நாம் காரணம் இல்லை. பெற்றோர்களும் அவர்களின் பெற்றோர்களும் செய்தது நமக்கு சில நேரங்களில் தலைவலியாகிவிடும்.
இந்தியர் தவிர மற்றவர்கள் பெரும்பாலும் தந்தை பெயரையும் குடும்ப பெயரையும் பெயருக்குப் பின்னாள் இணைப்பார்கள். உதாரணமாக George W. Bush, சதாம் உசேன் அல் திக்ரிதி etc. மலையாளிகள் தங்கள் பெயருடன் வீட்டின் பெயரை அல்லது ஊரின் பெயரை சேர்த்துச் சொல்வார்கள். உ.ம். திருக்கோட்டியூர் மாதவன்.
தந்தையின் பெயரின் முதல் எழுத்தை இனிசியலாக வைப்பதில் உள்ள சங்கடம். பெயருடன் Initial (தந்தை பெயர்) ஐ இணைக்கும் போது, நம்மில் பெரும்பாலோர் தந்தை பெயரின் முதல் எழுத்தை பயன்படுத்துவோம். இது சிலருக்கு தர்ம சங்கடமாகி விடும். சில பெயர்களை குறிப்பிடுகிறேன்.
க.பால முருகன் - "கபால" முருகன்
C.காளிமுத்து - "சீக்காளி" முத்து.
E.ரசாக் - "ஈர" சாக்கு.
சோ.மாரிமுத்து - 'சோமாரி' முத்து. சோமாரி என்றால் மெட்ராஸ்காரர்களுக்கு கெட்ட கோபம் வரும்.
சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கலாம் அல்லது தந்தையின் முழு பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் முடிஞ்சா சிரிக்கலாம்.
பி.கு. : குரங்கு சிரித்தால் பயப்படுகிறது என்று அர்த்தமாம். யாருக்காவது மேலதிக தகவல் தெரிந்தால் எழுதிப் போடுங்க. மறக்காம இனிஷியலோடு பின்னூட்டமிடுங்க :-)))