இந்தியாவின் கடனைத்தீர்க்க ஒரு எளிய வழி.
Thursday, August 18, 2005
சில வருடங்கள் வரை நம் நாட்டின் தனிநபர் வெளிநாட்டுக்கடன்? சுமார் 4,470 ரூபாயாக இருந்து வந்தது. இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கத்தால் அது கொஞ்சம் குறைந்துள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு செய்தியின் மூலம் இதனை அறியலாம். சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இந்தியாவின் கடனைத் தீர்ப்பதற்காக தன் பங்குக்கு ரூ. 3000க்கான காசோலையை அனுப்பினார். இந்த காசோலையை தமிழக அரசுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பி வைத்தது.
இதையடுத்து மாநில அரசு அதிகாரிகள், அந்த இளைஞரை வரவழைத்து காசோலையை அவரிடமே திருப்பிக் கொடுத்தனர். சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் (பெயர் குறிப்பிடப்படவில்லை) இந்தியாவின் கடன் தொகையை அறிந்து மலைத்துப் போனார்.
ஒவ்வொரு இந்தியரும் தலா ரூ. 3,000 செலுத்தினால் இந்தியாவின் கடன் தொகையை மொத்தமாக அடைத்து விடலாம் என்பதை அறிந்த அவர் உடனடியாக ரூ. 3,000க்கு வங்கியில் காசோலையை (டிமாண்ட் டிராப்ட்) எடுத்தார்.
இந்த காசோலையை குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அனுப்பி வைத்தார். அத்துடன் ஒரு கடிதத்தையும் இணைத்தார். அதில், இந்தியாவின் கடன் சுமைக்கு எனது பங்கை அனுப்பி வைத்துள்ளேன். இதை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுமாறும் கோரியிருந்தார்.
இந்தக் காசோலை கிடைக்கப் பெற்ற குடியரசுத் தலைவர் மாளிகை உடனடியாக அதை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது. காசோலையை சம்பந்தப்பட்ட நபரிடம் திருப்பிக் கொடுத்து விடுமாறு குடியரசுத் தலைவர் மாளிகை கேட்டுக்கொண்டது.
இதையடுத்து தமிழக அரசு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இளைஞரை வரவழைத்து அவரிடம் காசோலையை திருப்பிக் கொடுத்தனர். காசோலை திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டது என்பதற்கான ஒரு அறிக்கையையும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.
இந்தியாவின் கடனைத் தீர்க்க ரூ. 3,000 அனுப்பிய இளைஞரின் மாத சம்பளம் ரூ. 8,000 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்தியாவின் கடனைத் தீர்க்க வேண்டும் என்ற ஆவலால் தனது சக்தியையும் மீறி பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக்கடன்:
$98,232,000,000
Source: CIA World Factbook
இந்தியாவின் மொத்த மக்கள் தொகை:
1,065,070,607
Source: CIA World Factbook
நீதி: அதிக குழந்தை பெற்றால் இந்தியாவின் கடன் சுமை குறையும்?
19 comments:
சார் சொன்ன விஷயம் நல்ல விஷயம். ஆனா நீதிங்கிற பேர்ல "விளையாடிட்டீங்க".
அதே நேரத்தில தனி நபர் வருமானமும் குறைந்துப்போயிடுமே.. ?
5ரூ சம்பாதித்து 2.5ரூ கடன்சுமை இருக்கிறதும். 3 ரூ சம்பதித்து 1.5 ரூ கடன் சுமை இருக்கிறது ஒன்னுதானே?? :)
வீ எம்
சரியனா தமாஷு பேர்வழியா இருப்பீங்க போல!!! போங்க சார்!!
Adaponga sir
அந்த இளைஞனை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது. உங்க டமாசை நினைக்கையில் வயிறு புண்ணாகுது.
அப்ப தமிழ்ச்சினிமாகூட சில நல்ல விசயங்களைச் செய்திருக்கு எண்டு சொல்லுங்கோ.
ஏதோவொரு படத்தில விஜய் இப்படிச் செய்வாரே?
எனக்கு இன்னொரு சந்தேகம். இவ்வளவு கடனை வைத்துக்கொண்டுமா மற்ற நாடுகளுக்குக் கடனுதவி செய்கிறது இந்தியா?
வாடிய பயிரைக் கண்ட.....
//அதே நேரத்தில தனி நபர் வருமானமும் குறைந்துப்போயிடுமே.. ?//
V.M. அண்ணே, புதுசாப் பொறந்தவங்கலாம் 'கம்முன்னு' வீட்டுல குந்திக்கினு இருந்தா நீங்க சொல்றது சரி. இருக்கிற ஸ்வாகப் பண்ணதான்னு நெனச்சீங்கன்ன அது உங்க தவறு சாமி.
//நீதிங்கிற பேர்ல "விளையாடிட்டீங்க//
மக்கள் மட்டும் கட்டுப்பாடோட இருக்கனுன்னு சொல்லிட்டு இந்த அரசியல்வாதிங்க பண்ற விளையாட்டு கொஞ்ச நஞ்சமல்ல.
//உங்க டமாசை நினைக்கையில் வயிறு புண்ணாகுது. //
சாரி ராமா, ஒரு பக்கம் டமாசா இருந்தாலும் இன்னொரு பக்கம் வேதனையா இருக்கு.
//இவ்வளவு கடனை வைத்துக்கொண்டுமா மற்ற நாடுகளுக்குக் கடனுதவி செய்கிறது இந்தியா?//
தான் பசித்திருந்தாலும் அடுத்தவனுக்கு சோறிட்டு மகிழும் பண்பாடு எங்கள் இந்தியப்பண்பாடு.
நிதியமைச்சருக்கு ஒரு கோரிக்கை:
நான் வாங்காத கடனை இந்தியா சார்பில் என் பங்குக்கு தந்து விடுகிறேன். ஆனால் இனி கடன் வாங்குவதாக இருந்தால் என்னைக் கேட்காமல் வாங்கக் கூடாது. சரியா?
//5ரூ சம்பாதித்து 2.5ரூ கடன்சுமை இருக்கிறதும். 3 ரூ சம்பதித்து 1.5 ரூ கடன் சுமை இருக்கிறது ஒன்னுதானே?? :)//
100 ரூபாய் கடனை 10 பேரு திருப்பிக் கட்டுவதும். 15 பேரு திருப்பி கட்டுவதும் வித்தியாசம் உண்டே?
கட்டுப்பாடு கடன் வாங்குறதிலும் இருக்க வேண்டும். உற்பத்தி குழந்தையில் மட்டும் இருக்கக் கூடாது.
kanakkil siru thavaru ulladhu.
3000 roopai kodukka koodiya vasadhi ullavargal evvalavu per enpadhai kanakkil kolla vendum. makkal thogai alla.
//3000 roopai kodukka koodiya vasadhi ullavargal evvalavu per enpadhai kanakkil kolla vendum. makkal thogai alla//
மொத்த வெளிநாட்டுக்கடன் என்று வரும் போது மொத்த மக்கள் தொகையே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. திருப்பி செலுத்தும் வசதியுள்ளவர்களை மட்டுமோ அல்லது வறுமைக்கோட்டுக்கு மேலுள்ளவர்கள் மட்டுமோ அல்ல.
அய்யா நீதீ மானே போதும்யா ஒன்ற நீதீ.
இது நிதி பிரச்சனைய் அய்யா.
எனக்கென்னவோ அந்த இளைஞரின் செய்கை முட்டாள்தனமாகத்தான் (அல்லது உணர்ச்சிவசமாகத்தான்) படுகிறது. இப்படி ஒவ்வொருவரும் காசு கொடுத்து அடைப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது. அந்த இளைஞர் என்ன படித்திருக்கிறார் என்று அறிய ஆவல்.
எனக்கென்னவோ அந்த இளைஞரின் செய்கை முட்டாள்தனமாகத்தான் (அல்லது உணர்ச்சிவசமாகத்தான்) படுகிறது. இப்படி ஒவ்வொருவரும் காசு கொடுத்து அடைப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது. அந்த இளைஞர் என்ன படித்திருக்கிறார் என்று அறிய ஆவல்.
அவர் பற்றிய மேலதிக தகவல் தெரியவில்லை ரவிசங்கர். அந்த இளைஞனின் செயல் நடமுறைக்கு சாத்தியமில்லாவிட்டாலும், நம் போல் அல்லாமல் தனக்கு முடிந்ததை செய்ததை முட்டாள்தனமாக நான் கருதவில்லை.
உள்நாட்டு பணத்தேவைக்கு கடன் பத்திரம் வெளியிட்டு நிதி திரட்டுவது போல் எல்லா இந்தியரும் மனது வைத்தால் இதுவும் சாத்தியமே.
பின்னூட்டமிட்டவர்களில் எல்லோரும் மக்கள் தொகையைப்பற்றியே கவலைப் பட்டிருக்கிரார்கள். எல்லோருமே வீட்டிற்கு ஒரே பிள்ளையா?
அரசியல்வதிகளின் செலவினத்தை குறைப்பது பற்றியும் யாரும் கவலைப்படவில்லை. இதுதான் அரசியல்வாதிகளின் வெற்றி என்பது எனது கருத்து.
மொதல்ல அரசியல்வாதிங்கள கட்டுப்படுத்தூன்றிங்க?
ஏம்பா அம்பீ,
மக்கள் தொகையால் இந்த பிரச்சினையை தீர்க்கலாம் என்ற அர்த்தத்தில்
ஒரு பதிவு எழுதிட்டு அப்புறம் எல்லாரும் மக்கள் தொகை பற்றியே பேசுறாங்கன்னு
அலுத்துக்கறியே?கைது நன்னா இருக்கா?
Ð நன்னா இருக்கா?
//பின்னூட்டமிட்டவர்களில் எல்லோரும் மக்கள் தொகையைப்பற்றியே கவலைப் பட்டிருக்கிரார்கள். எல்லோருமே வீட்டிற்கு ஒரே பிள்ளையா?//
//ஏம்பா அம்பீ,
மக்கள் தொகையால் இந்த பிரச்சினையை தீர்க்கலாம் என்ற அர்த்தத்தில் ஒரு பதிவு எழுதிட்டு அப்புறம் எல்லாரும் மக்கள் தொகை பற்றியே பேசுறாங்கன்னு
அலுத்துக்கறியே?கைது நன்னா இருக்கா? //
அலுத்துக்கலே அம்பீ! அப்ப மக்கள் தொகை பெருகுனா கடன அடைக்கலாம்கரயா? இல்லையா?
திருப்பதி உண்டியல ஒடைச்சாலே கடன அடச்சுப்புடலாம்
Post a Comment