பெயர்க்காரணம்

Sunday, August 07, 2005

பெயர்-ஒரு அடையாளம். Nameology என்ற புது துறையே கூட தற்போது பிரபலம். வாஸ்து சாஸ்திரத்தில் கட்டிட அமைப்பை மாற்றி அமைப்பது போல், பெயரிலும் சில எழுத்துக்களை மாற்றி அமைக்கிறார்கள். பெயரை வைத்து இன்னும் என்னென்னமோ செய்றாங்க. அந்த அளவுக்கு பெயர் முக்கியமான ஒன்று.

பெயரில்லாமல் யாரும் இருக்க முடியாது (பெயரிலி?). பெயர் வைத்து அடையாளப் படுத்துவதை யார் கண்டு பிடித்தார்கள் என்று தெரியவில்லை. எல்லா மொழியிலும் நாட்டிலும் பெயரிடும் வழக்கம் இருக்கிறது. சிலருக்கு தன் பெயரை இன்னொருவருக்கு புரிய வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும்.

சிலரின் பெயரை வைத்து அவர் பிறந்த ஊர் பேசப்படும். சிலர் ஊர்ப்பெயரை தங்கள் பெயருடன் சேர்ந்த்து மகிழ்வர் (உதாரனம்: அதிரைக்காரன்..ஹி.ஹி..) இப்பழக்கம் எல்லா நாட்டிலும் உண்டு. எனக்குத் தெரிந்த சில பெயர்களையும் சம்பந்தப்பட்ட ஸ்தலங்கலையும் பட்டியலிடுகிறேன்.

இந்தியா:

  • சிதம்பரம் - தமிழ்நாடு
  • திருப்பதி - ஆந்திரா
  • காசி - உத்திரப் பிரதேசம்

உலகம்:

  • மக்கம் - சவூதி
  • மதீனா - சவூதி
  • வாஷிங்டன் - அமெரிக்கா

இவையன்றி சில பெயர்கள் எண்களைக் குறிக்கின்றன. (தமிழில் மட்டும்)

  • அஞ்சம்மா, அஞ்சப்பர் (5)
  • ஆறுமுகம் (6)
  • ஏழுமலை (7)
  • எட்டப்பன் (8)
  • நூறு முஹம்மது (100)
  • கண்ணாயிரம் (1000)
  • கோடீஸ்வரன் (10,000,000)

இது போல வேறு ஏதாவது வித்தியாசமான பெயர்கள் இருக்கிறதா?

* சம்பந்தப்பட்ட பெயருடையவர்கள் மன்னிக்க! (குறிப்பாக 'தமிழ்மணம்' காசி!)

** பெயரியல் (Nameology) போன்ற மூடநம்பிக்கைகளில் எனக்கு உடன் பாடில்லை.

4 comments:

Anonymous 8/07/2005 5:48 AM  

வாங்க! அதிராம்பட்டினம் சொக்கு! ஆட்டக் கழுதையாக்குன ஊராச்சே! அப்படியே அடுத்த பதிவிலே அதைப்பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க!

Anonymous 8/07/2005 11:36 PM  

//வாங்க! அதிராம்பட்டினம் சொக்கு! ஆட்டக் கழுதையாக்குன ஊராச்சே!//

பத்த வச்சிட்டியடா பரட்டை.

Anonymous 8/07/2005 11:38 PM  

சவுதியில இருந்த உங்களுக்கு, துருக்கி பெயர் மறந்து போச்சே.

அதிரைக்காரன் 8/08/2005 2:25 AM  

//சவுதியில இருந்த உங்களுக்கு, துருக்கி பெயர் மறந்து போச்சே.//

என்ன சொல்றீங்க அனானிமஸ்?

//பத்த வச்சிட்டியடா பரட்டை. //

அந்த கழுதைதான் நீங்கன்னு கேள்விப்பட்டேன்?! :-)

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP