ராணுவமும் எயிட்சும்

Sunday, August 28, 2005

இந்த செய்தியைப் படித்ததும் வேதனை கலந்த சிரிப்பு வருகிறது. நம் நாட்டின் எல்லையை பாதுகாக்க அனுப்பப்பட்ட வீரர்கள் எல்லை தவறியுள்ளனர். ஆனால் இது வேறு மாதிரியான எல்லை தாண்டல். மேற்கொண்டு படிச்சுட்டு உங்க கமெண்டையும் ஒரு எல்லையோடு வச்சுட்டுப் போங்க.

எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் (பி.எஸ்.எப்) இடையே எய்ட்ஸ் நோய் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீரர்கள் இடையே நாடு முழுவதும் நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் 70 பேருக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து கவலையடைந்துள்ள அந்தப் படையின் டைரக்டர் ஜெனரல், ஐக்கிய நாடுகள் சபையில் எய்ட்ஸ் தடுப்புப் பிரிவின் உதவியை நாடியுள்ளார்.

இது குறித்து பிஎஸ்எப் படையின் டைரக்டர் ஜெனரல் மூஸாஹரி கூறுகையில்,
படையினர் இடையே எச்ஐவி பரவலைத் தடுக்கவும், எய்ட்ஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் ஐநா எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவுடனான மருத்துவ ஒப்பந்தம்.

முதல் கட்டமாக வீரர்கள் இடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். நோயைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்படும்.
மேலும் பிஎஸ்ப்பின் முக்கிய பயிற்சி மையங்களில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

மற்ற பாதுகாப்புப் படையினரோடு ஒப்பிட்டால் பிஎஸ்ப் வீரர்கள் இடையே எய்ட்ஸ் பரவல் மிகவும் குறைவு தான். இருந்தாலும் முன்னெச்சரிக்கையாகவே இந்த நடவடிக்கையை எடுக்கிறோம் என்றார்.

ஆயுதத்தை பயன் படுத்துங்க என்று சொன்னதை 'தவறாக' புரிந்து கொண்டார்களோ?

7 comments:

Anonymous 8/28/2005 6:40 AM  

அரசு, ராணுவத்தை அடிக்கடி அவசர உதவிக்கு "First AID" க்கு அனுப்புவதால் இருக்கலாம்.

Anonymous 8/28/2005 8:29 AM  

//எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் (பி.எஸ்.எப்) இடையே எய்ட்ஸ் நோய் வேகமாகப் பரவி வருகிறது.///

இதுக்கு நிச்சயம் பாகிஸ்தானின் ISI தான் காரணம்.

Ganesh Gopalasubramanian 8/28/2005 9:22 PM  

அதிர்ச்சிகரமான தகவல்

அதிரைக்காரன் 8/28/2005 9:29 PM  

//அதிர்ச்சிகரமான தகவல் //

கோ.கணேஷ்,

எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆண்டு முழுவதும் எல்லையில் தங்க வைத்து அவர்களின் நியாயமான அந்தரங்க உணர்வுகளைக் கட்டிபோடுவதும் காரணமாக இருக்கலாம். அவர்களும் நம் போன்ற மனிதர்கள்தானே.

நாட்டைப்பாதுகாக்கும் கடமையை சுமப்பவர்கள் முதலில் இது போன்ற இழிசெயல்களிலிருந்து ஒதுங்கி தங்கள் வீட்டைக் காப்பதே சிறந்த சேவையாக இருக்கும்.

Anonymous 8/29/2005 7:27 AM  

//ஆயுதத்தை பயன் படுத்துங்க என்று சொன்னதை 'தவறாக' புரிந்து கொண்டார்களோ?//

ங்கொக்கா மக்கா

G.Ragavan 8/30/2005 6:52 AM  

அவர்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது. அது தவறாக முடியும். பாதுகாப்பான வழிமுறைகளைக் கற்றுத் தரலாம். அதுவே சிறந்த வழி.

Anonymous 8/31/2005 12:37 PM  

//பாதுகாப்பான வழிமுறைகளைக் கற்றுத் தரலாம்//

என்ன கையில AK47 துப்பாகியோட ஒரு கட்டு காண்டம் பாக்கெட்டும் கொடுக்கலாங்கறாரா?

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP