இனி நான் ஸ்கூலுக்கு போகமாட்டேன்...

Friday, December 02, 2005

அதிகாலையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் மகனை பள்ளிக்குச் செல்ல அன்பாக எழுப்பினாள் அந்த தாய். உரையாடல் இதோ:

தாய்: செல்லம்! எழுந்திருப்பா. ஸ்கூல் போக நேரமாயிடுச்சு

மகன்: போம்மா! நான் ஸ்கூல் போகமாட்டேன்!

தாய்: ஓ...அப்படீன்னா ஏன் போகமாட்டாய் என்பதற்கு ரெண்டு காரணங்கள் சொல்லனும்!

மகன்: ஹைய்யா...காரணம் ஒன்னு- குழந்தைகள் என்னை வெறுக்கிறார்கள். காரணம் இரண்டு- டீச்சர்களுன் என்னை வெறுக்கிறார்கள்!

தாய்: ஆஹ்..இவையெல்லாம் சரியானக் காரணங்களல்ல. எழுந்திருப்பா. ஸ்கூல் போக டயம் ஆயிடுச்சு!

மகன்: ம்ஹூம்...அப்படீன்னா ஏன் ஸ்கூல் போக வேண்டும் என்பதற்கு ரெண்டுக் காரணங்கள் சொல்லு!

தாய்: முதல் காரணம் நீ ஸ்சூலுக்கு இன்னும் சில வருடங்கள்தான் போகப்போகிறாய்.ஏன்னா உனக்கு இப்ப 52 வயது! இன்னொரு முக்கியமானக் காரணம் நீதான் அந்த ஸ்கூலுக்கு பிரின்ஸிபால்!



அதிரைக்காரன்: "என்ன வாசகரே! நீங்களும் வெறுத்துட்டீங்களா?" ;-)

8 comments:

Jayakumar 12/02/2005 10:20 AM  

ஹா ஹா ஹா

Anonymous 12/02/2005 3:58 PM  

எதிர்பாகவேயில்லை நீங்கள் இதை இப்படி முடிப்பீர்க் என்று!!!
வாழ்த்துக்குள்!!!
+

அதிரைக்காரன் 12/02/2005 7:25 PM  

மூன்று ஹாக்களுக்கு நன்றி ஜேகே - jk

என்ன அனானிமஸ் அண்ணா!

+ குறியை இங்கு குத்திட்டு போயிட்டீங்க. இதை நானும் எதிர்பார்க்கவே இல்லே.

காசி அண்ணே, இந்த + ஐ எனக்கான பரிந்துரையில் சேர்த்துவிடுங்க!

பத்மா அர்விந்த் 12/04/2005 4:06 PM  

இதேமாதிரி ஒரு பக்க கதை படிச்ச ஞாபகம். நல்லா இருக்கு.

அதிரைக்காரன் 12/05/2005 1:48 AM  

தேன்துளி,

அப்படியெல்லாம் சொல்லி ஒரு வளரும் எழுத்தாளனை கேவலப்படுத்தாதீர்கள்;-)

எனக்கு வந்த ஆங்கில ஈமெயிலை கஷ்டப்பட்டு மொழி பெயர்த்து பதிவு செய்துள்ளேன்.

ஹீ.ஹி...

Anonymous 12/05/2005 5:16 AM  

//எனக்கு வந்த ஆங்கில ஈமெயிலை கஷ்டப்பட்டு மொழி பெயர்த்து பதிவு செய்துள்ளேன்.//

:-)))))))))))))))))))

ramachandranusha(உஷா) 12/05/2005 6:35 AM  

"இந்த தம்பி இவ்வளவு அழகா எழுதியிருக்கே" கொஞ்சம் ஓவரா இல்லே :-) (வரவங்க எல்லாம் ஒரு மார்க்கமாத்தா வரங்கப்பூ)
இந்த வரியைப் படிச்சே சிரிச்சிக்கிட்டு இருக்கேன். பதிவும் நல்லா இருக்கு.

அதிரைக்காரன் 12/05/2005 7:03 AM  

/இந்த வரியைப் படிச்சே சிரிச்சிக்கிட்டு இருக்கேன்./

உஷா ஆண்டி,

முதலை வாயில தலையக் கொடுத்துக் கொண்டே சிரிக்கிறீங்க. உங்களை நினைச்சா எனக்கு முதலைக் கண்ணீர் ஸாரி ஆனந்தக் கண்ணீர்தான் வருது.

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP