அமெரிக்க அதிபருடன்...

Thursday, December 29, 2005

செப்டம்பர்-11 அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதற்கு உலகத் தலைவர்கள் அதிபர் புஷ்ஷுக்கு போன் செய்து இரங்கல் தெரிவித்தார்கள்.

சீன பிரதமர்,பாகிஸ்தான் அதிபர் மற்றும் அப்போதைய இந்தியப் பிரதமரின் உரையாடலை மட்டும் வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

சீனப் பிரதமர்: ஜனாதிபதி புஷ்! அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. பெண்டகனையே குறி வைத்திருக்கிறார்களென்றால் எதிரிகள் தைரியசாலிகள்தான்! ஒக்கா மக்கா!

எதற்கும் கவலைப்படாதீர்கள். பெண்டகனில் உள்ள அனைத்தும் எங்களிடம் ஒரு காப்பி உள்ளது. தேவைப்பட்டால் குறைந்த விலையில் அனுப்பி வைக்கிறேன்.

சில நாட்கள் கழித்து அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்த இந்திய பிரதமர் வாஜ்பாய் அவர்களும் அமெரிக்க அதிபரும் இணைந்து நிருபர்களை சந்தித்தனர்.

நிருபர்: இந்த தீவிரவாத தாக்குதல் பற்றி இந்தியாவின் கருத்து என்ன?

வாஜ்பாய்: தீவிரவாதத்தால் இந்தியாவும் பல வருடங்களாக கஷ்டப்படுகிறது. இதற்கு தகுந்த பதிலடியாக 10 மில்லியன் அப்பாவிகளையும் ஒரு சைக்கிள் ரிக்சா ஒட்டுபவரையும் கொல்லப் போகிறோம்.

நிருபர்: என்ன! சைக்கில் ரிக்சா ஒட்டுபவரை ஏன் கொல்ல வேண்டும்?

வாஜ்பாய்: "பார்த்தீங்களா புஷ்! நான் சொன்னேன்ல. மக்கள் 10 மில்லியன் அப்பாவிகளைக் கொல்வதைதப் பற்றி கவலைப் படமாட்டார்கள்" என்று சொன்னது உண்மையாகிவிட்டது!" என்றார்.

உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டவுடன் அவசரமாக புஷ்ஷுக்கு போன் செய்த பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷராப்.

முஷராப்: ஸாரி புஷ்! எவ்வளவு உயர்ந்த அழகான கட்டிடங்கள். அதில் வேலை பார்த்த அப்பாவிகள். ரொம்ப சாரி!

புஷ்: என்ன கட்டிடங்கள? பணியாளர்கள்? ஒன்றுமே புரியவில்லையே?

முஷராப்:(அவசரமாக) என்ன புரியலையா? அங்க மணி என்ன இப்போ?

புஷ்: காலை எட்டு மணி.

முஷராப்: ஓ சாரி. அப்ப இன்னும் ஒரு மணி நேரம் கழித்து போன் பண்ணுகிறேன்.

2 comments:

Anonymous 12/29/2005 5:30 AM  

பல இடங்களிலும் இருந்து தமிழ்மண ரசிகர்களுக்காக தாங்கள் தகவல்கள் மற்றும் நகைச்சுவை துணுக்குகளை கொண்டு சேர்க்கிறீர்கள்..வாழ்த்துக்கள்

அதிரைக்காரன் 12/30/2005 8:08 PM  

உண்மைதான்!.முடிந்தவரை சொந்த சரக்கு இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு ரசித்த ஈமெயில்கள்.;-)

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP