அமெரிக்க அதிபருடன் ஒரு நேர்காணல்!

Wednesday, March 01, 2006

இந்தியாவுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷுடன் "ராஜாமடம்" பாலத்தில் நடந்து கொண்டே அதிரையின் பாரம்பரிய உடையான வெள்ளைக் கைலியணிந்து (!) பல விசயங்களை வெட்கப்படாமல் மனம் விட்டு பேசினோம். அதிராம்பட்டினதுக்கு வரும் பிரமுகர்கள் இந்த பாலத்திற்கு விசிட் அடிப்பது மரபு!

இப்பாலத்தின் சிறப்புகள் என்று சொன்னால் கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்களில் விசாரனைக்குள்ளாகாத முப்பது வருடத்தைய பாலம். இந்தியாவின் மாதிரிக்கிராமங்களாக மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு முன்னாள் தமிழக ஆளுநர் திருமதி.ஃபாத்திமா பீவி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட மல்லிப்பட்டினம் அருகிலுள்ள மனோராவிற்குச் செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ளது. இவையன்றி கமலஹாசன் நடித்த கடல் மீன்கள் திரைப்படம் இங்கு சூட்டிங் எடுக்கப்பட்டது. இனி உரையாடலைக் கேளுங்கள்.

அதிரைக்காரன்: வாங்க புஷ் அவர்களே! நீங்கள் இந்தியாவுக்கு வருவது இதுதான் முதல் தடவை என்று நினைக்கிறேன்.

புஷ்: ஆமாம். இதுதான் முதல் தடவை!

அதிரைக்காரன்: மகிழ்ச்சி! உங்கள் வருகை நல்வருகையாகட்டும். உங்கள் வருகை மூலம் இந்திய-அமெரிக்க உறவு பலப்படட்டும்.

புஷ்: நன்றி அதிரைக்காரன்! ஒன்னு சொல்ல மறந்துட்டேன். எனக்கும் இந்தியா மீது தனிப்பிரியம் உண்டு. எப்படியும் நாளில் ஒருதடவையாவது இந்தியாவுடன் கொஞ்சி விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

அதிரைக்காரன்: அப்படியா! நீங்க இருக்கிற பிஸிக்கு, டெய்லி இந்தியாவுடன் கொஞ்சுவது என்பது கஷ்டம். எப்படி போனில் பிரதமர்/ஜனாதிபதியோட பேசுவீங்களா? அல்லது இண்டெர்நெட்டில் சாட் பண்ணுவீங்களா?

புஷ்: அப்படியெல்லாம் இல்லே அதிரைக்காரன்! நான் சொன்னது என் செல்ல நாய்க்குட்டியைப் பற்றி! அதன் செல்லப்பெயர் "இந்தியா"

அதிரைக்காரன்: (மனசுக்குள்) கடிக்கும் வரை நாயும் அழகுதான். அப்புறம் உலக விசயத்தைப் பற்றி கொஞ்சம் கதைக்கலாமா?

புஷ்: ஓ! தாராளமாக!! எனக்கு அமெரிக்காவை விட உலக விசயங்களில் ரொம்ப ஆர்வம்.

அதிரைக்காரன்: ஒஸாமா பின் லாடனை எப்போ பிடிப்பதாக உத்தேசம்?

புஷ்: எங்கள் நாட்டு FBI யும் இன்னும் பல உளவு அமைப்புகளும் வலைவீசி தேடி வருகிறோம். அஞ்சு வருஷம் பொறுத்துட்டீங்க. மேற்கொண்டு சில வருஷங்கள் பொறுத்தா குடியா மூழ்கிடப்போகுது? உங்க நாட்டு சாதாரண வீரப்பனை பிடிக்கவே இருபது வருஷங்களாச்சு உங்களுக்கு. இஸ்ரேல் ராணுவம் கூட உங்க நாட்டு காட்டுல தேடிட்டு அலுத்துப் போயி திரும்பிட்டாங்க. உலகமகா தீவிரவாதி பின்லாடன்னா சும்மாவா?

அதிரைக்காரர்: சரியாச் சொன்னீங்க. ஒஸாமா பின் லாடன் மேல ஏன் உங்களுக்கு அவ்வளவு கோபம்?

புஷ்: என்ன அதிரைக்காரன் இப்படிக் கேட்டுட்டீங்க! எங்க நாட்டில் இருந்த உலக வர்த்தக மையத்தை பாம் போட்டு இடிச்சதும் அதன் மூலம் மூவாயிரத்திற்கும் அதிகமான அப்பாவி மக்களைக் கொன்றதும் தெரியும் தானே? அதை எப்படி எங்களால் பொறுத்துக் கொள்ள முடியும்? அதனால்தான் எங்களுக்கு அவனைப் பிடிக்கவில்லை.

அதிரைக்காரன்: ஓஹோ..அதனாலதான் பிடிக்கலையா? சரி, உலக வர்த்தகக் கட்டிடம் தகர்க்கப் பட்டபோது அமெரிக்கா மீது பரிவும், அதை செய்த தீவிரவாதிகள் மீது வெருப்பும் வந்தது. ஆனால் அதை விட மோசமாக ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் பல வீடுகளைத் தகர்த்ததும், அப்பாவிகளைக் கொன்றதும் நீங்கள்தான் என்பதால் உங்கள் மீதான பரிவு போய் விட்டது. உங்களுக்கும் ஒஸாமா பின் லாடனுக்கும் அதிகம் வித்தியாசமில்லை.

புஷ்: ஹி.ஹி..நானும் பார்த்தேன். இண்டெர்நெட்டுல ஒஸாமா பின்லாடன் மாதிரி என்னை படம் போட்டிருந்தாங்க. பிரபலமானவர்களைக் கார்ட்டூன் போட்டு கிண்டலடிப்பது நிச்சயம் ஜெயிலண்ட்ஸ் போஸ்டெனாத்தான் இருக்கனும்.

அதிரைக்காரன்: ஜயிலண்ட்ஸ் போஸ்டெனில் கிறிஸ்தவர்களைக் கார்ட்டூன் வரைந்து கேவலப்படுத்துவதில்லை என்பதை பாலிஸியாகக் கடைபிடிக்கிறார்கள் என்று ஒரு கார்ட்டூனிஸ்ட் வருத்தப்பட்டிருந்தார். சில மாதங்கள் முன்பு ஒரு கார்ட்டூனிஸ்ட் ஜீசஸ் கிறிஸ்டைக் கிண்டலடித்து வரைந்ததை பிரசுரிக்க மறுத்த செய்தியை கேள்விப்பட்டீங்களா?

புஷ்: அது கிடக்குது விடுங்க! கருத்துச் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்.

அதிரைக்காரன்: ஆமாமா! சரியாச் சொன்னீங்க!! நீங்க ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் செஞ்ச வண்டவாளங்களை அல்ஜஸீரா புட்டு புட்டு வெச்ச போது, அவர்களின் ஒளிபரப்பு நிலையங்கள் மீது குண்டு போட்டும் நிருபர்களையும் தாக்கியும் கருத்துச் சுதந்திரத்தை மதிச்சதை பார்த்தோமே!

புஷ்: அதிரைக்காரன்! உங்களுக்கு அரசியல் தெரியலேன்னா சும்மா கம்முன்னு கிடங்க. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீங்க. வேற ஏதாவது ஜாலியான விஷயத்துக்கு வருவோம். பல அப்பாவிகளைக் கொன்ற ஒஸாமாவுக்கு அடைக்கலம் கொடுத்ததால்தான் ஆப்கானிஸ்தானை தாக்கி தாலிபான்களை விரட்டி விட்டு ஆப்கானில் ஜனநாயகத்தை மலரச் செய்தோம்.

அதிரைக்காரன்: மத்தியப் பிரதேசம் போபாலில் பல அப்பாவிகளைக் கொன்ற யூனியன் கார்பைடு ஆண்டெர்ஸனுக்கு நீங்க அடைக்கலம் கொடுத்து வருவது மாதிரின்னு சொல்லுங்க! அப்படியே பாகிஸ்தானிலும் முஷர்ராபையும் கவுத்திட்டு இராணுவ சர்வாதிகரத்திற்கும் முடிவு கட்டணும்.

புஷ்: மத்தியப் பிரதேசத்தை விட எங்களுக்கு மத்தியக் கிழக்குதான் முக்கியம். முஷராப் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கவில்லை. ஆனால் சதாம் ஹுசேன் பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்தார். அவற்றைக் கொண்டு அமெரிக்காவை 45 நிமிடங்களுக்குள் தாக்க முடிந்திருக்கும். அதற்குள் நாங்கள் போரிட்டு தடுத்து விட்டோம்.

அதிரைக்காரன்: சதாம் பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்ததால் தானே படையெடுத்து போய் நாட்டை துவம்சம் செய்து விட்டு, இன்று உங்களின் பிடியில் கோர்ட்டு,கேஸு என்று அலைந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் உண்ணாவிரதம் கூட இருந்திருக்கிறார். கடைசியில் பேரழிவு ஆயுதங்கள் அவரிடம் இல்லையல்லவா?

புஷ்: அதுக்குத்தான் தவறான தகவல் கொடுத்த உளவுத் துறைத் தலைவரை பதவி நீக்கம் செய்து தண்டித்து விட்டோமே!

அதிரைக்காரன்: உங்களுக்கு தவறான தகவல் கொடுத்தவருக்கு தண்டனை கொடுத்துட்டீங்க. ஆனால் உலகத்துக்கு தவறான தகவல் கொடுத்த நீங்களும் டோனி பிளேரும் தப்பிச்சுட்டீங்க. ரொம்ப புத்திசாலிகள்தான் நீங்கள் ரெண்டுபேரும்!

புஷ்: காதைக் கொடுங்க அதிரைக்காரன்! (ரகசியமாக) டோனி பிளேருக்கு அவ்வளவு புத்திசாலித்தனம் கிடையாது. எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியதைக் காரணம் சொல்லி இன்று ஆப்கானிஸ்தானும், இராக்கும் எங்கள் வசம். அதே மாதிரி இலண்டன் குண்டு வெடிப்பைக் காரணம் காட்டி ஏதாச்சும் ஒரு முஸ்லிம் நாட்டை பிடித்திருக்கலாம். இலண்டன் குண்டு வெடிப்புகளுக்கு ஈரான்தான் காரணம் என்று சொன்னால் நாங்கள் என்ன இல்லை என்றா மறுக்கப் போறோம்?

அதிரைக்காரன்: மறந்தே போச்சு, ஆமா உங்கள் அடுத்த குறி ஈரானாமே?

புஷ்: (நமுட்டுச் சிரிப்பை அடக்கிக் கொண்டு) ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது. இதனால் மிடில் ஈஸ்ட்டில் அமைதிக்கு ஆபத்து என்று இஸ்ரேல் எங்களிடம் முறையிட்டுள்ளது.

அதிரைக்காரன்: இஸ்ரேலும் கூட அணு ஆயுதங்களை வைத்திருக்கிறதே?

புஷ்: நான் என்ன இல்லைன்னா சொன்னேன்? எங்கள் அனுமதியோடு வைத்திருந்தால் பிரச்சினையில்லை. அதிரைக்காரன்! உங்களுக்கு பாலஸ்தீன தீவிரவாதிகளால் இஸ்ரேலியர்கள் எப்படியெல்லாம் இன்னல் படுகிறார்கள் என்று தெரியுமா? தேவையே இல்லாத விசயத்துக்கெல்லாம் இஸ்ரேல் இராணுவ டாங்கிகளை "கல்லால்" அடிக்கிறார்கள். நீங்களே சொல்லுங்கள் "கல்"லு பெரிசா? "அணு" பெரிசா?

அதிரைக்காரன்: உங்களோட பேசிக் கொண்டிருந்ததில் சட்டென்று முடிவுக்கு வர முடியவில்லை. கொஞ்சம் டயம் கொடுங்க எங்கள் வலைப்பூ வாசகர்களிடம் கேட்டுச் சொல்றேன். சரி, இவ்வளவு தூரம் எங்க ஊருக்கு வந்துட்டீங்க. என்ன சாப்பிடுகிறீர்கள்?

புஷ்: எது வேணும்னாலும் கொடுங்க "அதிராம்பட்டினம் அல்வா" மட்டும் வேணாம்! ஏன்னா எனக்கு அல்வா கொடுத்துதான் பழக்கம்!

பி.கு: இந்தியாவிற்கு வந்து விட்டு பாகிஸ்தானுக்கும் செல்லும் வெளிநாட்டு பிரமுகர்கள், இந்தியாவில் இருக்கும் வரை ஒரு மாதிரி பேசிவிட்டு, பாகிஸ்தானுக்குச் சென்ற பிறகு வேறு மாதிரி பேசுவது அல்லது அவ்வாறு பேசியதை பத்திரிக்கைகாரர்கள் திரித்து எழுதி விட்டனர் என்று மறுப்பது வழக்கம். அதனால அடுத்த முறை யாரும் இந்தியாவிற்கு வரும் முன் பாகிஸ்தான் சென்று விட்டு இந்தியாவுக்கு கடைசியாக வந்தால் நல்லது!

13 comments:

சந்திப்பு 3/01/2006 11:11 PM  

வெட்டிப் பேச்சு... வெட்டியா இல்லாமா? புஷ் வாலை வெட்டுவது போல பதிஞ்சிருக்கீங்க...

Anonymous 3/02/2006 1:32 AM  

அப்படியே நம்ம மேல போர் அறிவிப்பு செஞ்ச ஒசாமா பின் லேடனுக்கு ஒரு வாழ்த்து செய்தியும் அனுப்பி வச்சுட்டா நமது இந்தியர்களின் "அறிவு கூர்மையை" அமெரிக்க மக்கள் புரிந்தகொள்ள வசதியாக இருக்கும், இல்லையா அதிரை?

IC814 ஆப்கானிஸ்தானுல இருந்தப்ப விமான எதிர்ப்பு ஏவுகனையோட "சுதந்திர போராளிகளுக்கு" ஆதரவு கொடுத்த தலிபானுக்கு எதிரானவர்கள் நமக்கும் எதிரிகளே.

நம்மை கொல்ல வருபவர்களை அவர்கள் யார் தடுக்க?

நாமே சென்று நம்மை பலி கொடுத்துவிடுவோம்.

அமெரிக்க ஒழிக!
(ருபின் கத்யால் - மன்னிக்க வேண்டும்)

//இஸ்ரேல் //

நமக்கு எந்த நன்மை செய்தாலும் நாம் அவர்களுக்கு எதிராக தான் இருப்போம் - அது நம்மை அணுகுண்டு தாக்குதலில் இருந்து காப்பாற்றும் technology transfer ஆக இருந்தாலும் சரி.

இந்தியர்களின் நன்றி உனர்வுக்கு இது ஒரு பிரமாதமான எடுத்துகாட்டு.

இஸ்ரேலில் பஸ்களில் குண்டு வெடித்து.....(சரி வேண்டாம்.யூதர்களும் ஒழிக)

பி.கு :
இன்னும் இரண்டு மாதங்களில் சீன அதிபர் இங்கு வருவார்.

அப்போது நீங்கள் சீன அதிபரை பேட்டிகான வேண்டும் அதிரை.

அமெரிக்காவுக்கு ஒரு அப்கானிஸ்தான் என்றால், சீனாவுக்கு ஒரு திபத்.

யோகா மாதிரி இருக்கும் Faleng Gong practise செய்தாலே சிறையில் அடைக்கும் தோழர்களின் அரசை பற்றி பாராட்டி ஒரு பதிவு போடுவீர்கள், அதை நாங்களும் ரசித்து பார்ப்போம்.

சரி தானே அதிரை?

ரஷ்ய அதிபர் இந்தியா வரும் போது அவரை பேட்டி கண்டு செசன்யாவில் நடக்கும் அடக்குமுறைகளை பற்றி கேட்பீர்கள் என்று எனக்கு தெரியும்.

(செசன்யாவில் இருக்கும் மக்களும் இஸ்லாமியர் தானே?)

(தோழர்களிடம் "மக்களுக்காக" அடிபட்டு சாவதால் அவர்களுக்கு மதிப்பு இல்லையோ என்னவோ, புட்டின் இடம் கேட்டால் சரியாக சொல்லுவார்.பேட்டி கானும் போது கேட்க்கவும்)

Sardhar 3/02/2006 2:56 AM  

//நீங்க ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் செஞ்ச வண்டவாளங்களை அல்ஜஸீரா புட்டு புட்டு வெச்ச போது, அவர்களின் ஒளிபரப்பு நிலையங்கள் மீது குண்டு போட்டும் நிருபர்களையும் தாக்கியும் கருத்துச் சுதந்திரத்தை மதிச்சதை பார்த்தோமே!//

இது வெட்டிப்பேச்சு இல்ல... வெவகாரமான பேச்சு!

Anonymous 3/02/2006 4:13 AM  

இந்த பாலத்த இடிச்சுட்டு புதுசா பாலம் கட்டப் போறாங்களாம். கிழக்கு கடற்கரைச் சாலை பணிகள் மிக மும்முரமாக நடக்கின்றன.

திருநெல்வேலிதான் அல்வா. அதிராம்பட்டினம் ஆட்டோடு நிற்கட்டுமே....

பரவாயில்லை ரகம்தான்.

╬அதி. அழகு╬ 3/02/2006 4:31 AM  

கியூபாவைப் பற்றியும் வடகொரியாவைப் பற்றியும் கேட்க விடாமல் உங்களை நைஸா கட் பண்ணி விட்டார் பார்த்தீர்களா? அதுக்குப் பேருதான் அதிபர்ங்கிறது.

Anonymous 3/02/2006 7:13 AM  

Well written buddy, you have combined the current serious affairs with a sense of Humor, keep it up.

Dawood (Dallas)

Anonymous 3/02/2006 7:13 AM  

Well written buddy, you have combined the current serious affairs with a sense of Humor, keep it up.

Dawood (Dallas)

Anonymous 3/02/2006 7:15 AM  

Well written buddy, you have combined the current serious affairs with a sense of Humor, keep it up.

Dawood (Dallas)

அதிரைக்காரன் 3/02/2006 8:58 AM  

//இவையன்றி கமலஹாசன் நடித்த கடல் மீன்கள் திரைப்படம் இங்கு சூட்டிங் எடுக்கப்பட்டது//

கடல் மீன்கள் படம் அல்ல! தரையில் வாழும் மீன்கள் என்ற படத்தின் ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட்டன. மேலும் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஆர்.வெங்கட்ராமன் பிறந்த ஊர்தான் "ராஜாமடம்" பெரும்பாலோனோர் அவர் பட்டுக் கோட்டையில் பிறந்தார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Anonymous 3/02/2006 9:56 AM  

கடைசி தகவல்: அமெரிக்காவின் கைக்கூலி மன்மோகன்சிங்கும் புஷ்சின் நாயாக அவருடன் அமெரிக்கா புறப்படப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை இடது சாரி கட்சிகள் உறுதி செய்துள்ளனர்.

---அதிரைவாசி சென்னையிலிருந்து.

அடி-அதிரடி 3/02/2006 9:57 AM  

அதிரைக்காரா அதிரைக்காரா...புஷ்ஷைப் பார்த்த மகிழ்ச்சியா அல்லது பயமா? திருமணமே செய்யாத நீதிபதி ஃபாத்திமா பீவியைத் திருமதியாக்கி விட்டீரே?

ஆளுனரும் செல்வி, முதல்வரம்மாவும் செல்வி என்று தமிழகமே கொண்டாடியதை மறந்து விட்டீரா?

வெங்காயம் 3/02/2006 10:04 AM  

* டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய புஷ்சுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சம்பிரதாயங்களை உடைத்துக் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்கே தனது மனைவியுடன் நேரடியாக விமான நிலையம் வந்து புஷ்ஷையும் அவரது மனைவியையும் வரவேற்றார்.

* முன்னதாக நேற்றிரவு புஷ்ஷை வரவேற்கச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங்கை அமெரிக்க பாதுகாப்புப் படையினர் சோதனையிட்டதாக செய்திகள் வருகின்றன. ஆனால், இதை பிரதமரின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் பரூவா மறுத்துள்ளார்.

*பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணாண்டசை வாஷிங்டன் விமான நிலையத்தில் சட்டையைக் கழற்றச் சொல்லி சோதனையிட்டவர்கள் அமெரிக்கர்கள் என்பது நினைவுகூறத்தக்கது.

* முப்படைகளின் வண்ணமிகு வரவேற்பைப் பார்வையிட்ட புஷ், பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் உலகில் பல நாடுகளில் ராணுவ அணிவகுப்பைப் பார்வையிட்டுள்ளேன். ஆனால், இன்று பார்த்தது போல மிகச் சிறந்த அணிவகுப்பை நான் வேறு எங்கும் பார்த்தலில்லை என்றார்.

*புஷ்சின் வருகையை எதிர்த்து இன்றும் நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.நேற்று சென்னை, பெங்களூர், டெல்லி, கொல்கத்தா உள்பட பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன.

*இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் செல்ல இருக்கிறார் புஷ். இந் நிலையில் கராச்சி நகரில் அமெரிக்கத் தூதரகம் அருகே இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 2 பேர் பலியாயினர். இதையடுத்து இந்தியாவில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

*அதிபர் புஷ்சுடன் இந்தியாவுக்கு நூற்றுக்கணக்கான காமோண்டாக்களும் அதிகாரிகளும் வந்துள்ள நிலையில் 65 மோப்ப நாய்களும் வந்துள்ளன. இவையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நாய்களை புஷ்சுடன் வந்துள்ள அமெரிக்கர்கள் 'அதிகாரிகள்' என்றே குறிப்பிடுகின்றனர். இந்த நாய்களுக்கு டெல்லி லீ மெரிடியன் ஹோட்டலில் ரூம்கள் புக் செய்யப்பட்டுள்ளது. முதலில் இந்த 'அதிகாரிகளுக்கு' ரூம் தர ஹோட்டல் நிர்வாகம் மறுத்தது. மத்திய அரசு நெருக்குதல் தந்ததையடுத்து வேறு வழியில்லாமல் நாய்களுக்கு ரூம்கள் தரப்பட்டுள்ளன.

இந் நிலையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், வேண்டாத விருந்தாளி புஷ்ஷை அழைத்தது ஏன் என்று கேட்டு இடதுசாரி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையையும் மாநிலங்களவையையும் நடத்த விடாமல் தடுத்தனர். இதனால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

பார்க்க: http://thatstamil.oneindia.in/news/2006/03/02/bush.html

அதிரைக்காரன் 3/02/2006 10:28 AM  

சென்னையிலிருக்கும் அதிரைவாசி,

நம் இந்தியப் பிரதமர் அமெரிக்காவின் கைக்கூலி என்பதையும், நாய் என்பதையும் ஏற்கமுடியாது.

//ஆளுனரும் செல்வி, முதல்வரம்மாவும் செல்வி என்று தமிழகமே கொண்டாடியதை மறந்து விட்டீரா? //

மறந்துட்டேன். புஸ் வந்தது கையும் ஓடலே காலும் ஓடலே எனக்கு.

//கியூபாவைப் பற்றியும் வடகொரியாவைப் பற்றியும் கேட்க விடாமல் உங்களை நைஸா கட் பண்ணி விட்டார் பார்த்தீர்களா? அதுக்குப் பேருதான் அதிபர்ங்கிறது. /

புஸ் சீரியஸ்ஸாக முகத்தை வைத்துக் கொண்டு பேட்டி கொடுக்கும் போது சிரிப்புதான் வருது. நீங்கள் சொல்வதில் நியாயம் உள்ளது அழகு!

கருத்திட்ட மற்றவர்களுக்கு நன்றி. (நன்றியுரை சொல்லப்பட்டாலும் மேற்கொண்டு பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. சிறந்த பின்னூட்டத்திற்கு வழக்கம்போல அல்வா உண்டு ;-)

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP