:-) இந்தப் புன்னகை என்ன விலை? (-:
Monday, November 27, 2006
உலகின் துன்பங்களுக்கெல்லாம் ஆசையே காரணம் என்பதால் ஆசையை ஒழிக்க புத்தர் ஆசைப்பட்டார்! கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் காசே கடவுளடா என்கிறார்கள்!
நேற்றைய குளிரில் என் ஞானோதயத்தில் உலகின் துன்பங்களுக்கு காரணம் பணம் என்று கண்டுபிடித்தேன்!பரிவர்த்தனைக் கருவியாகப் பயன்படுத்தப்படும் காகிதப் பணத்திற்குப் பதிலாக காகிதமின்றி பரிவர்த்தனை செய்து கொண்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனை! (உலகம் போற போக்கில் பொருளியல் வல்லுனர்கள் என் கண்டுபிடிப்பை ஏற்றுக் கொண்டு, பொருளியலுக்கான நோபல் பரிசுக்கு அதிரைக்காரனை பரிந்துரைத்தால் கூட ஆச்சிரியமில்லை :) மேலும் இந்தக் கண்டுபிடிப்பை உலகம் ஏற்றுக் கொண்டால் இலஞ்சம், ஊழல், திருட்டு, கொள்ளை, வழிப்பறி, மோசடி எல்லாம் ஒழிந்து விடும்!
பின்வரும் உரையாடல்களில் பணம் பயன்படுத்தப் படாமல் 'புன்னகை' என்ற நாணயம் பயன்படுத்தப் படுகிறது. ஆகவே, கவனமாகப் படித்து புரிந்து கொள்ளவும்.
மளிகைக்கடையில்
நுகர்வோர்: கடைக்காரரே, நான் வாங்கிய பொருட்களுக்கு எவ்வளவு ஆச்சு?
கடைக்காரர்: மூவாயிரத்து ஐம்பது!
நுகர்வோர்: கொஞ்சம் குறைக்கக் கூடாதா?
கடைக்காரர்: சரி, ரவுண்டா மூவாயிரம் கொடுங்க.
நுகர்வோர்: ஓக்கே! என்று சொல்லி கடைக்காரரைப் பார்த்து புன்னகைத்து விட்டு பொருட்களுடன் நகர்கிறார்!
:)))))))))))))))))))((((((((((((((((((((((:
அலுவலகத்தில்.
மேனேஜர்: டியர் ப்ரெண்ட்ஸ்!இந்த மாதம் உங்களனைவருக்கும் போனஸ் ஐயாயிரம் கொடுக்கச் சொல்லி நிர்வாகத்திலிருந்து உத்தரவு வந்திருக்கு! என்றவாறு ஒவ்வொருவரையும் பார்த்து புன்னகைக்கிறார். ஊழியர்களும் மரியாதையாக புன்னகைக்காமல் பெற்றுக் கொள்கிறார்கள்!
வீட்டில்:
மனைவி: என்னங்க, இந்த மாதச் சிலவுக்குப்போக மீதி மூவாயிரம் இருக்கு!
கணவன்: சமர்த்துக்காரி! சரி.சரி..அதில் ஒரு சிறிய தோடு (காதணி) வாங்கிக்கோ!
ட்ராஃபிக் சிக்னலில்:
போக்குவரத்துக் காவலர்: ஹலோ! ஒன்வேயில் வருகிறீர்கள். அபராதம் முன்னூறு கட்டுங்க.
வாகன ஓட்டி: ஹெல்மெட்டைக் கழட்டி, போக்குவரத்துக் காவலரைப் பார்த்து புன்னகைக்கிறார்.
தெருவில்:
பிச்சைக்காரன்: ஐயா! சாப்பிட்டு ரெண்டுநாளாச்சு! யாராவது தர்மம் பண்ணுங்கய்யா!
ஞானோதயம் பெற்ற அதிரைக்காரர் ஒருவர் பிச்சைக்காரரின் அருகில் சென்று புன்னகைத்து விட்டுச் செல்கிறார்.
:)))))))))))))))))))((((((((((((((((((((((:
என்ன வாசகர்களே! படித்து விட்டு சும்மா புன்னகைத்து விட்டுச் செல்லாமல் இந்தமுறையை வேறு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று உங்களுக்கும் ஞானோதயம் ஏற்பட்டிருந்தால் பின்னூட்டமாகச் சொல்லலாமே!
பின்குறிப்பு # 2: சிலர் புன்னகைக்குப் பதிலாக :-) என்றோ :-)) என்றோ கஞ்சத்தனம் செய்கிறார்கள். ஆகவே, சிறந்த பின்னூட்டத்திற்கு வழக்கம் போல் கணிசமான பரிசு வழங்கப்படும்.
6 comments:
அடிக்கடி சிந்திக்கவும் சமயங்களில் சிரிக்கவும் வைக்கும் அதிரைக்காரருக்கு "நோ"பால் பரிசுடன் ஒரு லட்சம் ரூபாய் சன்மானமாக கொடுக்க நினைத்திருந்தேன்.
பிடியுங்கள் உங்கள் பரிசுத் தொகையை:
:-))))))))))))))))))))))))))))((((((((((((((((((((((((((((((-:
புன்னகையுடன்
இறை நேசன்
:-))))))))) புன்னகை
:-((((((((( "புண்"நகை
:-)))))))))((((((((((( கள்ளப்புன்னகை.
(என்ன ஒண்ணு, நீங்க சொல்ற 'வெட்டி ஐடியா'ல கள்ள 'நாணயம்' அதிகமாயிரும்.)
நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு ஒன்னுமே புரியலியே சாரே. ஓ ஒன்னும் புரியாததற்கு தான் நோபல் பரிசு கொடுப்பாங்கலோ? அப்ப நீங்களும் முயற்சி செய்து பாருங்க.
-அனானி
மனிதர்கள் புன்னகைக்க கூட மறுக்கிறார்களே என்று நினைத்து இதை நீங்கள் எழுதியிருந்தால் உங்கள் சிந்தனையை மாற்றிப் போடுங்கள். உங்கள் சிந்தனைப்படி - மனிதன் செலவழிக்க பயந்து புன்னகையை இன்னும் குறைத்து விடுவான்.
புன்னகைத்தால் பணம் தரப்படும் என்று சொல்லுங்கள் - எல்லோர் முகத்திலும் புன்னகை மலரும்.
ஃபிக்ஷன்..? என்னவாக இருந்தாலும் படிக்கவும்,விஷுவலாக யோசித்துப் பார்க்கவும் உங்கள் கற்பனை நன்றாகவே இருக்கிறது.
ஓசில Blogger கிடைச்சா ஏன் இதுமாதிரியெல்லாம் சிந்திக்கத் தோணாது..
அண்ணன் சுல்தான் சொன்னா மாதிரி இதுக்கு புன்னகையெல்லாம் கெடையாது ஒரு பெரிய "ஓ"தான்.
(:-0000000000
Post a Comment