ராவணன் பாலம்?
Monday, May 21, 2007

சர்ச்சைக்குறிய ராமர் பாலம் பற்றி பலரும் எழுதியுள்ளார்கள். என் பங்குக்கு நானும் எழுதாவிட்டால் தமிழினத் துரோகியாகும் வாய்ப்புள்ளது. இதுபற்றி அத்வானியுடன் நடந்த நேர்காணல்!
அதிரைக்காரன்: வாங்க அத்வானி ஜி. நல்லா இருக்கீங்களா?
அத்வானி: நமஸ்தே அதிரைக்காரன்ஜி. நல்லா இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க?
அதிரைக்காரன்: (உங்கள் ஆட்சி போனதிலிருந்து) நல்லா இருக்கிறேன் ஜி.
அத்வானி: பேட்டியை எங்கு வைத்துக் கொள்வோம்? உங்களூர் ராஜாமடம் பாலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷை பேட்டி கண்டிருக்கிறீர்கள் என்று புஷ் பெருமையாகச் சொன்னார். அங்கேயே வைத்துக் கொள்ளலாமா?
அதிரைக்காரன்: இல்லை. உங்களுக்குப் பிடித்த ராமர் பாலத்தில் காலாற நடந்து கொண்டே பேசலாமே.
அத்வானி: (திடுக்கிட்டு) என்ன விளையாடுறீங்களா? ராமர் பாலம் எங்கிருக்கிறது? இருந்தாலும் அதன்மீது எப்படி நடக்க முடியும்?
அதிரைக்காரன்: இராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இருப்பதாக ஜெயலலிதா அம்மையார், சுப்ரமணியசுவாமி மற்றும் உங்கள் கட்சிக்காரர்கள் சொல்லி வருகிறார்களே?
அத்வானி: அடப்போங்க அதிரைஜி. அவங்களுக்கு அரசியல் பண்ண வேறு விசயம் எதுவும் கிடைக்கவில்லை.அதனால்தான் ராமர் பாலம் விசயத்தைக் கையிலெடுத்துள்ளார்கள்.
அதிரைக்காரன்: அப்படியா! நான் கூட ஏதோ உண்மையான பாலம்தான் இருக்குதோ என்று நினைத்து விட்டேன். ஆமா! ராமர் பாலம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
அத்வானி: இதென்ன கேள்வி. அவர்களுக்கு எதிராகக்கருத்துச் சொல்ல எனக்கு என்ன செலக்டிவ் அம்னீஷியா? ராமர் பாலம் 17 இலட்சத்து ஐம்பதாயிரம் வருஷத்துக்கு முன்னாடி கட்டப்பட்டது. இந்தியாவின் பாரம்பரிய சின்னங்கள் காக்கப்பட வேண்டும் என்பதால்தான் நாங்களும் ராமர்பாலத்தை இடிக்கக் கூடாது என்கிறோம்.
அதிரைக்காரன்: "இடிக்கக்கூடாது" என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?
அத்வானி: ஆம்! இந்தியாவின் பாரம்பர்யச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதிரைக்காரன்: உங்களால் இடிக்கப்பட்ட பாபர் மசூதியும் நம்நாட்டின் பாரம்பரிய சின்னம் தானே அதை ஏன் இடித்தீர்கள்?
அத்வானி: பழசை ஏன் கிளருகிறீர்கள்? வேறு ஏதாவது புதுசாகக் கேளுங்கள்.
அதிரைக்காரன்: 400 வருடங்களுக்கு முந்தைய பாபர் மசூதியை 15 வருடங்களுக்கு முன் இடித்தது பழைய விசயமா உங்களுக்கு? 17,50,000 வருடப் பாலம் மட்டும் புதிய விசயமா? நானூறு வருடங்கள் பழையதா 17,50,000 வருடங்கள் பழையதா?
அத்வானி: அதிரைஜி. கடலுக்கடியில் பாலம் இருப்பதை அமெரிக்காவின் நாஸா விண்வெளி மையம் சமீபத்தில் உறுதி படுத்தியுள்ளது. தெரியுமா?
அதிரைக்காரன்: விண்வெளியில் தினமும் புதுசு புதுசா கண்டுபிடிப்பதும், ஏற்கனவே கண்டு பிடித்தவை மறுக்கப்படுவதும் சகஜம். கடலுக்கடியில் இருப்பது ராமர் பாலம்தான் என்று நாஸா சொன்னதாக யார் சொன்னார்?
அத்வானி: பார்த்தீங்களா! நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள். தினமலரில் படங்களுடன் இது பற்றி செய்தி வெளியிட்டிருந்தார்களே.
அதிரைக்காரன்: நாஸாவின் குறிப்பின்படி இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படும் மணற்திட்டுகள் முன்பு பாலமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்றுதானே சொல்லப் பட்டுள்ளது.
அத்வானி: நாஸாவிற்கு ராமாயணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவேதான் மணல் திட்டு என்று புரியாமல் சொல்லியுள்ளார்கள். நாங்கள் அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தால் நாஸாவில் உள்ள விஞ்ஞானிகள் ராமாயணம் படிக்க ஏற்பாடு செய்வோம். பாரதத்தின் நன்மைக்காகச் சொல்லப்படும் எதையும் ஒப்புக் கொள்ளலாம்.
அதிரைக்காரன்: சேது சமுத்திரத் திட்டத்தால் பாரதத்திற்கு பொருளாதார நன்மைகள் உள்ளதை ஒப்புக் கொள்கிறீர்களா?
அத்வானி: தேவையில்லாமல் அடுத்தவர் மதநம்பிக்கைகளுடன் நீங்கள் விளையாடக்கூடாது. ராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு இடைப்பட்ட பாலம் அனுமாரால் கட்டப்பட்டது.
அதிரைக்காரன்: மண்டபத்திலிருந்து ராமேஸ்வரத்தை இணைக்கும் பாம்பன் பாலம் ஆங்கிலேயரால் 1911 இல் கட்டப்பட்டது.
கடலில் இயற்கையாக தோன்றி மறையும் மணல் திட்டுகளை பாலம் என்று சொல்வது சரியல்ல. எங்களூர் கடலில்கூட சில வருடங்களுக்கு முன் ராஜாமடம் ஆறு கலக்குமிடத்தில் மணற்திட்டு ஏற்பட்டு சிறிய தீவு போல இருக்கிறது. உலகின் பெரும்பாலான தீவுகள் மணற்திட்டுகளால்தான் ஏற்படுகின்றன.
அத்வானி: அதிரைஜி, கடலியல் பூகோல மாற்றங்களை நீங்கள் அறியாமல் பேசுகிறீர்கள். பல இலட்சம் வருடங்களுக்கு முன் இலங்கை இந்தியாவின் பகுதியாகவே இருந்தது. இடையில் கடல்புகுந்து இலங்கையை தனித்தீவாக மாற்றிவிட்டது.மேலும், பூமித் தட்டுக்கள் நகரும்போது நிலப்பரப்பிலும் கடற்பரப்பிலும் மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஏற்பட்ட மாற்றங்களால்தான் நம்நாட்டின் இமயமலை கூட உயர்ந்ததாகச் சொல்கிறார்கள். அப்புறம், உங்களூர் பெயரிலும் "ராம்" என்று என்று உள்ளதால் தேவைப்பட்டால் அதை பிறகு பேசிக்கொள்வோம். :-(
அதிரைக்காரன்: இதே லாஜிக்படி பார்த்தால் நீங்கள் இடித்த பாபர் மசூதி இருந்த பகுதியில் ராமர் பிறந்திருக்க வாய்ப்பில்லைதானே? பூகோல மாற்றங்களால் நில,நீர்ப்பரப்புகள் மாறும் போது, வட இந்தியாவில் சரயு நதியின் ஓட்டமும் ஏன் மாறி இருக்காது? அதன்படி, நீங்கள் சொல்லும் ராமர் பிறந்த இடம் தற்போதைய சரயு நதிக்கரையிலுள்ள அயோத்தி அல்ல என்றுதானே அர்த்தம்.
அத்வானி: நீங்கள் மீண்டும் மீண்டும் பழசைக் கிளறுகிறீர்கள். "ராமர்பாலம் பாதுகாப்பு" இயக்கத்திற்கு வந்துள்ள கரசேவகர்களைச் சந்திக்க வேண்டும். பேட்டியை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
அதிரைக்காரன்: கரசேவகர்கள் கரத்தில் கடப்பாறையுடன் வந்துள்ளார்களே? வந்திருப்பது இடிக்கவா அல்லது கட்டவா?
அத்வானி: (திடுக்கிட்டு) தவறு நடந்துவிட்டது! "ராமர் பாலம் பாதுகாப்பு இயக்கம்" என்றதும் இவர்கள் பாலத்தை இடிக்க வேண்டுமோ என்று தவறாகப் புரிந்துகொண்டு கடப்பாறையுடன் வந்துள்ளார்கள். பேட்டியை சீக்கிரம் முடியுங்கள், அவசரப்பட்டு இடித்து விடபோகிறார்கள்.
***********************************
தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள மூன்று மாநிலங்கள் நதிநீர் ஆதாரங்களைத் தடுக்கிறார்கள். யாராலும் தடுக்க முடியாத கடல்நீர் ஆதாரங்களை வைத்து மாநிலத்தையும் நாட்டையும் முன்னேற்ற முயலும்போது ராமர் பாலம் என்ற பெயரால் சிலர் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.
ராமர் பாலத்தால் நன்மையடைந்தவர்கள் ஜெயலலிதாவும் இலங்கையும் மட்டுமே. ராமர் பாலம் எதற்கும் பயன்படாவிட்டாலும் எதிர்காலத்தில் ஜெயலலிதாவுடன் பி.ஜே.பி உறவுப் பாலம் அமைக்க நிச்சயம் பயன்படலாம். தமிழகம் மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் இப்பாலத்தை ராவணன் பாலம் என்பதே சரி.
ராமர் சார்! ஒரேயொரு வரம் தரவேண்டும். அதுவும் நம்நாட்டின் முன்னேற்றத்திற்காக மறுக்காமல் தர வேண்டும். அதாவது எங்களுக்காக மீண்டும் ஒரேயொரு முறை பதிமூன்று வருடங்கள் மட்டும் உங்கள் பரிவாரங்களுடன் வனவாசம் சென்று வந்தால் போதும்; நீங்கள் திரும்பி வருவதற்குள் நாங்கள் வல்லரசாகி இருப்போம்.
கொஞ்சம் பெரிய மனதுடன் இந்த உதவியைப் பண்ணுங்களேன். ப்ளீஸ்! :-)
12 comments:
உள்ளதை உள்ளபடி சொல்கிறீரே அய்யா. இது இராமர் பாதம் பட்ட பூமி, இங்கு சூத்திரர்க்கு என்ன வேலை என்று அவாக்கள் சீக்கிரம் கேட்க போவதாக வதந்தி. ::)))))))))))))
//உங்களூர் பெயரிலும் "ராம்" என்று என்று உள்ளதால் தேவைப்பட்டால் அதை பிறகு பேசிக்கொள்வோம்//
இதைத்தான் சொ.செ.சூ என்பார்கள். யோவ் அதிரை உஷாரா இருங்கய்யா. ராமர் பிறந்தது அதிராம்பட்டினத்தில்னு சொன்னாலும் சொல்லிடப்போகிறார்கள்.
நல்ல கலகலப்பான நகைச்சுவை !
:)))
அத்வனிஜி கேள்வி மட்டும் தானே கேட்பார் அவருக்கு பதில் சொல்ல தெரியாதே
//அதிரைக்காரன்: மண்டபத்திலிருந்து ராமேஸ்வரத்தை இணைக்கும் பாம்பன் பாலம் ஆங்கிலேயரால் 1911 இல் கட்டப்பட்டது.//
ராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு இடையில் ராமர் பாலம் இருந்திருந்தால், மண்டபத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு இடையிலுள்ள கடலை ராமர் நீச்சலடித்தா கடந்தார்?
இல்லாத பாலம் கட்டப் புறப்பட்டிருக்கும் இலவசக் கொத்தனார்கள் பதில் சொல்ல வேண்டும்.
//இந்தியாவின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் இப்பாலத்தை ராவணன் பாலம் என்பதே சரி. //
'அதிர' ,
ஆட்டைக் கழுதையாக்கின மாதிரி
ராமர் பாலத்த ராவணன் பாலமாக்கிட்ட
'ம்ம்ம்' எங்களுக்கு இந்த யோசனை வரலையே. இனி சட்டசபையில் 'ராவணன் பாலம்' என்றே பேசப்படும்.
அதிரைக்காரனுக்கு நன்றி
மைனாரிட்டி முதல்வர் கருணாநிதி,
பாம்பன் பாலத்திற்கு இந்திரா காந்தி பாலம் என்று பெயரிட்டதைப்போல் புதிய ராமர்பாலத்திற்கு, "மாண்புமிகு புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா அம்மா பாலம்" என்று பெயர் சூட்டுவோம்.
புரட்சித்தலைவி அம்மா வாழ்க!!!
ராமர் பாலத்தை குண்டு வைத்துத் தகர்க்க லஸ்கரேதொய்பா+டி.ஆர்.பாலு கூட்டு சதி அம்பலம்.
தல..
jokes apart,
இந்த மணற்திட்டுகள் 3000 ஆண்டுகளுக்குட்பட்டவை என்று தான் கருதப்படுகிறது. 17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமரால் கட்டப்பட்டது என்கிறார்கள். பதினேழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்களே இல்லை எனும் போது ராமன்...?? ராமன் ஒரு ஹேமோசேபியனா?
அத்வானிகளுக்கு...
விவகார ராமன்களை 'உயிர்'வாழ வைக்க ஒரு வாய்ப்பு தான் இந்த மணற்திட்டுகள். குளிர்காய கிடைத்த வாய்ப்பு.
தோழர்கள் உண்மையாகவே அமெரிக்க ஏகாதிபத்தியம் மூக்கை நுழைக்க அடிகோலும் என்பதால் எதிர்க்கிறார்கள்.
'கொஞ்சம் காசு பார்க்கலாம்' என்பதால் சில அரசியல்வாதிகள் ஆர்வங்காட்டுகிறார்கள் - ஆதரிக்கவும், எதிர்க்கவும்.
வேறுவழியேயில்லாமல், அதிரைக்காரனுக்கு'ம்' இதே மணற்திட்டுகள் பதிவுக்கயமைகளுக்கும் உதவுகிறது.:-))
ராமேஸ்வரம்-இலங்கை இடையே மனிதர்களால் கட்டப்பட்ட பாலம் உண்மை என நாஸா விண்வெளி ஆய்வு மையம் நிரூபித்தால் என் பதவியை ராஜினாமா செய்ய தயார்.
சேது சமுத்திர திட்டம் நடைபெறும் இடத்தில் மணல் குன்றுகள் மட்டுமே உள்ளன. புவியியல்ரீதியில் சொன்னால் இதற்கு தம்போலோஸ் என்று பெயர். நிலவியல் மாற்றங்களால் இயற்கையாக உருவான மணல் குன்றுகள் இவை.
இதுவரை ேசது திட்டத்தில் 15 லட்சம் கியூபிக் மீட்டர் அளவிற்கு அகழ்வுப் பணி முடிவடைந்துள்ளது. எதிர்ப்பு மற்றும் போராட்டங்களினால் சேது சமுத்திர திட்டம் தடைபடாது. 2008 ஆண்டுக்குள் இத்திட்டம் முடிக்கப்பட்டு விடும்.
உமா பாரதி மத்திய கனிம வளத்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது உத்தரவின் பேரில் ஆடம் பாலம் (ராமர் பாலம்) குறித்து புவியியல் ஆய்வு துறையால் ஆய்வு செய்யப்பட்டது. அதற்காக ஆடம் பாலத்தை 200 மீட்டர் ஆழத்துக்கு வெட்டி சோதனையிட்டனர்.
அப்போது இந்தப் பாலம் நில மாற்றங்களால், இயற்கையாக உருவாகி 7 லட்சம் ஆண்டுகள் ஆவது தெரியவந்தது.
ஆனால் இராமயணத்தில் ராமன் 17 லட்சம் ஆண்டுக்கு முன் பிறந்ததாக கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது ராமர் எவ்வாறு அந்த பாலத்தை கட்டியிருக்க முடியும்?
மதசார்பற்ற ஐக்கிய ஜனநாயக முன்னணி இந்துக்களின் மனதை புண்படுத்தும் செயல்களில் ஈடுபடாது.
சேது சமுத்திரத் திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது.
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து தண்டி சங்கராச்சாரியார் ஸ்ரீ வித்யானந்த பரத்ஜி மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதில், இந்து புராணங்களின்படி சீதையை மீட்க இலங்கை செல்ல ராமர், வானர சேனைகளின் உதவியுடன் பாலம் கட்டினார். அந்தப் பாலம் பாம்பன் அருகே கடலுக்கடியில் உள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தின் தற்போதைய வழியில், ராமர் பாலம் உள்ளால் அந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் பாலம் அழியும் நிலை உள்ளது. சுனாமி தாக்குதலின்போது இந்தப் பாலம்தான் ராமேஸ்வரத்தைக் காப்பாற்றியது.
ராமர் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இது ஆதம் பாலம் என்று அழைக்கப்பட்ட போதிலும், மதம் மற்றும் புராண ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் பாலத்தை அழித்தால் அது இந்துக்களின் மத உணர்வுகளைப் பாதிக்கும்.
எனவே இத்திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். திட்டம் பற்றி ஆராய பூகோள அமைப்புகள், இயற்கை வளம், மண்ணியல், வானிலை, கடலியல் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் சுனாமி குறித்த அறிவு நிறைந்த நிபுணர்களைக் கொண்ட கமிட்டியை அமைக்க உத்தரவிட வேண்டும்.
உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக இந்த பாலத்தை அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரிஜித் பச்சாயத், டி.கே. ஜெயின் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது, இதற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், விசாரணையை வருகிற 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த பாலத்துக்கு ராவணர் பாலம் என்று பெயரிட்டு எனக்குப் பெருமை தேடித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். உலகில் இன்னும் மூன்று இடங்களில் பாலம் இருப்பதாக நாசா சொல்லியிருக்கிறது. அவற்றுக்கு முறையே என் கனவுக் கன்னி "சீதை பாலம்" மற்றும் அருமைத் தம்பி "கும்பகர்ணன் பாலம்' என்றும் பெயரிட வேண்டுகிறேன்.
// எங்களுக்காக மீண்டும் ஒரேயொரு முறை பதிமூன்று வருடங்கள் மட்டும் உங்கள் பரிவாரங்களுடன் வனவாசம் சென்று வந்தால் போதும்; நீங்கள் திரும்பி வருவதற்குள் நாங்கள் வல்லரசாகி இருப்போம் //
ஆஹா.. இப்படிச் சொல்லி மீண்டும் ஒருமுறை என்னோட சக்களன் ராமனை காட்டுக்கு அனுப்ப நினைத்தமைக்கும் நன்றி :)
அத்வானி - மலையாளத்துல அத்வானி ன்னா 'உழை' என்று அர்த்தமாம். "உடை" என்று அல்ல ! எனவே உழையுங்கள், உடைக்காதீர்கள்.
Post a Comment