அனைத்து சினிமா நடிகர்களும் கஷ்டப்பட்டுதான் சினிமாவிற்கு வருகிறார்கள். அவர்களில் சிலர் மட்டும் தங்கள் பிரபலத்தை பலமாக்கி வெவ்வேறு அவதாரம் எடுக்கிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு ஒரு நடுநிலை சினிமா+அரசியல் விமர்சனம் :-)
கீழுள்ள செய்திக்கும் இந்த செய்திக்கும் சம்பந்தமுண்டு. தொடர்ந்து படியுங்கள்.
தமிழக அரசியலில் சுருளிராஜனுக்குப்பின் நடிகர்கள் அரசியலில் பிரகாசிக்கவில்லை.
சுருளியுடன் சம காலத்தில் உச்ச நடிகராக இருந்த குண்டுக்கல்யாணம் காங்கிரசை விட்டு விலகி புதிய கட்சி தொடங்கி ஆட்சிக்கு வர ஆசைப் பட்டார். அவர் கனவு ஈடேறவில்லை. அரசியலை விட்டு ஒதுங்கினார்.
சுருளியால் கலையுலக வாரிசு என பிரகடனப்படுத்தபட்ட தவக்களை புது கட்சி தொடங்கி ஜொலிக்கவில்லை. லூஸ் மோகனும் புதுகட்சி கண்டார். பிறகு தி.மு.க.வில் இணைந்தார். இப்போது மீண்டும் விலகி தனியாக கட்சி நடத்துகிறார்.
குண்டுக் கல்யாணத்துக்கு காங்கிரஸ் மூலமும் லூஸ் மோகனுக்கு தி.மு.க. மூலமும் தான் எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகள் கிடைத்தன. தனி கட்சி கண்டு அவர்களால் இப்பதவிகளை பிடிக்க முடிய வில்லை.
வடிவேல் அரசியலுக்கு வருவார் எனபரபரப்பாக பேசப்பட்டது. தி.மு.க.வும் த.மா.கா.வும் கூட்டணி அமைத்த போது அதற்கு ஆதரவு அளித்தார். பின்னர் பா.ம.க. வுக்கும், வடிவேல் ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட வடிவேல் அரசியல் களத்துக்கு இழுத்து வரப்பட்டார்.
புது கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்த்த வேளையில் திடீரென்று பா.ம.க. போட்டியிட்ட பாராளுமன்றகு தொகுதிகளில் அக்கட்சிக் எதிராக ரசிகர்களை விட்டு பிரசாரம் செய்ய வைத்தார். வடிவேலின் பேச்சுக்கள் கேசட்டுகளாக தயாரிக்கப்பட்டு அனைத்து தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.அவர் முயற்சி பலிக்க வில்லை. வடிவேல் எதிர்ப்பையும் மீறி பா.ம.க. ஜெயித்தது. இதனால் அவரும் ஒதுங்கினார்.
ஓமக்குச்சி நரசிம்மன் இப்போது அரசியல் களத்தில் குதிக்கிறார். மதுரையில் ரைஸ்மில் நடத்திய இவர் `இனிக்கும் இளமை' படத்தில் வில்லனாக அறிமுகம் ஆனார். `சட்டம் ஒரு இருட்டறை' பிரபலமாக்கியது. ஊமை விழிகள், வைதேகி காத்திருந்தாள், புலன் விசா ரணை, அம்மன் கோவில் கிழக்காலே, போன்ற படங்கள் ஓமக்குச்சியின் `ஸ்டார்'' இமேஜை உயர்த்தின.
அரசியல் ஆசை இவரை திடீரென பற்றவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே இதற்கான வித்து ஊன்றப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் ரசிகர்களை போட்டியிட வைத்து ஆழம்பார்த்தார். பல பஞ்சாயத்துகளில் ஒமக்குச்சி மன்றத்தினர் கவுன்சிலர்களாக உள்ளனர்.
அதன் பிறகே ரசிகர் மன்ற அமைப்பை அரசியல் அமைப்பாக மாற்றும் வேலைகளை ரகசியமாக செய்தார். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி, வக்கீல் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி போன்றவற்றை மாவட்டம் தோறும் உருவாக்கி அவற்றுக் நிர்வாகிகளை நியமனம் செய்தார்.
பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ரசிகர்களுடன் ஆய்வு கூட்டங்கள் நடத்தி இதோ நாளை அரசியல் பிரகடனத்தையும் கட்சி பெயரையும் மதுரை மாநாட்டில் அறிவிக்கிறார். ஓமக்குச்சியின் அரசியல் கட்சி எடுபடுமா என்று சாதக பாதகங்களை அரசியல் விமர்சகர்கள் பேசத் தொடங்கி உள்ளனர்.
ஓமக்குச்சி கட்சியுடன் கூட்டணி அமைக்க பாரதீய ஜனதா விரும்பியது. ஆனால் 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கப் போவதாக ஓமக்குச்சி அறிவித்துள்ளார். தனக்குள்ள செல்வாக்கின் உண்மை நிலையை அறிய இந்த தேர்தலை பயன்படுத்துவது அவர் இலக்காக உள்ளது. தனித்து நிற்கும் பட்சத்தில் குறைந்த பட்சம் 10 தொகுதி களையாவது கைப்பற்ற முடியும் என்று அவர் நம்புகிறார்.
ஆளும் கட்சியான அ.தி.மு.க. 7 கட்சிகளுடன் களம் இறங்கும் தி.மு.க.ஆகிய இரு அணிகளின் அசுர பலத்தின் முன்னால் ஓமக்குச்சியால் தாக்கு பிடிக்க முடியுமா? என்று சந்தேகத்தை சிலர் கிளப்புகின்றனர். கடைசி நேரத்தில் பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து 3-வது அணியை ஓமக்குச்சி உருவாக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஓமக்குச்சிக்கு `நடிகர்' என்ற இமேஜில் கூட்டம் கூடலாம். ஆனால் வாக்கு வாங்குவது கடினம் என்கிறார். மக்கள் தமிழ் தேசம் தலைவர் ராஜ கண்ணப்பன்.
தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., இ.கம்யூனிஸ்டு, வ.கம்யூனிஸ்டு என ஒவ்வொரு கட்சிக்கும் தொகுதி தோறும் குறிப்பிட்ட சதவீதம் வாக்கு வங்கி உள்ளது. இதுவே 90 சதவீதத்தை எட்டும் மீதி உள்ள 10 சதவீத வாக்கு பொதுமக்களுடையது. அவர்கள் ஓட்டுக்களைத்தான் ஓமக்குச்சி நம்ப வேண்டும். அந்த ஓட்டுகள் கூட எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் விழலாம் என்று அடித்து சொன்னார் ராஜா கண்ணப்பன்.
ஓமக்குச்சி கட்சியில் அரசியல் அனுபவம் உள்ள மூத்த தலைவர்கள் இல்லாதது இன்னொரு குறையாக சொல்லப்படுகிறது. ரசிகர் மன்றத்தில் மாநில பொதுச் செயலாளராக ஓமக்குச்சிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ராமு வசந்தன். இவர் இதுவரை அரசியல் பணிகளில் ஈடுபடாதவர்.
புதியவர்களை வைத்து அரசியல் வியூகத்தை வெற்றிகரமாக வகுப்பது ஓமக்குச்சிக்கு சவாலாகவே இருக்கும் என்றார் சக நடிகர் ஒருவர்.நடிகர் என்பதால் ஓமக்குச்சிக்கு கூட்டம் கூடுவதில் குறை இருக்காது. சுருளி ராஜனைப்போல் சாதிப்பேன் என்று நம்பிக்கை யோடு சொல்கிறார் ஓமக்குச்சி. இதற்கு பக்க துணையாக மாநாட்டு பந்தல் முகப்புக்கு சுருளி ராஜன் பெயரையும் சூட்டி உள்ளார்.
காமராஜர், அண்ணா, காந்தி போன்ற தலைவர்கள் பெயரையும் பந்தலுக்கு சூட்டி துணையாக சேர்த்துக் கொண்டு உள்ளார். தேசிய கட்சி, திராவிட கட்சி, தலைவர்கள் படங்களுடன் அரசியல் பயணம் தொடங்கி உள்ள ஓமக்குச்சியின் அரசியல் வியூகம் புதுமையாகத்தான் இருக்கும் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் உலவுகிறது.
குண்டுக் கல்யாணம் உள்ளிட்ட நடிகர்கள் அரசியலில் பிரகாசிக்க முடியவில்லையே என்று ஓமக்குச்சியிடம் கேட்டபோது சுருளி ராஜன் கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்க வில்லையா? அவரைப் போல் என்னால் வர முடியும் என்று நம்பிக்கை யோடு சொல்கிறார்.
அ.தி.மு.க., தி.மு.க. போன்ற திராவிட கட்சிகளை வெறுப்பவர்களின் வாக்குகள் தனக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு அரசியலில் குதிக்கிறார். நம்பிக்கை பொய்க்குமாப பலன் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
திருத்தம்: தவறுதலாக பிரபலமான நடிகர்கள் பெயருக்குப் பதில் நகைச்சுவை நடிகர்களின் பெயரைப் போட்டு எழுதி விட்டேன். முடிந்தால் அந்தந்த இடத்தில் சரியான நடிகர்கள் பெயரைப் போட்டு மாற்றி படித்துக் கொள்ளுங்கள்.
Read more...