கலர் கலரா காரணங்கள்

Friday, September 02, 2005

பெரும்பாலும் பலான சமாச்சாரத்தை மறைமுகமாகச் சொல்ல 'நிறங்கள்' (Colors/Colours') ஒரு குறியீடாக இருக்கிறது. நம் வாழ்க்கையில் 'கலர்' ஒரு அலாதியான விசயம். ஒவ்வொரு கலருக்கும் பின்னாடி ஒரு செய்தி இருக்கிறது. சில 'கலர்கள்' எந்தெந்த விசயத்துக்கு பயன் படுத்தப்படுகின்றன என முதலில் பார்ப்போம்.

பலான கலர்கள்

பச்சை (Green) = பலான விசயங்களைப் பேசும்போது குறிப்பிடப்படும். (என்ன இப்படி பச்சை பச்சையா பேசுகிறார் இவர்?)

சிகப்பு (Red) = பலான தொழில்? நடக்கும் இடத்தைக் குறிக்க (மும்பை சிகப்பு விளக்குப்பகுதியில் போலிசார் ரோந்து)

நீலம் (Blue) = பலான சினிமாவைக் குறிக்க பயன்படுத்தப் படுகிறது (பிரபல நீலப்பட மன்னன் நீலகண்டன் கைது)

மஞ்சல் (Yellow) = பலான புத்தகங்களைக் குறிப்பிட (சாந்தி தியேட்டர் அருகே மஞ்சல் புத்தகங்களை விற்ற வாலிபர் பட்டதாரி வாலிபர் கைது)

வர்த்தகம் மற்றும் அலுவலகம்:

வர்த்தக அலுவலக உபயோகங்களில் பெரும்பாலும் சிகப்பு அல்லது பச்சை பயன்படுத்தப் படும். ஆபிஸில் முக்கியமான ஃபைலில் சிகப்பு நாடா இடப்பட்டிருந்தால் 'அவசரம்' என்றும் பச்சை நாடா இடப்பட்டிருந்தால் 'சாதாரணம்' என்றும் அர்த்தம். இம்முறையை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிமுகப்படுத்தி இருக்க வேண்டும். தற்போதைய கணினி யுகத்தில் இதுப்போன்ற கலர்க்குரியீடு இருக்கிறதா என்று தெரியவில்லை. பெரும்பாலும் Post it Slip மஞ்சல் கலராக இருக்கும்.

பொருளாதார தேக்க நிலைக்கு Red Tapism என்பார்கள். நிதியமைச்சர் பொதுத்துறை பங்குகளை விற்க பச்சைக்கொடி காட்டிவிட்டார்.

டெலிபோன் டைரக்டரியில் மஞ்சல் பக்கங்கள் (Yellow pages) பிரபலம். White pages, Blue Pages, Greean Pages போன்ற சில நிறங்களும் பயன் படுத்தப்படுகின்றன.

பொதுவாக வாகன மற்றும் இதர எச்சரிக்கைகளைக் குறிக்க சிகப்பு, பச்சை, ஆரஞ்சு கலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜோஷியர்களும், வாஸ்து சாஸ்திரிகளும் கொஞ்சம் கலர்கலரா பீலா விட ஆரம்பிச்சுட்டாங்க. (உங்க ராசிக்கு மஞ்சல் சால்வை போடுக்கொண்டால் 40 தொகுதிகளிலும் ஜெயிச்சுடலாம், உங்க வீட்டுக்கு செந்நிற வர்ணம் பூசினால் ஓஹோன்னு இருப்பீங்க! etc)

கன்னியரைக் குறிக்கவும் தற்போது 'கலர்கள்' பயன்படுகின்றன (மச்சி சத்யம் தியேட்டர்ல நேத்து செம கலர்டா!)

இப்படி கலர் நம் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ளன. இவையல்லாமல் சில கலர்களின் பின்னனியை இந்த தளம் சொல்லுகிறது. இன்னொரு தளம் கலர் கலரா மனோதத்துவத்தை சொல்லுகிறது. நேரமிருந்தா போய் கலர் பாருங்க!

மறக்காம உங்கள் பின்னூட்டங்களையும் கலர் கலரா விட்டுட்டு போங்க.

4 comments:

அதிரைக்காரன் 9/02/2005 11:47 PM  

ச்சே....காலங்காத்தால இரண்டு விஷ எரிதங்கள் (Spams). நீக்கி விட்டேன்.

Anonymous 9/03/2005 3:47 AM  

கௌம்பிட்டாங்கய்யா! கௌம்பிட்டாங்க!!

பாலதர்ஷன் 9/04/2005 6:08 AM  

கலரிலை ரெம்ப இஸ்டம்போல! போட்டுத்தாக்கு!

நல்லடியார் 9/05/2005 12:10 AM  

//வர்த்தக அலுவலக உபயோகங்களில் பெரும்பாலும் சிகப்பு அல்லது பச்சை பயன்படுத்தப் படும்//

'கருப்பு'ப் பணம் வர்த்தகத்தில் இருப்பது அதிரைக்காரருக்கு தெரியாதோ?

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP