குறைந்த முதலீட்டில் கட்சி ஆரம்பிப்பது எப்படி?
Friday, September 23, 2005
முன்பெல்லாம் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்குவது எப்படி என்றுதான் கையேடுகள் கிடைத்தன. காலமாற்றத்திற்கேற்ப டாபிக்கை மாற்ற வேண்டியுள்ளது. எனக்குத் தெரிந்த சில சுலபமான வழிகளைச் சொல்கிறேன்.
1) மார்க்கெட் இழந்த நடிகராக இருந்தால் நல்லது. (பப்ளிசிட்டி செலவு மிச்சம்.)
2) காவிரியில் தண்ணீர் விடச்சொல்லி மழைக்காலத்தில் அறிக்கை விடலாம். (பின்னாளில் காவிரித்தந்தை என்ற பட்டத்திற்கு உதவும்).
3) பெற்றோரிடம் தமிழில் பேசச் சொல்லி மாணவர்கள்,NRI க்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கலாம்.
4) திருட்டு VCD,DVD ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுப்பதோடு திருட்டு சாப்ட்வேருக்கு எதிராகவும் குரல் கொடுக்கலாம்.
5) பிரபலமானவர்களுக்கு எதிராக அடிக்கடி அறிக்கை விட்டால், அவர்களிடம் நிருபர்கள் உங்களைப்பற்றி கேட்கும் போது நீங்கள் இன்னாரின் பினாமி என்று உங்களை இலவசமாக பிரபலப்படுத்துவார்.
கட்சி ஆரம்பித்த பிறகு:
1) மாவட்ட, வட்டத்தலைவர்கள் என்று அவர்களைக் கேட்காமலேயே நீங்களே வெளியிடலாம். உங்கள் அறிக்கையைப் பார்த்த பிறகுதான் சம்பந்தப்படவர்களுக்கே தெரிய வேண்டும்.
2) மாநில மாநாட்டை எந்த கட்சியாவது மாநாடு நடத்தும் நாளில் வைத்தால் பொதுமக்கள் குழம்பி விடுவார்கள்.
3) தியேட்டரில் சினிமா பார்த்து விட்டு வெளியேறும் மக்களை போட்டோ எடுத்து, நல்ல கிராபிக் டிசைனரிடம் சொல்லி நீங்கள் அவர்களைப் பார்த்து கையசைப்பது போன்ற ஆளுயர போட்டோவை இணைக்கச் சொல்லி போஸ்டராக வெளியிட வேண்டும்.
4) உங்கள் தாத்தாவின் பெயரில் நினைவு மண்டபம் வைக்கச் சொல்ல வேண்டும். யாரும் கேட்டால் சுதந்திரத்திற்காக போராடியவர் என்று சும்மா சொல்லி வைக்கலாம்.
5) ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு இலவச செல்போன், இலவச லாப்டாப் கம்ப்யூட்டர் என்று யாரும் சொல்லாததை சொல்லி வைக்க வேண்டும்.
நிதி உதவி பெற:
1) வங்கிகளில் இதற்கான நேரடி வசதிகள் இல்லை. ஆனால் நீங்களே நிதி நிறுவனம் ஆரம்பிக்கலாம்.
2) கட்சி உறுப்பினர்களிடம் கட்சிக்கு முதலீடு செய்தால் ஆட்சிக்கு வந்த பின் 10 மடங்கு லாபத்தொகையுடன் திருப்பித் தரப்படும் என்று சொல்லலாம்.
தற்போதைக்கு இவையே சுலபமான வழிகளாகத் தெரிகின்றன. உங்களுக்கு ஏதாச்சும் ஐடியா இருந்தால் பின்னூட்டத்தில் கொடுத்து உதவுங்களேன்.
3 comments:
இதோ மேலே பின்னூட்டமிட்டவரை கோஷம் போட வச்சுக்கலாம்.
அப்பு நல்ல ஆப்பு வெச்சிங்க,
நம்ம ஜடியாவும் சேத்துகோங்க. தமிழ் கலாச்சரத்தையோ இல்ல பண்பாட்டையோ பத்தி அசிங்கமா போசிட்டு. அப்பறம் ஒரு தொலைக்காட்சில கண்ணிர் மல்க பேட்டி குடுத்துட்டு தமிழ்ல பத்தி நான் தப்பா பேசி இருந்தா என் நாயை பத்தி(Sorry அவங்க தாயை பத்தி சொல்ல வந்த போது Tongue slip aidichi) சொன்னா மாதிரினு ஒரு statement வீட்டு புகழ் தேடிகிலாம். அப்படி இல்லாட்டி இருக்கவே இருகானுங்க நிருபர் பசங்க அவனுங்க மேல பழியை போட்டுடலாம்
Nalla Yosanainka!
Post a Comment