இலவசம்

Friday, September 30, 2005

இணைய தளங்களில் இலவச இரத்தப் பரிசோதனை செய்வது பற்றி ஒரு வலைப்பதிவர் சமீபத்தில் எழுதி இருந்தார். அதே போல் வேறு ஏதாவது உருப்படியா கிடைக்கிறதா என்று தேடியதில் "இலவச டிஜிட்டல் போட்டோ" பற்றிய தளம் கண்ணில் பட்டது.

உலகிலேயே நம்பர்.1 பணக்காரராக இருந்தாலும் இலவசமாக கிடைப்பதை வெருப்பதில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் இலவசமாக எது கிடைத்தாலும் அதை அடைய முயற்சிப்பார். உதாரணமாக ஒருநாள் சென்னை பீச் ரோட்டில் வேகமாக பைக்கில் வந்து கொண்டிருந்தவர், FREE LEFT TURN என்ற போர்டைப் பார்த்தவுடன் நேராக செல்லவேண்டிய அவர் இடதுபக்கம் திரும்பி விட்டார் என்றால் பாருங்களேன். (சும்மா ஜோக்குதான்).

இந்த தளத்தில் உள்ள கேமரா சாதாரண கேமராதான். இரண்டு ஸ்டெப்களைக் கடந்தால் நல்ல தரமான போட்டோ உடனடியாக எடுக்கப்படுகிறது. ஆச்சரியம் என்னவென்றால் உங்கள் கணினியில் கேமரா இணைக்கப்படாமலேயே போட்டோ எடுப்பதுதான். நீங்களும் முயற்சி செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பின்னூட்டமிடலாமே?

இலவச போட்டோ எடுக்க கிளிக் பண்ணவும்.

3 comments:

லதா 10/01/2005 1:26 PM  

இந்த AF மானிடர் (?) ஃபோட்டோ டார்வின் காலத்திற்கு முன்பே(!) இணையத்தில் உலா வந்துவிட்டது என்று நினைப்பதால் (நண்பர்களிடம் ஏமாந்தது / பிறகு நண்பர்களை ஏமாற்றியது எல்லாம் வேறு விஷயம்) நான் முயற்சி செய்யவில்லை:-))

அதிரைக்காரன் 10/01/2005 11:15 PM  

//டார்வின் காலத்திற்கு முன்பே(!) இணையத்தில் உலா வந்துவிட்டது //

ஓஹோ புரிகிறது. நானும் இதை கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தே பார்த்து ஏமாந்திருக்கிறேன். யாம் பெற்ற ஏமாற்றம் பெறுக இவ்வையகம்.

புஷ் விளையாட்டு ஆடிப்பாருங்க.

கானகம் 10/05/2005 6:50 AM  

ennayya onnoda photovellam varudhu ennoda photova edukka chonna...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP