டாலர் கனவும் தேசப்பற்றும்
Friday, October 21, 2005
இன்று பிற்பகல் சன் செய்திகளில் "இந்திய இராணுவத் தேர்வுக்கு வந்தவர்கள், திருப்பி அனுப்பப்பட்டார்கள்" என்ற செய்தியை பெரும்பாலோர் கவனித்திருக்க மாட்டார்கள். அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.
தேர்வு மறுக்கப்பட்டதற்குச் சொல்லப்பட்ட காரணம் +2 படித்த மாணவர்களை மட்டுமே,அதுவும் கணிதம்,பெளதீகம் படித்த முதல்பிரிவு கல்வி கற்றவர்களை மட்டுமே சேர்ப்பார்களாம். SSLC தேறியவர்களுக்கு அனுமதியே இல்லையாம்!
முட்டால்தனமான காரணமாகப்பட்டது. உயர் கல்வி படித்துவிட்டு அமெரிக்கா, இலண்டன், ஆஸ்திரேலியா என டாலர் வேலைக்காக வெளிநாட்டு தூதுவாலயங்களில் கால் வலிக்க கோர்ட் சூட் அணிந்து நுனிநாக்கு ஆங்கிலம் பேசி, டிகிரி மற்றும் பாஸ்போர்ட்டுடன் நிற்கும் நம் இளம் தலைமுறையினரின் டாலர் கனவுக்களுக்கிடையில், தேசத்திற்கு சேவை செய்யும் உன்னத பணிக்கு ஆர்வமாக வந்தவர்களை இப்படி திருப்பி அனுப்பலாமா?
தீவிரவாதம்,வழிப்பறி,கொலை,கொள்ளை என் சமூக குற்றங்களைத் தடுக்க மூச்சுத்திணரும் மத்திய மாநில அரசுகள் இதுபோல் தேசத்தொண்டாற்றும் ஆர்வத்தில் வருபவர்களை முகத்திலறைந்தாற்போல் செய்யலாமா? இந்த ஏமாற்ற மனநிலையில் ஊர் திரும்பும் அவர்களில் எத்தனை பேர் மனம் மேற்சொன்ன சமூக குற்றங்களைச் செய்ய சிந்தித்திருக்கும்?
இராணுவத்தில் சேர வருபவர்கள் வேறு வேலைக்கே வழி இல்லாதவர்கள் என்பது ஓரளவு உண்மை என்றாலும், நல்ல மரியாதை சலுகைகள் கிடைக்கின்றன என்ற சுயநலக் காரணங்களும் இருக்கவே செய்கின்றன். இருந்தபோதிலும் நாட்டைக்காக்கும் அரும்பணியில் உயிர் நீர்த்தால் அவை அனைத்தாலும் அவர்களுக்கு பிரயோஜனமில்லை.
இராணுவத்தில் சேர்வதை ஏதோ வர்த்தக நிறுவத்தில் வேலைச் செய்வது போன்ற மனநிலையில் வரும் புதிதாக சேர விரும்புபவர்கள் கைவிட வேண்டும்.
மேலும் மத்திய மாநில அரசுகள் குறைந்த பட்சம் தேசப்பாதுக்காப்பில் பள்ளிப்படிப்பின் அங்கமாக வைத்தால், துறை வல்லுநர்கள் கல்வி முடிக்கும் போது இராணுவத்தில் தொடரலாமே?
இவ்வாறு ஒரு சில வருடங்கள் தேசியப்பாதுகாப்புப் பயிற்சி பெற்று குடும்ப நிலையை உயர்த்த தனியார் நிறுவனங்களில் இணையத் தகுதி உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?
4 comments:
அதிர்ச்சியாக உள்ளது இந்த செய்தி..
நீங்கள் சொல்லும் வகையில் நடப்பதற்கு 100 சதவிகிதம் வாய்ப்புகள் உள்ளது.. எந்த வேலையும் கிடைக்காதவர்களே குற்றங்கள் செய்ய எளிதாக தூண்டப்படுகின்றனர்... அவர்களையும் தவறென சொல்ல முடியாது...
வெள்ளைக்காலர் பணியில் இருக்கும் நாமே, அப்படி நடந்துகொள்வோம்..
அராசாங்கம், என்று எதையும் தொலைநோக்கு பார்வையுடன் காணப்போகின்றது...
-
செந்தில் / Senthil
Sir,
How do we want to publish the pages in the Blogger spot?
I have seen many tamil pages published is not shown correctly in these sites. Is there any font problem.
So please give suggestions about those problems and how do we want to publish and update in Tamil.
Anand M E
நம்ப அரசாங்கத்தைப் பத்தி தப்பா நெனச்சுட்டீங்களே....
நிராகரிக்கப்பட்டது ஜவான் பணிகளுக்கான விண்னப்பம் இல்லை. பொறியியல் பட்டத்திற்கு இணையான சான்றிதழ் வழங்க இந்திய அரசாங்கம் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து இலவசமாக பயிற்சியும் கொடுத்து இந்திய ராணுவத்தில் சேர்த்துக்கொள்கிறது. இது ஆஃபீசர் ரேங்கிற்கானது. எனவே, பொறியியல் படிப்பிற்கு இதர இந்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ளது போலவே இதற்கும் +2, PCM (physics, chemistry, mathematics) வேண்டும். இந்தியாவிற்கு சேவை செய்யும் மனம் உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக எல்லோரையும் டெக்னிக்கல் பணியில் சேர்த்துக்கொள்வது இயலாத காரியம். குறைந்தபட்சம் அது பற்றிய அடிப்படை அறிவு இல்லாவிட்டால் எப்படி?
இப்பொழுது சொல்லுங்கள், நடந்தது சரியா தவறா?
http://joinindianarmy.nic.in/tes.htm
I think kirupa is correct.
Indian Army is not a place any one can go and join. (Like uneducated or pre-educated)
Those people can make them fit. If they realy want to serve nation.
There should be some qualification.
For ordinary job only companies are looking for graduates with good aptitude and experiance.
So, for Indian Army It is very important.
Thanks
Let me know hot send Comments in Tamil kvenkat_2k1@yahoo.com
Post a Comment