விலை உயர்வைச் சமாளிக்க வழிகள்
Thursday, October 20, 2005
பெண்கள் சேலை எடுப்பது, சினிமாவுக்குப் போவதைக் குறைத்துக்கொண்டால் கேஸ் விலை உயர்வைச் சமாளிக்க முடியும் என்று மணிசங்கர் அய்யர் சொன்னதற்காக சென்னையில் அவரின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
இனி விலை உயர்வு வரும்போதெல்லாம் எப்படி கருத்துச் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்வது என நம்மால் ஆன ஆலோசனைகள்:
பேரூந்து கட்டண உயர்வு: மூன்று வீல் ஆட்டோவில் பயணம் செய்தால் அதிக கட்டணம் கொடுக்க முடியும் போது, நான்கு வீல் பேருந்துக்கு கட்டண உயர்வு நியாயமே!
இரயில் கட்டண உயர்வு: உல்கிலேயே மிகப்பெரிய நிறுவனம் இந்திய இரயில்வே. அந்த பெருமையை தக்கவைத்துக் கொள்ள, கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது.
தொலைபேசிக் கட்டண உயர்வு: இண்டெர்நெட்டில் செய்தியை அணுப்புவதால் ஃபாண்ட் பிரச்சினை இருக்கும். ஆனால் தொலை பேசியில் ஃபாண்ட் பிரச்னை இல்லையாதலால், வசதியைக் கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
விலைவாசி உயர்வு: அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், வியாபாரிகள் இலாபம் அடைகிறார்கள். வியாபரிகளும் நம் நாட்டு குடிமக்களே. சக குடிமக்களுக்கு இலாபம் கிடப்பதை நாம் மனப்பூர்வமாக வரவேற்கவேண்டும்.
தங்கம் விலை உயர்வு: தகரம் விலை குறைவாக இருப்பதால் யாரும் அதை மதிப்பதில்லை. ஆகவே, தங்கம் விலையை உயர்த்துவதன் மூலம் அதன் மதிப்பு இன்னும் கூடும்.
மணிசங்கர் அய்யர் சொன்னதற்கும் இப்பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பி சிண்டைப் பிய்த்துக் கொள்பவர்கள் கீழ்கண்ட கட்டண உயர்வையும் பொறுத்துக் கொள்க!
முடிவெட்டும் கட்டண உயர்வு: மேலே சொன்ன அனைத்துவகை விலை உயர்வால், எமது புதிய கட்டண உயர்வை வாடிக்கையாளர்கள் பொறுத்துக் கொள்ளவும்.
ஸ்டெப் = ரூ.20/- (ரஜினி,பாக்கியராஜ் ஸ்டைல்)
டிஸ்கோ= ரூ.18/- (கமல், மோகன் ஸ்டைல்)
கட்டிங் = ரூ.12/- (காது வெட்டுப்படாமல்)
மொட்டை=ரூ.10/- (ஒரு மாதம் கியாரண்டியுடன்)
ஷேவிங் = ரூ.7/- (புதிய பிளேடு+லோசன்)
,, ,, = ரூ.5/- (பழைய பிளேடு+ஹமாம் சோப்பு நுரை)
ஹீட்டர் = ரூ.3/- (முடியைப் பிடித்து இழுக்காமலும், சூடு வைக்காமலும்)
இவண்,
தமிழ்நாடு மருத்துவ (பட்டதாரிகள்?) முடிவெட்டுவோர் சங்கம்
பின்குறிப்பு: தற்போதுதான் தமிழ்மணத்தில் என் வலைப்பூவில் பச்சை பல்பு எறியுது. அனேகமா இப்பதிவைப் பார்த்துட்டு காசி மறுபரிசீலனை செய்யாமல் இருக்க வேண்டிக் கொள்வோமாக!
3 comments:
அய்யருக்கு வாய்கொழுப்பு அதிகம்.
அம்மா ஆளுங்க அடிச்சதை மறந்துட்டார்னு நினைக்கிறேன்?
நல்லா குட்டுனீங்க. அய்யர் தலை வீங்கிப்போச்சு.
தமிழ் நாட்டுல சிமெண்ட் விலை ஏறிப்போச்சே என்று கலைஞர் கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டபோது பீகாரோடும், ஹிமாச்சல பிரதேசத்தோடும் ஒப்பிடுவார்.
எங்கள் இனஅமைச்சர் சொன்னது, கலைஞர் சொல்லியதைவிட மோஷமில்லை.
Post a Comment