குடி'மகள்'கள்

Friday, October 21, 2005

ஆண்களுக்கு நிகராக பெண்கள் எல்லா துறையிலும் சிறந்து விளங்குகிறார்கள். என்பதற்கு பல்வேறு எடுத்து காட்டுகளை கூறமுடியும். அடுப்பறையில் முடங்கி கிடந்த பெண்கள் விண்வெளியில் கால் பதிக்கிறார்கள். இன்றைய விஞ்ஞான உலகத்தில் பெண்கள் இல்லாத துறையே இல்லை. ஆனால் கீழுள்ள செய்தியைப் படித்ததும் அதிராமல் இருக்க முடியவில்லை.

சேலம் மாவட்டத்தில் "டாஸ்மார்க்" கடைகள் 238 உள்ளன. இவற்றில் கடந்த 2003 டிசம்பர் முதல் 2005 செப்டம்பர் வரை மதுபான விற்பனை ரூ.450 கோடியை எட்டி உள்ளது என்கிறார்கள். இவற்றில் 400 கோடி விஸ்கி, ரம், பிராந்தி விற்பனை மூலம் வந்தது. 50 கோடி 'பீர்' விற்பனையில் மட்டும் எட்டப்பட்டுள்ளது.

புள்ளி விவரமாய்ச் சொன்னால் 15 லட்சத்து 13 ஆயிரத்து 277 பெட்டிகள் (ஒரு பெட்டிக்கு 12 பாட்டில்கள் என்றால், 15 லட்சத்து 13 ஆயிரத்து 277 பெட்டிகளை 12 ஆல் பெருக்கிக் கொள்ள வேண்டும்) பிராந்தி, விஸ்கியும், 8 லட்சத்து 25 ஆயிரத்து 277 பெட்டி பீர்களும் விற்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாதமும் அரசு நிர்ணயித்த குறியீட்டை விட கூடுதலாக 20 சதவீதம் (120 சதவீதம்) விற்று மாநிலத்தில் 2-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது சேலம் மாவட்டம். ஆனால் இந்த சாதனைக்கு பின்னால் ஒரு அதிர்ச்சியான தகவலும் இருக்கிறது. இந்தளவு விற்பனைக்கு பெண்களும் காரணம் என்பதுதான் அது.

மதுப்பழக்கத்துக்கு அடி மையான கீழ்தட்டு வர்க்க பெண்களுக்கு லோக்கல் மதுக்கடைகள் என்றால், மேல்தட்டு பெண்களுக்கு இருக்கவே இருக்கிறது ஸ்டார் ஓட்டல் பார்கள். ஒருவருக்கு ஒருவர் அருகில் இருந்தால் கூட முகம் தெரியாத அளவுக்கு பரவி கிடக்கும் இருட்டு மறைத்து இருக்கும் ஸ்டார் ஓட்டல் பார்கள். அது போன்ற நாகரீக மங்கைகளை வெளியே அடையாளம் காட்டாது.

ஆனால, இந்த உண்மை சில பார்ட்டிகளின்போதும் மற்ற நிகழ்ச்சிகளின்போதும் வெளியே வந்துவிடுகின்றன. நாகரீகம் என்று கூறி பீர், ஒயின், ஓட்கா என்று "ஆல்கஹால்'' அதிகம் இல்லாதவைதான் என்று அவர்கள் சமாதானம் கூறினாலும் மருத்துவ உலகம் எச்சரிக்கை விடவே செய்கின்றன.

வெளிநாட்டில் இருந்து இந்தியா வுக்கு வந்த (ஆங்கிலேயர்கள் உள்பட) அனைத்துமே ஒன்று இந்தியாவை சுரண்டுவதாக இருக்கும். அல்லது இந்தியர்களின் உடல் நலனை சுரண்டு வதாக இருக்கும்.

இந்த வெளிநாட்டு மது பானங்களும் அப்படித்தான். இந்திய இளைஞர்களின் உடல்நலத்தை மெதுவாக சுரண்டுகிறது. இப்போது அது இளைஞிகளையும் சுரண்டுகிறது என்பது தான் அதிர்ச்சியான விஷயம்.

இளைஞர், இளம் பெண் கள் என வலைவிரிக்கும் மதுபான அரக்கனுக்கு அடிமையாகும் சிறுவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் எகிறுகிறது என்பது கூடுதல் ஷாக் செய்தி. பாருக்கு வரும் பலருக்கு 15 வயதைக் கூட தாண்டமல் இருப்பது அதிர்ச்சியான விஷயம்.

என்ன விசேஷம் என்று கேட்டால் `பர்த்டே பார்ட்டி' என்று கூலாக பதில் வருகிறது. பார்ட்டின்னா இப்போது கோகோ கோலாக்கள் மறக்கப்பட்டு... மரங்கொத்தி பீர்களும், கருப்பு இரவு பீர்களும் சிறுவர்களுக்கு ஞாப கத்துக்கு வருவதுதான் கலி காலம்.

இந்த ரிசல்ட் யாருக்கு லாபத்தை ஏற்படுத்தி இருக்கிறதோ, இல்லையோ... `டாஸ்மாக்' நிறுவனத்துக்கு லாபத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது. இதற்கு மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ஈட்டிய தொகை ஒரு எடுத்துக்காட்டு.

ஆனால் ஒவ்வொருவராக ஆக்ரமித்து இப்போது இளைஞர்கள், சிறுவர்களை யும் வலை விரித்து இருக்கும் மது அரக்கனால் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் எதிர்காலத்தில் பெரும் அபாயம் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

4 comments:

அப்துல் குத்தூஸ் 10/22/2005 4:37 AM  

மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள். மன மயக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களை அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். எதற்காகவெனில் அவர்கள் எவ்வித அறிவிமின்றி(மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு பிறழச் செய்வதற்காகவும் அதை ஏளனம் செய்வதற்காகவும் தான் (அல்குர்ஆன் 31:6)

விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை ஹலாலாக்கிக் கொள்ளக்கூடிய ஒரு கூட்டம் என்னுடைய சமுதாயத்தில் நிச்சயம் தோன்றும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஆமிர்(ரழி), அபூமாலிக்(ரழி) மற்றும் அல் அஷ்அரி(ரழி) அவர்கள் அறிவிக்கின்றனர். நூல்: புகாரி.

மேலும், அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : திண்ணமாக இந்த சமுதாயத்தில் பூகம்பம், உருமாற்றம் செய்யப்படுதல், அவதூறு கூறல் ஆகியவை உண்டாகும். எப்போதெனில் அவர்கள் மது பானங்களை அருந்தும்போது, (நடனமாடி) பாட்டுப்படிக்கும் பெண்களை ஏற்படுத்தும் போது, இசைக்கருவிகளைப் பயன்படுத்தும் போது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அதிரைக்காரன் 10/22/2005 8:04 AM  

நன்றி, அப்துல் குத்தூஸ்!

இந்த சம்பவம் நேற்றைய மாலை மலரில் வந்திருந்தது. இப்பெண்கள் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.

கொடுமை என்னவென்றால் கணவனே அவ்வாறு குடித்து விட்டு 'வலி' நிவாரணம் பெறத்தூண்டுவதாக சம்பந்தப்பட்ட பெண்களே சொல்லி இருந்தார்கள். இந்தக் கொடுமையை மத இனப்பாகுபாடின்றி ஒழித்துக்கட்ட சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.

Anonymous 10/29/2005 4:27 PM  

onnume puriyala ulakathile...

Anonymous 11/15/2005 3:49 PM  

எதிலதான் ஆபத்து இல்ல எல்லாத்திலேயும் இருக்கப்பா.. பிள்ளை பெற்று எடுப்பதில இருந்து.. ஒரு நாள் சென்னையில் வீதியில் பொனாலே ஒரு பக்கற் சிகரற் குடித்ததுக்கு சமமாகும்மாம்...குடிக்கிறதுல தப்பில்ல அழவோடு நிறுத்துக்கம்பா...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP