அ.மு. & அ.பி.
Thursday, November 24, 2005
இவை சங்கேத குறியீடுகள் அல்ல. அ.மு=அரசியலுக்கு முன், அ.பி. = அரசியலுக்குப் பின்!
நமது மாண்புமிகு அரசியல்வாதிகள் சாதாரணமாக அரசியல்வாதிகளாகி விடவில்லை. கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள்.
சமீபத்தில் திருச்சியில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய எம்பி எஸ்.எஸ்.சந்திரன் அமைச்சரின் 'கடந்த காலம்' குறித்துப் பேசி அமைச்சர்களை சங்கடத்தில் நெளிய வைத்தார்.
அதிமுகவின் உழவர் பாதுகாப்புத் திட்டம் குறித்து விளக்கவே அந்தக் கூட்டம் நடந்தது. அமைச்சர் ஓ.பி உள்ளிட்ட பல மாண்புமிகுக்கள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் எஸ்.எஸ். சந்திரன் தனது வாயை கோணியபடி பேசியதில் அறிந்து கொண்ட அரிய தகவல்கள்:
1) நான் திமுகவுல இருந்து விலகினபோது இந்த ராதாரவிப் பய என்னை அழைச்சுட்டுப் போயி வைகோகிட்ட விட்டுட்டு ஓடிப் போய்ட்டான். அங்கே சில காலம் இருந்து அவஸ்தைப் பட்ட பிறகு உயிர் தப்பினா போதும்னு வெளியேறி அதிமுகவுல சேர்ந்தேன். (அடைக்கல திராவிட முன்னேற்றக் கழகம்!!!)
2) 35 வருசமா கருணாநிதி கூட இருந்து கவுன்சிலர் கூட ஆக முடியலை. ஆனா, அம்மாகிட்ட வந்த சில மாதத்திலேயே எம்பியாகிவிட்டேன். (பலே..பலே..)
3) நான் மட்டுமா?. இதோ மேடையிலே இருக்காரே அமைச்சர் அண்ணாவி. அவர் என்ன செஞ்சுகிட்டு இருந்தார் தெரியுமா?. பஸ்சுல விசில் அடித்து கண்டக்ரடா இருந்தார். இப்ப எவ்வளவு சொகுசா வாழ்றார் தெரியுமா என்றார். (சூப்பர் ஸ்டார் அமைச்சர்?)
4) அப்போது அண்ணாவி ஒரு பக்கம் நெளிய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்னொரு பக்கம் நெளிந்தார். (இவர் பெரியகுளத்தில் டீக் கடை நடத்தியவர், டீ மாஸ்டரும் இவரே).
இதுக்குப் பேருதான் உள்குத்தா? பின்னூட்டம் ப்ளீஸ்...