கொடும்பாவி ஆன்லைன்

Saturday, November 19, 2005

கொடும்பாவி எரிப்பது தற்போது புதிய கலாச்சாரமாகி விட்டது. யாரை எப்போது எங்கு கொடும்பாவி எரிப்பாங்கன்னே தெரிய மாட்டேங்குது.



குஷ்புக்கை ஜாக்கெட் பிரபலமாகும் போதே அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு அடிபட்டது. மு.க. ஸ்டாலினுக்கு எதிராக ஆளுங்கட்சியால் களமிறக்கப்படுவார் என்ற நேரத்தில் கற்பு பற்றி வாய்விட்டு சர்ச்சையில் மாட்டிக் கொண்டுள்ளார்.

(குஷ்பு=ஸ்டாலின்? அரசியல் கொடுமையடா! பாவம் தமிழ்நாட்டு மக்கள்!!!)

நம் மக்கள் விரும்பினால் கோவில் கட்டிக் கும்பிடுவார்கள். கோபம் வந்தால் கொடும்பாவியும் எரிக்கத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு குஷ்பு நிகழ்கால உதாரணம். ரஜினி சொல்லித்தான் மக்கள் அதிமுகவை வீட்டுக்கு அனுப்பினார்கள் என்ற மாயையை அடுத்த தேர்தலிலும் படத்திலும் ரஜினியை கிட்டத்தட்ட இமய மலைக்கு நிரந்தரமாக அனுப்பப் போனார்கள். மனுசன் தப்பிச்சுக்கிட்டார்!

குட்டைப்பாவாடை பற்றிய மதகுருமார்களின் கருத்துக்கு சானியா காட்டமாக பதில் சொன்னதாக நேற்று முன் தினம் படித்தேன். மறுநாள் நான் அப்படிச் சொல்லவே இல்லை. பத்திரிக்கைகள் திரித்து எழுதி விட்டன என்றார்.

http://www.deccanherald.com/deccanherald/nov182005/index21153820051117.asp

தன் மானம் குட்டைப்பாவாடை வழியாக காற்றில் பறந்தாலும் பரவாயில்லைன்னு அமெரிக்காவரை சென்று டென்னிஸ் விளையாடிய சானியாவை இந்தியப் பெண்களின் மாடலாகச் சொன்னவர்கள் நேற்று ஆந்திராவில் சானியாவின் கொடும்பாவியைக் கொழுத்தி இருக்கிறார்கள். இந்தியக் கலாச்சாரத்தையும் இந்தியர்களின் உணர்வுகளையும் புண்படுத்தி விட்டாராம். அதனால் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சொல்லி அகில பாரத வித்யார்த்தி பரிசத் கோரியுள்ளது.

Shouting “Down, down Sania” the ABVP protesters in Visakhapatnam slapped the posters with chappals and then burnt them. They demanded that she tender an apology for “hurting Indian tradition” by favouring sex before marriage. “She has hurt the sentiments of Indian people,” a protester said.

தான் குஷ்பு சொன்னதை ஆதரிக்கவில்லை இதையும் பத்திரிக்கைகள் திரித்து எழுதிவிட்டன என்று மறுத்துள்ளார்.

சானியா சொன்னது இதுதான் "Look, whether it's before or after marriage, people should have safe sex. And about pre-marriage sex, you can't stop people and hence the best way is to play it safe."

http://sify.com/news/fullstory.php?id=14012855

அடிப்பாவி குஷ்புவும் கிட்டத்தட்ட இதைத்தானே சொன்னார்(ள்)! ஒன்னுமே புரியலேடா சாமி!

உலக அழகி கிளெபோவாவும், Formula One புகழ் நரேன் கார்த்திக்கேயனும் குஷ்பு சொன்னதை ஆதரித்ததாகவும் சொல்றாங்க. இன்னும் ஓரிரு நாட்களில் இவர்களுக்கும் கொடும்பாவியா என்பது தெளிவாகிவிடும்.

எதுக்கும் யாராச்சும் ஆன்லைன்ல கொடும்பாவி எரிக்க வசதி உண்டாண்னு பார்த்துச் சொல்லுங்க!

5 comments:

அதிரைக்காரன் 11/19/2005 9:27 AM  

/Arrested for Weblog Threats/

அனானிமஸ் பின்னூட்டமிடுபவர்களையும் அரெஸ்ட் பண்ணுறாங்களாம்.ஜாக்கிரதை!

Anonymous 11/19/2005 5:25 PM  

தனிமனிதர் உரிமையை/கருத்த்துச் சுகந்திரத்தை மதிக்க எப்ப மக்கள் கற்றுக்கொள்ள போகிறார்களே...!
:-(

Anonymous 11/19/2005 11:46 PM  

/(குஷ்பு=ஸ்டாலின்? அரசியல் கொடுமையடா! பாவம் தமிழ்நாட்டு மக்கள்!!!) /

வழி மொழிகிறேன்!

நல்லடியார் 11/20/2005 1:39 AM  

//தன் மானம் குட்டைப்பாவாடை வழியாக காற்றில் பறந்தாலும் பரவாயில்லைன்னு அமெரிக்காவரை சென்று டென்னிஸ் விளையாடிய சானியாவை இந்தியப் பெண்களின் மாடலாகச் சொன்னவர்கள் நேற்று ஆந்திராவில் சானியாவின் கொடும்பாவியைக் கொழுத்தி இருக்கிறார்கள்.//

ஆண்-பெண் சமத்துவம் பேசுவார்கள். தேவைப்பட்டால் 'சதி' செய்து தீயில் தள்ளுவார்கள்!

ஒரு முஸ்லிம் சொன்னால் மத அடிப்படைவாதம். மற்றவர்கள் சொன்னாலோ தேச பக்தி!

Anonymous 11/20/2005 2:15 AM  

நல்லடியார், வெளையாட்டு புள்ளையா இருக்கீங்களே. 'சதி' செய்வது எங்க பார்தாலும் எல்லார் ஆதரவிலேயும் நடக்குதா? ஆனா உங்க விஷயத்திலே அப்படியா? என்னவா இருந்தாலும் என்ன ஏதுன்னு தெரியாம ஒட்டு மொத்தமா கண்ண மூடிகிட்டு 'ஆமாம்..ஆமாம்' சொல்ற ஆளுங்க தானே உங்க பக்கம் அதிகம்? எல்லாருமே நல்லடியார் மாதிரி அதிக சிந்தனா சக்தி உள்ளவங்களா என்ன சொல்லுங்க!

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP