ஈமெயில் கிடைத்ததா? இனி கவலையில்லை!!!

Monday, November 21, 2005

அதிக கொள்ளளவு கொண்ட இணைய மெயில்களை வழங்குவதில் Gmail,Rediffmail மற்றும் Yahoo! ஆகிய தளங்கள் முன்னிலையில் இருக்கின்றன. இவற்றிலெல்லாம் இல்லாத ஒரு வசதியை www.gawab.com என்ற தளம் வழங்குகிறது தெரியுமா!

பொதுவாக நாம் அனுப்பும் ஈமெயில்களை பெறுநர் கிடைக்கப் பெற்றாரா? என்று அறிந்து கொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் உண்டு. மேலும் சில உதவி கோரும் ஈமெயில்களை பெறுநர் இன்னும் படிக்கவில்லை என்று சொல்லி தட்டிக் கழிப்பர். எல்லாவற்றையும் விட முக்கியமாக வேலைக்கு அப்ளிகேசன் போட்டு விட்டு சம்பந்தப்பட்ட பெறுநர் நம் அப்ளிகேசணை பெற்றுக் கொண்டாரா என்ற கவலையும் இருக்கும்.

இவற்றை எல்லாம் தீர்த்து வைக்க அவுட்லுக் போன்ற இணைய மடல் திரட்டிகள் உதவுகின்றன. ஆனால் பெருநர் "Read Receipt Request!" என்ற அனுப்புனரின் கோரிக்கையை ஏற்றால் மட்டுமே சாத்தியம். www.gawab.com வழங்கும் இணைய மெயில் சேவையில் பெறுநர் உங்கள் மெயிலை திறந்து பார்த்ததும் தானாகவே அனுப்புனருக்கு மேற்கண்ட தகவலை அனுப்பி விடுகிறது.

இது அல்லாமல் உங்களின் ஹாட்மெயில் மடல்களையும் இம்மெயிலுக்கு பார்வர்ட் செய்வதன் மூலம் ஹாட்மெயிலிலிருந்து வரும் அனாவசிய இடநெருக்கடி (Clear Your Inbox!) எச்சரிக்கைகள் தவிர்க்கப்படும். யாஹூ குழுமங்களையும் இணைக்கலாம் என்று சொல்லியுள்ளார்கள். அதிக விபரம் தெரியவில்லை. அனுபவஸ்தர்கள் விசயங்களை பகிர்ந்து கொண்டால் பயணாக இருக்கும்.

(தொடர்ந்து வெட்டியாக இருக்கக் கூடாது என்பதால் காலங்கடந்த ஆனால் பயனுள்ள தகவல் என்று நினைக்கிறேன்!)

4 comments:

Dr.Srishiv 11/21/2005 7:11 AM  

சூப்பர், ரொம்ப உபயோகமா இருக்கு தோழர், நன்றிகள்
அன்புடன்
ஸ்ரீஷிவ்...அஸ்ஸாமிலிருந்து...

அதிரைக்காரன் 11/22/2005 7:42 AM  

கருத்திட்டதற்கு நன்றி ஸ்ரீஷிவ்...!

கவாப்.காமில் வேறு ஏதாவது பயன்பாடு நீங்கள் கண்டால் மறக்காமல் பின்னூட்டமிடுங்க.

Sardhar 11/22/2005 9:02 AM  

களை கட்டுறீங்க அதிரைக்காரரே! போரடிச்சா வெளையாடறத்துக்குண்னே இருக்குற "Web mail theme" Option-ஐ உட்டுட்டீங்களே!

//This option will NOT work properly if your email has multiple recipients. The tracking system will consider the email read after the first recipient reading it.//

இப்படி ஒரு தக்கனூன்டு சொதப்பல் இருந்தாலும் நாம அனுப்பின தனி அஞ்சலை எதிர்பார்ட்டி திறந்துவிட்டார்கள் என்பதை கண்டுகொள்ள(கொல்ல?)லாம் என்பதே பெரிய பயனுள்ள விஷயம்தான்!

என்ன ஒன்னு!கையும் களவுமா ஆதாரம் இருக்கிறதால "மாப்ளே, ஒரு வாரமா ஒரே வேலையப்பா! நீ அனுப்புன அந்த டொனேஷன் மெயில பாக்கவே இல்ல"ன்னு எல்லாம் இனி ஒப்பேத்த முடியாது.

அதிரைக்காரன் 11/24/2005 11:45 PM  

சர்தார்ஜி!

GMail லில் Send mail as:
(Use Gmail to send from your other email addresses) என்ற Option மூலம் அனுப்புனரின் ஈமெயிலை வழக்கமான/பரிச்சயமான ஈமெயிலிலிருந்து வருவது போல் அனுப்பலாம். இந்த வசதி www.gawab.com மெயிலில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்!

(என்ன சர்தார்ஜி, நிறைய டொனேசன் மெயில்கள் கண்டு கொள்ளாததால் ரொம்ப நொந்து போயி இருக்கிறது மாதிரி தெரியுது!!!)

ஹி.ஹி..

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP