தத்துவ மழை!
Thursday, November 17, 2005
மழைபெய்வதை பற்றி கருத்துக் கேட்டால், ஒவ்வொருவரும் எப்படி பேசிக் கொள்வார்கள் என முன்பு எங்கோ படித்த ஞாபகம். அத்தோடு என்பங்குக்கு இன்னும் சில கருத்துக்கள்.
தொழிலாளிகள்
டெய்லர்: "கிழி கிழின்னு கிழிச்சிடுச்சு"
பெயிண்டர்: "கலக்கிடுச்சு"
லாண்டரிக்காரர்: "துவைச்சு எடுத்துடுச்சு"
நெசவாளர்: "பின்னி எடுத்துடுச்சு"
போலீஸ்காரர்: "மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டுச்சு"
அரசியல்வாதிகள்
ஓ.பன்னீர் செல்வம்: "அம்மா மனசுபோல வானமும் தாரளமா இருக்கு!"
கருணாநிதி: "காட்டாற்று வெள்ளத்தில் ஆளுங்கட்சியின் அராஜகமும் விரைவில் அடித்துச் செல்லப்படும்"
ஜார்ஜ் புஷ்:" உலகலாவிய தீவிரமழைக்கு எதிரான போரை அமெரிக்கா தொடர்ந்து நடத்திச்செல்லும்"
நடிகர்/நடிகைகள்:
ரஜினி: "மழை எப்போ வரும், என்கு வருமுன்னு யாருக்கும் தெரியாது. ஆனா கண்டிப்பா வரும்"
டி.ஆர்: "வானம் பொழிகிறது; தமிழர் மானம் அழிகிறது. ரோடெல்லாம் வெள்ளம்; சிம்புவுக்கு நல்ல உள்ளம்"
குஷ்பு:"கல்யாணத்துக்கு முன்பு மழையில் நனைந்து ஆட்டம் போடுவது சகஜம். பாதுக்காப்பாக நனைய வேண்டும். தனக்கு வரப்போகும் மணைவி மழையில் நனையாமல் இருக்க வேண்டும் என்று எந்த படித்த ஆண்மகனும் எதிர்பார்க்க மாட்டான். தமிழ்ப் பெண்கள் அனைவரும் மழையில் நனைந்தவர்கள்தான்!"
சுஹாசினி: " குஷ்பு சொன்னதில் தவறு இல்லை. அரசியல்வாதிகளுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு?"
3 comments:
//Find out how to buy and sell anything, like things related to highway construction project//
யோவ் அனானிமசு,
மழைக் காலத்தில் ஹைவே கன்ஸ்ட்ரக்சன் புராஜக்ட் சரி வராதய்யா! இன்னும் ஆறு மாசம் கழிச்சு வா!
-ஹாஹாஹாஹா..
உங்கள் பதிவை விட.. வந்த Spam பின்னூட்டத்தைக்கூட கலக்கலா மாத்தீட்டீங்களே.. அதானுங்க அருமையா இருக்கு.. :-))))
ப்ளாகரில் கமெண்ட் பகுதியில், வேர்ட் வெரிபிகேஷன் (Word Verification) எனெபில் செய்து விடவும் இதை தவிர்க்க...
-
செந்தில்/Senthil
இன்னாபா,அதிரைக்காரு, மயெ பெஞ்ச்சது பத்தி ஸொன்வனுங்கள்ளெ நம்ம பேட்ட ஆளுங்க ஸொன்னதெ கண்டுக்கல்யே நைனா...
நம்ம கறிக் கடை பாய் ஸொல்றாரு:- மானம் அறுத்துகினு ஊத்ச்சு.
நம்ம பேட்ட இஸுக்கூல் வாத்யாரு :- அடி பின்னி எட்திட்சு
வல்ப்பு நேஸ கொமாரு:- மயென்றது ஸாமி குட்ததில்லெ. மானத்துக்கு வல்ப்பு வந்த்ச்சா. வல்ப்பு இஸ்துகினு வந்தத் தான் மயெ. இன்னா பிர்தா?
ஸோலெ:- நேஸ கொமாரு காட்லெ பேறத் தான் மெய்யாலுமே மயெ. மித்ததெல்லாம் டுபாக்கூரு.
பஞ்ச மீனு:- பர்ஸுத்த ஆவி மேலெ போய்த்தான் மயெ கீயெ வர்து. இதே கண்டி பாகிஸ்தான்லெ மயெ வர்மா?
Post a Comment