பாருங்க சார்! மாயமில்லை மந்திரமில்லை
Thursday, November 10, 2005
கீழுள்ள போட்டோவை உங்கள் கம்ப்யூட்டர் அருகே இருந்து நோக்கினால் சடகோபன் (Mr.Angry) வலது பக்கத்திலும் சாந்தா (Mrs.Calm) இடது பக்கத்திலும் தெரிவார்கள்.
அப்படியே 12 அடி தள்ளிப்போய் அதே போட்டோவை நோக்கினால் சடகோபன் இடது பக்கத்திற்கும் சாந்தா வலது பக்கத்திற்கும் போய் விடுவார்கள்.
Dr Aude Oliva (MIT) மற்றும் Dr Philippe Schyns (University of Glasgow) ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவான பொய்த்தோற்ற பிம்பம் (Optical Illusion).
மறக்காமல் பின்னூட்டமிட்டு தமிழ்மணத்தில் இப்பதிவை வாழவையுங்கள்.சிறந்த பின்னூட்டத்திற்கு வழக்கம் போல _____ உண்டு.
பின்னுட்டமிட யோசிப்பவர்: "_____?"
23 comments:
ஆக, சில விஷயங்களில்
பக்கத்தில் அமர்ந்து பார்க்கும்போது தோண்றும் பிம்பம், சற்று தூரத்தில் நின்று பார்க்கும் போது தகர்ந்து போகலாம்! என்ற தத்துவம் இங்கே உணர்த்தப்படுவதாக நினைக்கிறேன்!!
comment posted by: ஞானபீடம் (NJ)
சின்ன திருத்தம்:-
ஆட்கள் மாறவில்லை கோப முகம்தான் மாறுகிறது.
ஆச்சரியம்தான்
-theevu-
அட! ஆமாம்! ஆச்சரியமா இருக்கே!!!!
ஆச்சர்யம். பின்றீங்க நண்பரே..
கலக்கல்....
இந்தத் தம்பி இப்படி அழகா எழுதிருக்கே. முதல் பக்கத்திற்கு எப்படிச் செல்வது?
MIKAVUM NALLAA IRUKKU...VAZTTHUKKAL...
பன்னிரெண்டு அடி பின்னுக்குச் சென்று பார்த்து பின்னூட்டமிட்டவர்களுக்கும் ஊக்கம் கொடுத்தவர்களுக்கும் நன்றி.
"_____?" என்ன அது?
//"_____?" என்ன அது?//
ஐந்து அண்டர்ஸ்கோரும் ஒரு வினாக் குறியும்!!!
நலம் நலமறிய ஆவல்!
_____?
ஐந்து அண்டர்ஸ்கோரும் ஒரு வினாக் குறியும்!
சூப்பருங்க!
இந்த தலைப்புல ஒரு சினிமாவோ, blog-post-ஓ வந்தா ஆச்சர்யப்படுறதுக்கில்ல!
இந்த தலைப்ப கொஞ்சம் மசாலா கலந்து சொல்லனும்னா....
இப்டி சொல்லலாமா!
அஞ்சு அண்டர்வேரும் ஒரு ஆணிவேரும்!
:-)))
//சிறந்த பின்னூட்டத்திற்கு வழக்கம் போல _____ உண்டு//
இரண்டு பின்னூட்டங்கள் விட்ட அதிஷ்டசாலி வாசகர் "Agent 8860336 ஞானபீடம்"
இப்பக்கத்திலுள்ள _____ ஐ- காப்பி&பேஷ்ட் செய்து நோட்பேடில் சேமித்து வைத்துக் கொள்ளவும். 100 அண்டர்ஸ்கோர் வந்ததும் மெகாபரிசு ஒரு அண்டர்வேர்!!!
("சொன்னபடி அண்டர்ஸ்கோர்களைக் கொடுத்து, சொன்ன வாக்கைக் காப்பாத்துறதுல அரசியல்வாதிங்கள மிஞ்சிட்டாருப்பா நம்ம அதிரைக்காரன்" -மனசாட்சி)
SUPER THALA SUPER
"சிறந்த" பின்னூட்டத்திற்கு பரிசு என்று கூறி விட்டு "இரண்டு" பின்னூட்டத்திற்கு பரிசு என்கிறீர்களே! இதுவா கொடுத்த வாக்கை காப்பாற்றும் லட்சணம்!!
//அதிஷ்டசாலி வாசகர் "Agent 8860336 ஞானபீடம்" ....
100 அண்டர்ஸ்கோர் வந்ததும் மெகாபரிசு ஒரு அண்டர்வேர்!!! // - அதிரைக்காரன் சொன்னது.
//இரண்டு" பின்னூட்டத்திற்கு பரிசு என்கிறீர்களே! // - Erai Nesan பங்கு கேக்குறாரு!
எனக்கு கிடைத்துள்ள 5 அண்டர்ஸ்கோர்களில் பாதியை Erai Nesan-க்கு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்வதன் மூலம் மூன்றாவது பின்னூட்டத்தையும் இட்டு, அந்த பாதியையும் நானே சொந்தமாக்கிக் கொள்கிறேன்!
:-)
3rd comment posted by: ஞானபீடம் (NJ)
I looked close. The left fellow looked like a jehadi and the right one like a terrorist.
I went 10 feet back and then looked. Thhe left one looked like muslim mulla and the right one a jehadi.
Great job athirai!
12 அடி பின்னே போய் பார்ப்பதெல்லாம் நமக்கு சரி வராது, ஏன்னா நம்ம கணிணி இருக்குமிடம் அப்படி, அதனால் கண்ணை சற்று சுருக்கி பார்த்தால் 12 அடி பின் சென்று பார்த்தால் என்ன தெரியுமோ அது தெரியும் எனக்கு தெரிந்ததும் கூட, 12 அடி பின்னால் செல்ல முடியாதவர்கள் கண்ணை சற்று சுருக்கி பார்க்கவும்.
நன்றி
//ஒரு அனாமதேயம் அரிப்பைத் தீர்த்துவிட்டுப் போயிருக்கிறது.. என்ன செய்வது இதுகளுக்கு இதை விட்டால் எதுவும் தெரியாதே.. //
பாருங்க "ஆரோக்கியம் கெட்டவன்னு" பெயரை வைத்துக் கொண்டு இவ்வளவு ஆரோக்கியமா கவலைப்படுறீங்க! அதான் தன்னை ஒரு அனானிமஸுன்னு (பொறம்போக்கு?) சொல்லிட்டாரே. விட்டுடலாம்!!!
//"சிறந்த" பின்னூட்டத்திற்கு பரிசு என்று கூறி விட்டு "இரண்டு" பின்னூட்டத்திற்கு பரிசு என்கிறீர்களே! இதுவா கொடுத்த வாக்கை காப்பாற்றும் லட்சணம்!! //
கொடுத்ததை திருப்பி வாங்கும் பழக்கம் நமக்கு இல்லை இறைநேசன். பரவாயில்லை இந்த தடவைமட்டும் போனால் போகட்டும். நீங்களும் "அண்டர்ஸ்கோர்" பெர வாய்ப்புள்ளது.
//மூன்றாவது பின்னூட்டத்தையும் இட்டு, அந்த பாதியையும் நானே சொந்தமாக்கிக் கொள்கிறேன்! //
அண்டர்வேரை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது ஞானபீடம்!! (எனக்கும்தான்)
//12 அடி பின்னே போய் பார்ப்பதெல்லாம் நமக்கு சரி வராது, ஏன்னா நம்ம கணிணி இருக்குமிடம் அப்படி//
நமக்கும் நிலைமை அதேதான்!
மேலும் கணினித்திரையில் மட்டும் இந்த வித்தியாசம் தெரிகிறதா? அல்லது பிரிண்ட் எடுத்து பார்த்தாலுமா? ய்ராச்சும் ட்ரை பண்ணிச் சொன்னால் நல்லது.
//12 அடி பின்னே போய் பார்ப்பதெல்லாம் நமக்கு சரி வராது, ஏன்னா நம்ம கணிணி இருக்குமிடம் அப்படி//
நமக்கும் அதேநிலைமை தான்.
குழலியின் ஆலோசனையை கேட்டு கண்ணை சுருக்கிப் பார்த்ததில் கண் வலி தான் மிஞ்சியது.
ஆனால் பிரின்டட் பேப்பரில் மிக நன்றாக தெரிகிறது(சரியான மாங்கா மடயன் தான்)
கவனம் இது ஞானபீடத்திற்காக. தற்போது பின்னூட்டத்தில் ஒரு படி மேலே நான்.
//அதான் தன்னை ஒரு அனானிமஸுன்னு (பொறம்போக்கு?) சொல்லிட்டாரே. விட்டுடலாம்!!!//
அதிரைக்காரரே,
பதிவிலுள்ள படங்கள் கண்களை ஏமாற்றுகின்றன. தத்ரூபம்!
// I looked close. The left fellow looked like a jehadi and the right one like a terrorist.
I went 10 feet back and then looked. Thhe left one looked like muslim mulla and the right one a jehadi.//
பொதுவான பதிவிலும் கூட மதவெறியாக பின்னூட்டமிட முடியும் என்பதற்கு அனானிமஸ் (பொறம்போக்கு = too much :-) பின்னூட்டமே சான்று என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.
கண்ணால் காண்பதெல்லாம் நிஜமல்ல என்பதற்காக அவ்வாறு சொல்லி இருக்கலாம் அல்லது காவிக்கண்ணாடி அணிந்து பார்த்திருப்பார் எனக் கொள்வோமாக!
//பொதுவான பதிவிலும் கூட மதவெறியாக பின்னூட்டமிட முடியும் என்பதற்கு அனானிமஸ் (பொறம்போக்கு = too much :-) பின்னூட்டமே சான்று என்பது ஒருபக்கம் இருக்கட்டும். //
நன்றி நல்லடியார்.
இத்தகைய நேர்மையாளர்கள் எல்லா இடங்களிலும் உள்ளனர். ஏதோ அவர்களால் முடிந்தது அது மட்டும்தான் போலும்.
அனானிமஸ் பின்னூட்டங்களை அனுமதிக்காவிட்டாலும் ப்ளாக்கரில் பதிவு செய்து கொண்டு போலியாக எழுதி தங்கள் அரிப்பை? தீர்த்துக் கொள்வார்கள். இவர்களை கண்டு கொள்ளாததே மிகப்பெரும் தண்டனையாகக் கருதுகிறேன்.
அனானிமஸ் பின்னூட்டதாரர்களை சக வலைப்பதிவர் ஒருவர் மிகவும் நொந்து கொண்டு எழுதி இருந்தார்.
சிலருக்கு அடுத்தவரின் இன்பத்தில் இன்பம் காண்பதில் சுகம். சிலருக்கு துன்பத்தில் இன்பம் காண்பதில் சுகம். நான் முதல்தரமாக இருக்க விரும்புகிறேன். நீங்களும்தான்!
நன்றாக இருக்கிறது..12 அடிகள் பின்னால் செல்ல முடியாதவர்கள் sideல் இருந்து பாருங்கள். என் பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த கணவர் அங்கிருந்து பார்த்து விட்டு முதலில் சாந்தா தான் தெரிந்தார் என்றார்.
/என் பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த கணவர் அங்கிருந்து பார்த்து விட்டு முதலில் சாந்தா தான் தெரிந்தார் என்றார்/
ரம்யா,
எதுக்கும் உங்க கணவர் மேல் ஒரு கண் வைச்சிருங்க!
;-)))
//எதுக்கும் உங்க கணவர் மேல் ஒரு கண் வைச்சிருங்க!
;-)))//
ரெண்டு கண்களுமே அவர் மேலே தாங்க!! நானா சொல்லாம பார்த்தாருன்னா உடனே சடகோபி ஆயிடுவேனே!!! :-))
Post a Comment