மாண்புமிகு தீவிரவாதிகள்

Thursday, December 04, 2008



மும்பை தாக்குதல்களைப் புலணாய்வு செய்யும் அமைப்பைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை தாவூத் இப்றாஹிமுக்கும், மெளலான மசூத் அஸாருக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பும் வழங்கினால் என்ன சொல்வீர்கள்?

L.K.அத்வானி, முரளி மனோஹர் ஜோஷி, உமா பாரதி, மாண்புமிகு விநாய் கட்டியார் மற்றும் பலரும் மும்பை தாக்குதலை விடக்கொடிய தாக்குதலை நடத்தியதோடு ஆயிரக்கணக்கான மனித உயிர்களும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான உடமைகளும் இழக்கக் காரணமான பாபர் மசூதி இடிப்பு வழக்கு கடந்த 16 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் இன்றி உறங்கி வருகிறது.


இத்தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்குத் துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர், கேபினட் அமைச்சர் போன்ற உயரிய பதவிகளும் சலுகைகளும் வழங்கி கவுரவித்தோடு வழக்கைப் புலணாய்வு செய்யும் துறையை (CBI) கட்டுப்படுத்தும் அமைச்சகப் பொறுப்பு வழங்கி கவுரவிக்கப்பட்ட அநியாயம் உலகில் வேறெந்த நாட்டிலும் நடக்கவில்லை!



நூறாண்டுகால மும்பை தாஜ் நட்சத்திர விடுதியை பாரம்பர்யச் சின்னம் என்றும், அதன்மீது தாக்குதல் நடத்தியவர்கள் இந்தியப் பாரம்பர்யத்தின்மீதே தாக்குதல் நடத்தியதற்குச் சமமென்று குடித்துவிட்டு,குடும்பத்தோடு ஆட்டம் போட்டு மகிழ்ந்தக் கோடீஸ்வரக் கணவான்கள் தாஜ் விடுதியின் நினைவு கூர்கிறார்கள்! நானூறாண்டுப் பழமையான பாபர் மசூதியும் அதைவிடப் பெருமை மிக்கது மட்டுமின்றி இறைவனைச் சிரம் வணங்கப் பயன்பட்ட பாரம்பர்யச் சின்னம் என்பதையும் ஏன் மறந்தீர்கள்?

மும்பை தாக்குதல் நடத்தியவர்களில் இருபதுபேர் பட்டியலைக் கொடுத்து, ஒப்படைக்கச் சொல்லும் நமது அரசு, நம் கண்ணதிரே ரதயாத்திரை வந்து கொண்டிருக்கும் மாண்புமிகு தீவிரவாதிகள்மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கோர் நீதி, அயோத்தியில் தாக்குதல் நடத்தியவர்களுகோர் நீதியா?

பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளும் சரி, இந்தியாவில் ரத யாத்திரை வந்து கொண்டிருக்கும் வருங்கால தீவிரவாதப் பிரதமரும் சரி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்!

இந்தியாவில் ராமருக்குக் கோவில் கட்டமுடியாவிட்டால் பாகிஸ்தானிலா சென்றுகட்ட முடியும்? என்று ஜெயலலிதாகூட வக்காலத்து வாங்கினார். போயஸ் தோட்டத்தை அல்லது சிறுதாவூர் அரண்மனையை இடித்துவிட்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஒரு நினைவுச் சின்னம் கட்டலாமே! எம்ஜியாருக்குத் தமிழகத்தில் நினைவுச் சின்னம் கட்டாமல் பாகிஸ்தானிலா கட்ட முடியும்?

பெண்களை 'இடித்தால்' ஈவ் டீசிங்கில் கைது செய்து ஏழு வருடம் உள்ளே தள்ள முடியும் போது மசூதியை 'இடித்த'தற்காகவும் உள்ளே தள்ளலாமே! மாண்புமிகு தீவிரவாதிகளுக்கு உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் எல்லாமே ஒன்றுதான் என்கிறீர்களா! அதுவும் சரிதான்!

Read more...

ஒபாமாவுடன் நேர்காணல்!!!

Sunday, November 16, 2008

தஞ்சையின் கடைமடைப் பகுதியிலிருக்கும் United Streets of Adiramapattinam திற்கு அரசுமுறைப் பயணமாக அல்லாமல் தனிப்பட்டப் பயணமாக வந்திருந்த United States of America அதிபர் பாராக் ஒபாமாவுடன் நடந்த நேர்காணல்.

அதிரைக்காரன் : உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி ஒபாமா! உங்கள் ரகசிய வருகையை எதிர்பார்க்கவே இல்லை. யார் உங்களுக்கு இந்த ஐடியா கொடுத்தார்?

ஒபாமா: எல்லாம் உங்கள் வைகோ ஸ்டைல்தான். மன்னார் வளைகுடாவில் வரும்போது தமிழக மீனவர் என்று நினைத்துக் கொண்டு சிங்கள ராணுவம் சுடப்போனார்கள்! மீன்பிடிவலை எதுவும் இல்லாததால் விட்டுட்டார்கள்! சென்ற முறை ஜார்ஜ் புஷ்ஷுடன் நடந்த உங்களின் நேர்காணலைப் படித்து விட்டு எப்படியும் அதிரைக்கு ஒருமுறையேனும் வர நினைத்திருந்தேன். என் கனவு பலித்து விட்டது. வாருங்கள் வழக்கம்போல் அதே ராஜாமடம் பாலத்தில் காலாற நடந்து கொண்டே பேசலாமா?

அதிரைக்காரன்: போகலாம். அங்கிருக்கும் செக்போஸ்டில் யாரும் உங்களை அடையாளம் கண்டுகொண்டால் விசயம் மீடியாக்காரர்களுக்குத் தெரிந்து விடும். அதனால் பட்டுக்கோட்டையிலிருந்து மல்லிப்பட்டனம் வந்து, அங்கிருந்து ராஜாமடம் பாலத்திற்குச் செல்லலாம்.

ஒபாமா: அப்படியே செய்வோம். (என்று சொல்லி விட்டு நான் கொடுத்த கருப்பு வேட்டியைக் கட்டுகிறார். இடுப்பிலிருந்து வேட்டி நழுவாதிருக்க சிங்கப்பூர் பச்சைபெல்டை இறுக்கிக் கட்டுகிறார். கருப்பு வேட்டி கருப்புச் சட்டையில் ஒபாமா எடுப்பாக ஐயப்ப பக்தர் மாதிரி இருந்தார்.)

அதிரைக்காரன்: அதிரைக்காரர்களுக்கு பெரும்பாலும் வெள்ளை வேட்டிதான் பிடிக்கும். ஒரு CHANGE க்காக இம்முறை கருப்பு வேட்டி!

ஒபாமா: YES. WE CAN CHANGE! கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு!அக்கும் ஜுக்கும்! (ஆடிக்காட்டுகிறார். நல்லவேளை இடுப்பில் பெல்டை இறுக்கமாகக் கட்டியிருந்தார்!)

அதிரைக்காரன்: ஒருவழியாய் வெள்ளை மாளிகைக்குள் கருப்பு ஆடு புகுந்து விட்டது!

ஒபாமா: மன்னிக்கவும். நான் கருப்பு ஆள். கருப்பு ஆடல்ல. முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷை வேண்டுமானால் கருப்பு ஆடு எனலாம்.

அதிரைக்காரன்: ஜார்ஜ் புஷ்ஷை கருப்பு ஆடு என்று சொல்ல முடியாது. கருநாகம் என்று சொல்லலாம். சரி..சரி விசயத்துக்குப் போகலாம். வெள்ளை மாளிகையை எப்போது "கருப்பு மாளிகை"எனப்பெயர் மாற்றப் போகிறீர்கள்?

ஒபாமா: அட! நல்ல ஐடியாவாக இருக்கிறதே. நோட் பண்ணிக்கிறேன். ஆமா திடீரென இப்படிப் பெயர் மாற்றினால் வெள்ளையர்களுக்குக் கோபம் வந்து விடுமே. அதை எப்படிச் சமாளிப்பது?

அதிரைக்காரன்: எங்கள் நாடாக இருந்தால் வாஸ்து கீஸ்து என்று சொல்லி சமாளிக்கலாம். இரானிலிருந்து இரவில் தாக்குதல் நடத்தப்போவதாக FBI இடமிருந்து தகவல் வந்துள்ளது, கருப்பாக இருந்தால் இரவில் அடையாளம் தெரியாது என்று சொல்லிப் பாருங்கள்!

ஒபாமா: கொஞ்சம் கஷ்டம்தான். எதற்கும் CNN மற்றும் FOX சேனலில் இது குறித்து செய்தியை முன்கூட்டியே பரப்புவோம். தினமலருக்கும் மறக்காமச் சொல்லிடனும்.

அதிரைக்காரன்: கவலையே படாதீங்க. இந்தச் செய்தி அமெரிக்காவில் வெளியாகும் முன்பே தினமலரில் வந்துடும். அப்படித்தால் எங்கள் நாட்டில் நடந்த குண்டு வெடிப்புச் செய்திகளை முந்திக் கொண்டு தந்ததில் தினமலருக்கு ஈடில்லை. பின்லேடன் பேய்க் கதைகளைச் சொல்லி அமெரிக்க மக்களை நீங்களும் மிரட்டப்போகிறீர்களா? அல்லது கைவிட்டு விடப்போகிறீர்களா ஒபாமா?

ஒபாமா: பின்லேடன் டெமாக்ரடிக்னருக்கு எப்பவுமே நண்பன்தான் என்பதை மறக்கவில்லை. ரஷ்யாவுக்கு ஆப்படிக்க எங்களுக்கு உதவியவர் அல்லவா!

அதிரைக்காரன்: உங்கள் நாட்டு இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தவர் என்று சொல்லப்படுகிறதே!

ஒபாமா: 9/11 சம்பவமே நடக்கவில்லை.எல்லாம் COMPUTER GRAPHICS என்று மக்களை நம்ப வைப்பதில் அதிகம் சிரமமிருக்காது என்று நம்புகிறேன். ஹாலிவுட்ல நாலு சினிமா எடுத்துவிட்டா மக்கள் பழசை மறந்துடுவாங்க.

அதிரைக்காரன்: அமெரிக்கர்களிடம் நாங்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

ஒபாமா: அமெரிக்கர்களிடம் இந்தியர்கள் போதுமான அளவு கற்றுள்ளார்கள். அதனால்தான் அவர்களைத் திருப்பி அனுப்பும் "இந்தியனே வெளியேறு" திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த உள்ளோம்.

அதிரைக்காரன்: செய்யப்போவது யார்? எங்கள் நாட்டு பால் தாக்கரேயை வேண்டுமானால் கூட்டிச் செல்லுங்களேன். பிராந்திய வெறி ஸ்பெசலிஷ்ட் அவர்.

ஒபாமா: தேவையில்லை.அமெரிக்கர்களிடம் இதைச் சொல்லித்தான் CHANGE என்று பீலா விட்டுள்ளோம். அதை வைத்து 1-2 வருஷத்தை ஓட்டலாம் என்றும் திட்டம் உள்ளது. பார்ப்போம்.

அதிரைக்காரன்: சொந்த நாட்டு மக்களையே எரிகணைவீசிக் கொல்லும் ராஜ பக்சே குறித்து உங்கள் கருத்து என்ன?

ஒபாமா: மிகவும் கண்டிக்கத் தக்கது. சொந்த நாட்டு மக்கள்மீது குண்டுவீசக் கூடாது.

அதிரைக்காரன்: ஆனால் அடுத்த நாட்டு மக்கள்மீது வீசுவீர்கள்! இல்லையா?

ஒபாமா: COOL...COOL..புஷ்ஷின் தவறான வழிகாட்டுதலால் அவ்வாறு நடந்து விட்டது. ஏன் 9/11 கோபுரத் தகர்ப்பே எங்கள் அதிபர் ஏற்பாட்டின் பேரில்தான் நடந்தது என்றும் சொன்னோமே. இராக்கிற்கு எங்கள் ராணுவ வீரர்களை அனுப்பி சொந்த நாட்டு வீரர்களையே பழி கொடுக்கவில்லையா? புஷ்ஷின் தவறுகளைச் CHANGE பண்ணவே மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

அதிரைக்காரன்: புஷ் மீது விசாரனைக் கமிஷன் ஏதும் அமைப்பீர்களா?

ஒபாமா: அத்தகைய திட்டம் எதுவும் இப்போதைக்கில்லை. நெருக்கடியான சூழலில் ரிபப்ளிகன்கள் ஒத்துழைக்கா விட்டால் அதைச் செய்யவும் தயங்க மாட்டோம்.

அதிரைக்காரன்: எங்கள் நாட்டில் கார்பைடு தொழிற்சாலையில் அணுக்கசிவு மூலம் ஆயிரக்கணக்கான மக்களைக்கொன்ற ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்கும் திட்டம் எதுவும் இருக்கிறதா?

ஒபாமா: பழசைக் கிளறும் பழமைவாதியாக இருக்காதீர்கள்.

அதிரைக்காரன்: பாலஸ்தீனம், இராக் பிரச்சினைகளைத் தீர்க்க திட்டம் ஏதும் உள்ளதா?
ஒபாமா: பாலஸ்தீனப் பிரச்சினையைவிட இராக் பிரச்சினையே விரைந்து தீர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் அங்கிருந்து நிறைய பெட்ரோல் எங்கள் நாட்டிற்கு வரவேண்டியுள்ளது. இராக்கில் டெமக்கரசி இருந்தால்தான் சுதந்திரமாக பெட்ரோல் எடுத்து புஷ்ஷினால் ஏற்பட்ட நஷ்டங்களை ஈடுகட்டலாம்.

அதிரைக்காரன்: ஆப்கான் பிரச்சினை குறித்து...

ஒபாமா: தற்போதைக்கு பாகிஸ்தானுடன் அவர்களை மோதவிட்டுள்ளோம். இருவரும் பேசி விரைவில் சமாதானத்திற்கு வந்துவிடுவார்கள்.அப்படி வராத பட்சத்தில் பெருந்தலைவர் பில் கிளிண்டனை சமாதானத் தூதுவராக அனுப்பவும் திட்டம் உள்ளது. நல்லதையே நினைப்போம்.

அதிரைக்காரன்: அமெரிக்கப் பொருளாதார மந்தநிலையை எப்படி தீர்ப்பீர்கள்?

ஒபாமா: உலகப் பொருளாதார மந்தநிலையை குறுகிய பார்வையுடன் "அமெரிக்கப் பொருளாதார மந்தநிலை" என்று சுருக்காதீர்கள். அமெரிக்கர்கள் சந்தோசமாக இருக்கும்போது உலகமே சந்தோசப்பட்டது. அமெரிக்கர்கள் கவலைப்படும்போது உலகமும் கவலைப்படுவதுதானே நியாயம்?

அதிரைக்காரன்: நன்றி. ஒபாமா. வெள்ளை வேட்டி கட்டிய புஷ்ஷும் சரி. கருப்பு வேட்டி கட்டிய ஒபாமாவும் சரி. எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான். அடுத்த நான்கு வருடத்திற்குள் புஷ் செய்த பெருந்தவறுகளை நீங்கள் சரி செய்யாவிட்டால் அமெரிக்கர்கள் விரைவில் சில்லரை(CHANGE)க்கு கையேந்த நேரிடும். அப்புறம், உலகமே CHANGE, WE BELIVE IN என்று உங்களுக்கு எதிராகச் சொல்லக்கூடும். உஷாராக இருங்கள்.

Read more...

ஒபாமாவின் ஓரவஞ்சனை

Wednesday, November 12, 2008

அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உலக நாட்டுத் தலைவர்களுடன் போனில் பேசிய ஒபாமா, இந்தியாவைத் தவிர்த்திருந்தார். இஸ்ரேல், பாகிஸ்தானை எல்லாம் மதித்துப் பேசிவிட்டு, இந்தியா புறக்கணிக்கப் பட்டதற்கு கத்தார், ஓமன் சுற்றுப்பயணத்தில் இருந்ததே காரணம் என்று பிரதமர் மன்மோகன் சிங் சப்பைக் கட்டியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் செல்போன் இல்லையா? அல்லது ரோமிங் வசதி இல்லையா? அல்லது ஒபாமா லேண்ட் லைனில் மட்டும்தான் பேசுவாரா? மன்மோகன் சிங்குதான் ஊரிலில்லை. அட நம்ம வைகோ ஊர்ல தானய்யா இருந்தார்! அட நான்கூட.................சரிசரி...அடுத்து வரும் வெட்டிச் செய்திகளைப் படித்துவிட்டு, முந்திய பதிவுக்கு பின்னூட்டமிட மறந்தவர்கள் இந்தப் பதிவில் நாலுவரி வேணாம் ஒருவரி பின்னூட்டமாச்சும் போடுங்க.

பின்குறிப்பு: பின்னூட்டமிட விரும்பாவிட்டால் அதையும் சொல்லிடுங்க. அனாணி பெயரில் நானே 4-5 போட்டுக் கொள்கிறேன் (நன்றி: டோண்டு)

=====================================

சந்திராயன் -1 வெற்றியைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யும் விண்கலம் அனுப்பப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த விண்கலத்திற்கு ஆதித்யா என பெயரிடப்பட்டுள்ளது

ஐயா விஞ்ஞானிகளே! மதசார்பற்ற நாட்டில் சந்திராயன், ஆதித்யான்னு சமஸ்க்ருதப் பெயர்கள்தான் கிடைத்ததா? அதைவிட முன்னணி நட்சத்திரம் சூர்யா பெயரை விட்டுட்டு 1-2 படங்களில் நடித்த ஆதித்யா பெயரை வைத்தால் சூர்யா ரசிகர்கள் கோபப்பட மாட்டார்களா?

++++++++++++++++++

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஓபாமாவின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள இந்தியப் பெண்மணி சோனால் சிங்குக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்புகள் இருப்பதாக, 3 இந்திய அமெரிக்க அமைப்புகள் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளன

சோனால் சிங் சாமியாரினியாக இருந்திருக்கிறாரா? என்றும் விசாரித்தால் நல்லது.

+++++++++++++++++++

பாஜக தலைவர் இல.கணேசன் மற்றும் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம. கோபாலன் ஆகியோருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.

வரவர கொலை மிரட்டலுக்கு மரியாதையே இல்லாமப் போச்சு!

++++++++++++++++++++

மாலத்தீவு கடற்பகுதியில் கடல் நீரின் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால்,அருகாமை நாடு ஒன்றில் நிலம் வாங்கி அங்கு மக்களை இடம் பெயரச் செய்ய மாலத்தீவு அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் நிலம் வாங்கும் திட்டம் அந்த நாட்டு அரசிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவே கடனில் மூழ்கும் அபாயம் இருக்கிறது! அடப்போங்க சார் நீங்க!

+++++++++++++++++++++

பெய்ஜிங்: அருணாசலப் பிரதேசம் இந்தியாவுக்கு சொந்தமானது அல்ல, அதன் மீது இந்தியா சொந்தம் கொண்டாடுவது முறையல்ல என சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

லாட்டரிச்சீட்டு விற்க மட்டும் இந்தியா தேவையா? எல்லாவற்றிலும் Made in China என்று போடுவதுபோல் அருணாச்சல பிரதேசிலும் போடலாம்னு நெனைக்காதீங்கப்பூ!

++++++++++++++++++++++

திருவாரூர் மாவட்டம் சீரங்குளம் என்ற இடத்தில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊர் திருக்குவளை திருவாரூரில்தான் இருக்கிறது. அனேகமாக கலைஞர்தான் தூண்டி விட்டிருப்பாரென்று ஜெயா ப்ளஸ் செய்திகளில் 2-3நாட்களுக்கு FLASH NEWS ஆக ஓடவிடலாமே!

++++++++++++++++++++++++

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஒபாமா, அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி இந்தியா என்று என்று கூறினார்.

மன்மோகன் ஜி! உஷாரா இருங்க! அமெரிக்கப் பொருளாதாரம் சரிவடைந்து வரும் இச்சூழலில் ஒபாமா இப்படிச் சொல்லி நஷ்டத்தையும் நம் தலையில் கட்டிவிட்டுடப்போகிறார்!
+++++++++++++++++++++++++

Read more...

க்காஆஆஆஆ த்த்தூ!

Sunday, November 09, 2008

உலகம் முழுவதிலுமுள்ள இந்துக்களின் பாதுகாவலர்களாகச் சொல்லி உண்டியல் குலுக்கி, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பாமர மக்களுக்கு மதவெறியூட்டி கலவரங்களை நடத்தி அரசியல் பண்ணும் சங்பரிவாரக்கும்பல் இலங்கைத் தமிழர்களை இந்துக்களாகக் கருதவில்லை; அவர்களை இன்னும் இராவணின் சந்ததிகளாகவே பார்க்கிறார்கள்!

பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் இந்துக்கள் பாதிக்கப்பட்டால் பதிலாக இந்தியாவில் முஸ்லிம்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தத் தயங்குவதில்லை. மலேசியாவின் சட்டத்திற்குப் புறம்பாக இந்துக்களைத் திரட்டிப் போராட்டம் செய்துவரும் ஹிண்ட்ராப் எனும் சங்பரிவாரக் கிளைக்கும்பல் மலேசிய போலீஸாரால் கைது செய்யப்பட்டபோது "ஐயையோ இந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை" என்று மூக்கு சிந்திய தமிழக இந்துமுன்னனிக் கும்பல், ஈழத்தமிழர்களிலும் இந்துக்களுள்ளார்கள் என்பதை அறியவில்லையா?

தமிழக இந்துக்களைப் போன்றே முருகனுக்கு அலகு குத்தி, காவடி எடுத்து, விரதமிருந்து வருகிறார்கள். இலங்கையில் மட்டுமின்றி புலம்பெயர்ந்துள்ள நாடுகளிலும் இந்துசமய திருவிழாக்களைத் தவறாது கொண்டாடி அக்மார்க் இந்துக்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.காஷ்மீர் பண்டிட்களுக்காக ர(த்)த யாத்திரைச் செல்லும் அத்வானி இந்தியப் பூர்வகுடிகளான இலங்கைத் தமிழர்களுக்காகவும் ஓர் யாத்திரை செய்திருக்கலாமே?

தமிழ்திரையுலகினர் நடத்திய ஈழத் தமிழர் ஆதரவுப் பேரணியில் இயக்குனர் அமீர்,நடிகர் மன்சூர் அலிகான்,இயக்குனர் சைமன் என்கிற சீமான் ஆகியோர் சிறுபான்மையினர் என்ற காரணத்தால் பெயர்குறிப்பிட்டுக்கைது செய்யக் கோரினார் இல.கணேசன்! உணர்வுப்பூர்வப் போராட்டங்களில் உணர்ச்சி வயப்பட்டு தேசவிரோதமாகப் பேசியது தவறுதான். சட்டப்படி குடியுரிமை பெற்று ,வரிசெலுத்தி,வாக்களித்து தேசப்பற்றுடன் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களைப் பார்த்து பாகிஸ்தானுக்குப் போகச் சொல்லிவரும் சங்பரிவாரங்களுக்கு அதைச் சொல்ல அருகதையில்லை!

சங்பரிவாரக் கும்பலைப் பொருத்தவரை ஆதாயமில்லாமல் சேற்றில்குதிக்க மாட்டார்கள். இந்தியாவில் சிறுபான்மையினருக்குப் பாதிப்பு ஏற்படுமென்று உறுதியாக நம்பினால் மட்டுமே இந்துக்களுக்காக மூக்குச் சிந்துவார்கள். மலேசிய இந்துக்களுக்காக மூக்கு சிந்தியதுகூட உண்டியலில் வந்துவிழும் காணிக்கைகள் தடைபட்டுவிடக்கூடாது என்ற நல்லெண்ணமே தவிர வேறில்லை.

சேதுக்கால்வாய் திட்டம் நிறைவேறுவதற்குத் தடையாக இருக்கும் மணல் திட்டுக்கள் தகர்க்கப்பட்டபோது, இந்துக்களின் உணர்வுகள் புண்படுமென்று நிர்வாண சாதுக்களைத் திரட்டி தாண்டவமாடிய சங்பரிவாரங்கள், இலங்கை ராணுவத்தின் குண்டுக்களால் அப்பாவித் ஈழத்தமிழ்மக்களின் குடியிருப்புகள் அநியாயமாகத் தகர்க்கப்படும்போது உணர்வுகள் புண்படவில்லையா? அமர்நாத்தில் கழிப்பிடத்திற்காகப் போராடிய பாஜக கும்பலுக்கு ஈழத்தமிழர் வசிப்பிடங்கள் தகர்க்கப்படுவதை யார்தான் எடுத்துச் சொல்வதோ?

இந்துக்களுக்குப் பாதுகாப்பு என்று சொல்லிக் கொண்டு இனி எவனாச்சும் தமிழர்களிடம் உண்டியல் குலுக்கிக் கொண்டு வந்தால் மறக்காமல் செய்ய வேண்டியது:


"க்காஆஆஆஆ த்தூ"

குறிப்பு: பின்னூட்டங்களைத் துப்பலாகவும் பதிக்கலாம் ;-)

Read more...

அமெரிக்க டாலருக்கு விலைபோன குரங்குகள்!

Monday, October 20, 2008

தற்போதைய அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சி குறித்து பலரும் பல்வேறுவிதமாக விளக்குகிறார்கள். கழுத்தில் மட்டுமே டாலரைத் தொங்கவிட்டிருக்கும் பாமரர்கள் புரிந்து கொள்வதற்காக எளிய விளக்கம்:

பல வருடங்களுக்கு முன்பு,குரங்குகளுக்கு விலையாக US$ கொடுக்கப்படும் என்று கிராமங்களில் விளம்பரப்படுத்தப் பட்டது. காடுகளில் சும்மா சுற்றித் திரியும் குரங்குகளுக்கு இவ்வளவு விலையா என்று வாய்பிளந்த கிராமவாசிகள்,குரங்களைப் பிடித்து அமெரிக்க டாலருக்கு விற்க முன்வந்தனர்.

அமெரிக்க டாலர்மீது கிராமவாசிகளுக்கு இவ்வளவு மோகமா என்று வியந்து 1000 குரங்குகளுக்கு 10 US$ என்று விலை நிர்ணயித்தான். சும்மாக் கிடைக்கும் குரங்குகளுக்கு எவ்வளவு US டாலர் கிடைத்தாலும் லாபம்தானே என்று கிராமவாசிகளும் ஆயிரக்கணக்கில் உள்ளூர் குரங்குகளை அமெரிக்க டாலருக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்தனர்.

ஊரெல்லாம் குரங்குக்கு டாலர் பற்றிய பேச்சுதான்! இதைக் கேள்விப்பட்ட பதினெட்டுப் பட்டி கிராமவாசிகளும் குரங்குகளைப் அமெரிக்க டாலருக்கு விற்க முன்வந்தனர். உள்ளூர் குரங்குகளை எல்லாம் அந்தந்தக் கிராமவாசிகள் பிடித்து ஏற்கனவே விற்றுவிட்டதால் குரங்குகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. கிராமத்தினரும் குரங்குகள் கிடைக்காததால் குரங்கு வர்த்தகத்தை நிறுத்தி வைத்தனர்.

கனிசமான குரங்குகள் இருப்பில் இருந்தாலும் கிராமங்களில் குரங்குகளுக்கான தேவை மிதமிஞ்சி அதிகரித்ததால் ஆயிரம் குரங்குகளுக்கு இருபது டாலர் கொடுக்கப்படும் என்று அறிவித்தான்.ஆஹா! இருமடங்கு விலையா என்று கிராமத்தினரும் வாய்பிளந்து அக்கம்பக்கக் காடுகளுக்குச் சென்று குரங்குகளைப் பிடித்து விற்றனர். எல்லா கிராமத்திலும் இதே நிலை ஏற்பட்டதால் மீண்டும் குரங்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, குரங்கு வர்த்தகம் டல்லடித்து!

அடுத்ததாக, ஆயிரம் குரங்குகளுக்கு 25 US$ என்று விலை நிர்ணயித்தான். மீண்டும் குரங்கு வேட்டை சூடுபிடித்தாலும் ஒரு குரங்குகூட கிடைக்கவில்லை.கிராமவாசிகளும் அமெரிக்கடாலருக்குக் குரங்கு விற்பதைக் கைவிட்டு அவரவர் பிழைப்பை பார்க்கத் தொடங்கினர்.

உலகம் முழுதும் குரங்குகளுக்கான தேவை அதிகரித்ததால், ஆயிரம் குரங்குக்கு 50US$ என்ற புதிய அறிவிப்புச் செய்யப்பட்டது. இதர்கிடையில் குரங்குக் கொள்முதல் செய்பவனுக்குச் சில தவிர்க்க முடியாத வேலைகள் இருந்ததால் தனது சார்பில் குரங்குகளை வாங்க ஒரு உதவியாளரையும் நியமித்து வேறுவேலைகளைக் கவனிக்கச் சென்று விட்டான்.

இதைப் பயன்படுத்தி லாபம் பார்க்க நினைத்த உதவியாளன்,கிராமத்துக் குரங்கு வியாபாரிகளிடம் தன் முதலாளி ஏற்கனவே வாங்கி, தனீடம் விட்டுச் சென்றுள்ள குரங்குகளை ஆயிரம் குரங்குகள் 35US$ என்ற விலைக்கு, குரங்குகள் கிடைக்காமல் தவிக்கும் கிராமத்தினரிடமே மீண்டும் விற்க முன்வந்தான். தனது முதலாளி சிலநாட்கள் கழித்து மீண்டும் வந்த பிறகு பழையபடி ஆயிரம் குரங்குகளுக்கு 50 US$ வீதம் விற்கலாம் என்று ஆசை காட்டினான்.

தங்களிடமிருந்த சேமிப்புகளை எல்லாம் விற்று அமெரிக்க டாலராக்கி 1000 குரங்குகளுக்கு 35 US$ வீதம் உதவியாளரிடம் கிராமவாசிகள் வாங்கத் தொடங்கினர். பழையபடி அமெரிக்கன் குரங்குகள் வாங்க மீண்டும் வருவார், தங்களிடமிருக்கும் குரங்குகளை நல்லவிலைக்கு விற்கலாமென்று எதிர் பார்த்து எல்லாக் கிராமவாசிகளும் காத்திருந்தனர். ஆனால் குரங்கு வாங்குபவரோ அல்லது அவரது உதவியாளரோ வரவே இல்லை. திடீரென்று ஒருநாள் குரங்கு வாங்க/விற்க பணமில்லை என்பதால் உதவியாளர் திவால் ஆகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. எல்லோரிடமும் அளவுக்கு அதிகமான குரங்குகள் மட்டுமே மிஞ்சி இருக்கின்றன.

குரங்கு வர்த்தகம் சந்தை நிலவர அபாயங்களுக்கு உட்பட்டது என்று மெதுவாகச் சொல்லியபோதும் கிராமவாசிகள் துணிந்து குரங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டார்கள். அமெரிக்க டாலருக்கு குரங்கு வாங்க ஆளில்லாதக் காரணத்தால் சிலர் யூரோவுக்கு விற்கத் தொடங்கியுள்ளார்கள். எனவே, இனிமேல் யாரும் தயவு செய்து அமெரிக்க டாலருக்குக் குரங்கு வாங்க/விற்க கனவிலும் நினைக்காதீர்கள்!

Read more...

அண்ணா பிறந்தநாள் ஜோக்ஸ்!

Saturday, September 20, 2008

வாடிக்கையாளர்: யோவ் ஒரு ரூபா அரிசிய்ல் நிறைய கல் கிடக்கதய்யா!
ரேசன்கடைக்காரர்: அப்படி தப்பு நடந்துடுச்சு! கல்லுக்குத் தனியா ஒருரூபாய் கொடுய்யா!
************
அமைச்சர்: தலைவரே ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி அறிவிச்சீங்க. எப்படி தொடர்ந்து செயல்படுத்துவது?
தலைவர்: அந்தக் கவலை நமக்கெதற்கய்யா? ஸ்டாக் இல்லைன்னு ஒரு போர்டைப் போட்டுவிட்டால் போதுமே!
*************
அமைச்சர்: அண்ணா பிறந்த நாளைக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி அறிவிச்சீங்க. எப்படி தொடர்ந்து செயல்படுத்துவது?
தலைவர்: யோவ்! அது அண்ணா நூற்றாண்டு பிறந்தநாளுக்கு மட்டும்தான்!
*************
பிச்சைக்காரன்: அம்மா தாயே! ஒருகிலோ அரிசி பிச்சைப்போடுங்கம்மா!
*************
நீதிபதி: இருதரப்பு வாதங்களையும் வைத்துப் பார்க்கும்போது, கொலைக் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிக்கு அண்ணா பிறந்தநாள்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்குகிறேன்
*************
இலைக்காரன்: நம்புரட்சித் தலைவி அம்மாவுக்கு ஆயுள் தண்டனை தராமல் மைனாரிட்டி திமுக வஞ்சித்து விட்டது
நல்லதந்தி: என்னாய்யா புரியாமப் பேசுறே?
இலைக்காரன்: புரிஞ்சுதான்யா பேசுறேன். ஆயுள் தண்டனை கொடுத்திருந்தா அம்மா இன்னேரம் விடுதலையாகி இருப்பாங்கய்யா!
*************
அமைச்சர்: தலைவரே காந்தி பிறந்தநாளன்று குற்றவாளிகளை விடுதலை செய்ததில் தவறு நடந்துடுச்சு!
தலைவர்: என்னாச்சு!
அமைச்சர்: கோட்சேயையும் விடுதலை செய்துவிட்டார்கள்
**************

Read more...

தினமலருக்கு முதல் ஆப்பு!

Wednesday, September 10, 2008

சமீபத்தில் தமிழ் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக டென்மார்க் பத்திரிக்கையில் வெளியான முஹம்மது நபி[ஸல்] அவர்களை இழிவு செய்யும் விதமாக வெளியான கேலிப்படத்தை வெளியிட்டது. ரமழான் மாதத்தில் வணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்த வேண்டிய முஸ்லிம்கள வீதிக்கு வரவழைத்து காவல்துறையினரின் தடியடியைப் பெற வைத்த தினமலர் ஒப்புக்கு "வருந்துகிறோம்" என்று வெளியிட்டது.

தினமலரின் இந்த விஷமத்தனத்தால் கொதிந்தெழுந்த தமிழக முஸ்லிம்கள் தினமலரை முடக்கும் நடவடிக்கையில் இறங்கினர். முதற்கட்டமாக ஐக்கிய அரபு அமீரகம் தினமலருக்கு ஆப்படித்துள்ளது.காகித வடிவப் பதிப்புக்கும் ஆப்படிக்கும் முயற்சிகளை பலவேறு அமைப்பினரும் துரிதப்படுத்தி வருவதாக பெயர் சொல்ல விரும்பாத உளவுத்துறை அதிகாரி (தினமலர் பாணி;-) தெரிவித்தார்.

இனி, தினமலர் பெருநாள், ரமலான் மலர் வெளியிட்டு முஸ்லிம்களைச் சமாதானப்படுத்த நினைத்தாலும் தினமலரின் சூழ்ச்சியை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள். தினமலரின் சரிவு தொடங்கி விட்டதால் என் பங்குக்கு தினமலர் ஸ்டைலில் சொல்லிக் கொள்ள விரும்புவது!

வருந்துகிறோம்!

Read more...

ஹாலிவுட்டில் விஜயகாந்த்

Monday, September 08, 2008

தமிழக அரசியலில் மாற்றுச் சக்(க)தியாக வந்துள்ள நடிகர் விஜயகாந்த் படங்களை ஹாலிவுட்டில் டப்பிங் செய்தால் வசனங்கள் இப்படித்தான் இருக்கும். உங்கள் பங்குக்கு டப்பிங் வசனங்கள் பின்னூட்டவும்.




1) U can study and get any certificates. But u cannot get ur death certificate




2) U may have AIRTEL or BSNL connection but when u sneeze u ll say HUTCH







3 ) U can bcome an engineer if u study in engineering college. U cannot bcom a president if u studies in Presidency College






4 ) U can expect a BUS from a BUS stop ... u cannot expect a FULL from FULL stop






5) A mechanical engineer can bcom a mechanic but a software engineer cannot bcom a software




6) U can find tea in teacup. But cannot find world in world cup


7) U can find keys in Keyboard but u cannot find mother in motherboard.

Read more...

மணிப்பூர்:நாத்திகத் தீவிரவாதிகள்?

Tuesday, September 02, 2008

மணிப்பூர் முதல்வர் வீடுமீது ராக்கெட் குண்டு வீசப்பட்டதாம்.வீசியவர்கள் தீவிரவாதிகளாம்!! பெரும்பாலும் தீவிரவாதச்செயல்களில் ஈடுபடுபவர்களை அவர்கள் சார்ந்திருக்கும் மதத்துடன் இணைத்து, குறிப்பிடுவர். உதாரணமாக இத்தகையத் தாக்குதலில் ஒரு முஸ்லிம் ஈடுபட்டிருந்தால் 'இஸ்லாமியத் தீவிரவாதி' என்றுதான் குறிப்பிடுவார்கள்; இதுவே காலங்காலமாகக் கடை பிடிக்கப்படும் ஊடகத் த்ர்மமாக இருந்து வருகிறது.


மணிப்பூர் முதல்வரைக் கொல்ல முயன்ற சம்பவத்தில் 'தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்' என்று மட்டு போட்டுள்ளார்கள்! என்ன கொடுமை சார் இது! தெரியாமத்தான் கேட்கிறேன்.


1) மணிப்பூர் தீவிரவாதிகள் மதநம்பிக்கையற்ற நாத்திகர்களா? அல்லது

2) பாகிஸ்தான், பங்களாதேஷ் தீவிரவாதிகளுக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா? அல்லது

3) பத்திரிக்கைக்காரர்களெல்லாம் திருந்தி விட்டார்களா? அல்லது

4) இந்த ராக்கெட் லாஞ்சர்கள் செய்வதற்கு மணிப்பூரில் யாருமே ஆணி, பேட்டரி, ப்ளாஸ்டிக் வயர், உடைந்த குழாய் போன்றவற்றை வீட்டில் பதுக்கி வைத்திருக்கவில்லையா?



விபரம் தெரிந்தவர்கள் பின்னூட்டமிடலாம்!

Read more...

சிறந்த பின்னூட்டத்திற்குப் பரிசு!

Monday, August 25, 2008















அரைக்கிலோ கருவாடு பத்து மில்லியன் டாலர், ஒரு கிலோ காய்கரி ஐந்து மில்லியன் டாலர், ஒரு கிரேட் முட்டைகள் 600 மில்லியன் டாலர் என்றால் ஒரு கறிக்கோழியின் விலை? காலைச் சிற்றுண்டிக்கு கிலோ கணக்கில் பணத்தைக் கையில் சுமக்க வேண்டும். தொண்டை அடைத்து, குளிர்பானம் குடிக்கலாம் என்று விலையைக் கேட்டால் நெஞ்சே அடைக்கும்!

படத்திலுள்ள விசயம் உலகின் ஒரு பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. மில்லியன் கணக்கில் அமெரிக்க டாலர்களாகப் பொருள் குவிக்கும் வல்லானுக்கு ஒரு நீதி, அதே மில்லியன் டாலர் ஜிம்பாப்வே டாலராக இருந்தால் அவனுக்கு ஒரு நீதியா?

இலட்சங்களில் வைத்திருந்தால் லட்சாதிபதி, மில்லியனில் புழங்கினால் மில்லியனர், கோடிகளில் புரண்டால் கோடீஸ்வரன், பில்லியன் கணக்கில் சொத்துக் குவித்தால் பில்லியனர் என்று உலகில் நூற்றுக் கணக்கான ட்ரில்லியனர் (நம்மூர் அம்பானி உட்பட) என்று நீதிவகுத்தவனைக் கண்டால் வகுந்து எடுக்கத்தோன்றுகிறது.

அடப்பாவிகளா! இப்படி கோடீஸ்வரர்கள் ??? வயிற்றில் அடித்து வல்லான் பொருள் குவிக்கும் அநீதியைப் பார்க்கும்போது, அந்நியச்செலவாணியைக் கண்டுபிடித்த அயோக்கிய................... யாரடா என்று கேட்கத் தோன்றுகிறது!

-------------------------------------

பிச்சைக்காரர் : அம்மா தாயே! சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு ஒரு மில்லியன் டாலர் பிச்சை போடுங்கம்மா!

-------------------------------------

அதிகாரி: யோவ்! அறிவிருக்கா? உன்னை யாருய்யா லஞ்சத்தை ஜிம்பாப்வே டாலராகக் கேட்டது?

-------------------------------------

வங்கியில்: யோவ்! செக்கிலுள்ள கட்டத்திற்கு வெளியில் எழுதக்கூடாதுன்னு எத்தனை பேருக்கய்யா சொல்றது?

-------------------------------------

மனைவி: ஏங்க! உங்க நண்பரிடம் பணம் கடன் வாங்கப்போயிட்டு சும்மா வர்ரீங்களே! இல்லேன்னுட்டாரா?

கணவன்: அடிபோடி!அதை வீடுவரை ஆட்டோவில் வைத்து கொண்டு வந்ததால் ஆட்டோ வாடகைக்கே சரியாக இருந்தது!

-------------------------------------

குறிப்பு: உள்ளக்குமுறலை நச்சென்று சொல்லும் சிறந்த பின்னூட்டத்திற்கு மில்லியன் டாலர் பரிசு! (ஹி...ஹி...ஜிம்பாப்வே டாலரில்தான்!)

Read more...

சுதந்திரதின ஸ்பெஷல்

Saturday, August 16, 2008

'மாடாய்' உழைக்கும் தலைவன்
நன்றி மறந்த 'நாயாகி'
கட்சித்தாவும் 'குரங்காகி'
'குதிரை'யாகிப் போனார்
நாடாளுமன்ற
நம்பிக்கை வாக்கெடுப்பில்!
================================================

தலைவர்: ச்சே...நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பின்போது குதிரை வாங்கச் சொன்னது தப்பாப்போச்சு!

தொண்டன்:
என்னாச்சு தலைவரே

தலைவர்
: மூன்று கோடி ரூபாய் கொடுத்து ஒரு குதிரையை வாங்கிட்டு வந்திருக்கார்.

=============================

வக்கீல்:
சார்.! காடுவெட்டி குருமீது எந்த செக்சன்ல கேஸ் போடுறது?

தலைவர்: காட்டை வெட்டினார்னு வனத்துறை சார்பில் கேஸ் போடுங்க!

=============================

தொண்டன் 1
: எதுக்குத் தலைவர் தலைகீழா நின்னு கொடியேத்துறார்?

தொண்டன் 2: யாரோ தேசியக்கொடியை தலைகீழா கட்டிட்டாங்களாம்!

=============================

அத்வானி: இந்திய சுதந்திர தினத்ன்று பாகிஸ்தான் கொடியை மசூதியில் பறக்கவிடுவதைக் கண்டிக்கிறேன்

லாலு: அத்வானி ஜி! பயப்படும்படி ஒன்னுமில்லே! அது ஒரு தர்கா!

=============================

தொண்டன் 1: தானைத் தலைவன் தன்மானக் குதிரைன்னு அழைக்கிறார்னு போஸ்டர்லே அடிச்சிருக்கு! தன்மானச் சிங்கம்னு அல்லவா போடனும்?

தொண்டன் 2: அதெல்லாம் நம்பிக்கை வாக்கெடுக்குப்பு முன்னாடிதான்!

=============================

ரசிகர் : என்னாய்யா ஒலிம்பிக் கோல்ட் மெடலிஸ்ட் அபினவ் கோபமா இருக்கார்?

ரசிகர் : ஆமா! மெடல் MADE IN CHINA ன்னு போட்டிருப்பதால் டூப்ளிகேட்டா இருக்குமுன்னு யாரோ சொன்னாங்களாம்!

=============================

குடிகாரன் : என்னா தலீவா ஒலிம்பிலே நீயி கலந்துக்கலயா?

குடிகாரன் : போதைமருந்து சாப்பிட்டா போட்டியில கலந்துக்க முடியாதாம்!

=============================

ரசிகர் 1 : அந்த விளையாட்டு வீரர் ஏம்பா குடிச்சிட்டு கவலையா இருக்கார்?

ரசிகர் 2: : போதைமருந்து பரிசோதனைல பாசிட்டிவ்னு காட்டிடுச்சாம்! அந்தக் கவலையை மறப்பதற்காகக் குடிக்கிறாராம்!

==============================

அமர்நாத்தை மறந்து அமர்க்கலாமாய்க் சுதந்திரத்தைக்கொண்டாடுவோம்! சுதந்திர தினவாழ்த்துக்கள்!

Read more...

குரங்குகளுக்குப் பாலம் கட்டத் தெரியாது - தினமலர்

Wednesday, August 06, 2008

தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் வளம் சேர்க்கும் சேதுக்கால்வாய் திட்டத்திற்கு சங்பரிவாரங்கள் முட்டுக்கட்டை போட்டு வருவதற்குக் காரணம். ராமர் இலங்கைக்குச் செல்வதற்காக குரங்குகளால் கட்டப்பட்ட பாலம்??? இடிபடும் என்றும், இது கோடிக்கணக்கான இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் என்று சொல்லிவரும் சூழலில், சங்பரிவாரங்களின் ஊதுகுழல் தினமலர்/ம் இன்று வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், குரங்குகளுக்காக மனிதர்கள் பாலம் அமைத்துக் கொடுத்ததாகச் சொல்லிப் பரவசப் பட்டுள்ளது!

ராமருக்குப் பாலம் கட்ட உதவிய குரங்குகளுக்கு, தங்கள் சொந்தத்தேவைக்குப் பாலம் கட்டத் தெரியாதா?

அல்லது




கர்னாடகக் குரங்களுக்குப் பாலம் கட்டத் தெரியாதா?

ஒன்றுமே புரியவில்லை. புரிந்தவர்கள் பின்னூட்டலாம்!

Read more...

இருண்ட இந்தியாவே போதும்

Wednesday, July 09, 2008

மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசாங்கம் அமெரிக்காவிற்கு காவடி தூக்கியதால் கம்யூனிஸ்டுகள் காலை வாரி விட்டுள்ள சூழலில் மூட்டுவலிக்கு குமரகத்தில் மசாஜ் எடுத்துக் கொண்டிருந்த சங்கப்பரிவாரக் கிழடுகள் எல்லோரும் டெல்லியில் கூடி, எப்படியாவது ஆட்சி கவிழாதா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

எப்பாடு பட்டாவது பதவியைத் தக்கவைத்துக் கொள்ள, கொள்கையைக் காற்றில் பறக்க விடும் உன்னதமான தலைவர்கள் நம் நாட்டில்தான் உள்ளார்கள். "பதவி தோளில் கிடக்கும் துண்டு; ஆனால் கொள்கை இடுப்பில் கட்டியிருக்கும் வேஷ்டி" என்றார் அண்ணா. நம் தேசிய அரசியல்வாதிகள் தற்போது வேஷ்டியைக் காற்றில் பறக்கவிட்டு நிர்வாணமாக துண்டைத் தக்கவைத்துக் கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்!

மன்மோகன் சிங்கும் ஜார்ஜ் புஷ்ஷும் ஜப்பானில் காபி குடித்துக் கொண்டே அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் நன்மையானது என்று அறிக்கை விட்டுள்ளார். (ஜார்ஜ் புஷ்ஷின் வளர்ப்பு நாயின் செல்லப் பெயர் இந்தியா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.) பதவிக் காலம் முடிவடைந்தது,போர் குற்றங்கள் மற்றும் படுகொலைகளுக்காக வழக்குகளைச் சந்திக்கப் போகும் ஜார்ஜ் புஷ்ஷிற்கு,இந்தியா மீதிருக்கும் அக்கரையை நினைத்தால் புல்லரிக்கிறது.

பாஜக கூட்டணியினர் இந்தியா ஒளிர்கிறது என போலியான முழக்கத்தை சென்ற தேர்தலில் முன்வைத்ததால் ஆட்சியைப் பறிகொடுத்தைப் போல், அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டினால் கிராமங்களெல்லாம் மின்சக்தி பெற்று இந்தியா ஒளிரும் என்று ஆட்சியைக் காவு கொடுத்தாவது ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று மன்மோகன் சிங் முண்டா கட்டி நிற்பது தேவையா?

சேதுக்கால்வாய் திட்டம், சிறுபான்மையினர் இடஒதுக்கீடு போன்ற குறைந்த பட்சசெயல்திட்டங்களைக் கிடப்பில்போட்டு அமெரிக்காவுக்கு,இந்தியாவை நாற்பதாண்டு காலம் அடகுவைக்கத் துடிக்கும் மன்மோகன் சிங் அரசுக்கு முடிவுரை எழுதப்போகும் நேரம், இந்தியாவின் இருண்ட காலத்தின் தொடக்கமாகி விடக்கூடாது!

ஒளியேற்றப் போகிறேனென்று அமெரிக்கா கால்வைத்த எந்த ஒரு நாடுமே உருப்பட்டதாகச் சரித்திரமில்லை. அவனன்றி அணுவும் அசையாது என்று ஆண்டவனை நம்பிக் கொண்டிருப்பவர்களை ஆள்பவர்கள் காப்பாற்றப் போகிறார்களோ இல்லையோ ஆண்டவன் நிச்சயம் காப்பாற்றுவான்!

இதை வைத்து நான் பாஜகவை நான் ஆதரிக்கிறேனோ என்று தவறாகப் புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல!.பாஜகவினால் இந்தியா மீண்டும் ஒளிரும் என்று நம்புவதைவிட, புஷ்ஷையே நம்பிவிடலாம்.

அமெரிக்கா உதவியுடன் ஒளிரும் இந்தியாவைவிட, இருண்ட இந்தியாவே எங்களுக்குப் போதும்!

Read more...

மிருகங்களின் தசாவதாரம்

Thursday, June 26, 2008

பதிவெழுதி ரொம்ப நாளாச்சு. மூன்று மாதங்களுக்கு எதுவும் எழுதப்படாமல் குறட்டை விடும் பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படும் என்பதாலும் தசாவதாரம் பற்றி எதுவும் எழுதாவிட்டால் கட்டம் கட்டப்படும் அபாயம் இருப்பதாலும் ஏதோ நம்மால் முடிந்தது. (வெளிவராத கவர்ச்சிப் படங்களுடன்!!!)


பின்னூட்ட விரும்புபவர்களுக்காக சில ரெடிமேட் பின்னூட்டங்கள்:

*சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"

*அருமை*

*ஏண்டா உனக்கு வேற வேலையே இல்லையா?*

*கழுதை கெட்டால் குட்டிச்சுவர்*

*கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை?*

*கழுதை வாலையும் நிமிர்த்த முடியாது!"

தொடர்ந்து மூன்று பதிவுகளுக்குப் பின்னூட்டமே பெறாவிட்டால் அதுக்கு ஏதாவது தண்டனை உண்டா? என்று யாராச்சும் பின்னூட்டவும்.

Read more...

புரட்சித் தலைவிக்குச் சில ஆலோசனைகள்

Saturday, April 12, 2008

"தமிழக மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், சித்ரா பவுர்ணமி அன்று அ.தி.மு.க., உறுப்பினர்கள் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும்' என ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கை விபரம்: சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மின்சார தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, மறைமுக பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு போன்ற பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் தமிழக அரசு ஸ்தம்பித்து நிற்கிறது. இனி தமிழகத்தில் ஒளி பிறக்காதா, இந்த நிலை மாறாதா என்ற கவலை மக்களை கவ்விக் கொண்டுள்ளது.

இருள் அகன்று ஒளி பிறக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும், அந்த ஒளியை உருவாக்க அ.தி.மு.க., இருக்கிறது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.



இதற்கு அடையாளமாக வரும், 19ம்தேதி சித்ரா பவுர்ணமி அன்று மாலை 6.30 மணிக்கு அவரவர் வீடுகளிலும், தங்களுக்கு சொந்தமான நிறுவனங்களிலும், கோவில்களிலும் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் குடும்பத்தோடு விளக்கேற்றி வைக்க வேண்டும்.

தீபம் ஏற்றி வைக்கும் நேரத்தில், "இருண்ட தமிழகத்தில் ஒளியேற்ற வாருங்கள் அம்மா' என்று கோஷமிட வேண்டும். இந்த முழக்கம் தமிழகம் முழுவதும் எழுப்பப்பட வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

http://www.dinamalar.com/2008apr12/political_tn1.asp

சித்ரா பவுர்ணமி அன்று மாலை 6:30 மணிக்குத்தான் விளக்கேற்றனும்னு சொல்லப்பட்டிருப்பதிலிருந்து அம்மாவின் ஆஸ்தான ஜோதிட சிகாமனி எவனாச்சும் சொல்லி இருப்பான்னு தெரியுது. இருந்தாலும் அதிரைக்காரன் சார்பில் அம்மாவுக்குச் சில ஆலோசனைகளைச் சொல்லிக் கொள்கிறேன். மொட்டைத்தலையுடன் ஆலோசனை சொன்னால்தான் எடுபடும் என்றால் அம்மாவுக்காக (ரத்தத்தின் ரத்தங்கள் சார்பில்) மொட்டை போடவும் தயார்!)

ஆலோசனை # 1: தமிழக மக்களுக்கு ஒருகிராம் தங்கக்காசு கொடுத்து அம்மாவின் பொற்கால ஆட்சி மீண்டும் வர சபதமெடுக்கச் சொல்லலாம்!

ஆலோசனை # 2: மின்சாரத் தட்டுப்பாட்டைச் சுட்டிக்காட்ட விளக்கேற்றுவது போல், பஸ்கட்டண உயர்வைச் சுட்டிக்காட்ட ஒருநாள் ஆட்டோ கட்டணம் கொடுக்கலாம்.

ஆலோசனை # 3: விலைவாசி உயர்வுக்கு எதிராக இலவச அரிசி,சர்க்கரை மளிகைப் பொருட்களை ஒருநாளைக்கு மட்டும் வழங்கலாம்.

ஆலோசனை # 4: பால்விலை உயர்வுக்கு எதிராக வீட்டுக்கு ஒரு கோமாதா கொடுக்கலாம்.


அம்மாவின் (மூட)நம்பிக்கையொளி ஏற்றும் கோரிக்கையை ஏற்று, ஏழை ரத்தத்தின் ரத்தங்களின் குடிசைகள் தீப ஒளியில் எரிந்துவிடாமலிருக்க உடன் பிறப்புக்கள் இலவசத் தண்ணீர் பந்தல்களை தமிழகமெங்கும் வைக்க வேண்டுகிறேன்.

Read more...

வெற்றியின் ரகசியம்

Thursday, April 03, 2008

வெற்றிகரமான மணவாழ்விற்கான வழிகள் குறித்து அலசும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றிற்கு முன்னேறிய ஒரு கணவனுடன் நடந்த உரையாடல்.

கேள்வி: ஜோடிப்பொருத்தம் நிகழ்ச்சியின் எல்லா சுற்றுகளிலும் வென்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னணியிலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லப் படுவதுண்டு. உங்கள் வெற்றிக்குப் பின்னணியில் யார் இருந்தார்?

பதில்: நிச்சயமாக எனது எல்லா வெற்றிகளின் பின்னணியிலும் என் மனைவியின் பங்களிப்பு குறைத்து மதிப்படப்பட முடியாதது.

கேள்வி:
உங்கள் மகிழ்ச்சிகரமான இல்வாழ்க்கையின் ரகசியம் என்னவென்று நேயர்களுக்குச் சொல்லுங்களேன்.

பதில்: முடிவெடுக்க வேண்டிய விசயங்களில் ஒருவருக்கொருவர் பொறுப்புகளை பகிர்ந்து கொண்டும் விட்டுக்கொடுப்பதுமே மகிழ்ச்சியான மனவாழ்வுக்குக் காரணம்.

கேள்வி: கொஞ்சம் விரிவாகச் சொல்ல முடியுமா?

பதில்: தாராளமாக! எங்கள் வீட்டில், பெரியபெரிய விசயங்களில் முடிவெடுக்கும் பொறுப்பை என்னிடம் விட்டுவிட்டு, சின்னச் சின்ன விசயங்களை என் மனைவியே பார்த்துக் கொள்வாள். ஒருவர் எடுக்கும் முடிவில் பிறர் தலையிடுவதில்லை.

கேள்வி: கொஞ்சம் உதாரணத்துடன் விளக்க முடியுமா?

பதில்: உதாரணமாக, எந்தக் கார் வாங்குவது, எந்தக் கலர் பட்டுப்புடவை எடுப்பது, பழைய நகையை விற்றுவிட்டு புதிய நகை வாங்குவதா அல்லது விற்காமலேயே புதிய நகையை வாங்குவதா, எனது வங்கி சேமிப்பிலிருந்து எவ்வளவு செலவு செய்வது, ஷோபா, குளிர்சாதனப் பெட்டி, வேலைக்காரி தேவையா வேண்டாமா போன்ற விசயங்களைத் தீர்மானிப்பது என் மனைவியே! (மனைவி கணவனைப் பார்த்து புன்முறுவல் செய்கிறார்)

கேள்வி: உங்களின் பங்களிப்புப் பற்றி உதாரணத்துடன் சொல்லுங்களேன்.

பதில்: மேற்சொன்ன சின்னசின்ன விசயங்களில் என் மனைவி எடுத்த முடிவை அப்படியே ஒப்புக் கொள்வேன். என்னுடைய முடிவுகள் பெரிய பெரிய விசயங்களில் மட்டுமே இருக்கும். உதாரணமாக, அமெரிக்கா ஈராக்கை தாக்க வேண்டுமா வேண்டாமா,ஜிம்பாப்வேக்கு எதிரான தடையை விலக்கிக் கொள்ள வேண்டுமா வேண்டாமா,ஆப்பிரிக்க பொருளாதாரத்தை விரிவாக்க வேண்டுமா வேண்டாமா, சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டுமா வேண்டாமா போன்றவற்றைச் சொல்லலாம்! (மனைவிக்கு ஆனந்தக் கண்ணிர் அரும்புகிறது. பெருமிததுடன் கைக்குட்டையின் நுனியால் துடைக்கிறார்)

ஒன்று தெரியுமா சார் உங்களுக்கு! என் இந்த முடிவுகளை ஒருபோதும் என் மனைவி ஒருபோதும் மறுத்ததே இல்லை. இதுவே எங்கள் மகிழ்ச்சியான, வெற்றிகரமான மனவாழ்க்கைக்குக் காரணம்!

கேள்வி கேட்டவருக்கும் கண்ணீர் வருகிறது. ஆனந்தக் கண்ணீரல்ல கணவனின் நிலையை எண்ணி பரிதாபத்துடன் கண் கலங்குகிறார்.

குறிப்பு: இப்பதிவுக்கு போலிப்பெயரில் பின்னூட்டம் வந்தால் அது நிச்சயம் ஏதாவது பெண் பதிவராகத்தான் இருக்கும். :-))

Read more...

பாவம் மகளிர்!!

Monday, March 10, 2008


மார்ச்-8 ஆம் தேதியை உலக மகளிர் தினமாக அறிவித்து நாடெங்கும் கொண்டாடப்பட்டது. ஆளும் கட்சியைச் சார்ந்தப் பெண் அமைச்சர்கள் தலைமையில் சில பெண்கள் முதல்வர் கலைஞரைச் சந்தித்து ஆசி பெற்றதையும் வேறுசில ஆண் அமைச்சர்கள் ஒளவையார் சிலைக்கு மாலை அணிவித்ததையும் திரும்பத் திரும்பக் காட்டினார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு தினத்தை அந்த தினம்-இந்த தினம் எனப் பெயரிட்டு அவை சம்பந்தப்பட்ட பொருட்களைச் சந்தைப்படுத்தி காசு பார்ப்பது முதலாளியத்துவ யுக்திகளில் ஒன்று.எனக்குத் தெரிந்து மகளிர் தினம்,அன்னையர் தினம் ஆகிய இரு தினங்கள் மட்டுமே பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளன.மீதமுள்ள அனைத்து நாட்களும் ஆண்களுக்கானதோ? மகளிர் அமைப்புகள் இதைக் கண்டு கொள்ளாமலும் உரிமைகோராமலும் இருப்பது ஆச்சரியம்!

நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதாவுக்கு கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிப் பெண்மணிகளும் ஓரணியில் இருப்பர். நியாயமாக மகளிர் தினத்தில் ஆசிபெறுவதற்கு கலைஞரை விட புரட்சித் தலைவி ஜெயலலிதாவையே சந்தித்திருக்க வேண்டும். பெண்ணுக்கு பெண்ணே எதிரி! அல்லது ஜெயலலிதாவை மகளிராகக் கருதவில்லையோ என்னவோ? வாழ்த்து மற்றும் அருளாசி கொடுக்க பெண்ணைவிட ஒரு ஆணே தகுதியானவர் என்றும் பழக்க தோசத்தில் கருதி இருக்கக்கூடும்!

ஆண் அமைச்சர்கள் ஒளவையார் சிலைக்கு மாலை அணிவித்து மகளிர் தினத்தைப் போற்றினார்கள். ஒளவையாரைப் பொருத்தவரை ஆண் மேளாண்மைக்கு ஆதரவாளராகவே அறிய முடிகிறது. உதாரணமாக,

" நாடாகொன்றொ காடாகொன்றொ
அவலாகொன்றொ மிசையாகொன்றொ
எவ்வழி நல்லை ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே"

என்றும்

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
அதனினும் அரிது ஆணாய்ப் பிறத்தல்"

ரொம்ப நாளாக இருக்கும் சந்தேகம்! லைஃப்பாய் விளம்பரத்தை தவிர வேறெந்தச் சோப்பு விளம்பரத்திலும் ஆண் மாடல்களைக் காட்டுவதில்லை. அழகு காக்கும் சோப்புக்களுக்கு பெண்களாம்;ஆரோக்கியம் காக்கும் லைஃபாய் சோப்புக்கு மட்டும் ஆண் மாடல்களாம்!ஏன் பெண்கள் ஆரோக்கியமாகவும் ஆண்கள் அழகாகவும் இருக்கக் கூடாதா?

ஏதோ மகளிர் தினத்திற்கு நம்மால் முடிந்தது இதுதான்! அர்ச்சனைகள் வரவேற்கப்படுகின்றன.

Read more...

கல்லானாலும் காதலன் புல்லானாலும் புருஷன்

Sunday, March 02, 2008


தலைப்பைக் பார்த்ததும் ஆஹா! உருப்படியான ஒரு பலான பதிவு என்று நாக்கைச் சப்புக் கொட்டி சபலத்துடன் இங்கு வந்திருந்தால் ஏமாறுவீர்கள். ஏறத்தாழ இது ஒரு சபலப் பதிவா இல்லையா என்று முழுதும் படித்து விட்டு நீங்களே சொல்லுங்களேன்.

பதிவுக்குச் செல்லும் முன் சில முன்குறிப்புகள்:
சார்லஸ் = மறைந்த இளவரசி டயானாவின் கணவர்;
காமில்லா= சார்லஸின் தற்போதைய மனைவி;
பார்க்கர்=காமில்லாவின் முன்னாள் கணவன்;
ரோஸ்மேரி=பார்க்கரின் தற்போதைய மனைவி.

காமில்லாவுக்கும் பார்க்கருக்கும் என்ன சம்பந்தம்? சார்லஸுக்கு வெட்கம்-மானம்-சூடு-சொரனை உள்ளதா? இவர்களிடம் காணப்படுவது நட்பா? காதலா? காமமா? அல்லது அதையும் தாண்டி புனிதமான வேறு ஏதாவது கருமாந்திரமா என்பதை அறிந்து கொள்ளவே இப்பதிவு.

சில வருடங்களுக்கு முன் பிரிட்டிஸ் இளவரசர் சார்லஸும் காமில்லாவும் திருமணம் செய்து கொண்டார்கள். அந்தக் காமில்லா தனது முன்னாள் கணவருடன் ஒருவாரம் இன்பச் சுற்றுலா சென்றுவர சார்லஸ் தனது மனைவியை அனுப்பி வைக்கப்போகிறாராம்.

இதைப் படித்து விட்டு கற்பனையாக மனதில் எழுந்தது. உண்மையாகவும் இருக்க வாய்ப்புள்ளதால் உருப்படதா விசயங்களின் ஒப்பற்ற ஆவணமான வெட்டிப்பக்கங்களில் ஏற்றி வைப்போமே.

காட்சி # 1:
காமில்லா: அத்தான்!

சார்லஸ்: எஸ் டியர்!

காமில்லா: கணவனுடன் சந்தோசமாக ஒருவாரம் இன்பச்சுற்றுலா செல்லாலாம் என்று இருக்கிறேன்.

சார்லஸ்: அதற்கென்ன காரியதரிசியிடம் சொல்லி ஏற்பாடு செய்துவிட்டால் போச்சு! ஒரே ஒரு வருத்தம் என்னால் உடனடியாக சுற்றுளா வர முடியாது.

காமில்லா: நான் உங்களை என்னுடன் வரும்படி கேட்கவே இல்லையே!

சார்லஸ் : நீந்தானே டியர், "கணவனுடன் சந்தோசமாக ஒருவாரம் இன்பச் சுற்றுளா செல்லாலாம் என்று இருக்கிறேன்" என்று சொன்னாய்!

காமில்லா: உண்மைதான்! நான் சொன்னது என்னுடைய Ex.கணவனுடன் மிஸ்டர் சார்லஸ்!

சார்லஸ்: ஓஹோ! வெரிகுட். அதுக்கும் ஏற்பாடு செய்து விட்டால் போச்சு!

காமில்லா: யு ஆர் மை ஸ்வீட்டி சார்லஸ்!

சார்லஸ்: (எனக்கு சர்க்கரைவியாதி இருப்பதைக் குத்திக் காட்டுகிறாளோ?)

காட்சி # 2:
பார்க்கர்: ரோஸ்மேரி. நீ கேன்சரிலிருந்து குணமடைந்த சந்தோசத்தை நான் வித்தியாசமாகக் கொண்டாடப்போகிறேன்!

ரோஸ்மேரி: எனக்கு அறுபத்தாறு வயதானாலும் என் மீதான உன் அன்பு இன்னும் இளமையுடனே இருப்பதை எண்ணி மகிழ்கிறேன் பார்க்கர். எப்படிக் கொண்டாடலாம்?

பார்க்கர்: என் மனைவிமீது நான் வைத்திருக்கும் மறக்க முடியாதக் காதலை மீண்டும் நிரூபிக்க ஒருவாரம் இன்பச் சுற்றுளா செல்லப் போகிறேன்.

ரோஸ்மேரி: காதலுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன் பார்க்கர். தற்போது மருந்து சாப்பிட்டு வருவதால் என்னால் தற்போது உடன்வர முடியாதே!

பார்க்கர்: அது தெரிந்துதான் காமில்லாவை அழைத்துச் செல்லப்போகிறேன்.
ரோஸ்மேரி: (அடப்பாவி மனுஷா! இதுக்கு கேன்சரே பரவாயில்லையே!)

காட்சி # 3:

பார்க்கர்: Welcome Back காமில்லா ! இன்னும் என்னை மறக்காமல் தொடர்ந்து அன்பு வைத்திருக்கிறாயே!

காமில்லா: நம்மிருவரின் காதல் வாழ்க்கை அவ்வளவு எளிதில் மறக்கக் கூடியதா?

பார்க்கர்:(அடிக்கள்ளி! பின்னே ஏண்டி என்னை விட்டுட்டு சார்லஸுடன் ஓடினே?)

நிற்க,

"உன் குழந்தையும் என் குழந்தையும் நம் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்" என்பது போன்ற உரையாடல்கள் மேலை நாடுகளில் சகஜமான ஒன்று. தற்போது சார்ல்ஸ் புண்ணியத்தால் "என் மனைவி அவள் கணவனுடன் விளையாடச் செல்கிறாள்" என்ற கலாச்சாரம் மீண்டும் தலை தூக்கியுள்ளது.

மில்லியனராக ஆசைப்பட்டு அன்பான மனைவியை பில்லியனருடன் ஓரிரவு படுக்கையைப் பகிர்ந்துகொள்ள அனுப்பி வைக்கும் கணவன் பற்றி Indecent Proposal என்ற ஆங்கிலப்படத்தில் காட்டுவார்கள்.சினிமாக்களில் எந்தச் சனியனையும் கலைக்கண்ணோட்டத்தில் படமெடுத்துக் விற்பார்கள். நாமும் அதைக்காசு கொடுத்து பார்த்துத்தொலைப்போம்.ஆனால், நிஜத்திலும் இப்படி நடக்கிறது. அதைக் கண்டு கொள்ளாமல் செல்லலாமா?

கல்லானாலும் கணவன்! புல்லானாலும் புருஷன் என்பதை ஆணாதிக்கச் சிந்தனை என்று சில மேதாவிகள் சொல்வார்கள்; கல்லானாலும் காதலன் புல்லானாலும் புருஷன் என்று தொடரும் கேடுகெட்ட இவ்வுறவை, என்ன சிந்தனை என்று சொல்லப்போகிறார்களோ!

— Evening Standard—http://www.pressdisplay.com/pressdisplay/viewer.aspx

Read more...

கலாம் சொன்ன சலாம் - அதிர்ச்சித் தகவல்!!!

Tuesday, February 05, 2008

பாரத ரத்னா, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்தியாவுக்கே கிடைத்த மணிமகுடம். நாட்டுப்பற்று மிக்க இலட்சியவாதி, சாதி மதங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு
இந்தியா, இந்தியர் என்பதே தன் முகவரியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்.இதுதான் அவருக்கு நாடும் உலகமும் வைத்திருக்கும் அளவுகோல்.

ஆனால் அவருடைய சமீபத்திய நடவடிக்கை மேற்சொன்ன பெருமைகளை எல்லாம் கொஞ்சம்
கேள்விக்குரியாக்கியிருக்கிறது. அந்தச் சம்பவம் வருமாறு: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதாக் பொறியியல் கல்லூரியின் புதிய ஷிப்-இன்-ப்ளாக் கட்டிடத்தைத் திறந்து வைக்க வருகை தந்திருந்த ஏ.பி.ஜே அப்துல் கலாம் சிறப்புரையாற்றத் தொடங்கியதுமே அவர் மத அடையாளத்துடன் "அஸ்லாமு அலைக்கும்" என ஆரம்பித்தார்.

இவருடைய சிறப்புரையைக் கேட்க கூடியிருந்த கூட்டம் கொஞ்சம்
அதிர்ச்சிக்குள்ளாகியது. விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த கல்லூரி நிர்வாகம் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். ஆனால் அங்கு படிக்கும் மாணவர்களும்,சிறப்புரையைக் கேட்கக் கூடியிருந்த பொதுமக்களும் வெறும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்களில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பல்வேறு சமூகத்தினரும் கூடியிருந்த விழாவில் இந்தியாவே தரிசிக்கும் ஏ.பி.ஜே-யின் பேச்சு அனைவரையும் கொஞ்சம் உறையச்செய்ததை யாரும் மறுக்க முடியாது.அவருக்குள்ளும் மதத்தின் வேர்கள் துளிர் விட்டிருக்கிறதா? என கவலையுடன் கூட்டம் கலையத்தொடங்கியது.


அந்தச் சர்ச்சைக்குரிய உரை இதோ ஒளி வடிவில்.... http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=blogsection&id=10&Itemid=154

மனுநீதி (மநுநீதி?) என்ற வலைப்பூவில் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டு நெற்றிக் கண் திறந்திருந்தார் ஒருவர்! (எனக்கென்னமோ அது நெற்றிக்கண் மாதிரி தெரியவில்லை. காவிக்கண்ணாடி அணிந்து எழுதியது போலுள்ளன அவரின் கேள்விகள்!!!)


முன்னாள் ஜனாதிபதி "உண்மையான"பாரத ரத்னா அப்துல்கலாம் பிறப்பால் ஒரு முஸ்லிம் என்பதும், இதுவரையிலும் ஒரு முஸ்லிமாகவே இருந்து வருவதும் நாடறிந்த செய்தி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த விழாவில் "அஸ்ஸலாமு அலைக்கும்" உங்கள்மீது (சாந்தி உண்டாகுக) என்று வாழ்த்தி உரையைத் தொடங்கினார்.இதற்கு ஏன் அதிர்ச்சியடைய வேண்டும்?

மதசார்பற்ற நாட்டில் உயர்பதவியில் இருந்து கொண்டு சங்கராச்சாரியின் காலடியில் விழுந்து கிடந்த பிரதமர்களையும் ஜனாதிபதிகளையும் கொண்ட நாட்டில், சலாம் சொன்னதால் அப்துல் கலாம் மீது மத அடையாளம் விழுந்து விட்டதா? அப்துல் கலாம் என்ற பெயர்கூட அவரின் மத அடையாளம்தான் என்பது மநுநீதிக்காவலர்களுக்குத் தெரியாதா?

கும்பாபிசேகங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அரசு செலவில் அனுப்பி வைக்கப்படும் காவல்துறையினரும்கூட அருள்வந்து தேர் இழுபத்தும்,பக்திவயப்பட்டு அரோகரா கோஷம்போட்டு நிற்பதும் மநுவின் கண்களுக்கு தெரியவே இல்லையா?

அனைவருக்கும் பொதுவான தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஒளிபரப்பு அருள் வாக்குடந்தானே நிகழ்ச்சிகளைத் துவங்குகிறது.தீபாவளிக்கு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தூர்தர்ஷன் என்றைக்காவது பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி என்று நாள் ஒதுக்கி இருக்கிறார்களா? அட! குறைந்தபட்சம் நாகூர் ஹனீபாவின் இஸ்லாமிய கீதங்களையாவது ஒலி/ஒளிபரப்பி மதசார்ப்பற்ற நிலையை நிரூபித்திருக்கலாமே!

மாண்புமிகு பாரத ரத்னா அப்துல்கலாம் அவர்களாவது தனது ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்த பின்னரும் பல்கலைக்கழகங்களில் பாடம் நடத்தி நாட்டிற்குச் சேவையாற்றுகிறார்.ஏனைய இந்திய முன்னாள் ஜனாதிபதிகள் மடங்களுக்கு அல்லவா சேவையாற்றினார்கள். காஞ்சி மடத்திற்கு அலையாய் அலைந்த எங்களூர்காரர் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் பற்றி மநுவுக்குத் எதுவுமே தெரியாதா?

தயவு செய்து காவிக்கண்ணாடியை அணிந்து நெற்றிக்கண்ணால் பார்த்து எதையும் அவசரப்பட்டு விமர்சிக்க வேண்டாமே!

Read more...

இதைப் புந்ரிது கொள்ள முகிடிறதா?

Sunday, January 20, 2008

உகங்களால் கீகழ்ண்ட ஆகிங்ல வாத்ர்தைகளைப் புந்ரிது கொண்டு வாக்சிக முகிடிறதென்றால் அதாசரன மூயுளைடைவர்ளிகள் நீகங்ளும் ஒருவர்! எத்ழுதுக்களின் வரிசை எபப்டி இந்ருதாலும் சொகற்ளைப் புந்ரிது கொளுள்ம் ஆறற்லை மதனிமூளை பெறிற்ருப்பதாக Cmabrigde Uinervtisy ஆய்வு சொகில்றது.

முகிக்யமாக முதல் மறுற்ம் கடைசி எத்ழுதுக்கள் மடுட்ம் ஒங்ழுகாக இந்ருதாலே போதும்! நமது மூளையால் அக்தைகிரகித்துக் கொண்டு புந்ரிது கொளள் முயுடிமாம்! ஏன்னெறால் மதனிமூளை,சொகற்ளின் ஒவொவ்ரு எத்ழுத்தாகப் பப்டிபதில்லையாம்! இவாவ்ய்வு எல்லா மொகழிகளுக்கும் பொந்ருதுமா என்று தெயரிவில்லை.

I cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg. The phaonmneal pweor of the hmuan mnid, aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it dseno't mtaetr in waht oerdr the ltteres in a wrod are, the olny iproamtnt tihng is taht the frsit and lsat ltteer be in the rghit pclae. The rset can be a taotl mses and you can sitll raed it whotuit a pboerlm. Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe. Azanmig huh? Yaeh, and I awlyas tghuhot slpeling was ipmorantt! If you can raed this forwrad it.

தழிமில் நுப்னிபுல் மேதய்ல் எபான்ர்களே! அற்தகும் இற்தகும் சபம்ந்தம் உண்டா என்று தெயரிவில்லை. தெந்ரிதவர்கள் விக்ளக்கினால் நல்லது

Read more...

விஜய T.ராஜேந்தர் சிறப்புப் பேட்டி!

Wednesday, January 09, 2008


நேற்று நெல்லை மாவட்டத்தில் கட்சிக் கொடியேற்றி முடித்துவிட்டு தாடியைத் தடவிக் கொண்டிருந்த விஜய T.ராஜேந்தர் 'வெட்டிப் பேச்சு'க்கு அளித்த சிறப்புப் பேட்டி!


அதிரைக்காரன்: என்னா சார்! தாடி வெளுக்காமல் அப்படியே 'கரு.கரு'ன்னு வளர்ந்திருக்கு.


விஜய.T.R: நான் 'கரு'ணாநிதியே கதி என்று இருப்பதால் என் முடியும் 'கரு-கரு' என்று இருக்கின்றன போலும்!


அதிரைக்காரன் : உங்கள் கட்சி நிலவரம் எப்படி இருக்கிறது?


விஜய.T.R: பெரும் நஷ்டத்தில் இருக்கிறது. இந்தக் கொடியைக்கூட என் சொந்த செலவில்தான் வாங்கி வந்தேன் என்றால் நிலமை எப்படி இருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். கண்டவன் பின்னாடியும் அலையுறதாலதன் தமிழ்நாடு வல்லரசாக முடியலே! நாங்க ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை வல்லரசாக மாற்றுவோம்

அதிரைக்காரன்: சிலம்பரசாகவோ குறளரசாகவோ மாற்றாமல் விட்டால் சரி! அப்புறம் விஜயகாந்த் உங்களுக்குப் போட்டியா?


விஜய.T.R: எனது ஆஸ்தான குடும்ப சோதிடர் சொன்னபடி என் பெயருடன் 'விஜய' என்று சேர்த்துக் கொண்டுள்ளேன். சொல்லப் போனால் நான்தான் விஜயகாந்துக்குப் போட்டி!


அதிரைக்காரன்: உங்கள் கட்சியின் இலட்சியம் என்ன?


விஜய.T.R: ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவரை முதல்வராக்குவதே எங்கள் கட்சி முக்கியஸ்தர்களின் இலட்சியம்.என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. இனி வரும் தேர்தல்களில் எங்கள் கட்சி ஆதரவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்பதை பொறுத்திருந்து பாருங்க! இதைச் சொல்றது விஜய. டி.ஆருங்க!

அதிரைக்காரன்: உங்கள் கட்சி முக்கியஸ்தர்கள் யார் யார்?


விஜய.T.R: உ.வி.டி.ஆர்,ரா.சி.,ரா.கு.மற்றும் பலர்.!


அதிரைக்காரன்: என்னா சார் புதுப்புது பேரா இருக்கு? இவங்கல்லாம் யாருன்னு கொஞ்சம் விளக்க முடியுமா?


விஜய.T.R: இதுக்குத்தான்யா அரசியல் அரிச்சுவடி தெரியாத தத்தக்கா பித்தக்கா நிருபர்களுக்குப் பேட்டி கொடுக்கக் கூடாது. உ.வி.டி.ஆர்=உஷா விஜய டி.ராஜேந்தர், ரா.சி= சிலம்பரசன், ரா.கு= குறளரசன்!


அதிரைக்காரன்: உங்கள் மகள் இலக்கியா பெயரைக் காணோமே! அவங்களுக்கு அரசியல் பிடிக்காதா?


விஜய.T.R: அவங்களுக்கு அரிசியல்தான் பிடிக்கும். காலத்தின் கட்டாயத்தால் மத்திய அரசில் காபினட் அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே நிச்சயமாக கட்சித் தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்கு வருவார் என்று நம்புகிறோம்!


அதிரைக்காரன்: நீங்கள் தீவிர அரசியலில் இறங்கி சினிமாவுக்கு முழுக்குப் போடுவீர்களா?


விஜய.T.R: அரசியல்வாதிகளிடம் போய், நீங்கள் தீவிர சினிமாவில் இறங்கி அரசியலுக்கு முழுக்கு போடுவீர்களா?என்று கேட்பீரா? அவரவருக்கு எதில் லாபமோ அந்தத் தொழிலைச் செய்துவிட்டுப் போகட்டுமே.


அதிரைக்காரன்: அப்படீன்னா அரசியல் கட்சி நடத்துவது தொழில் என்கிறீர்களா?


விஜய.T.R: என் அனுபவத்தில் நான் அப்படித்தான் கருதுகிறேன். கலைச் 'சேவை' செய்வதாகச் சொல்லி சினிமாக்காரர்கள் சம்பாதிக்க வில்லையா? அதுமாதிரிதான் அரசியலும். நானெல்லாம் ஒரு கொள்கையோடு அரசியலுக்கு வந்தவன்.


அதிரைக்காரன்: ஓஹோ! உங்கள் கட்சியின் கொள்கைதான் என்ன?


விஜய.T.R:எக்காரணம் கொண்டும் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது.எங்கள் கொள்கையைச் சொல்லி விட்டால் "ப்பூ" இதானா என்று மற்றவர்கள் இளக்காரமாக நினைந்து விடக்கூடும் என்பதால் அதை தற்போதைக்குச் சொல்ல முடியாது.நேரம் வரும்போது நிச்சயம் சொல்வேன்!


அதிரைக்காரன்: மோடி, ஜெயலலிதா வீட்டில் பொங்கல் சாப்பிட வருகிறாரே! அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


விஜய.T.R: தமிழனின் முக்கிய டிஃபன் பொங்கல்.மற்றவர்களும் பொங்கலை விரும்பபினால் தமிழனுக்குப் பெருமைதானே! அதே போல், நரேந்திர மோடி ஜெயலலிதாவை குஜராத்துக்கு அழைத்து பாணிபூரி கொடுக்க வேண்டும்.


அதிரைக்காரன்: பொங்கலும் பாணிபூரியும் சேர்ந்தால் உருப்படுமா? வழக்கமா ஜெயலலிதா வடநாட்டு அரசியல்வாதிகளுக்கு அல்வா தான் கொடுப்பார். சமீபத்தில் மூன்றாவது அணி என்று சொல்லி நிறைய பேருக்கு அல்வா கொடுத்தார்.சென்ற சட்டமன்றத் தேர்தலில் உங்களுக்கும் கூட அல்வா கொடுத்தார்!


விஜய.T.R: ஜெயலலிதா மட்டுமா எனக்கு அல்வா கொடுத்தார். அதென்னமோ தெரியவில்லை என்னை பார்த்தாலே எல்லோருக்கும் அல்வா கொடுக்கத் தோன்றுகிறது.(கண்கலங்குகிறார்!) பிறகு ஆவேசமாக,


என் பேரு VTR
என் உண்மையான தலைவன் பேரு MGR
நானும் ஒருநாள் ஆவேன் முதல்வர்
எனக்குப் பின்னாடி என்னிரு புதல்வர்
நீ ஒரு வெட்டி! - ஒனக்கெல்லாம்
இனி கிடையாது பேட்டி!!
ஏய் டண்டனக்கா! ஏய் டண்டனக்கா!
எடத்தக் காலிபண்ணு மக்கா!
எக்கா!

பின்குறிப்பு: விரைவில் விஜய டி.ராஜேந்தர் இளைஞர்களைத் திரட்டி மாநாடு நடத்த இருக்கிறார். கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் பின்னூட்டத்தில் முன்பதிவு செய்யலாம்!

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP