மழை ஏன் 'சோ' ன்னு பெய்யிது?
Monday, October 16, 2006
இந்தியாவின் தேசிய ஆங்கில நாளிதழ் The Hindu வில் எங்களூரைப் பற்றிய செய்தி ஒவ்வொரு நாளும் வருகிறது. இதை எத்தனை பேர் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஊர் எங்கள் 'அதிராம்பட்டினம்'!!!
அதெல்லாம் சரி, நானும் டெய்லி ஹிந்து பேப்பரை விடாமல் படிக்கிறேன். அப்படி ஒன்னும் பெரிசா அதிராம்பட்டினத்தைப் பற்றி செய்தியைக் கண்டதாக ஞாபகம் இல்லையேன்னு 'அதிராம்பட்டினம் சொக்கு' மாதிரி முழிப்பவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் தயவு செய்து மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு முழிங்க என்பதே!
அப்புறம் 'அதிராம்பட்டினம் சொக்கு' அண்ணனைப் பத்தி சொல்றதுக்கு ஒன்னுமில்லே . ஏன்னா அப்படி ஒரு நபர் இல்லை என்பது இயக்குனர் திலகம் பாலச்சந்தருக்கே தெரியும். இதுக்கு முன்னால கே .ஏ.தங்கவேலு ஒரு படத்துல '' ஏய் எங்கிட்ட வச்சுக்காதே ! நான் அதிராம்பட்டினத்துக்காரன்" ன்னு வசனம் பேசியதாக சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் .
திருநெல்வேலி அல்வா கேள்விப்பட்டிருப்பீங்க! அதிராம்பட்டினம் நூர்லாட்ஜ் அல்வா பற்றியும் அல்வா கொடுப்பவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி . கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த வளர்ப்பு மகன் திருமணத்தில் பரிமாறப்பட்ட இனிப்பு வகைகளில் அதிராம்பட்டினம் நூர் லாட்ஜ் அல்வாவும் ஒன்று என்று நக்கீரன் நாளிதழ் குறிப்பிட்டது .
நடிகர் டெல்லி கணேஷ் திருநெல்வேலியில் அவுட்டோர் சூட்டிங்கின் போது ஆசைப்பட்டு வாங்கிய அல்வாவை மறுநாள் வீட்டில் ஆசையுடன் சாப்பிடத் திறந்தபோது ஏமாற்றம் அடைந்தாராம்! ஏனென்றால் திருநெல்வேலி அல்வா நடிகர் திலகம் சிவாஜி மாதிரி இருந்ததாம்!!! ஆமாம் பாத்திரத்துடன் ஒன்றி போய் !!!
அதிராம்பட்டினம் நூர்லாட்ஜ் அல்வாவுக்கு என்ன ஸ்பெஷல் என்றால் இதன் பாரம்பர்யம் சுமார் 50 வருடங்களுக்கும் மேல். ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களால் தயாரிக்கப்படும் இந்த அல்வாவைப்போல் இன்னும் யாரும் தயாரிக்கவில்லை என்பதும், அயல்நாடுகளில் இருக்கும் அதிரைக்காரர்களின் பேவரைட் ஸ்வீட் இந்த அல்வா என்பதும் தனிச்சிறப்பு . இரண்டு நாட்கள் முன்பே ஆர்டர் கொடுத்தால்தான் ப்ரெஷ்ஷாக கிடைக்கும்?! என்பதும் மரபு !
என்னடா இது! நட்சத்திர வாரத்துப் பதிவு அல்வா பற்றியே இருக்கிறது என்று கோபித்துக் கொள்பவர்கள் மன்னிக்க! ' அல்வாகட்டி செய்யது' பற்றியும் சொல்லாவிட்டால் 'துக்ளக் சோ' கோபித்துக் கொள்வார் . 'துக்ளக் சோ'வுக்கும் அதிராம்பட்டினம் செய்யது புகாரிக்கும் இருக்கும் பாரம்பர்ய தொடர்பு பெரும்பாலான துக்ளக் வாசகர்கள் அறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் .
துக்ளக் கேள்வி-பதில் பகுதியில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து கேள்வி கேட்டு வரும் ' அதிரை புகாரி' என்ற செய்யது புகாரி தமிழகத்தின் பிரபல வார இதழ்களில் நகைச்சுவைத் துணுக்கு எழுத்தாளர் . ஒருமுறை துக்ளக் சோ அவர்களிடம் மழை ஏன் 'சோ' எனப் பெய்கிறது என்று கேட்டதற்கு சோ "பின்னே 'செய்' என்றா பெய்யும் என்று சமாளித்தாராம் .
ஒரு வாரப்பத்திரிக்கையில் எழுதிய ஒரு நகைச்சுவை துணுக்கினால் மாதர் அமைப்பினர் கொதிந்து எழுந்த சம்பவமும் உண்டாம். துணுக்கு எழுதினால் ஏன் மாதர் சங்கங்கள் இவரை எதிர்க்க வேண்டும் என்று 'சோ' முழி முழிப்பவர்கள் பின்வரும் அவரின் ஜோக்கை படித்து முடிவுக்கு வரவும் .
கமலா : ஏண்டி சரசு! கொழந்தை வேணுமின்னு நாம ரெண்டு பேரும் ஒண்ணாதானே கோயில் அரசமரத்தை சுத்தினோம் . ஒனக்கு மட்டும் எப்படிடீ கொழந்த உண்டாச்சு?
சரசு: அது ஒண்ணுமில்லேடி கமலா, நீ கோவில் மரத்தைச் சுத்தினே . நான் கோவில் பூசாரியச் சுத்தினேன்!
21 comments:
அதிரைக்காரரே வணக்கம்,
உம்ம ஊர் தானவே தி இந்து பத்திரிக்கையின் வானிலை அறிக்கையின் தமிழ்நாடு பகுதியில் முதல் ஊராகவருகிறது. (அதற்குள் யாரோ தெருவாசி முந்திக்கொண்டார்யா - அவர் உங்களூர்க்காரராக இருக்கும் பட்சத்தில் அவரை போட்டியிலிருந்து விலக்கிவிடும் வே)
ரொம்ப குசும்புதான் :)
"மழை ஏன் 'சோ' ன்னு பெய்யிது?"
A try to cultivate the bald land?
- An ony
//சரசு: அது ஒண்ணுமில்லேடி கமலா, நீ கோவில் மரத்தைச் சுத்தினே . நான் கோவில் பூசாரியச் சுத்தினேன்! //
nuaghty joke
The Hindu is a TOILET PAPER.
//அதற்குள் யாரோ தெருவாசி முந்திக்கொண்டார்யா - அவர் உங்களூர்க்காரராக இருக்கும் பட்சத்தில் அவரை போட்டியிலிருந்து விலக்கிவிடும் வே)
தங்கவேல்,
அந்த முந்திரிக்கொட்டை தெருவாசியை தெருவை விட்டே விலக்கிடலாம்னு இருக்கோம்.
ரொம்ப குசும்புதான் :)
சென்ஷிங்கற பேரு கூடதாம் குசும்பா இருக்கு.
"மழை ஏன் 'சோ' ன்னு பெய்யிது?" A try to cultivate the bald land? - An ony/
Anony (பொறம்போக்கு?) மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாமல் கேட்கிறீங்களே! சபாஷ்!
//nuaghty joke//
அணானி +1,
நல்லவேலை கம்ம Naughty Joke னு சொல்லாம விட்டீங்களே!
//நீ கோவில் மரத்தைச் சுத்தினே . நான் கோவில் பூசாரியச் சுத்தினேன்!//
கோயில் மரத்தை வெட்டினேன்!
மரம் கூடாது என்பதற்காகவல்ல; பூசாரியின் கற்பு பறிபோய்விடக் கூடாது என்பதற்காக!
அப்பாவி பூசாரி ஓடினான், ஓடினான்; கோயிலை விட்டே ஓடினான்.
விட்டாளா அந்த சரசு? ;-)
இன்றைக்கு இங்கு ஜல்லியடிக்கும் இந்தச் சமுதாயம் பூசாரியின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும்; அவனுடைய வாட்டத்தைப் போக்கி இருக்க வேண்டும் அரசாங்கம்.
(பராசக்தியிலே கணேசன் இப்படித்தான் பதறுவாரு!)
'திருநெல்வேலி அல்வா நடிகர் திலகம் சிவாஜி மாதிரி இருந்ததாம்!!! ஆமாம் பாத்திரத்துடன் ஒன்றி போய் !!! 'Nalla eshuti irunteenga :)
மிகத் தெளிவாகச் சுவையாக யார் மனதையும் புண்படுத்தாமல் நகைச்சுவை எழுத உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. நன்கு இரசித்தேன்.
தலைப்பைப் பார்த்தவுடன் மீண்டும் சோவைத் திட்டி இன்னொரு பதிவா என்று மனதில் அலுத்துக் கொண்டே தான் பதிவைப் படித்தேன். பாலை வார்த்தீர்கள். (சோவைத் திட்டுவது தவறு என்று சொல்லவில்லை. உங்களுக்குத் திட்ட வேண்டும் என்றால் தாராளமாகத் திட்டிக் கொள்ளுங்கள் - இந்த டிஸ்கி என்னை மொத்த வரும் அன்பர்களுக்காக. யாருக்குத் தெரியும் எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமென்று).
உங்க ஊரு பேரு மட்டும் இல்லீங்க அதிரைக்காரரே. எங்கூரு பேரு கூடத் தேன் தெனமும் இந்து பேப்பருல வருது. அக்காங்.
இப்படிக்கு,
மதுரைக்காரன்.
//நக்கீரன் நாளிதழ் குறிப்பிட்டது .//
நக்கீரன் நாளிதழ்? எப்பத்லருந்து?
//மிகத் தெளிவாகச் சுவையாக யார் மனதையும் புண்படுத்தாமல் நகைச்சுவை எழுத உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. நன்கு இரசித்தேன்.//
நன்றி குமரன். கருத்துப் பரிமாற்ற தளங்களில் அடுத்தவரின் மனதை புண்படுத்த வேண்டிய அவசியமில்லை. இதை சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொண்டால் ஆடுகள் கழுதையாக்கப் படாது :-)
//(சோவைத் திட்டுவது தவறு என்று சொல்லவில்லை. உங்களுக்குத் திட்ட வேண்டும் என்றால் தாராளமாகத் திட்டிக் கொள்ளுங்கள்//
சோ அவர்களிடம் பிடித்த மூன்று அம்சங்கள் 1) திருட்டு முழி 2) மொட்டை 3) நகைச்சுவை. நான் பிடித்ததை வைத்து எழுதினேன். மற்றவர்கள் பிடிக்காததை எழுதி இருக்கலாம். இப்பதான் வலைப்பூக்களில் யாரும் யாரையும் திட்டிக் கொள்ளலாமே!
//உங்க ஊரு பேரு மட்டும் இல்லீங்க அதிரைக்காரரே. எங்கூரு பேரு கூடத் தேன் தெனமும் இந்து பேப்பருல வருது. அக்காங்.//
என்ன இருந்தாலும் எங்க ஊரு பேரு முதல் இடத்தில் இருக்குதே!!! அப்பாவி: அப்படீன்னா ஹிண்டுவில் வராத ஊர்களில் மழையோ வெயிலோ அடிப்பதில்லையா?
//நக்கீரன் நாளிதழ்? எப்பத்லருந்து?//
அனாணி சார்,
நக்கீரன் வார இதழ்னு படிங்க! (வார இதழோ, வாரம் இருமுறையோ எப்படியும் ஓசிலதானே படிக்கப் போறீங்க!)
தங்கள் எழுத்தையும்; அவர் நகைச்சுவைத் துணுக்கையும் நன்கு ரசித்தேன்.
மழை ஏன் சோ(மாரி) பெய்யுது?
Post a Comment