NRI-க்களுக்கு கடைசி(யில்) எச்சரிக்கை

Thursday, October 19, 2006

வெளிநாட்டுக்கு வரும் இந்தியர்களில் தமிழர்களை அடையாளம் காண்பது ரொம்ப சுலபம்! அதற்கான வழிமுறைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். நான் முதன்முதலில் வெளிநாடு வந்தபோது கண்டவற்றை சொல்றேன். சிலருக்கு எப்படிடா நம்மை இவன் கவனித்தான் என்று அதிர்ச்சியாக இருக்கலாம். இருந்தாலும் சொல்றேன்.

அ) விமான நிலையத்தில்:

  1. Check In பண்ணும் முன், வழியனுப்ப வந்திருப்பவர்களில் ஓரிருவராவது தேம்பித் தேம்பி அழுது கொண்டே Departure Gate நோக்கிச் செல்வார்.
  2. லக்கேஜ் வெயிட் போடும் இடத்திலிருந்து கொஞ்சம் தூரம் தள்ளி ஒரு பெரிய சூட்கேசையும் பிளாஸ்டிக் பையையும் பக்கதிலுள்ள தூணுக்கு பின்னாடி மறைத்து வைத்து விட்டு மற்றவற்றை லக்கேஜில் போடுவார்.
  3. Allowed Baggage ஐ விட அதிகமாக இருக்கும் போது, ஏர்லைன்ஸ் முகவரிடம் கருணை காட்டச் சொல்லி கெஞ்சுவார்.
  4. Boarding Pass கொடுக்கும் போது ஜன்னல் பக்கம் இருக்கை கேட்டுப் பார்ப்பார்.
  5. இலவச தொலைபேசியில், தேவையில்லாமல் கண்ட கண்டவருக்கும் போன் போட்டு 'எந்தப்பிரச்சியையும் இல்லாமல் Boarding Pass வாங்கி விட்டதாகவும், ப்ளைட்டுக்கு காத்திருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பி விடுவதாகவும் கத்துவார்.
  6. விமானத்தில் நுழைவாயிலில் வரவேற்கும் அழகான விமானப் பணிப்பெண்ணிடம் கை குலுக்கி விட்டு உள்ளே நுழைவார்.
  7. Hand Luggage ஐ தலைக்கு மேலுள்ள பகுதியில் வைத்ததுடன் கையில் கொண்டு சென்ற (லுங்கி, செருப்பு, ப்ரஸ்,பேஸ்ட், பழைய வார இதழ்கள் அடங்கிய) பிளாஸ்டிக் பையை தனது காலுக்கருகில் வைத்துக் கொள்வார்.
  8. டாய்லெட்டில் சென்று, (கதவை மூடாமல் அல்லது மூடத் தெரியாமல்) வாஷ்பேசினில் வைக்கப்பட்ட (பேஸ்ட், சேவிங் கிட், சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட) ஒப்பனை சாதனங்களை பாண்ட் பாக்கெட்டில் எடுத்துப் போட்டுக் கொள்வார்.
  9. விமானத்தில் சீட் பெல்ட் போடச் சொல்லி அறிவிப்பு வந்த பின்னரும், பக்கத்தில் இருப்பவருடன் அரட்டையடித்துக் கொண்டிருப்பார். விமானப் பணிப்பெண் அருகில் வந்து பெல்டைப் போடச் சொல்லி விட்டுச் செல்வார்.
  10. விமானம் பறக்க ஆரம்பித்த சில நேரங்களில் கொடுக்கப்படும் Complimentary chocolate ஐ கொத்தாக அள்ளுவார்.
  11. பரிமாறப்படும் (Inflight Catering) உணவுடன் வழங்கப் படும் அனைத்தையும் தேவைப்படா விட்டாலும் இலவசமாகக் கிடைத்தது என்பதற்காக பயன்படுத்துவார். உதாரணமாக ஆரஞ்ச் ஜூசையும் பால்கலந்த தேனீரையும் அடுத்தடுத்து அருந்துவார்.
  12. குடிகாரப் பயணிகள் வழக்கமாக வழங்கப்படுவதை விட மேற்கொண்டு கேட்டு அசடு வழிவார்கள். கொறிக்க வழங்கப்படுவதையும் தாராளமாக அள்ளிக் கொள்வார்கள்.
  13. நல்ல ஆரோக்கியமாக இருந்தாலும், ப்ளாங்கெட் வாங்கி போர்த்திக் கொள்வார்கள். மறக்காமல் அதை சுருட்டி கொண்டு சென்ற ப்ளாஸ்டிக் பையின் அடியில் மடித்து வைப்பார்கள்.
  14. விமானம் நிலையத்தை அடைந்ததும் கடைசியில் இருப்பவர்கள் முந்திக் கொண்டு வாசலுக்கு வருவார்கள். ஹேண்ட் லக்கேஜை எடுக்கும் போது கீழே உட்கார்ந்திருப்பவரின் தலையில் இடித்து விட்டு பண்பாடு கருதி "சாரி" சொல்வார்கள்.
  15. சுங்கப் பரிசோதனையில் முழு பெட்டியையும் தலை கீழாகக் கவிழ்த்து சோதிக்கப்பட்டு அவமானப் படுத்தப்படுவார்கள்.
  16. ஏர்போர்ட்டில் வரவேற்க காத்திருப்பவர்களிடம், ஊர்ல எல்லோரும் நல்லா இருக்காங்கன்னு சொல்லி பீலா விடுவார். மறுநாள் ஒவ்வொருத்தவரைப் பற்றியும் எடுத்து விட ஆரம்பிப்பார்.

கடை வீதியில் அல்லது சூப்பர் மார்க்கெட்டில்:

  1. முதலில் பொருளின் விலையைத் தேடுவார்.
  2. Buy One Get One செக்சனையே சுத்தி சுத்தி வருவார்.
  3. Perfume களை ஒவ்வொன்றாக அடித்துப் பார்ப்பார். எல்லாவற்றையும் அடித்துப்பார்த்து ஒரு புதுவாசனையுடன் வலம் வருவார்.
  4. உணவுப் பொருட்களின் சாம்பிளை மறக்காமல் எடுத்துச் சாப்பிட்டு விட்டு வாங்காமல் இடத்தைக் காலி பண்ணுவார்.

பணியிடத்தில்:

  1. பெரும்பாலும் ஒவ்வொருநாளும் அரக்கப் பறக்க பணிக்கு வருவார்.
  2. வேலை முடிந்து செல்லும் போது நியூஸ் பேப்பரை மறக்காமல் சுருட்டி எடுத்துச் செல்வார்.
  3. ஹிந்தி தெரியுமா என்று யாராச்சும் கேட்டால், தெரியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்பார்.
  4. மாங்கு மாங்கென்று உழைத்தாலும் கடைசியில் கெட்ட பெயர்தான் கிடைக்கும்.
  5. எந்த நாட்டுக்காரனாவது வில்லனாக இருப்பார்கள்.

இவையெல்லாம் நம்மவர்களை இழிவு படுத்துவதற்காக சொல்லவில்லை. மேற்சொன்னவற்றில் சில எனக்கும் பொருந்தி இருக்கலாம். உலகம் முழுவது பணி செய்யும் இந்தியர்களில் தமிழர்களின் நிலை இதுவாகவே இருக்கிறது. மனசாட்சிக்கு பயந்து நேர்மையாக உழைத்தாலும் பெரும்பாலான தமிழர்கள் நிம்மதியின்றியே இருக்கின்றனர் என்பது என் கனிப்பு.

NRI தமிழர்களை அவமதிப்பதாக என் மீது கோபத்திலிருப்பவர்கள் கீழுள்ள ஒரு NRI யின் கடிதத்தைப் படிக்கவும்.சொற்ப சம்பளத்தில் குடும்பம் நடத்தும் NRI கணவன் தன் இயலாமையை வெளிக்காட்டாமல் சாதுர்யமாக மனைவிக்கு எழுதிய கடிதத்தையும் அதற்கான அவளின் பதில் கடிதமும் (பிறரின் கடித்தையோ டைரியையோ படிப்பதுதான் அநாகரிகம்; சுயசரிதம் என்று காசுக்கு எழுதி விற்றால் படிக்கலாமாம்.)


--------------------------------------------------------------------------


அன்பே,

இந்த மாதம் உனக்குச் செலவுக்கு பணம் அனுப்ப முடியவில்லை. அதனால் என்ன இருக்கவே இருக்கிறது என் அன்பான முத்தங்கள். ம்..மா..இந்தா புடி.

நூறு முத்தங்களுடன்....

கணவன்.

----------------------------------------------------------------------------
கடிதத்தை பெற்றுக் கொண்ட மனைவி எழுதிய பதில்.



அன்பே ஆருயிரே...!

இந்த மாத செலவாக அனுப்பி வைத்த நூறு முத்தங்களுக்கு நன்றிகள். அதை எப்படி செலவு செய்தேன் என்ற விபரத்தை அறிவீராக.

1) பால்காரர் இரண்டு முத்தங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் பால் தர ஒப்புக் கொண்டுள்ளார்.

2) மின்கட்டணம் வசூலிப்பவர் குறைந்த பட்சம ஏழு முத்தங்களுக்குப் பிறகே மின்கட்டனத்தை தள்ளுபடி செய்ய முடியும் என்று கறாராக சொல்லி விட்டார்.

3) வீட்டு வாடகை கேட்டு வந்த வீட்டு உரிமையாளர் ஒவ்வொரு நாளும் 2-3 முத்தங்களே போதும்; வாடகை வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

4) மளிகைக் கடைக்காரர் முத்தங்கள் மட்டும் போதாது என்றதால் வேறு சிலவும் கொடுத்து சமாளித்து விட்டேன்.

5) மற்ற செலவுகளுக்கும் ஒன்றிரண்டு முத்தங்களாக நாற்பது முத்தங்கள் காலி.

என்னைப் பற்றி கவலை பட வேண்டாம். நான் சந்தோசமாகவே இருக்கிறேன். கைவசம் முப்பதைந்து முத்தங்கள் உள்ளன. இதை வைத்து இந்த மாதமும் சமாளித்து விடலாம் என்று நம்புகிறேன். இதே முறையை அடுத்தடுத்த மாதத்துக்கும் செய்ய உள்ளேன். சரி வருமா? பதில் போடுங்கள். மற்றபடி உங்கள் உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். பாவம், அங்கு நீங்கள் தனியாக இருக்கிறீர்கள்.

அன்புடனும் காதலுடனும்,

மனைவி

40 comments:

priya 10/20/2006 3:29 AM  

What a stupid post.

குமரன் (Kumaran) 10/20/2006 4:41 AM  

இதில் சொல்லப்பட்ட ஓரிரண்டைத் தவிர மற்றதெல்லாம் நான் செய்ததில்லையே? நான் தமிழனா இல்லையா???? :-(((

அதிரைக்காரன் 10/20/2006 4:49 AM  

//What a stupid post. //

Dear Iniyan,

I think you forgot '? mark in you comment. If so, my answer is "A stupid post is a post that fools other by a stupid for a imprudent purpose. If my post reflects the above conditions, called stupid post.

என் பார்வையில் பட்ட மகா மட்டமான வலைப்பூ :-)))
Take it easy my dear!

Anonymous 10/20/2006 4:57 AM  

unbelievably immature

அதிரைக்காரன் 10/20/2006 5:02 AM  

/இதில் சொல்லப்பட்ட ஓரிரண்டைத் தவிர மற்றதெல்லாம் நான் செய்ததில்லையே? நான் தமிழனா இல்லையா???? :-(((//

குமரன்,

குறைந்தது பத்தாவது செய்திருக்கனும். மனம் தளராதீர்கள். முயற்சி செய்தால் நீங்கள் விரைவில் NRI தமிழனாகி விடலாம்! :-)

(ஆமா அந்த ஒன்றிரண்டு எவை?)

Anonymous 10/20/2006 5:36 AM  

பிரமாதம்... இன்னும் ஒரு 100 விஷயம் இருக்கே... குறிப்பா... இந்தியர்கள் வரும்போ உம்முன்னு போயிட்டு, வேற யாராவது வந்தா.. ஹே..வாட்ஸ் அப் !

bala 10/20/2006 5:43 AM  

அதிரைக்காரன் அய்யா,

தாங்கள் நம்ம சிங்கப்பூர் NRI களான இரண்டு பேரை மனசுல நினைத்து எழுதின மாதிரி இருக்கு..ஒன்ணு பூனை,இன்னும் ஒண்ணு ஸ்ரீலங்காவோட ராஜாவா இருந்தவர்.

பாலா

Anonymous 10/20/2006 5:44 AM  

I am a kodambakkam tamilan. i always ask adult film in flight

tr3nta 10/20/2006 5:46 AM  

I dont even know what language is it... but is beautiful..

Sivabalan 10/20/2006 6:25 AM  

பல வற்றை தைரியமாக சொல்லியிருக்கிறீர்கள்.

இதில் எல்லாமும் எல்லாருக்கும் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் நடக்கும் விசயங்களைத்தான் எழுதியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள்.

Anonymous 10/20/2006 9:32 AM  

Yov! dont criticize our sweet tamils. They are very innocent sweet people

BadNewsIndia 10/20/2006 9:56 AM  

முக்கியமானத விட்டுட்டீங்க.

வேலை நேரத்தில் அரட்டை அடிக்கும்போது "நம்ப ஊரு சுத்தமா சரி இல்லப்பா. ரோடு சரியில்ல, கொசுத்தொல்லை, அரசியல்வாதி சொரண்டரான்" என்று புலம்புவர்.

அரட்டை நேரம் முடிந்ததும் குமுதம், விகடன், தினகரன் என்னெல்லாம் ஓ.சி ல படிக்க முடியுமா அதை எல்லாம் அலுவலக நேரத்திலே படிப்பர்.

விடுமுறைல ஊர்க்கு போவும்போதெல்லாம், என்னென்ன விதிகளை மிற முடியுமா எல்லாத்தையும் மீறி , நிலம், வீடுகளை வாங்கி குவிப்பர்.

திரும்ப வந்தது, ஊர் சரி இல்லப்பா, கரப்ஷன் எங்க பாத்தாலும் என்று மீண்டும் ஒரு புலம்பல்.

வேடிக்கை மனிதர்கள்தான் நம்ப NRIs.

Anonymous 10/20/2006 1:42 PM  

உன்னல்லாம், இந்த வார நட்சத்திரமா போட்டாங்க பாரு, அவங்களை சொல்லனும்... என்ன பதிவுடா இது.. நட்சத்திர பதிவு.. டோட்டல் வேஸ்ட்

அதிரைக்காரன் 10/20/2006 1:54 PM  

//unbelievably immature//

என்ன மணி அண்ணா! நான் பொதுவாத்தானே சொன்னேன். உங்களை நான் எங்காவது குறிப்பிட்டிருக்கேனா? இதுக்கெல்லாம் கோவிச்சுக்கலாமா!

சரி...சரி...இனியாச்சும் வெளிநாட்டுல Mature இருங்க! :-)

அதிரைக்காரன் 10/20/2006 1:58 PM  

//பிரமாதம்... இன்னும் ஒரு 100 விஷயம் இருக்கே... குறிப்பா... இந்தியர்கள் வரும்போ உம்முன்னு போயிட்டு, வேற யாராவது வந்தா.. ஹே..வாட்ஸ் அப் ! //

சேவியர்,

இது ஒருவகையில நல்லதுதான். எனக்குத் தெரிஞ்ச நண்பரின் அலுவலகத்திற்கு வந்த உள்ளூர்காரர் சக ஊழியர்களிடம் நண்பரின் வண்டவாளங்களை விளையாட்டாகச் சொல்லி வைக்க, பின்னாடி மானத்தை வாங்கிட்டாங்களாம்.

அதிரைக்காரன் 10/20/2006 2:01 PM  

//நம்ம சிங்கப்பூர் NRI களான இரண்டு பேரை மனசுல நினைத்து எழுதின மாதிரி இருக்கு..ஒன்ணு பூனை//

பாலா,

சிங்கப்பூர்ல NRI அந்தஸ்து பூனைக்குமா கொடுக்கிறாங்க? பேஷ்..பேஷ்!!

அதிரைக்காரன் 10/20/2006 2:02 PM  

//I am a kodambakkam tamilan. i always ask adult film in flight //

அனாணி,

கொஞ்சம் பொறுமையா ஊர்வரும்வரை இருக்க முடியாதா?

Santhosh 10/20/2006 2:03 PM  

அண்ணாச்சி,
இது எல்லாம் படிக்காத கள்ளத்தோணி ஏறி வரும் துபாய்,சிங்கப்பூர், மலேசியா போன்ற ஊர்களில் நடக்க சாத்தியம் இருக்கு. அதுவும் இப்பொழுது இது எல்லாம் வெகுவாக குறைந்து விட்டது. ரொம்ப வருசத்துக்கும் முன்னாடி யாரோ அனுப்பின ஒரு மெயில் உங்களுக்கு ரொம்பப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் லேட்டா வந்து இருக்குன்னு நினைக்கிறேன்.

அதிரைக்காரன் 10/20/2006 2:05 PM  

//I dont even know what language is it... but is beautiful.. //

tr3nta,

It is Tamil language!!! (நான் நினைக்கிறேன் இது போலி டி.ராஜேந்தரோட பின்னூட்டமுன்னு:-)))

அதிரைக்காரன் 10/20/2006 2:09 PM  

கெட்ட இந்திய செய்தி,

நம்ம NRI க்கள் பற்றிய என் பழைய பதிவையும் கொஞ்சம் பார்த்துடுங்க!

அதிரைக்காரன் 10/20/2006 2:11 PM  

//பல வற்றை தைரியமாக சொல்லியிருக்கிறீர்கள்.//

தைரியமாகவா! நீங்க வேற சார்! ப்ரவ்சிங் செண்ட்டரில் இருந்து கொண்டு இப்பதிவை எழுதும்போது தலையில் துண்டை போட்டுக் கொண்டு அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டல்லவா எழுதினேன்.

அதிரைக்காரன் 10/20/2006 2:13 PM  

//Yov! dont criticize our sweet tamils. They are very innocent sweet people //

அணானி,

நல்லா பதிவை படிங்க! இதையெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் திருத்திக் கொள்ள முடிந்தால் நம் மதிப்பு இன்னும் உயரும் என்ற உள்குத்து மறைந்துள்ளது.

அதிரைக்காரன் 10/20/2006 2:18 PM  

//ரொம்ப வருசத்துக்கும் முன்னாடி யாரோ அனுப்பின ஒரு மெயில் உங்களுக்கு ரொம்பப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் லேட்டா வந்து இருக்குன்னு நினைக்கிறேன். //

கடந்த நாற்பது வருசமா நான் ஈமெயில் பயன்படுத்தறேன். இந்த மெயில் சென்ற வாரம்தான் சார் வந்துச்சு! :-((((

அதிரைக்காரன் 10/20/2006 2:21 PM  

//உன்னல்லாம், இந்த வார நட்சத்திரமா போட்டாங்க பாரு, அவங்களை சொல்லனும்... என்ன பதிவுடா இது.. நட்சத்திர பதிவு.. டோட்டல் வேஸ்ட் //

என்ன பன்றது அணானி,

உங்கள் மாதிரி காசு கொடுத்து எழுதச் சொன்னா மத்தவங்க மாதிரி அறிவுப்பூர்வமாக எழுதலாம். நாம் ஓசி கேசுதானே!

(நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும் இப்படித்தான் எழுத முடியும். ஏன்னா நம்ம மேல்மாடில சரக்கு அவ்வளவுதான்.)

மாதங்கி 10/20/2006 2:59 PM  

NRI
இந்தியர்கள் என்ற தலைப்பில் எழுதப்பட்ட குறிப்புகள் போல் சில நையாண்டிகள் ஐரிஷ், ஸ்காட்லாண்ட் , இங்கிலாந்து காரர்கள் ஒருவரை ஒருவர் நையாண்டி செய்வது, இதுபோன்றவை ஒவ்வொரு நாட்டினருக்கும் இருக்கிறது ஆதிரைக்காரரே,

ஒரு மாதம் லீவில் வெளிநாட்டிலிருந்து ஐந்து வயது மகனுடன் சென்னை வந்த பெற்றோர் " அவனுக்கு வேணுங்கிற தினப்படி ஜூஸ் , க்ராக்கர், இதெல்லாம் மூன்று மாதத்திற்கு கொண்டுவந்துவிட்டேன் ( கணவன் ஊருக்குச் சென்ற பின் இவர்கள் இன்னும் ஓரிரு மாதம் இருப்பர்) ஜூஸ்செல்லாம் மூன்று மாதத்திற்கு என்றால் வெயிட் சாஸ்தி இருக்குமே,... இது நான்
இல்லை I ration and give his quota of juice.



இதில் உள்ள பல விஷயங்களில், குறிப்பு எண் 14 பற்றி இன்னும் கொஞ்சம்
முழுதாக பல மணிநேரங்கள் உட்கார்ந்திருக்கும் பொறுமை, தலைக்கு மேலே உள்ள ஹாண்ட் லக்கேஜை எடுக்கலாம் என்று அறிவிப்பு வருவதற்குள் போய், விழுந்தடித்துக்கொண்டு, முதலில் சென்றுவிடவேண்டும் என்ற ஆவலில்
எடுப்பதால், எடுப்பவர் மட்டுமன்றி பிறரையும் ஆபத்தில் தள்ளுகிறார்.

அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலான அளவுள்ள பெட்டிகளை எடுத்துச் செல்வது,.. (அவங்க கண்டுபிடிச்சு கேட்டா பார்த்துக்கிறது,... என்ற அலட்சிய மனோபாவம்)
மற்றவர்கள் பெரும்பான்மை அடுத்தவரை காயப்படுத்தாத செய்கைகள். இதைப் படியுங்கள்

Inflight mishap forces surgeon to
change career.

A former ENT sugeon had to give up operating and switch to research after a suitcase from an overhead compartment fell over him and hurt his neck ,....
Dr. Euan Murugasu, 42 a President scholar,....
.... was injured on May 28 2000 while he was enroute to Manchester, Britain to speak at an international medical conferences.
A passenger who boarded during a stopover in Mumbai tried to place a suitcase that was larger than what is allowed as hand luggage into the compartment above the specialist seat. It fell out on to his head and back.
After that the surgeon frequently felt pain in his neck and arms while operating......

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஜூலை 8 2004ல் வந்த செய்தி

Machi 10/20/2006 6:37 PM  

/மேற்சொன்னவற்றில் சில எனக்கும் பொருந்தி இருக்கலாம். /
காக்கே அது என்ன "இருக்கலாம்" ஒரு தொங்கலோட விட்டுட்டீங்க.
அது "மேற்சொன்னவற்றில் சில எனக்கும் பொருந்தி இருக்கிறது" என்றல்லவா இருக்க வேண்டும். காக்கே நீங்க Gulf NRI ன்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன்.

மாதங்கி 10/21/2006 2:26 AM  

அதிரைக்காரரே (ஆஎன்று தவறாக தட்டச்சு செய்துவிட்டேன்) மற்றைவைகள் என்று தயவுசெய்து வாசிக்கவும் ( மற்றவர்கள் என்பது - சாரி மீண்டும் பிழை)

அதிரைக்காரன் 10/21/2006 2:59 AM  

மாதங்கி,

செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் விமானத்தில் பயணிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை எழுகிறது. சில உருப்படாத விமானக்களில் சாமான்களை வைக்கும் பெட்டி சில சமயம் மூட வராமல் திறந்த நிலையிலேயே இருப்பதை பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் இந்தியாவுக்குச் செல்லும் விமானங்கள் படு மோசமானவையாக இருக்கின்றன. குறிப்பாக சென்னை வரும் விமானங்கள் படு மோசம். நாமளும் காசுகொடுத்துதானே பயணம் செய்கிறோம் என்பதை விமானக் கம்பெனிகள் உணரவேண்டும்.

அதிரைக்காரன் 10/21/2006 3:01 AM  

//காக்கே அது என்ன "இருக்கலாம்" ஒரு தொங்கலோட விட்டுட்டீங்க.
அது "மேற்சொன்னவற்றில் சில எனக்கும் பொருந்தி இருக்கிறது" என்றல்லவா இருக்க வேண்டும்.//

சரி! மேற்சொன்னவற்றில் சில உங்களுக்கும் பொருந்தி இருக்கிறது! (இதைத்தானே நீங்கள் என்னிடமிருந்து எதிர்பார்த்தீர்கள்?)

Hariharan # 03985177737685368452 10/21/2006 3:58 AM  

இதெல்லாம் ஏரோப்ளானினும் ஏர்போர்ட்டிலும் எங்களது அதிரடியான உரிமைகள்! இதை எப்படிக் கிண்டலடித்து அதிரைக்காரர் பதிவு போடலாம்.

உங்களுக்கு தமிழ்மணத்தில் ஒருவாரம் தான் நட்சத்திரமாக ஜொலிப்பு.

நாங்கள் இல்லைன்னா ஏர்போர்ட்டிற்கு ஏது தினசரிக்கும் ஜொலிப்பு? ஏரோப்ளேனுக்கு ஏது மதிப்பு?

உலக ஏவியேசன் இண்டஸ்ட்ரியின் எல்லா டிபார்ட்மெண்டுக்கும் சிம்மசொப்பனம் நாங்க தானே எல்லா நாளும்!

மேட்டர் கரெக்டு... மெட்டுதான் டபாய்க்கிறீங்களோன்னு யோசிக்க வைக்குது!

Machi 10/21/2006 6:03 AM  

/ சரி! மேற்சொன்னவற்றில் சில உங்களுக்கும் பொருந்தி இருக்கிறது! (இதைத்தானே நீங்கள் என்னிடமிருந்து எதிர்பார்த்தீர்கள்?) /

நான் "NRI" தமிழன் தான் ஐயம் வேண்டாம். நீங்க "NRI" ஆ இல்லையான்னு கேட்டா நீ "NRI" என்று சொல்லுவது நல்லா இல்லே காக்கே. கேள்விக்கு பதில் வேண்டும். :-)

╬அதி. அழகு╬ 10/21/2006 9:22 AM  

தமிழனை இழிவு செய்து ஒரு பதிவா?

திராவிட(த்) தமிழர்கள் எங்குத் தொலைந்து போயினர்?

Anonymous 10/23/2006 2:40 PM  

ithu naiyaindiyilum serathu, nagaichuvai paguthiyilum serathu..
solliyavaigalil,90% stupidity..10% unmaikkaga,NRI tamizhargalin manam kayapaduthiyathu thaan micham.!!
appuram,sakku pokku solli, ulkuthu,velikuthunnu pinnutam vera..ponga sir, ponga!!
-ss

Anonymous 11/20/2006 2:59 AM  

dont leave these things

How to Spot an Indian...... .

* Everything you eat is savoured with garlic, onions and chillies.

* You try and re-use gift wrappers, gift boxes, and of
course aluminium foil.

* You are standing next to the two largest size
suitcases at the airport.

* You arrive one or two hours late to a party, and think it's normal.

* You peel the stamps off letters that the Postal
Service missed to stamp.

* Your toilet has a plastic bowl next to the commode.

* All your children have pet names, which sound
nowhere close to their real names.

* You talk for an hour at the front door when leaving
someone's house.

* You load up the family car with as many people as
possible.

* You use plastic to cover anything new in your house
whether it's the remote control, VCR, carpet or new
couch .

* You live with your parents even if you are 40 years
old. (And they like it that way).

* If she is NOT your daughter, you always take interest in
knowing whose daughter has run with whose son and feel
it's your duty to spread the word.

* You only make long distance calls after 11pm.

* If you don't live at home, when your parents call,
they ask if you've eaten, even if it's midnight.

* When your parents meet Indian for the first time and
talk for a few minutes, you soon discover they are
your relatives.

* Your parents don't realize phone connections to
foreign
countries have improved in the last two decades, and
still scream at the top of their lungs while talking.

* You have bed sheets on your sofas so as to keep them
from getting dirty.

* It's embarrassing if your wedding has less than 600
people.

* You list your daughter as "fair and slim" in the
matrimonial no matter what she looks like.

* You're alw ays interested to know/interfere in others'
personal matters, what they are doing, where they are
going, etc.

* You have really enjoyed reading this mail because
you know some, or most of them, applies to you!


jai indians

Anonymous 11/23/2006 7:18 AM  

Because.... most of the passengers are first time passengers. Their socio economic background is not so advanced. There is no surprise in these issues. you can not see any of your listed attributes in rich, elite class frequent fliers. This is not the identification of Tamil people only. Completely stupid comprehension.

Gnaniyar @ நிலவு நண்பன் 10/22/2007 4:01 PM  

ம் எல்லாமே கண்டிப்பாக உங்களின் அனுபவமாகத்தான் இருக்ககூடும்

ரசனையோடு எழுதியிருக்கின்றீர்கள்

Anonymous 12/30/2007 8:29 AM  

Hey you Mr Adiraikkaran,,, first time visited your blogspot here.. What do you think of yourself? do you think you are Mr Something?.. what a CRAP?.. Adirai should be really ashamed of you..

Saraswathy 3/11/2008 4:51 AM  

First request is... Plz donn make fun of an NRI... particularly Tamizhian....
may be ,they do travel for the first time..they donnno how to carry themselves... once u get to know ... they wonn rite....

n u think only Indians Particularly tamilians do behave like dis....(Buy 1 get 1...using oosi sample)
i can quote one instance....
Hope u guys know Naihaa in Adyar-Chennai,
A particular group of foreigners (2 lady n a 2 Gen)came for shopping, they said they wanna get saree.... the shop ppl helped them to select them a saree..n the foreigners said they wanna have a trial..the shop girls helped them to wear the saree in a very neat form....after tat.. do u know wat happn?
do u think they got the saree.....

They took snaps n said..later.. i donn need it ...
n tat foreigner lady said, she already has one saree.... and they left the shop without gettin anything....
wat do u say for dis?

see..... if u can say like..pls follow dis wen u travel abroad..tats good....

but the way it was said.....
u can spot an NRI as follows..an u gave ur description.....it was not nice....

BHARATHI GROUP 11/14/2008 4:53 AM  

i found onething from this post. if a person wasting his time in writing in net very foolishly,there are some adimuttaalgal also there to comment and appreciate this foolishness.anyhave dont waste ur time like this.really stupid thing.ok try to do something meaningful.

Anonymous 4/23/2009 2:14 AM  

its all bullshit, this is a bad habit of a tamilan making fun of other tamilan,


Thirunthungada, dun blabber wadever u think,

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP