நான்கு முறை நட்சத்திரமானேன்!

Sunday, October 15, 2006

நானும் தமிழ்மணம் திரட்டியின் நட்சத்திரவார வலைப்பதிவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாக ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. யாரோ அனானிதான், தமிழ்மணம் நிர்வாகி பெயரில் போலியாக பின்னூட்டமிட்டிருப்பார் என்ற சந்தேகத்துடன் மதி கந்தசாமி அவர்களிடம் மடலிட்டு உறுதி செய்து கொண்டேன்.

செப்டம்பர்-11 என்ற வாரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். பின்னர் இன்னொரு வாரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அதன் பின்னர் அந்த வாரத்தில் இன்னொருவர் ஒப்புக் கொண்டுள்ளதால் பிறிதொரு வாரம் என்று கடைசியாக இந்தவார நட்சத்திரம் ஆகியுள்ளேன்.

முதலில் கொடுத்த செப்டம்பர்-11 வாரம், பரபரப்பான வாரமாச்சே; நாமளும் கொஞ்சம் வெளையாடிடலாம் என்று இருந்தேன். இனி செப்டம்பர்-11 என்றால் நடிகர் சூர்யா-ஜோதிகா திருமண நாள்தான் நினைவுக்கு வரும் என்பது அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷுக்கு ஆத்திரத்தை வரவழைக்கும் செய்தி. (இதனால் கோபமுற்று நடிகை ஜோதிகாவுக்கும் அல்காயிதாவுக்கும் தொடர்பு உண்டு என்று சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!)

குதிரைக்காரன்னா பெரும்பாலோருக்குத் தெரிந்திருக்கலாம். யாரய்யா இந்த அதிரைக்காரன்? என்று குழம்பிக் கொண்டிருந்தீர்களேயானால், நீங்கள் ஹிந்து ஆங்கில நாளிதழைக் கவனமாகப் படிப்பதில்லை என்று அர்த்தம். நட்சத்திர வாரத்தில் எழுதப்படும் பதிவுகளில் அங்கங்கு சில 'செக்' வைத்து எழுதுவதும் திட்டமாக இருப்பதால்,ஹிண்டுவுக்கும் அதிரைக்கும் என்ன சம்பந்தம் என்பதைக் கண்டு பிடித்து பின்னூட்டத்தில் சொல்லலாம். (யாரும் சொல்லாத பட்சத்தில் அதிஷ்டசாலி பின்னூட்டதாரர்? தன்னிச்சையாகத் தேர்ந்து எடுக்கப்பட்டு(!?) கடைசிப் பதிவில் கெளரவிக்க/கவ்ரவிக்க/கவுரவிக்கப் படுவார்.)

தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு சம்பிரதாயப்படி என்னைப் பற்றிய அறிமுகம் கொடுக்கச் சொல்லி இருந்தார்கள். அமெரிக்காவில் ஒரு மென்பொருள் நிபுணராக இருக்கிறேன் என்று 'பீலா' விட்டிருக்கலாம்தான். நமக்குத்தான் வெள்ளை மனசாச்சே அதனால் அரபு நாட்டில் குப்பை அள்ளவில்லை என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.(இப்போதெல்லாம் அமெரிக்காவுல இருப்பதாகச் சொல்வது Out of fashion ஆகி விட்டதாக, அமெரிக்காவிலிருந்து பிடிபட்டு மீண்டும் துபைக்கு வந்த நண்பன் சொன்னான்.)

வலைப்பூக்களில் என்ன எழுதுவது என்று குழம்பிக் கொண்டிருந்தேன். தமிழ் திரைப்படங்களில் வரும் "ஏ ஷப்பா ஏ ஷப்பா" பாட்டுப்பாடி சிலுக்கு சுமிதாவுடன் நடனம் ஆடும் அரேபிய ஷேக்குகள் முதல் துபை ஷாப்பிங் பெஸ்டிவலுக்கு விசிட் விசாவில் வந்து பிக்பாக்கெட் அடிக்கும் நம்மவர்கள் (மும்பைகார்) பற்றிய அனுபவங்களைத் தொடராக (மனதுக்குள் மட்டும்) எழுதிய அனுபவம் உண்டு.

அரேபிய நாடுகளில் பத்து வருடங்கள் அனுபவம் இருந்தாலும் அரேபிய அனுபவங்கள் 10.4 (FM சேனல் நம்பரா?) எழுதிப் பிரபலமாகும் அளவுக்கு 'நெறைய தெறமெ' இல்லாததால், வந்த ஈமெயில்களில் என்னைக் கவர்ந்தவற்றை வலைப்பூவில் பதிவதுடன் அவ்வப்போது சொந்தமாகவும் எழுதி வருகிறேன். இதெல்லாம்போக நேரம் கிடைத்தால் அலுவலகப் பணியையும் செய்து வருகிறேன். :-) இனியும் செய்யத் திட்டம். (எதற்கும் எழுத வந்த நோக்கத்தை என் அறிமுகத்தில் மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள்)

"நான் ஏன் மடம் மாறினேன்" என்றோ அல்லது அரைகுறை அறிவோடு அடுத்தவர் மதநம்பிக்கைளில் புகுந்து அரைக்கிணறு தாண்டும் அபாய சாகசங்களை விடுத்து "சந்தோஷத்தில் மிகப்பெரிய சந்தோஷம் அடுத்தவரை மகிழ்வித்துப் பார்ப்பதில் கிடைக்கும் சந்தோஷமே" என 'முருங்கைக்காய்' புகழ், முந்தானை முடிச்சு பாக்யராஜ் பாலிஸியைக் கடைப்பிடித்து எழுதி வருகிறேன்.

+1 படித்த போது பள்ளி ஆண்டு விழாவில் அரங்கேறிய நாடகத்தை எழுதி இயக்கி, நடித்ததோடு, கவிதைப் போட்டியிலும் கலந்து மூன்றாம் பரிசும் பெற்றது போக, கல்லூரி சஞ்சிகையில் இரண்டு கதைகளும் எழுதியுள்ளேன். 'சரிகமபதநீ' படத்தில் கல்லூரிக் காட்சியில் நண்பர்களுடன் கலந்து கொண்டு நடித்த அனுபவமும் உண்டு. (அனேகமாக வலைப்பூ எழுதிக் கொண்டிருக்கும் ஒரே தமிழ் சினிமா நட்சத்திரம் நானாகத்தான் இருப்பேன் :-)

துபையில் அவ்வப்போது கல்ஃப் நியூஸ் (GULF என்று படிக்கவும்; Kalf ன்னா நாய்!) பத்திரிக்கையில் லட்டர் டு எடிட்டருக்கும் எழுதுவதுண்டு. சென்ற வருடம் சிங்கில் டீயின் விலையை கடைக்காரர்கள் (மலையாளிகள்) சுயமாக 25 பில்ஸ் (துபை பைசா) ஏற்றியதைக் கண்டித்து சிங்கிள்டீ ரசிகர்களின் வயிற்றில் பால் வார்த்தேன். கல்ஃப் நியூசில் லட்டர் டூ எடிட்டருக்கு எழுதிய கடிதத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததுடன் துபை முனிசிபாலிசி தலையிட்டு இவ்விலையேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதற்கு என் கடிதமும் காரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தற்போது பிளாஸ்டிக் கப்புக்குத் தடை விதித்து, ஃபோம் கப் என்று கப்பின் தரத்தை உயர்த்தி, 25 பில்ஸ் விலை ஏற்றத்திற்கு துபை முனிசிபாலிட்டி அனுமதித்துள்ளது - இதெல்லாம் நம்ம போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியைப் பெரிசா பாதித்து விடாது.

ஈராக் போர் வேண்டாமென்று அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷுக்கும் ஈமெயில் போட்டு AUTOREPLY கிடைக்கப் பெற்றிருக்கிறேன். (ஆட்டோ ரிப்ளை என்றால் ஆட்டோவில் ஆள் அனுப்புவதல்ல; தானாகவே அனுப்பப் படும் பதில் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை) ஆனால் அந்த மனுசன்(?) அதைக் கண்டு கொள்ளாமல், தன்னிச்சையாக ஈராக் மீது போர் தொடுத்தார். அதனால் ஏற்பட்ட கோபத்தைத் தனிக்க, புஷ்ஷுடன் அவ்வப்போது விளையாடுவதுண்டு.

ஃபலஸ்தீன் பிரச்சினை குறித்து ஜார்ஜ் புஷ்ஷிடம் ராஜாமடம் பாலத்தில் வைத்து நேர்காணல் கண்டு நான் எழுதியது உலக வாசகர்களின் கவனத்தைக் கவர்ந்தது (உங்களைக் கவரவில்லை என்றால் அது என் குற்றமல்ல.) நேர்காணலின்போது 'அணு பெரிதா? கல் பெரிதா?' என்ற புஷ்ஷுடனான விவாதத்தில், கல்தான் பெரிது என்ற அவருடைய விளக்கத்தை நான் ஏற்றுக் கொண்ட வகையில் எனக்கு அவர் நெருக்கமாகி விட்டார். என்வே, நாங்கள் பேசி திட்டமிட்டபடிதான் இதுவரை புஷ் நடந்து கொள்கிறார். என்ன பேசி கொண்டோம் என்பதைச் சொல்வது புஷ்ஷுக்கு நல்லதல்ல என்பதால் இத்தோடு விட்டு விடுகிறேன்.

இவ்வாறாக, என்னைப் பாதித்த அல்லது நான் ரசித்தவற்றை பிரதிபலிப்பதாகவே என் வலைப்பூ இருந்து வருகிறது என்பதை கோடிக்கணக்கான (சும்மா) என் வலைப்பூவாசகர்கள் அறிவர். நட்சத்திர வாரத்தின் பதிவுகளில் எல்லோரையும் போல் சூடாக எழுதாமல் அதிரைக்காரனின் சுய/தல புராணமாக முயற்சி செய்துள்ளேன்.

வழக்கம் போல வெட்டிப்பேச்சாக எழுதுவதா அல்லது பின்னூட்ட கயமைத் தனம் செய்யும் விதமாக பரபரப்பாக எழுதுவதா என்பதை நீங்களும் பின்னூட்டக் கயமைத் தனம் செய்யும்படி (ஆட்டக் கடிச்சு மாட்டக் கடிச்சு :-) கேட்டுக் கொ'ல்'கிறேன்.

66 comments:

ரவி 10/15/2006 10:29 PM  

வணக்கம், வாங்க...

ரவி 10/15/2006 10:30 PM  

உங்க ஊருக்கு நான் ஒரு முறை என் நன்பரோடு வந்திருக்கேன்...அருமையான் ஊர்..

வெற்றி 10/15/2006 10:34 PM  

அதிரைக்காரன்,
வணக்கம்.
நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் [GK] 10/15/2006 10:36 PM  

//அனேகமாக வலைப்பூ எழுதிக் கொண்டிருக்கும் ஒரே தமிழ் சினிமா நட்சத்திரம் நானாகத்தான் இருப்பேன் :-)
//

நீங்கள் தான் உண்மையான நட்சத்திரம் !
:)

வாழ்த்துக்கள் !

மலைநாடான் 10/15/2006 10:38 PM  

அதிரைக்ாரன்!

இவ்வார நட்சத்திரமாகியுள்ள தங்களுக்கு இனிய வாழ்த்துக்கள். 'கலகல' வெனக் கலக்கப்போவது உங்கள் முன்னோட்டத்தில் தெரிகிறது. பாராட்டுக்கள்.

நாமக்கல் சிபி 10/15/2006 10:46 PM  

என்னென்னவோ சொல்றீங்க! ஒண்ணும் புரியலை!

எனிவே நட்சத்திர வாழ்த்துக்கள்!
:))

தருமி 10/15/2006 10:55 PM  

//நான் ஏன் மடம் மாறினேன்" என்றோ அல்லது அரைகுறை அறிவோடு அடுத்தவர் மதநம்பிக்கைளில் புகுந்து அரைக்கிணறு தாண்டும் அபாய சாகசங்களை விடுத்து //

இதுதான் நட்சத்திரக் குத்து என்பதோ...

//"சந்தோஷத்தில் மிகப்பெரிய சந்தோஷம் அடுத்தவரை மகிழ்வித்துப் பார்ப்பதில் கிடைக்கும் சந்தோஷமே" என 'முருங்கைக்காய்' புகழ், முந்தானை முடிச்சு பாக்யராஜ் பாலிஸியைக் கடைப்பிடித்து எழுதி வருகிறேன்.//

உங்கள் பாலிஸிபடியே என்னை மகிழ்வித்தமைக்கு (முதல் நட்சத்திரப் பதிவிலேயே இடம் கிடைப்பதென்பது லேசா என்ன?!)மிக...மிக.. நன்றி.

புகழேந்தி 10/15/2006 11:23 PM  

ஐயா அதிரை,

நீங்க இந்த வார நட்சத்திரமா? வாழ்த்துக்கள். இந்த வாரம் நகைச்சுவைக்குப் பஞ்சம் இருக்காது என நினைக்கிறேன்.

நாகை சிவா 10/15/2006 11:29 PM  

தலைப்பை பார்த்தவுடன் என்னடா இவர் பதிவை ஒரு தடவை படித்தது இல்லையேனு வந்தா, நீங்க அந்த நாலு தடவைய சொல்லி இருக்கீங்க

நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்.

நாகை சிவா 10/15/2006 11:38 PM  

தலைவா, நீங்க அதிராம்பட்டினம்.
நமக்கு நாகப்பட்டினம்.
ரொம்பவே நெருங்கிட்டீங்க போங்க :)

ரவி 10/16/2006 12:33 AM  

///துபையில் அவ்வப்போது கல்ஃப் நியூஸ் (GULF என்று படிக்கவும்; Kalf ன்னா நாய்!) பத்திரிக்கையில் லட்டர் டு எடிட்டருக்கும் எழுதுவதுண்டு. சென்ற வருடம் சிங்கில் டீயின் விலையை கடைக்காரர்கள் (மலையாளிகள்) சுயமாக 25 பில்ஸ் (துபை பைசா) ஏற்றியதைக் கண்டித்து சிங்கிள்டீ ரசிகர்களின் வயிற்றில் பால் வார்த்தேன். கல்ஃப் நியூசில் லட்டர் டூ எடிட்டருக்கு எழுதிய கடிதத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததுடன் துபை முனிசிபாலிசி தலையிட்டு இவ்விலையேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதற்கு என் கடிதமும் காரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.////

வெல்டன்.

மணியன் 10/16/2006 12:35 AM  

நல்ல கலகலப்பான பதிவுடன் இந்த வாரத்தை ஆரம்பித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!!

╬அதி. அழகு╬ 10/16/2006 1:07 AM  

உங்களுடைய‌ பதிவில் உள்ளச் சுட்டிகளை ஒழுங்காகக் கொடுக்கத் தெரியாமலே தானாமானாவில்
நட்சத்திரமாகி விட்டீர்கள்‌!

அதற்காகவே வாழ்த்துகள்!


முன்புபோல் பிறந்த ஊரின் பெயரைக் கெடுக்காமல் இனிமேலாவது ஒழுங்காக எழுதினால் சரி!

அதி. அழகு

Anonymous 10/16/2006 1:27 AM  

ஹைய்யா! அதிரைக்காரரே, வாழ்த்துகள்.
சிறப்பாவும் சிரிப்பாவும் எழுதி சிறக்கறது தானே உங்க பாலிஸி. நடத்துங்க
- BABU -

Unknown 10/16/2006 1:54 AM  

வாரம் பூராவும் தமாஷா கலக்கப்போரீங்கண்னு தெரியுது. வாழ்த்துக்கள்.
'புஷ்'ஷோடுள்ள நேர்காணல் மாதிரி சில சமயம் தமாஷாகவே அடித்தும் ஆடுவீர்கள் என்று எதிர்பார்க்கலாமா!.

சின்னக்குட்டி 10/16/2006 2:00 AM  

நட்சத்திர வாழ்த்துக்கள்

அதிரைக்காரன் 10/16/2006 2:52 AM  

//தலைவா, நீங்க அதிராம்பட்டினம். நமக்கு நாகப்பட்டினம். ரொம்பவே நெருங்கிட்டீங்க போங்க :) //

ஆமா நாகை சிவா! பத்து வருஷத்துக்கு முன்பு நாகை,வேளாங்கன்னி வந்திருக்கிறேன்.

அதிரைக்காரன் 10/16/2006 2:53 AM  

//வலைப்பூ வலைப்பூ ன்னு சொல்றாங்க! செடியை எங்கப்பா காணோம்? //

நாமக்கல் சிபி,

இல்லையே வலைப்பூன்னு ஒரு தடவைதானே சொல்றாங்க! செடியை நாமக்கல் கோழிகள் கொத்தி குதறி இருக்குமோ?

அதிரைக்காரன் 10/16/2006 2:53 AM  

//என்னென்னவோ சொல்றீங்க! ஒண்ணும் புரியலை! எனிவே நட்சத்திர வாழ்த்துக்கள்!/

எனக்கும்தான் எப்படி நட்சத்திரம் ஆனேன்னு இன்னும் புரியலே! வாழ்த்துக்களுக்கு நன்றி!

அதிரைக்காரன் 10/16/2006 2:55 AM  

//நீங்க இந்த வார நட்சத்திரமா? வாழ்த்துக்கள். இந்த வாரம் நகைச்சுவைக்குப் பஞ்சம் இருக்காது என நினைக்கிறேன். //

வாங்க புகழேந்தி நானும் அப்படித்தான் நினைக்கிறேன். பார்ப்போம். (ரொம்ப நாளா ஃபீல்டுலேயே காணோமே உங்களை! என்னாச்சு?)

அதிரைக்காரன் 10/16/2006 2:55 AM  

//தலைப்பை பார்த்தவுடன் என்னடா இவர் பதிவை ஒரு தடவை படித்தது இல்லையேனு வந்தா, நீங்க அந்த நாலு தடவைய சொல்லி இருக்கீங்க//

இப்பவெல்லாம் இதுமாதிரி தலைப்பு வைத்தால்தான் மக்கள் வருகிறார்கள். உதாரணமாக உங்களையே வச்சுக்குங்களேன்.

அதிரைக்காரன் 10/16/2006 2:56 AM  

//நீங்கள் தான் உண்மையான நட்சத்திரம் ! :) வாழ்த்துக்கள் ! //

நன்றி GK. இன்னொரு கோவி.கண்ணன் அடிக்கடி நியூஸ்ல அடிபட்டதனாலே பெயரையே மாத்திட்டீங்களாமே! உண்மையா?

அதிரைக்காரன் 10/16/2006 2:56 AM  

//போச்சுடா...அடுத்தவார தமிழ் மண நட்சத்திரம் நீங்கதானாமே.. //

அப்படியா? (இது போனவாரம் எழுதி வைத்திருந்த பின்னூட்டமோ தருமி சார்?

அதிரைக்காரன் 10/16/2006 2:57 AM  

//உங்கள் பாலிஸிபடியே என்னை மகிழ்வித்தமைக்கு (முதல் நட்சத்திரப் பதிவிலேயே இடம் கிடைப்பதென்பது லேசா என்ன?!)மிக...மிக.. நன்றி. //

இதெல்லாம் வலைப்பூக்களில் சகஜமய்யா!

அதிரைக்காரன் 10/16/2006 2:58 AM  

//இவ்வார நட்சத்திரமாகியுள்ள தங்களுக்கு இனிய வாழ்த்துக்கள். 'கலகல' வெனக் கலக்கப்போவது உங்கள் முன்னோட்டத்தில் தெரிகிறது. பாராட்டுக்கள். //

மலைநாடான், வாழ்த்துக்களுக்கு நன்றி. நேர்ந்து கலக்கலாம்.கலாம்..லாம்...ம்.

அதிரைக்காரன் 10/16/2006 2:58 AM  

//உங்க ஊருக்கு நான் ஒரு முறை என் நன்பரோடு வந்திருக்கேன்... அருமையான் ஊர்.. //

நல்லவேலை நண்பரோடு வந்தீர்கள் ரவி. ஆட்டோடு மட்டும் வந்துடாதீங்க! (விபரம் அடுத்த பதிவில் :-)

அதிரைக்காரன் 10/16/2006 2:59 AM  

//அதிரைக்காரன், வணக்கம்.நட்சத்திர வார வாழ்த்துக்கள்.//

இதுதான் 'வெற்றி' முழக்கம் என்பதா? வாழ்த்துக்களுக்கு நன்றி சாரே!

குழலி / Kuzhali 10/16/2006 3:04 AM  

பயங்கர பின்னூட்ட கயமைத்தனமா இருக்கே :-), நட்சத்திர வார வாழ்த்துகள், கலக்குங்க

நன்றி

அதிரைக்காரன் 10/16/2006 3:13 AM  

//நல்ல கலகலப்பான பதிவுடன் இந்த வாரத்தை ஆரம்பித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!! //

மணியன்,

அப்படித்தான் பலரும் சொல்கிறார்கள். கழுதை தேய்ஞ்சு கட்டெரும்பா ஆகாமலிருந்தால் சரி!

அதிரைக்காரன் 10/16/2006 3:16 AM  

//என் கடிதமும் காரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

வெல்டன்.//

செந்தழல் ரவி,

பிடிங்க ஒரு சிங்கிள் டீ!

அதிரைக்காரன் 10/16/2006 3:19 AM  

//முன்புபோல் பிறந்த ஊரின் பெயரைக் கெடுக்காமல் இனிமேலாவது ஒழுங்காக எழுதினால் சரி! //

எங்களூரை ஆண்ட மன்னன் அதி வீர ராம பாண்டியன் பெயரால் அதிராம்பட்டினம் ஆனதாம். அதிவீரனை, அதி ஆக்கியது உங்கள மாதிரி ஆட்களால்தான்!

அதிரைக்காரன் 10/16/2006 3:22 AM  

//ஹைய்யா! அதிரைக்காரரே, வாழ்த்துகள்.சிறப்பாவும் சிரிப்பாவும் எழுதி சிறக்கறது தானே உங்க பாலிஸி. நடத்துங்க - BஆBஊ - //

நடத்தலாம் பாபு!

அதிரைக்காரன் 10/16/2006 3:24 AM  

//எனக்கு எதாச்சும் சன்மானம் உண்டா? ரகசியத்தை வெளிக்கொண்டாதுட்டேன். இப்படிக்கு,
வீண்பேச்சுக்காரன் //

வீண்பேச்சுக்காரன்,

சன்மானமா? கொஞ்சம் பொருங்க அதிராம்பட்டினம் அல்வா கொடுக்கிறேன்! (சும்மாவா சொன்னாங்க ஆட்டைக் கழுதையாக்கி அதிராம்பட்டினத்தை குட்டிசுவராக்கினவங்கன்னு!)

அதிரைக்காரன் 10/16/2006 3:26 AM  

//புஷ்'ஷோடுள்ள நேர்காணல் மாதிரி சில சமயம் தமாஷாகவே அடித்தும் ஆடுவீர்கள் என்று எதிர்பார்க்கலாமா!. ///

வாங்க (புருனே?) சுல்தான் பாய், தமாஷா அடிக்கிறதுன்னா ப்ரென்ட்லி பயர்னு சொல்லி சமாளிக்கிறாங்களே அதைத்தானே சொல்றீங்க?

அதிரைக்காரன் 10/16/2006 3:29 AM  

//நட்சத்திர வாழ்த்துக்கள் //

சின்னக்குட்டி,

நன்றிக்குட்டி!

அப்பாவி 10/16/2006 3:30 AM  

அதிரைக்காரரே,

சும்மா கலக்குறீங்க! நடத்துங்க.. நடத்துங்க!

அதிரைக்காரன் 10/16/2006 3:32 AM  

//பயங்கர பின்னூட்ட கயமைத்தனமா இருக்கே :-), நட்சத்திர வார வாழ்த்துகள், கலக்குங்க//

வாழ்த்துக்களுக்கு நன்றி குழலி!

இந்தப் பின்னூட்டத்தை உண்மையான அதிரைக்காரந்தான் இட்டான் என்பதை உறுதி செய்ய எலிக்குட்டியை நகர்த்திப் பார்க்க வேண்டியதில்லை; இதன் நகல் வேரெங்கும் கிடைக்காது என்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அதிரைக்காரன் 10/16/2006 3:35 AM  

சும்மா கலக்குறீங்க! நடத்துங்க.. நடத்துங்க!

அப்பாவி சார், அப்பாவியத்தான் சொல்றீங்களா? இல்லே உள்குத்தா?

குமரன் (Kumaran) 10/16/2006 4:14 AM  

மும்முறை தமிழ்மண விண்மீனாக ஆனதற்கு வாழ்த்துகள் அதிரைக்காரன். இன்னும் பல முறை ஆகவேண்டும் என்றும் வாழ்த்துகிறேன். :-)

குமரன் (Kumaran) 10/16/2006 4:15 AM  

மன்னிச்சுக்கோங்க. நான்கு முறை நட்சத்திரமா? ஏதோ நினைவுல மும்முறைன்னு எழுதிட்டேன்.

குமரன் (Kumaran) 10/16/2006 4:16 AM  

அதிராம்பட்டினம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். உங்கள் ஊர்ப்பெயர் பழந்தமிழ் இலக்கியங்களில் வருமா?

(இப்படி தனித்தனியாகப் பின்னூட்டம் போடுவது ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக நீங்கள் பதில் சொல்லி பின்னூட்டக் கயமை செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் தான். அதில் மண்ணள்ளிப் போட்டுவிடாதீர்கள்).

Anonymous 10/16/2006 6:56 AM  

inaiya vadiveel pattam yaaravathu kodungaLeen!

Anonymous 10/16/2006 7:20 AM  

BUSH PETTI PADITHU IVAR YEPPODA PERIYA PATHRIKKAIYALARA AANAR YENRU SANTHEGAM VANTHATHU.

ORUMURAIKKU IRUMURAI THIRUMBA THIRUMBA PADITHEN. VERY GOOD.

அப்பாவி 10/16/2006 8:03 AM  

//அப்பாவி சார், அப்பாவியத்தான் சொல்றீங்களா? இல்லே உள்குத்தா?//

நான் சொன்னதுல ஒன்னும் உள்குத்து இல்லே சார்!

//இந்தப் பின்னூட்டத்தை உண்மையான அதிரைக்காரந்தான் இட்டான் என்பதை உறுதி செய்ய எலிக்குட்டியை நகர்த்திப் பார்க்க வேண்டியதில்லை; இதன் நகல் வேரெங்கும் கிடைக்காது என்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். //

இதோ, இதுதான் உண்மையான உள்குத்து!!

╬அதி. அழகு╬ 10/16/2006 8:57 AM  

//எங்களூரை ஆண்ட மன்னன் அதி வீர ராம பாண்டியன் பெயரால் அதிராம்பட்டினம் ஆனதாம். அதிவீரனை, அதி ஆக்கியது உங்கள மாதிரி ஆட்களால்தான்!//

விவரம் புரியாமல் கயமைத்தனம் செய்ய வேண்டாம்.

அதிராம்பட்டினத்து அழகன்களிலேயே அதிக அழகானவன் அடியேன்தான் என்று அழகன் போட்டியில் நடுவர்களாக இருந்த அழகிகளால் தேர்ந்தெடுக்கப் பட்டதால் உண்டான காரணப் பெயர்தான்:

அதி. அழகு

என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sivabalan 10/16/2006 11:29 AM  

நட்சத்திர வார பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்

அதிரைக்காரன் 10/16/2006 12:46 PM  

//மும்முறை தமிழ்மண விண்மீனாக ஆனதற்கு வாழ்த்துகள் அதிரைக்காரன்.//

மும்முறை பின்னூட்ட கயமைத்தனத்திற்கு நன்றி குமரன். (விண்மீனா வீண் மீனான்னு அடுத்தடுத்த பதிவுலதான் தெரியும். அங்கும் கயமைத்தனம் பண்ணலாம் வாங்க!)

அதிரைக்காரன் 10/16/2006 12:48 PM  

/மன்னிச்சுக்கோங்க. நான்கு முறை//

குமரன் x 2,

மன்னிச்சுட்டேன் # 1
மன்னிச்சுட்டேன் # 2
மன்னிச்சுட்டேன் # 3
மன்னிச்சுட்டேன் # 4

(இதையே நாலுமுறை தனித்தனியா போட்டிருக்கலாம். இருந்தாலும் மனசாட்சி உறுத்துது)

அதிரைக்காரன் 10/16/2006 12:53 PM  

//அதிராம்பட்டினம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். உங்கள் ஊர்ப்பெயர் பழந்தமிழ் இலக்கியங்களில் வருமா? //

குமரன் x 3,

அதிராம்பட்டினத்தை அதிரை என்று சொல்வதற்கு அ= அற்ற, திரை=அலை அதாவது அலையற்ற கடற்கரைப் பட்டினம் என்று சொன்னார் ஒரு பழந்தமிழ் அதிரை நண்பர். (எதுக்கும் அதிரை பெருசுகளின் வாயைக் கிளறினால் தகவல் கிட்டலாம்)

அதிரைக்காரன் 10/16/2006 12:56 PM  

//இதன் நகல் வேரெங்கும் கிடைக்காது என்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.இதோ, இதுதான் உண்மையான உள்குத்து!! //

தற்போது இப்பதிவிலேயே கிடைக்கிறது இதைத்தான் கயமைத்தனமென்கிறோம்.

அதிரைக்காரன் 10/16/2006 1:01 PM  

//அழகன் போட்டியில் நடுவர்களாக இருந்த அழகிகளால் தேர்ந்தெடுக்கப் பட்டதால் உண்டான காரணப் பெயர்தான்: அதி. அழகு//

அதிராம்பட்டினத்துல ஆட்டை மட்டுமா கழுதையாக்கினாங்க. உங்களைக்கூட அதி.அழகாக்கிட்டாங்கன்னு யாராச்சும் அப்பாவியா சொல்லப்போறாங்க.

அதிரைக்காரன் 10/16/2006 1:02 PM  

//நட்சத்திர வார பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்//

நன்றி சிவபாலன். (அப்ப மற்றவார பதிவுகளுக்கு?)

அப்பாவி 10/16/2006 4:43 PM  

//அதிராம்பட்டினத்துல ஆட்டை மட்டுமா கழுதையாக்கினாங்க. உங்களைக்கூட அதி.அழகாக்கிட்டாங்கன்னு யாராச்சும் அப்பாவியா சொல்லப்போறாங்க.//

நான் சொல்லலாம்னுதான் இருந்தேன்.. நீங்களே சொல்லிட்டீங்க :-) ரொம்ப நன்றி!

╬அதி. அழகு╬ 10/16/2006 5:17 PM  

//அதிராம்பட்டினத்துல ஆட்டை மட்டுமா கழுதையாக்கினாங்க. உங்களைக்கூட அதி.அழகாக்கிட்டாங்கன்னு யாராச்சும் அப்பாவியா சொல்லப்போறாங்க.//

அப்போ, என்னைக் கழுதை என்கிறீர்களா?

அப்படி என்றால், நடுவர்களான அழகிகளில் வள்ளி மட்டுமே நம்ம ஊர். மற்ற மூவரும் (ராதிகா-ஸ்டேஷன் மாஸ்டர் பொண்ணு; என்னோடு குமண வள்ளல் நாடகத்தில் நடித்த சகுந்தலா- சப்-ரிஜிஸ்ரார் பொண்ணு; மகாலஷ்மி-பேங்க் மேனேஜர் பொண்ணு)வெளியூர்க்காரர்கள். பிறவியிலேயே அதி.அழகனும் அதிரைக்காரானுமான என்னை வெளியூர் அழகிகள் எப்படி அதி.அழகாக மாற்ற முடியும்?

மறுபடியும் விபரம் புரியாமல் வீணாகக் கயமைத்தனம் செய்கின்றீர்கள்.

Anonymous 10/16/2006 5:47 PM  

Hi,

Congratulations!

Thank you for being with Americans against world terrorism.

Keep it up but please don’t disclose here the sensitive points that we discussed in our meeting.

Best regards,
George W. Bush
Washington DC

துளசி கோபால் 10/16/2006 9:48 PM  

பின்னூட்டக் கயமைத்தனம்ன்னா என்ன அர்த்தம்?

சரி.அது கிடக்கட்டும்.

நட்சத்திரத்துக்கு வாழ்த்து(க்)கள்.

அதிரைக்காரன் 10/17/2006 12:43 AM  

//அதிராம்பட்டினத்துல ஆட்டை மட்டுமா கழுதையாக்கினாங்க. உங்களைக்கூட அதி.அழகாக்கிட்டாங்கன்னு யாராச்சும் அப்பாவியா சொல்லப் போறாங்க.நான் சொல்லலாம்னுதான் இருந்தேன்.. நீங்களே சொல்லிட்டீங்க :-) ரொம்ப நன்றி!//

ஆனா பாருங்க அப்பாவி, நம்ம அதி.அழகு விடமாட்டேங்கறார். இதைத்தான் பாவம் ஒருபக்கம் பழி ஒரு பக்கமென்பார்களோ?

அதிரைக்காரன் 10/17/2006 12:43 AM  

//அப்போ, என்னைக் கழுதை என்கிறீர்களா?//

கழுதை உங்கள விட அழகுன்னு இன்னொரு அப்பாவி சொல்றார். :-)

அதிரைக்காரன் 10/17/2006 12:44 AM  

//வாழ்துக்கள் மச்சான். உன்னுடைய ஒவ்வொரு பதிப்பையும் படிக்கும் பொழ்து நம்முடைய பள்ளிக்கூட ஞாபகம்தான் வருகிறது.//

வாடா (சின்ன) மச்சி. நாடகத்தின் இடைவெளியில் காமெடி நியூஸ் வாசிச்சியே! நினைவிருக்கா? அப்புறம் உங்க ஏரியா 'தல' இன்னாபா சொல்லுது?

அதிரைக்காரன் 10/17/2006 12:44 AM  

//Keep it up but please don't disclose here the sensitive points that we discussed in our meeting.



Thanks for your comment on my blog. Can you set an another meeting to discuss your dual stand in N.Korea and Iran?

அதிரைக்காரன் 10/17/2006 12:44 AM  

//பின்னூட்டக் கயமைத்தனம்ன்னா என்ன அர்த்தம்? சரி.அது கிடக்கட்டும்.நட்சத்திரத்துக்கு வாழ்த்து(க்)கள்.//

வாழ்த்து(க்)களுக்கு நன்றி. பின்னூட்டக் கயமைத்தனம்னா பதிவின் நீளத்தைவிட பின்னூட்டங்கள் நீட்டிச் செல்வது.

பரங்கியன் 10/17/2006 3:52 AM  

//சென்னை ஆதர்ஸ் வித்யாலயா ஸ்கூல் எதிர்புறம் ;-] அல்லது சர்ச் பார்க் ஸ்கூல் அருகில் ;-!) உள்ள கல்லூரியில் //

அட நம்ம நியூ காலேஜிகாரரா நீரு.
நானும் நியூ காலேஜிகாரன்ங்கிற வகையில ஸ்பெஷல் வாழ்த்துக்கள் அதிரையாரே...

Anonymous 10/17/2006 11:13 AM  

யபா அதிரெகாரா!

நீ ஷ்டாராய்ட்டேன்னு நம்ம கபாலி ஸொன்னா. சினிமா ஷ்டாராங்காட்டியும்னு நெனெச்சேன்.

ஆனாக்க நீ தமிய் மண்த்லே ஷ்டாராம். இன்னாமோ ஒண்யுமே பிர்லபா.

Anonymous 10/19/2006 4:38 AM  

"ஹிண்டுவுக்கும் அதிரைக்கும் என்ன சம்பந்தம் என்பதைக் கண்டு பிடித்து பின்னூட்டத்தில் சொல்லலாம். (யாரும் சொல்லாத பட்சத்தில் அதிஷ்டசாலி பின்னூட்டதாரர்? தன்னிச்சையாகத் தேர்ந்து எடுக்கப்பட்டு(!?) கடைசிப் பதிவில் கெளரவிக்க/கவ்ரவிக்க/கவுரவிக்கப் படுவார்.)"

"இரன்டுக்கும் உள்ள தொடர்பு காந்தி, நேரு குடும்பங்களுக்கும், கஸ்தூரி அய்யங்கார் குடும்பத்துக்கு உள்ளது போன்ற பாரம்பரியமானதாக கூட இருக்கலாம், ஒரு நாள் முழுவதும் ஹிந்துவில் தேடியதில் நமக்கு புலப்பட்ட ஒரே செய்தி "வெதர் போர்காஸ்ட்" நிலவர பட்டியலில் இருக்கும் பத்து, பதினைந்து ஊர்களில் முதலவது இடத்தை" அதிராமபட்டினம்" தக்கவைத்துக் கொண்டு உள்ளது. இது சரியாக இருந்தால் எப்படி நம்மை கௌரவப்படுத்துவீர்கள் என்பதினை அறிய ஆவல். -

Anonymous 10/21/2006 4:41 AM  

,

அதிரைக்காரன் 10/21/2006 2:33 PM  

வாழ்த்திய சடையப்பா மற்றும் புள்ளியிட்டு கமா போட்ட அணானிகளுக்கும் நன்றி

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP