இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!

Saturday, October 21, 2006

Proud to be an Indian என்ற தலைப்பிட்ட Email நண்பர்களால் அடிக்கடி Forward செய்யப்படுகிறது. அதிலுள்ள விஷயங்கள் அமெரிக்காவில் புகழ் பெற்ற நிறுவனங்களில் இந்தியர்களின் ஆளுமையைப் பறை சாற்றுவதாக இருந்தன. முதலில் அவற்றைப் படித்தபோது நம் இந்தியர்களின் தொழில் நுட்பத் திறமையை எண்ணி வியந்ததோடு நண்பர்களுக்கும் Forward செய்திருக்கிறேன்.இணையத்திலும் Proud to be an Indian என்று தேடினால் பல தளங்களில் கிடைக்கின்றது.



அத்தகைய தகவலடங்கிய மெயிலில் சொல்லப்பட்டிருந்த சிலவிஷயங்கள் நெருடலாக இருந்தன. (நெருடல் என்பதை விட உண்மைக்கு மாறானது என்பதே சரியென நினைக்கிறேன்) உதாரணமாக சமஸ்கிருதம் உலக மொழிகளில் கணினிக்கேற்ற சிறந்த மொழியாக இருக்கத் தகுதியானது என்று மேற்கத்தியர் ஒருவர் சொல்லியுள்ளதாக உள்ளது. இந்திய மொழிகளில் தமிழுக்கு இருக்கும் இலக்கியத் தொன்மை, கருத்துச் செறிவு, இலக்கண ஆளுமை ஆகிய தகுதிகள், சமஸ்கிருதத்திற்கு இருக்கிறதா என்பதை பன்மொழியறிஞர்கள் ஒப்பிட்டுச் சொன்னால் நன்றாக இருக்கும்.

அதேபோல் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இந்தியா அந்நிய நாட்டுடன் போர் தொடுத்ததில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்தியா என்ற தேசம் 1947 க்குப் பிறகே உலகத்தவரால் ஒப்புக் கொள்ளப்பட்ட குடியரசு தேசமாகும். அதற்கு முன் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான் ஆகிய பகுதிகள் அடங்கியப் நிலப்பிரதேசமே இந்தியத் துணைக்கண்டம் என்று அறியப்பட்டது.

இந்தியாவை மொகலாயர்கள் சுமார் 800 வருடங்கள் ஆண்டார்கள் என்று சொன்னால், இப்பகுதிகளடங்கிய நிலப்பரப்பே என்று புரிந்து கொள்கிறோம். வேண்டுமென்றால் நம்நாடு கடந்த அறுபது வருடங்களில் பிற நாட்டுடன் வலிந்து போரிட்டதில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். எனினும் இதே சிறப்பு வேறுசில நாடுகளுக்கும் இருப்பதால், இதை இந்தியாவின் தனிச்சிறப்பாகச் சொல்ல முடியாது.இவ்விரு விசயங்கள் என் மனதில் தோன்றிவை. மற்றபடி, என் கூற்று தவறாக இருந்தாலும் சந்தோஷமே! இவை தவிர்த்து மற்ற தகவல்கள் பற்றியும் பார்ப்போம்.

அமெரிக்க நிறுவனங்களில் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள் பற்றிய புள்ளிவிபரங்கள்

1) வெளிநாட்டு மருத்துவர்களில், இந்தியர்களின் சதவீதம் 38%

2) அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகள் 12%

3) அமெரிக்க விண்வெளிக்கழகம் நாஸாவில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகள் 36%

4) மைக்ரோசாஃப்டிலுள்ள இந்திய மென்பொருள் வல்லுனர்கள் 34%

5) IBM நிறுவனத்தின் பணியாளர்களில் இந்தியர்கள் மட்டும்28%

6) INTEL நிறுவனத்திலுள்ள இந்திய வன்பொருள் வல்லுநர்கள் 17%%

6) ஜெராக்ஸ் நிறுவனத்தில் 38%

7) Yahoo, Hotmail போன்ற இணைய நிறுவனங்களின் தலைமை மற்றும் முன்னோடிகள் இந்தியர்கள்.

8) பெண்டியம் வன்பொருள் சில்லின் (Chip) முன்னோடி இந்தியர்.

இப்படியாக பல அசத்தலான புள்ளி விபரங்கள் கொடுக்கப் பட்டிருந்தன. இவையெல்லாம் ஆதாரப்பூர்வமான புள்ளி விபரங்களே. எனினும் இந்தியாவின் வளங்களை ஆரம்பக் கல்விக்கும் உயர்கல்விக்கும் பயன் படுத்தி விட்டு தமது அறிவை வளப்படுத்திக் கொண்டுவிட்டு, மேலை நாடுகளில் பணியாற்றச் செல்லும் நம்மவர்களைப் பற்றிய புள்ளி விபரங்களைப் பகிர்ந்து கொள்வது நமக்குப் பெருமையாகவா இருக்கிறது?

அமெரிக்காவில் மட்டும் பணியாற்றும் நம் வல்லுனர்கள் இந்தியாவிலேயே சிலகாலம் பணியாற்றி இருந்திருந்தால் "2020 இல் வல்லரசு இந்தியா" என்ற இலக்கு இந்நேரம் நிறைவேறி இருக்குமே. இது போன்ற மெயில்களை சிலாகித்து பிறருக்கும் Forward செய்வதால் தாய்நாட்டை விட்டு அயல் நாடுகளில் பணியாற்றுவதே பெருமை என்ற தவறானக் கண்ணோட்டம், இன்றைய மாணவர்களின் மனதில் விதைக்கப்பட நாமும் காரணமாகி விடுவதை நினைவில் கொண்டு, தயவு செய்து இத்தகைய மடல்களை பிறருக்கு அனுப்பும் முன் சிந்திப்போமாக!

அரேபிய வளைகுடா நாடுகளிலும், கீழைத்தேசங்களிலும்தான் நம்மவர்கள் பணி புரிகிறார்களே, அவர்களைப் பற்றிச் சொல்லாமல் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களை மட்டும் குற்றம் சொல்வது நியாயமா என சிலர் தவறாக நினைக்கலாம். இத்தகைய நாடுகளில் பணியாற்றும் 90% க்கும் மேற்பட்டவர்கள் நம் நாட்டில் பணியாற்றினால் கிடைக்கும் சொற்ப சம்பளத்தைவிட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் கிடைக்கிறது; அதில் 90% சதவீதத்தை நம் நாட்டுக்கு அந்நியச் செலாவணிக் கையிருப்பை உயர்த்தி, பெட்ரோலியத் தேவையை ஈடுகட்ட உதவுகின்றனர்.

மேலும், வளைகுடா நாடுகளில் பணியாற்ற திறமையும் தகுதியுமற்ற, உள்நாட்டில் பணியாற்றக்கூட இலாயக்கற்றவர்களாகக் கருத்தப் பட்டவர்களாலும் சம்பாதித்து சாதிக்க முடியும். ஆனால் மேலை நாடுகளில் இந்தியாவில் இருக்கும் அறிவுஜீவிகளும், வல்லுனர்களயும் மட்டுமே இறக்குமதி செய்ய விரும்புகின்றனர்.

மேலும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்களில் பெரும்பாலோர் தங்கள் குடும்பம் சகிதமாக இருப்பதால் அவர்களின் வருவாயில் பெரும் பகுதி அந்த நாடுகளிலேயே செலவழிக்கப் பட்டுவிடுகிறது. இதன் மூலம் அவர்களின் அறிவை உறிஞ்சியதோடு வருமானத்தையும் தங்கள் நாடுகளிலேயே செலவழிக்க நிர்ப்பந்திக்கப் படுவதைக் கவனித்தால் என் ஆதங்கத்தில் காழ்ப்பு இல்லை என்பது விளங்கும்.

இந்தியாவின் வல்லரசுக் கனவு 2020 இலிருந்து 2010 என்ற நிலைக்கு முன்னெடுத்துச் செல்ல இப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் சுட்டுங்கள். இதுவே நட்சத்திரவாரப் பதிவின் மூலம் நான் விடுக்கும் வேண்டுகோள்.

இந்தியர் என்பதில் 'உண்மையில்' பெருமிதம் கொள்வோம்!!!

42 comments:

bala 10/22/2006 12:20 AM  

//மேலும், வளைகுடா நாடுகளில் பணியாற்ற திறமையும் தகுதியுமற்ற, உள்நாட்டில் பணியாற்றக்கூட இலாயக்கற்றவர்களாகக் கருத்தப் பட்டவர்களாலும் சம்பாதித்து சாதிக்க முடியும். ஆனால் மேலை நாடுகளில் இந்தியாவில் இருக்கும் அறிவுஜீவிகளும், வல்லுனர்களயும் மட்டுமே//

அதிரைக்காரன் அய்யா,

மிகவும் சரி..
We are losing good scientists,good teachers, and technologists to the west..Equally, we are losing good electricians/welders/masons/plumbers/carpenters to the Middle east..
Both cause damage to the quality of goods/services we produce in India for consumption by Indians..

I believe that we are slowly but steadily improving..

அதே சமயம், இந்தியர் என்பதில் சிறுமை கொள்வோம் என்று ஒரு கும்பல் நம்ம ஊரில் பறை சாற்றிக் கொண்டிருப்பது அயோக்யத்தனம்.

பாலா

ஓகை 10/22/2006 12:22 AM  

உங்களின் இந்தப் பதிவு எனக்கு மிக மகிழ்ச்சியளிக்கிறது.

சமஸ்கிருதத்தைப் பற்றி அதிகம் அறிந்ததில்லை. ஆனால் தமிழுக்கு அந்த தகுதி இருக்கிறது என்று நிச்சயமாகக் கூறமுடியும்.

மென்பொருள் வல்லமையில் தென்னிந்தியரின் திறமைக்கு திராவிட மொழிகள் ஒரு காரணி என்பது என்னுடைய ஆழ்ந்த நம்பிக்கை.

ஓகை 10/22/2006 12:23 AM  

//அதே சமயம், இந்தியர் என்பதில் சிறுமை கொள்வோம் என்று ஒரு கும்பல் நம்ம ஊரில் பறை சாற்றிக் கொண்டிருப்பது அயோக்யத்தனம்.
//

ஆமாம் பாலா, இது கயமையிலும் கயமை.

வஜ்ரா 10/22/2006 12:37 AM  

//
இந்தியாவை மொகலாயர்கள் சுமார் 800 வருடங்கள் ஆண்டார்கள் என்று சொன்னால், இப்பகுதிகளடங்கிய நிலப்பரப்பே என்று புரிந்து கொள்கிறோம்.
//

பரதன், அசோகர், ஹர்ஷர், ஆண்ட காலத்திலும் இதே நிலப் பரப்பு ஒரே ஆளுமைக்கு உட்பட்டு இருந்தது என்பது நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

பாரதப் போரில் பாண்டிய மன்னர்கள் படைகள் கூட போரிட்டுள்ளது.

பரத கண்டம் (Country, State என்பதெல்லாம் இரண்டாவது உலகப் போர் காலத்திலிருந்து தான் ஆரம்பித்தது..) பழமை வாய்ந்தது.

மாதங்கி 10/22/2006 3:33 AM  

அதிரைக்காரரே, சிந்திக்கத் தூண்டும் பதிவைப் போட்டிருக்கிறீர்கள்.

Anonymous 10/22/2006 4:54 AM  

be indian but love others.

குமரன் (Kumaran) 10/22/2006 8:33 AM  

அதிரைக்காரரே.

வடமொழியாகிய சமஸ்கிருதத்தை யாரோ ஒரு அயல்நாட்டார் ஆராய்ச்சி செய்து அது கணினிக்கு ஏற்ற மொழி என்று சொல்லிவிட்டதாக நானும் படித்திருக்கிறேன். ஆனால் வடமொழியையும் வடமொழி நூற்களையும் ஆராய்ச்சி செய்வதே இந்தாலஜி பிரிவினர் எப்போதும் செய்வது என்பதையும் தமிழ் போன்ற பிற இந்திய செம்மொழிகளையும் வேறு இந்திய மொழிகளையும் ஆராய்வது இன்னும் இந்தாலஜி பிரிவில் பெரும்பான்மையாக நடைபெறவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். அப்படிச் செய்தால் தமிழும் கணினிக்குரிய மொழி தான் என்பது நிறுவப்படும்.

நீங்கள் சொன்னது போல் இந்தியா ஆயிரம் வருடங்களாக யார் மீதும் படையெடுத்ததில்லை என்பது ஒரு பொய்யான தகவலே. இந்திய நாட்டிற்குள்ளேயே இருந்த சிறு நாடுகளும் அவை ஒன்றின் மீது மற்றொன்று படையெடுத்துப் போர் புரிந்ததும் வரலாற்றில் தெளிவாக இருக்கிறதே. தற்போது இந்தியா என்று இருக்கும் ஒரு நிலப்பரப்பிற்கு வெளியே இந்தியா படையெடுக்கவில்லை என்பதால் இந்தியாவிற்கு போர்வெறி இல்லை என்றாகிவிடுமா? இந்தியர்களுக்குத் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ளவே நேரம் போதவில்லை போலும்.

ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் ஈழத்தின் மீதும் கடாரத்தின் மீதும் சோழர்கள் படையெடுத்துச் சென்றதை வசதியாக இதில் மறந்துவிட்டார்கள். ஒரு வேளை இதை எழுதியவர்களுக்கு சோழர்கள் எல்லாம் இந்திய மன்னர்களின் சேராதவர்களாக இருக்கும்.

இந்தியன் என்பதில் பெருமை கொள்ள எத்தனையோ உண்மையான தகவல்கள் இருக்கின்றன. இப்படிப்பட்டப் பொய்த் தகவல்களை குடியரசுத் தலைவர் முதற்கொண்டு சிலர் சொல்லும் போது வருத்தமாகத் தான் இருக்கிறது.

BadNewsIndia 10/22/2006 4:46 PM  

சிலவற்றில் உண்மை இல்லை என்றாலும், proud to be an Indian, என்று இந்த மாதிரி ஏதாவது அப்பப்ப கண்ணுல நம்ம இளைய சமுதாயத்திர்க்குப் படுவது நல்லதே.

நம் ஊரில் இன்னும் brain-drain ஆகவில்லை என்பது தான் என் கருத்து.

பாலா சொன்னதை போல் 'ashamed to be an Indian' என்று ஒரு கும்பல் கூவிக்கொண்டு இருக்கிறது.
உள்ளூரிலும் பல ஓநாய்கள் அந்த கும்பலில் உண்டு.

Chandravathanaa 10/22/2006 9:27 PM  

பின்னூட்டமிட நேரமில்லாது போனாலும் உங்கள் பதிவுகளை எல்லாம் படித்தேன்.
சுவாரஸ்யமாக எழுதியிருந்தீர்கள்.

சத்திய நேசன் 10/23/2006 1:39 AM  

//இந்தியாவின் வல்லரசுக் கனவு 2020 இலிருந்து 2010 என்ற நிலைக்கு முன்னெடுத்துச் செல்ல இப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் சுட்டுங்கள். இதுவே நட்சத்திரவாரப் பதிவின் மூலம் நான் விடுக்கும் வேண்டுகோள்//

அதிரைக்காரன்,

ஒருவார காலம் நகைச்சுவை ததும்பும் பதிவுகளை தந்த நீங்கள், நட்சத்திர வார கடைசி பதிவாக சிந்திக்கத் தூண்டும் பதிவொன்றை தந்திருக்கிறீர்கள். நன்றி.

அதிரைக்காரன் 10/23/2006 1:44 PM  

//அதே சமயம், இந்தியர் என்பதில் சிறுமை கொள்வோம் என்று ஒரு கும்பல் நம்ம ஊரில் பறை சாற்றிக் கொண்டிருப்பது அயோக்யத்தனம்//

அவர்கள் எங்கு சென்றாலும் சிறுமை அடைவார்கள். அவர்களுக்கு என் Advanced வாழ்த்துக்களை :-( தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிரைக்காரன் 10/23/2006 1:49 PM  

//சமஸ்கிருதத்தைப் பற்றி அதிகம் அறிந்ததில்லை. ஆனால் தமிழுக்கு அந்த தகுதி இருக்கிறது என்று நிச்சயமாகக் கூறமுடியும.//

ஓகை,

சமஸ்கிருதம் அறிந்தவர்கள் இவ்விடயம் பற்றி விளக்க முன்வந்தால் நன்றாக இருக்கும்.

(அது கிடக்கட்டும் 'ஓகை' என்பதற்கு என்ன அர்த்தம் ஐய்யா?)

அதிரைக்காரன் 10/23/2006 1:50 PM  

//சமஸ்கிருதத்தைப் பற்றி அதிகம் அறிந்ததில்லை. ஆனால் தமிழுக்கு அந்த தகுதி இருக்கிறது என்று நிச்சயமாகக் கூறமுடியும.//

ஓகை,

சமஸ்கிருதம் அறிந்தவர்கள் இவ்விடயம் பற்றி விளக்க முன்வந்தால் நன்றாக இருக்கும்.

(அது கிடக்கட்டும் 'ஓகை' என்பதற்கு என்ன அர்த்தம் ஐய்யா?)

அதிரைக்காரன் 10/23/2006 1:57 PM  

//பரதன், அசோகர், ஹர்ஷர், ஆண்ட காலத்திலும் இதே நிலப் பரப்பு ஒரே ஆளுமைக்கு உட்பட்டு இருந்தது என்பது நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.//

வஜ்ஜிரா,

சிறு சிறு மாகாணங்களாககைருந்த பகுதிகளை ஒரே ஆளுகையின் கீழும் சட்டத்தின் கீழும் கொண்டு வந்து இன்று இருக்கும் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கியவர்கள் என்ற காரணத்தினாலேயெ மொகலாயர்கள் மற்ற மன்னர்களை விட முக்கியத்துவம் பெறுகிறார்கள்.

மொகலாயர்கள் கொண்டு வந்த பல சீர்திருத்தங்கள் இன்றும் நம் இந்தியாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு பின்பற்றப் பட்டு வருகிறது.

அசோகர்தான் மரங்களையும் நட்டி குளங்களை வெட்டினாராமே! அப்ப அதுக்கு முன்னால குளமும் மரமும் இல்லையா?

:-)

வஜ்ரா 10/23/2006 2:13 PM  

ஆத்திரக்காரன்,

//
அசோகர்தான் மரங்களையும் நட்டி குளங்களை வெட்டினாராமே! அப்ப அதுக்கு முன்னால குளமும் மரமும் இல்லையா?
//

அதே தான்...முகலாயர் வருகைக்கு முன்னரும் இந்த நிலப்பரப்பு ஒரே சட்டத்தின் கீழ் இருந்துள்ளது...

உங்கள் அசோகர் பற்றிய அறிவு மரம் நடுவது, குளம் வெட்டுவதைத் தாண்டவில்லை என்றால் என்னால் எதுவும் சொல்ல முடியாது...

ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். முகலாயர்களால் நன்மை விழைந்தது இந்தியாவை ஒன்றிணைத்தனர் என்ற ஜல்லியை ஏற்றுக் கொள்ள முடியாது.

முகலாயர்கள் கூட அவர்களுக்குள் போரிட்டுக் கொண்டது தெரியாதா? விஜய நகர சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்த பல இஸ்லாமிய மன்னர்கள் ஒன்று கூடித்தான் வென்றனர்...ஒவ்வொருவரும் தனித் தனி அரசர்கள்...

அக்பர் செய்தார் என்றால் அசோகர் செய்திருக்கிறார்..அசோகர் செய்யவில்லை என்றால் அக்பரும் ஒன்றும் சாதிக்கவில்லை. The logic should work both ways.

முகலாயர்கள் என்ன சீர் திருத்தத்தைக் கொண்டு வந்தனர்...

கோவில்களை அரசுடமையாக்கி திம்மிக்களுக்கு அதிக வரி விதித்த சீர் திருத்தம் என்றால்...ஆம், அதை இன்னும் நாம் பின் பற்றிக் கொண்டு தான் இருக்கிறோம்.

அருண்மொழி 10/23/2006 2:25 PM  

//பரதன், அசோகர், ஹர்ஷர், ஆண்ட காலத்திலும் இதே நிலப் பரப்பு ஒரே ஆளுமைக்கு உட்பட்டு இருந்தது என்பது நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.//

பதிவிற்கு சம்பந்தம் இல்லாமல் இருந்தால் மன்னிக்கவும்.

அசோகரை ஓரளவு ஒத்துக் கொள்ளலாம். ஆனால் ஹர்ஷர்?? அவர் நம்ம வடிவேலுவிடம் தோற்றதாக படித்திருக்கின்றேன். ஒரு வேளை அந்த சரித்திரமும் மெஷினரிகளின் பொய்யோ!!!. பரதன் - ஆட்டத்திற்கு நான் வரவில்லை :-)

//ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் ஈழத்தின் மீதும் கடாரத்தின் மீதும் சோழர்கள் படையெடுத்துச் சென்றதை வசதியாக இதில் மறந்துவிட்டார்கள். ஒரு வேளை இதை எழுதியவர்களுக்கு சோழர்கள் எல்லாம் இந்திய மன்னர்களின் சேராதவர்களாக இருக்கும்.//

சோழன் படை எடுப்பு. அதெல்லாம் திராவிட பெத்தடின்களின் பொய் பிரச்சாரம் (அ) தமிழர்களை தூண்டி விட மெஷினரிகள் எடுத்து விட்ட பொய் :-)

ஓகை 10/24/2006 2:19 AM  

இந்தியர்கள் போர் செய்ததைப் பற்றி குமரன் சொல்வது முற்றிலும் சரி.

//நம் ஊரில் இன்னும் brain-drain ஆகவில்லை என்பது தான் என் கருத்து.//

உண்மை. அது எப்போதும் நடக்கவே நடக்காது. எத்தனை பேர் இங்கிருந்து போனாலும் வல்லுனர்கள் இங்கே உருவாகிக் கொண்டே இருப்பார்கள்.

ஓகை 10/24/2006 2:29 AM  

//(அது கிடக்கட்டும் 'ஓகை' என்பதற்கு என்ன அர்த்தம் ஐய்யா?)//


ஐயா அதிராம்பட்டிணத்துக்காரரே,

கொஞ்சம் இதைப் படித்துப் பாருங்கள். சகலமும் விளங்கும்.

அதிரைக்காரன் 10/24/2006 9:53 AM  

//அதிரைக்காரரே, சிந்திக்கத் தூண்டும் பதிவைப் போட்டிருக்கிறீர்கள். //

மாதங்கி,

அதிரைக்காரரே சிந்திக்கத் தூண்டும் பதிவைப் போட்டிருக்கிறீர்கள். உங்கள் பின்னூட்டத்தில் கமா(,)வை நீக்கிவிட்டுப் படித்தேன். :-)

அடிக்கடி கயமைத்...ஸாரி பின்னூட்டமிட்டதற்கு நன்றி

அதிரைக்காரன் 10/24/2006 10:00 AM  

//இந்தியர்களுக்குத் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ளவே நேரம் போதவில்லை போலும். //

குமரன்,

சரியாகச் சொன்னீர்கள். அன்றைய பாரத ஆட்சியாளர்கள் சாதாரண புறாவுக்காகவெல்லாம் போரிட்டு இருக்கிறார்கள்.(23ஆம் புலிகேசி?). அதையே சென்ற பாரதீய ஆட்சியாளர்களும் கொஞ்சம் மாறுதலாக முயற்சி செய்தார்கள்.

வந்தெமாத்தரம் பாடாவிட்டால் இந்தியாவின் மீது பற்றில்லையாம். இதுக்கு புறா பரவாயில்லை! :-)

அதிரைக்காரன் 10/24/2006 10:04 AM  

//பின்னூட்டமிட நேரமில்லாது போனாலும் உங்கள் பதிவுகளை எல்லாம் படித்தேன்.
சுவாரஸ்யமாக எழுதியிருந்தீர்கள். //

பாராட்டுக்கு நன்றி சந்திரா மேடம்!

(விசிலடிக்கும் வதனா..வதனான்னு ஒரு பாட்டு வருமே! அது நீங்க தானா?)
:-)

அதிரைக்காரன் 10/24/2006 10:06 AM  

//உள்ளூரிலும் பல ஓநாய்கள் அந்த கும்பலில் உண்டு. //

Bad News of India,

ஓநாய்கள்=ஓ போடும் நாய்களைப் பற்றித்தானே சொல்றீங்க?

அதிரைக்காரன் 10/24/2006 10:09 AM  

//be indian but love others. //

அணானி,

அது மாதிரி செய்யிறவங்க எங்களைப் பொருத்தவரை Anonymous தான்!

அதிரைக்காரன் 10/24/2006 10:20 AM  

//அதே தான்...முகலாயர் வருகைக்கு முன்னரும் இந்த நிலப்பரப்பு ஒரே சட்டத்தின் கீழ் இருந்துள்ளது...//

வச்சிர்ரா! (என்னை ஆத்திரக்காரன் என்றதற்கு பழிவாங்க!!)

ஹர்ஷர், அசோகர் etc மன்னர்கள் ஆண்ட பகுதிகள் இந்தியா அல்ல! அவரவர்கள் பெயரில் பேரரசு, சிற்றரசு என தகுதிக்கு ஏற்ப ஆண்டார்கள். மொகலாயர்கள் மட்டுமே முழு இந்தியாவையும் ஆண்டார்கள்.

மற்றவர்களை விட மொகலாயர்கள் ஆட்சியில் இந்தியா சீர்பெற்றது என்பதை உங்களுக்கு ஒப்புக் கொள்ள மனமில்லை என்றால், மொகலாயர்களால் இந்தியா சீரழிந்தது என்பதற்கான ஆதாரத்தை வையுங்கள்.

சென்றவாரம் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தல்களில் வென்றவர்கள் முதலில் நன்றி சொல்ல வேண்டியது மொகலாயர்களுக்குத்தான் தெரியுமா? என்னா பஞ்சாயத்து என்ற கான்சப்டைக் உருவாக்கியவர்கள் மொகலாயர்கள்!

பாஞ்=ஐந்து, ஆயத் =அம்சம் ஐந்தம்சம் திட்டம்னு நெனெக்கிறேன். அவை என்னன்னு கேட்டுப்போட்டு பரணில் கிடக்கும் என் பழைய வரலாற்றுப் புக்ஸை தேட வஜ்ஜிராதீங்க!

அதிரைக்காரன் 10/24/2006 10:22 AM  

//ஒருவார காலம் நகைச்சுவை ததும்பும் பதிவுகளை தந்த நீங்கள், நட்சத்திர வார கடைசி பதிவாக சிந்திக்கத் தூண்டும் பதிவொன்றை தந்திருக்கிறீர்கள். நன்றி. //

சத்யன்,

சத்யமாகவாச் சொல்றீங்க?

அட்றா சக்கை 10/24/2006 10:31 AM  

வக்கிரா தன் புத்தியைக் காட்டாமல் இருக்க முடியாது போல..

பொதுவாக சிந்திக்கவைக்கக் கூடிய பதிவை எப்படி தங்கள் காழ்ப்புப் பின்னூட்டங்களால் hijack செய்வது என்பது இந்த கும்பலுக்குக் கைவந்த கலை.

அதைத் தான் செய்துள்ளார் இப்போதும்.

நீதி, நிதித் துறையில் புழங்கிவரும் ஜாமீன், தாசில்தார், ரத்து, நமூனா, அமீனா போன்ற வார்த்திகளுக்கு அசோகர், ஹர்ஷர் காலத்திலிருந்த அல்லது சமஸ்கிருத சொற்களை சொல்லட்டும் இப்போதைக்கு.

அதிரைக்காரன் 10/24/2006 10:32 AM  

//அது எப்போதும் நடக்கவே நடக்காது. எத்தனை பேர் இங்கிருந்து போனாலும் வல்லுனர்கள் இங்கே உருவாகிக் கொண்டே இருப்பார்கள். //

ஓகை,

உருவாக மாட்டார்கள் என்று சொல்லவில்லை. இந்தியாவில் தொழில் நுட்பக் கல்வி படித்தவர்கள் குறைந்தபட்சம் 5-10 ஆண்டுகள் நம் நாட்டில் சேவை செய்யவேண்டும் என்ற நிலை இருந்தால் இந்தியாவின் வல்லரசுக் கனவு சமகாலத்தில் நிறைவேற வாய்ப்புண்டு என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

(இதைத்தான் வந்த மாட்டையும் கட்டாமல் போன மாட்டையும் தேடாமல் இருப்பது என்பார்களோ?)

:-)

அதிரைக்காரன் 10/24/2006 10:56 AM  

//நீதி, நிதித் துறையில் புழங்கிவரும் ஜாமீன், தாசில்தார், ரத்து, நமூனா, அமீனா போன்ற வார்த்திகளுக்கு அசோகர், ஹர்ஷர் காலத்திலிருந்த அல்லது சமஸ்கிருத சொற்களை சொல்லட்டும் இப்போதைக்கு. //

அட்றா சக்கை,

நீங்க இப்படி கொதிந்தெழுந்தால் வஜ்ரா முன்ஜாமீன் வாங்கி விட்டு உள்ளூர் தாசில்தாரிடம் சொல்லி பின்னூட்டத்தை ரத்து செய்யச் சொல்லிடுவார். :-)

அமினா புகுந்த வீடும் வஜ்ரா புகுந்த வலைப்பூவும் உருப்படாது!

:-)

வஜ்ரா 10/24/2006 11:38 AM  

யோவ் ஆத்தி அப்புறம் ஓட்றா சக்க,

உங்களுக்கெல்லாம்...அர்த சாஸ்திரம் பற்றித் தெரியாதா?

இல்லன்னா இங்க பாத்துக்குங்க...அது மௌரியர்கள் ஆட்சியில் இருந்த சட்டம்.

அசோகர், கோவிலில் உயிர்பலி கொடுக்ககூடாது என்றெல்லாம் சட்டம் போட்டு இருக்கிறார் அந்த கல்வெட்டெல்லாம் காந்தாரியில் கிடைத்திருக்கிறது. உங்களுக்குத் தெரியல்லன்னா அது இல்லன்னு அர்த்தமில்ல...

முகலாயர்கள் செய்யவில்லை என்பது என் வாதம் அல்ல...அதற்கு முன்னரே பல இந்திய அரசர்கள் செய்ததை முகலாயர்களும் செய்தார்கள் அவர்கள் கொண்டு வந்த சட்ட திட்டங்களுடன், லோக்கல் சட்ட திட்டத்தையும் கலந்து...

நீங்கள் தான் முகலாயர்கள் முன்பு எதுவுமே இல்லை...என்று "J" அடித்தது...!

யோவ் ஆத்தி, நான் வந்தனான உன் வலைப்பூ வெளங்காமப் போயிருச்சாக்கும்...? அதுக்கு முன்னாடி வெளங்கிகிட்டு இருந்துச்சுன்னு எந்த மடையன்யா சொன்னான் ?

அமீனா நுளையுறான்னா அந்த வீடு என்னிக்கோ வெளங்காமப் போயிருச்சுன்னு அர்த்தம்.. பிரிஞ்சதா!! அமீனா வந்து மங்களம் பாடிட்டுப் போவாரு...!

குமரன் (Kumaran) 10/24/2006 2:34 PM  

//அமினா புகுந்த வீடும் வஜ்ரா புகுந்த வலைப்பூவும் உருப்படாது!
//

வஜ்ரா சங்கர் மீது இவ்வளவு தூரம் வெறுப்பா உங்களுக்கு? தெரியாமல் போய்விட்டதே? இந்த அளவிற்கு முன்பகை இருக்கிறதா உங்களுக்கும் வஜ்ராவிற்கும்? உங்கள் பின்னூட்டத்தைப் படித்தவுடன் மனம் வருத்தப்பட்டது. இவ்வளவு தூரம் ஆத்திரப்படவேண்டுமா ஒருவர் மேல் அவர் என்ன தான் உங்களுக்கு எதிரான கருத்து சொல்பவராக இருந்தாலும்? :-((

ஓகை 10/24/2006 6:42 PM  

அதிர்,

ரொம்ப காலமா- ரொம்ப காலம்னா எவ்வளவு காலமான்னு தெரியாது - இந்தியா ஒற்றை நிலமாத்தான் உலகத்தவருக்கு தெரியும். பூகோளம் அப்படி. நமக்குள்ள நாம 56 தேசம்னு சொல்லுவோம். ஆனா வெளில நாம இந்தியா தான். யுவன் சுவாங்கும் பாஹியானும் இந்தியாவுக்குதான் வந்தாங்க. இந்தியாவுக்கு வந்தப்பறம் இங்க எல்லா பகுதிக்கும் போனாங்க. மொகலாயர் நம்மள மொத்தமா இந்துஸ்தானம்னு சொல்லுவாங்க. நம்ம தேசமெல்லாம் மாவட்டம் மாதிரி மாநிலம் மாதிரி பிரிஞ்சி பிரிஞ்சி இருந்தாலும், முகலாயருக்கு முன்ன இந்துமதத்தின் பிரிவுகள், புத்தம் ,சமனம் இந்த மதங்கள் இப்ப ரயிலபாத இணைக்கிற மாதிரி நம்மள இணைச்சுகிட்டுதான் இருந்துச்சு. முகலாயர் வத்தப்பறம் இதுல இஸ்லாமும் சேர்ந்துகிச்சு.

ஆயிரம் பேரு வந்து எத்தன பொய்ய்ய் சொன்னாலும் இதையெல்லாம் மறைக்க்க முடியாது.

பரதன்னு சொன்னா சில பேருக்கு ஒரு ஒவ்வாமை(அலர்ஜி) வந்துரும்.

இந்தப் பதிவு திசை மாறிச் செல்லும் அபாயம் இருக்கிறது.

bala 10/24/2006 10:18 PM  

//முகலாயர்கள் செய்யவில்லை என்பது என் வாதம் அல்ல...அதற்கு முன்னரே பல இந்திய அரசர்கள் செய்ததை முகலாயர்களும் செய்தார்கள் அவர்கள் கொண்டு வந்த சட்ட திட்டங்களுடன், லோக்கல் சட்ட திட்டத்தையும் கலந்து...

நீங்கள் தான் முகலாயர்கள் முன்பு எதுவுமே இல்லை...என்று "J" அடித்தது//

பூங்குழலியை கேளுங்க..தொல்காப்பியதில் எவ்வாறு தமிழர்கள் தங்களுக்கென்று ஒரு சட்டம் ஒரு வரைமுறை,ஒரு ஒழுங்குமுறை என்ற அமைப்பில் வாழ்ந்து காட்டினார்கள் என்று சுட்டிக் காட்டுவார்.
அப்போது ஆரியமும் அதில் தன் பங்கை புகுத்தியது என்ற உண்மையும் தெரிய வரும்.
இவ்வாறு திராவிடீயம்,ஆரியம்,முகலாயம்,போன்ற பல மூலங்களிலிருந்து சேர்க்கப்பட்ட கலவை தான் நமது இப்போதுள்ள கலாசாரம்,சட்டம்,ஒழுங்குமுறை எல்லாமே.

ஆகையால் முகலாயர்கள் தான் modern governance கொண்டு வந்தார்கள் என்றூ சொல்லுவது வஜ்ரா சொல்வது போல் வெறும் ஜல்லி தான்.

Infact in todays context you will see that in many parts of middle east/Afghanistan/Iran, where the exclusivity of culture was preserved to a large extent, the governance and social set up remains relatively feudal,primitive and devoid of modernism and liberalism.

பாலா

அட்றா சக்கை 10/25/2006 6:18 AM  

யோவ் வாலாட்டித் தங்கள் மாஸ்டர்களுக்கக உழைக்கும் வக்கிரா பஞ்சர்,

உனக்குத் தமிழ் தெரியுமா தெரியாதா? நான் கேட்ட

//நீதி, நிதித் துறையில் புழங்கிவரும் ஜாமீன், தாசில்தார், ரத்து, நமூனா, அமீனா போன்ற வார்த்திகளுக்கு அசோகர், ஹர்ஷர் காலத்திலிருந்த அல்லது சமஸ்கிருத சொற்களை சொல்லட்டும் இப்போதைக்கு.//

இதுக்கு மட்டும் பதில் சொல்லு.

கொசுறு: நீ குடுத்த சுட்டியைத் தொகுத்து வச்சிருக்கது உங்க காவி(லி)ப் பசங்கன்னு தெரியும். அதில இருந்து ஒரே ஒரு சாம்பிள்
//A Kshatriya who commits adultery with an unguarded Brahman woman shall be punished with the highest amercement; a Vaisya doing the same shall be deprived of the whole of his property; and a Shudra shall be burnt alive wound round in mats.

ஒரு பிராமின் செஞ்சா? மூச்..

Whoever commits adultery with the queen of the land shall be burnt alive in a vessel. A man who commits adultery with a woman of low caste shall be banished, with prescribed marks branded on his forehead, or shall be degraded to the same caste. A Shudra or an outcaste who commits adultery with a woman of low caste shall be put to death, while the woman shall have her ears and nose cut off. Adultery with a nun shall be punishable with a fine of twenty-four panas, while the nun who submits herself shall also pay a similar fine. A man who forces his connection with a harlot shall be fined twelve panas. When a man has connection with a woman against nature, he shall be punished with the first amercement. A man having sexual intercourse with another man shall also pay the first amercement. When a senseless man has sexual intercourse with beasts, he shall be fined twelve panas; when he commits the same act with idols of goddesses, he shall be fined twice as much. . . .//

ரொம்ப நல்லா இருக்குது.. சரி சரி கேட்ட கேள்விக்கு இப்போவாவது பதில் சொல்லு. முடிஞ்சா..

அதிரைக்காரன் 10/26/2006 1:32 PM  

//உங்கள் பின்னூட்டத்தைப் படித்தவுடன் மனம் வருத்தப்பட்டது. இவ்வளவு தூரம் ஆத்திரப்படவேண்டுமா ஒருவர் மேல் அவர் என்ன தான் உங்களுக்கு எதிரான கருத்து சொல்பவராக இருந்தாலும்? :-(( //

குமரன்,

இந்த பதிவில் நம் எல்லோருக்கும் பொதுவான ஒரு விசயத்தைப் கொஞ்சம் சீரியசா எழுதி இருந்தேன். அதில் மாற்றுக் கருத்து இருந்தால் நளினமாக மறுக்கலாமே!

வஜ்ராவின் பின்னூட்டங்களை மீண்டும் ஒருமுறை படியுங்கள். காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை கொட்டியுள்ளார். என்ன காரணமாக இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.

வஜ்ராவின் சூடான பின்னூட்டத்தை தொடர்ந்துதான் அட்றா சக்கை கண்டித்துள்ளார். நானும் அவ்வாறே ஜோதியில் கலந்து விட்டேன். (பத்த வச்சது வஜ்ராதான்!) இதை யாராவது ஆரம்பத்திலேயே சுட்டி இருந்தால் அடுத்தடுத்த பின்னூட்டங்களுக்கு அவசியமிருந்திருக்காது (எனக்குத பி.க.நஷ்டம்!:-)

அதிரைக்காரன் 10/26/2006 1:35 PM  

//இந்தப் பதிவு திசை மாறிச் செல்லும் அபாயம் இருக்கிறது. //

வஜ்ரா கவனிக்கவும்!

(காலங்கடந்த எச்சரிக்கை? :-(

அதிரைக்காரன் 10/26/2006 1:58 PM  

ஓகை,

பெயர்க்காரணம் ஓகோன்னு இருக்குது!

வஜ்ரா 10/26/2006 2:03 PM  

அதிரைக்காரன்

இது என்னுடைய முதல் பின்னூட்டம்..

.........
//
இந்தியாவை மொகலாயர்கள் சுமார் 800 வருடங்கள் ஆண்டார்கள் என்று சொன்னால், இப்பகுதிகளடங்கிய நிலப்பரப்பே என்று புரிந்து கொள்கிறோம்.
//

பரதன், அசோகர், ஹர்ஷர், ஆண்ட காலத்திலும் இதே நிலப் பரப்பு ஒரே ஆளுமைக்கு உட்பட்டு இருந்தது என்பது நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

பாரதப் போரில் பாண்டிய மன்னர்கள் படைகள் கூட போரிட்டுள்ளது.

பரத கண்டம் (Country, State என்பதெல்லாம் இரண்டாவது உலகப் போர் காலத்திலிருந்து தான் ஆரம்பித்தது..) பழமை வாய்ந்தது.
........


இங்கே காழ்ப்பு உணர்ச்சி எங்கே ?

இதற்கு பதில் நீங்களும், ஓட்றா சக்கையும்...கொடுக்கும் போது எப்படி Address செய்தீர்கள்..

இது நீங்கள் கூறியது: வஜ்ஜிரா அப்புறம்...வச்சிர்ரா! (என்னை ஆத்திரக்காரன் என்றதற்கு பழிவாங்க!!)

ஓட்றா சக்கை: வக்கிரா தன் புத்தியைக் காட்டாமல் இருக்க முடியாது போல..

ஓட்றா சக்கை: யோவ் வாலாட்டித் தங்கள் மாஸ்டர்களுக்கக உழைக்கும் வக்கிரா பஞ்சர்.

//
நீ குடுத்த சுட்டியைத் தொகுத்து வச்சிருக்கது உங்க காவி(லி)ப் பசங்கன்னு தெரியும். அதில இருந்து ஒரே ஒரு சாம்பிள்
//

சட்டம் இருந்ததா இல்லையா என்பது கேள்வி. அது எத்தகையது என்பது விவாதப்பொருள் அல்ல.

ஆகயால் இதற்கு என்னால் பதில் சொல்ல முடியும் என்ற போதிலும் அதிரைக்காரர் பதிவில் இந்த சண்டை வேண்டாம். வேணும்னா தனியா எழுது வந்து உதைக்கிறேன்...பஞ்சர் ஒட்றேன்..இப்ப மருவாதையா மூடிட்டு போ.

அதிரைக்காரரே,

//
வஜ்ராவின் சூடான பின்னூட்டத்தை தொடர்ந்துதான் அட்றா சக்கை கண்டித்துள்ளார்.
//

எந்தப் பின்னூட்டம் சூடானது... நீங்கள் வஜ்ஜிர்ரா என்றீர்கள், ஆத்திரக்காரன் என்றேன்...அது காழ்ப்புணர்ச்சி என்றால். ஓட்றா சக்கை செய்வது என்ன...? காதல் உணர்ச்சியா ? அவருடன் நீங்களும் சேர்ந்துகொண்டு செயவது...?

அதிரைக்காரன் 10/26/2006 2:03 PM  

வஜ்ரா,

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்கிறீர்களா? இல்லையா? ஒன்றுமே சொல்லாமல் மொகலாயர்களுடன் போர் மட்டும் தொடுக்கிறீர்கள்?

:-)

வஜ்ரா 10/26/2006 2:08 PM  

//
பரதன்னு சொன்னா சில பேருக்கு ஒரு ஒவ்வாமை(அலர்ஜி) வந்துரும்.
//

பரதவர்ஷம் என்றால் கம்யூனல்....இந்தியா என்றால் செக்குலர்...!! அதுக்குத் தானே...

இந்துஸ்தான் என்றால் என்ன ? செகுலரா...? கம்யூனலா ?

எனக்கு பாரத் என்ற பெயரே பிடித்திருக்கிறது...

..
எனக்கு இந்தியர் என்பதில் உங்களுக்கு எவ்வளவு பெறுமை உள்ளதோ அதே அளவு பெருமை உள்ளது.

Anonymous 10/26/2006 8:39 PM  

வஜ்ரா!

உங்களுக்கு தன்னடக்க ரஸம் ஜாஸ்தி.

பரத கண்டம் என்ற இந்த தேஸத்தை மவுரியர்கள் என்ன பெயரில் ஆண்டார்கள் என்று
குறிப்பிடவில்லையே!

ஸ்றீ ராமச்சந்திர பிரபுவும் த்ர்மச் சக்கரவர்த்தியும் இந்தப் பரத வர்ஷத்தை பரித்தபோது ஜில்லா மாஜிஸ்ட்ரேட், தாசில்தார், கார்பரேஸன் மேயர்,கவுன்ஸ்லர், டிஸ்ட்ரிக்ட் ஸூபரிண்டெண்டென்ட் ஆஃப் போலீஸ் என ஸ்டேட், ரீஜனல் ஏரியா வாரியாக முறைப்படி பிரித்து ஆட்சி செய்தனர். அதைப் பார்த்து இந்த தேஸத்தில் வ்யாபாரியாக வந்த வெள்ளைக்காரன் தன் ஆட்சியை அமைத்தான் என்ற இதிஹாஸ சத்யத்தை சொல்லாமல் விட்டு விட்டீர்களே.

லின்க் எல்லாம் இன்டெர்நெட்டில் நாம் எழுதும் செய்திகள் தான். நாளையே வஜ்ர ராவின் முப்பாட்டனார் இம்சை அரசன் இருபத்திமூணாம் எலிகேசி என்று ஒரு லின்க் கொடுக்காட்டுமா.

Anonymous 12/19/2006 1:58 AM  

நம்மவர்கள் மேலை நாடுகளுக்கு செல்வது தவறல்ல, அதே சமயம் சம்பாதிப்பதை இங்கு அனுப்பினால் போதுமா?

Anonymous 11/07/2007 9:32 PM  

சதியை ஒவ்ரங்கஸீப் தடை செய்யவில்லையென்றால் எத்தனை இந்துப்பெண்கள் அனியாயமாக நெருப்பில் குதித்து செத்திருப்பார்கள்

சங்பரிவாரம் ஆட்சிக்கு வந்தால் இது மீண்டும் வரும். மாதவராவின் தாய் ப ஜ க வின் முக்கிய தலைவியாக இறந்தவர். அப்பெண் இச்சதியை தீவிரமாக ஆதரித்து வந்தார்(அவர் மட்டும் நெருப்பில் குதித்து சாகவில்லை). சங்பரிவார பெண்கள் நெருப்பில் குதித்து சாகக்கூடாது என்று நினைத்தால் சங்பரிவார ஆண்களை திருத்துங்கள் அல்லது தீர்த்து கட்டுங்கள்.

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP