'விபரங்கெட்ட' வினவு செய்தியாளர், சவுதியிலிருந்து…..

Wednesday, January 25, 2012


கருத்து சுதந்திரம், கத்தரிக்காய் சுதந்திரம் என்றெல்லாம் உசுப்பேற்றி பதிவிடும் வினவுக்கு, பின்னூட்டவெறி தலைக்கேறினால் இஸ்லாம் அல்லது முஸ்லிம் குறித்து எதையாவது எழுதி இணைய சுகம் காண்பது வினவுக்கு அவ்வப்போதைய பொழுதுபோக்கு.

வினவுக்கு கீழ்கண்ட மடலை அனுப்பி வெளியிடக்கோரி 24 மணிநேரம் கடந்த பிறகும் பதில்லாத காரணத்தால், இதை பதிவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.இனிமேல் தோழர் வினவு உரிமை,சுதந்திரம் என்று பதிவெழுதுவதில் அர்த்தமில்லை. அதற்கான அருகதையை இழந்து விட்டார்கள் என்று தெரிவிக்க வேண்டி வினவுக்கு அனுப்பிய மடலை பதிகிறேன்.

=======================
அன்புள்ள தோழர் வினவுக்கு,

சவூதி ஓஜர் கம்பெனியில் ஊழியர்களுக்கு அநீதியிழைக்கப்படுவது குறித்து வினவு ஓர் பதிவில்,நிறுவனம் நிர்வாகம் ஊழியர்களை வஞ்சிப்பது குறித்து எழுதியிருந்தால் இந்த மடலுக்கு அவசியம் வந்திருக்காது. சம்பந்தமே இல்லாமல் தலைப்பில் "சௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் அல்லாவின் தேசம்!.."என்று தலைப்பிட்டிருந்ததால் வினவுவின் புத்தியில் உரைக்கும்படி சில விசயங்களைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

பின்னூட்டமாக எழுதினால் அதைப்பிடித்து தொங்க சிலருள்ளதால் மடலாக அனுப்புகிறேன். நேர்மையாக வினவு தளத்தில் இதை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

1) சவூதி அரேபியா என்பது பண்டைய இந்தியாவைப்போல் சிறுசிறு நகரங்களாக சிதறிக் கிடந்த பாலைநில சிற்றரசுகளை 19 ஆம் நூற்றாண்டில் பிறந்த "அப்துல் அஸீஸ் பின் ஸவூத்" என்ற அரேபியர் ஒருங்கிணைத்து உருவாக்கிய தேசம்.அதனால்தான் அவரது பெயரால் "ஸவூதி அரேபியா" என்று அழைக்கப்படுகிறது.

2) ஸவூதி உட்பட அரபு நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தாலும்,இஸ்லாம் பெயரளவிலும், இதன் ஆட்சியாளர்களில் பலர் இஸ்லாத்தின் அடிப்படை மக்களாட்சிக்கு எதிரான மன்னராட்சிமுறையையே பின்பற்றி வருகிறார்கள்.

3) மத்திய கிழக்கு மற்றும் எண்ணெய்வள நாடுகளின் செல்வச் செழிப்பின் பின்னணியில் கோடிக்கணக்கான வெளிநாட்டவர்களின் கடின உழைப்பு காரணமாக உள்ளது.குறிப்பாக இந்நாடுகளிலுள்ள இந்தியர்களின் பங்களிப்பு மற்ற நாட்டினரைவிட கூடுதல் என்பது மறுக்க முடியாது உண்மை.

4) வெளிநாட்டினரை மூலதனமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களில் பல்வேறு வகையான பாகுபாடுகள் உள்ளன. உள்நாட்டு மக்களுக்கு குறைவான உழைப்புக்கு அதிக சம்பளமும் சலுகைகளும் வழங்கப்படுவதாக சொல்லப் பட்டாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவே போதவில்லை என்ற புலம்பல்களும் இருக்கவே செய்கிறது. இதுகுறித்து தேவையெனில் விபரமாக எழுதுவேன்.

5) இந்நாடுகளில் பணியாற்றும் வெளிநாட்டவர்களில் உள்நாட்டு குடிமக்களுக்கு நிகராக அல்லது அவர்களை விடவும் கூடுதல் சலுகைகளும் ஊதியமும் பெறும் வெளிநாட்டவர்களும் உள்ளனர். உதாரணமாக, அமெரிக்க குடியுரிமை பெற்ற மேலாளரின் ஊதியம், இந்திய குடியுரிமைபெற்ற மேலாளரின் ஊதியத்தைவிட, உள்நாட்டு குடிமகன் பெறும் ஊதியத்தை விடவும்கூட அதிகம்.அதேபோல், ஒரே மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் இந்திய நர்ஸ் பெறும் சம்பளமும் சலுகைகளும்,பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து நாட்டு நர்ஸுகள் பெறுவதைவிடவும் குறைவு.

6) ஓமான் மற்றும் ஐக்கிய அரபு குடியரசில் அந்நாட்டு குடிமகன்களைவிட வெளிநாட்டவர்கள் குறிப்பாக இந்திய குடிமக்களின் எண்ணிக்கை அதிகம். ஓமானில் இந்திய முதலாளியிடம் ஊதியத்திற்கு பணியாற்றும் உள்நாட்டு அரபுகளின் எண்ணிக்கை சமீப சிலவருடங்கள்வரை கட்டுக்கடங்காமல் போகவே சிறப்பு சட்டங்களை இயற்றி குடிமக்களுக்கு சலுகை வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டது என்றால் அரபு நாடுகளில் இந்தியர்களின் ஆதிக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பதை அறியலாம்.

7) ஐக்கிய அரபு குடியரசில் மிகப்பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களான ETA, LULU, EMKAY குரூப் போன்றவற்றின் நிறுவனர்களாகவும், உயர் பதவிகளிலும் இருப்பவர்களில் பலர் உள்நாட்டு அரபுக்கள் அல்லர்! அதாவது இந்தியர்கள்! அதாவது உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால் உழைப்பால் உயர்ந்தவர்கள்.

நிற்க,

1970 களில் இந்தியர்களின் கனவுபுரியாக இருந்த துபாய் உள்ளிட்ட அரபுநாடுகள்மீதான மோகம் இந்தியர்களை இன்னும் விட்டபாடில்லை.1990 களில் கணினி மற்றும் இணைய தொழில் நுட்பத்தில் இந்தியர்கள் உலகளவில் தவிர்க்கமுடியாத சக்தியாக உருவெடுக்கும்வரை இந்திய அந்நியச்செலவாணி கையிருப்பை தக்கவைக்க இந்த நாடுகளிலிருந்து பெற்ற இந்தியர்களின் ஊதியங்களே உதவின.

நம்நாட்டில் இடைநிலை ஊழியர்கள் பெறும் மொத்த ஊதியத்தைவிட, வளைகுடா நாடுகளில் கடைநிலை ஊழியரின் ஊதியம் அதிகம் என்பதால், நம்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் ஊதியத்தைவிட அதிகம் என்பதால்தான் 40 ஆண்டுகளாக இந்த அரபுநாட்டு மோகம் இந்தியர்களைப் பிடித்தாட்டுகிறது.

தகுதிக்கேற்ற அல்லது சிலரின் தகுதிக்கு மீறிய ஊதியம் வழங்கும் அரபு நாட்டு நிறுவனங்களும் இல்லாமல் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக அனேக வளைகுடா நாடுகள் உள்நாட்டு குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டிற்கான பல சட்டதிட்டங்களை இயற்றியும், வெளிநாட்டவர்களின் சராசரி ஊதியத்தைவிட இந்த நாட்டு குடிமக்களின் ஊதியம் குறைவே. இருந்தபோதிலும் எந்த அரபு குடிமகனும் "இந்தியனே வெளியேறு!" என்று இயக்கம் நடத்திப்போராட வில்லை என்பது வினவு போன்றவர்களுக்குத் தெரியுமா?

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்கூட இல்லாத ஒருசில நிறுவனங்களில் நடக்கும் முதலாளியத்துவ அடக்கு முறையை,அந்த நிறுவனங்கள் சவூதியில் இருப்பதால் மதரீதியில் குறைசொல்லி பதிவிடுவது நேர்மையற்றதும், உள்நோக்கம் கொண்டதும், முஸ்லிம்கள் மீதான வன்மமும் ஆகும்.

பின்னூட்டத்தில் ஒரு அன்பர் சொல்லியிருப்பதுபோல், தீவிரவாதிகளுக்கும் முதலாளிகளுக்கும் மதமில்லை. ஜனநாயக,சோசலிச முதலாளிகளைவிட ஓரளவு நியாயமான முதலாளிகள் சவுதி உள்ளிட்ட அரபு நாடுகளில் அதிகம்.இதற்கு அவர்களில் கடுகளவேணும் அல்லாஹ் நம்மைக் கண்கானிக்கிறான் என்ற எண்ணமே காரணம்.

உண்மையிலேயே வினவுக்கு தொழிலாளிகளின் துயர் தீர்க்கும் சமூக ஆர்வமிருந்தால் அதற்கு வழிசொல்லும் செல்லரித்து வழக்கொழிந்துபோன கம்யூனிச சித்தாங்களைவிட, இஸ்லாத்தில் தீர்வுகள் உண்டு. இதை வினவு நடுநிலையாக அணுகி விமர்சிக்கலாம்.

குறிப்பு: இது சவூதிக்கு வக்காலத்து வாங்குவதற்காக எழுதப்பட்டதல்ல.முஸ்லிம்களால் ஆளப்படும் ஓர் தேசம் என்பதால் அதிலுள்ள நிர்வாக குறைகளை இஸ்லாத்தோடு இணைத்து எழுதியதற்கான எதிர்வினைகூடஅல்ல. சிறுவிளக்கமே.

நன்றி.மாற்றுக் கருத்து இருப்பின் தயக்கமின்றி பதிலிடவும்.
=====================

தொடர்புடைய மரைக்காயர் பதிவு:

சவுதி ஓஜர் தொழிலாளர் பிரச்னை: தீர்வு என்ன?

Read more...

மதம் பிடித்த நாத்திகர்கள்...!

Wednesday, January 18, 2012

தலைப்பு பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம் என்பதால் பலகீனமான மூளை/ இதயம் கொண்ட நாத்திகர்கள் இப்பதிவை வாசிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்:) முன்னதாக நாத்திகர்கள் என்றால் யாரென்று பார்த்து விடுவது நல்லது.

நாத்திகர்கள் என்பவர்கள் தங்களை கடவுள் மறுப்பாளர்களாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இவர்களுக்கு ஆப்ரஹாமிய மதங்களென்று அறியப்படும் பாரம்பரிய தொடர்புகளுள்ள யூதம்,கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதம்/மார்க்கம் மற்றும் தென்னிந்தியாவில் வழக்கிலிருந்த 'நடுகல்' வழிபாட்டைச் சிதைத்து,கட்டமைக்கப்பட்ட வந்தேறிகளான ஆரியர் ஆதிக்கம் கொண்ட இந்து மதம்,அதற்கு முன்னதாக ஆசையை ஒழிப்பதற்கு ஆசைப்பட்ட புத்தருக்குப் பின்வந்த புத்தமதம் போன்ற எந்த மதமும் பிடிக்காது!

ஏன் பிடிக்காது என்றால் இவைகளிலெல்லாம் இவர்களுக்கு ஆர்வமில்லை அல்லது இவைபற்றிய விளக்கங்கள் இவர்களின் 'பகுத்தறிவுக்கு' எட்டவில்லை என்பதே காரணம்.ஒப்பீட்டிற்காகச் சொல்வதென்றால் கணினி குறித்த ஆர்வம்/அறிவில்லாதவர் கணினி மறுப்பாளர் என்று சொல்லிக்கொள்வதற்கு ஒப்பானது. நீங்கள் என்னதான் கணினியின் சிறப்புகளை எடுத்துக்கூறினாலும் இவர்களின் பகுத்தறிவில், அதைப்பயன்படுத்துபவரின் குறைகள் மட்டுமே பூதாகரமாகத் தெரியும்,எனினும், இவர்களுக்கு தங்களை பகுத்தறிவாளிகள் என்று சொல்லிக் கொண்டு பிறரின் நம்பிக்கைகளை எள்ளிநகையாடி சிற்றின்பம் காண்கின்றனர்.

உயிரினங்களின் இயற்கை தகவமைப்புக்கேற்ப அவற்றை வகைப்படுத்திய சமூக மிருகமான மனிதன், தன்னைத் தவிர பிறஉயிரினங்களுக்கெல்லாம் அறிவு குறைவு என்று சொல்லிக்கொள்கின்றனர்.(மிருகங்களும் பறவைகளும் நம்மைப்பற்றியும் நமக்கு எத்தனை அறிவு என்றும் கணக்கிட்டு வைத்துள்ளவோ?:) இவ்வாறு மனிதன் தன்னை ஆறறிவு உயிரினம் என்று எப்படி அவனாகவே சொல்லிக் கொள்கிறானோ,அதேபோன்றே நாத்திகர்கள் தங்களை பகுத்தறிவாளிகள் என்று அவர்களாகவே சொல்லிக்கொள்கின்றனர்.

உண்மையில் பகுத்தறிவு என்பது யாதெனில், தீர்க்கமாக நம்பப்படும் ஒன்றை ஆய்வுக்கு உட்படுத்தி அதிலிருந்து கிடைத்த விடைகளையும் தொடர்ச்சியாக மீளாய்வுக்குட்படுத்தி இறுதியாக பெறப்படும் உறுதியான விசயத்தை தீர்க்கமாக நம்புவதே. இதுவரை உலகில் அப்படி எதுவும் உறுதியாக முடிவுக்கு வந்ததாக நமது "n" அறிவுக்கு எட்டவில்லை.

நாத்திகர்களில் எத்தனைபேர்,எந்தெந்தவிசயங்களைப் எவ்வாறு பகுத்தறிந்து அறிவுப்பூர்வமாக நம்பினார்கள் என்ற தகவல் இல்லை. இவர்களது நம்பிக்கைக்கு அடிப்படை, அமெரிக்காவிலோ,ஐரோப்பாவிலோ அல்லது இவர்கள் அறிவுஜீவிகள் என்று நம்புபவர்கள் சொல்வதே சரியானதென்பது மட்டுமே.இவர்களது தேடல் பயணம் முடிவற்று தடுமாறுவதை பகுத்தறிவு என்று பூசிமெழுகுகின்றனர். எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தும் இவர்களின் நம்பிக்கையை நம்பிக்கையாளர்கள் கேள்வி கேட்டால், எதையாவது சொல்லி திசை திருப்புகின்றனர். இந்தளவில் தான் உள்ளது இவர்களின் பகுத்தறிவு.

நாத்திகர்கள் எல்லோருமே இவ்வகையினர் என்று சொல்லிவிடமுடியாது.நாமறிந்த பிரபல நாத்திகரான பெரியார், தனது முன்னோர்களின் மதமான இந்து மதத்தின் பெயரால் நடந்த அட்டூழியங்களைப் பகுத்தறிந்து,இதற்கு தீர்வு இஸ்லாமே என்று நம்பினார். இவரைப் பின்பற்றியவர்களும் அவர் பகுத்தறிந்த ஆய்வு முடிவுகளைப் பரிசீலித்து பெரியார் தாசன்களாக இருந்தவர்கள் எல்லாம் அப்துல்லாஹ் ஆகி உள்ளனர் என்பதிலிருந்து நாத்திகர்களின் நம்பிகை இறுதியாக முடிவடையும் இடம் இஸ்லாம்!

இத்தகைய இஸ்லாம் தோன்றிய நிலப்பகுதிகளில் ஒன்றான சவூதி அரேபியாவைப்போல் நமது இந்தியாவும், வளம்பெற வேண்டும் என்று சுவனப்பிரியன் ஓர் பதிவிடப்போய், நண்பர் கோவி.கண்ணன் எதிர் பதிவிட்டு, ஒரு மொக்கைப்பதிவு போட்டுள்ளார்.இவரது விருப்பம் என்னவெனில் இந்தியா,இந்தியாவாகவே இருக்கட்டும் என்பதே!
சென்னையை சின்ன சிங்கப்பூராக மாற்றுவேன் என்று மு.க.ஸ்டாலினும்,மயிலாடுதுறையை குட்டி துபாயாக மாற்றுவேன் என்று மணிசங்கர் அய்யரும் சொன்னாலோ அல்லது ஜப்பானைப் பார்,அமெரிக்காவைப் பார் என்று குத்தி காட்டினாலும் யாருடைய பகுத்தறிவுக்கும் கோபம் வருவதில்லை.

ஏனென்றால்,இந்நாடுகள் தங்களது அரசியல் அமைப்பின் அடிப்படையாக குர்ஆனை முன்னிருத்தவில்லை! அப்படி முன்னிறுத்தி இருந்தாலும் ஆப்கானிஸ்தான் மாதிரி ஆக்கிரமிக்கப்பட்டோ அல்லது பாகிஸ்தான் மாதிரி தினம்ஒரு குண்டு வெடிக்கவோ செய்யப்படும் என்பது தனிக்கதை.

தன்னை ஓர் அரை நாத்திகராகச் சொல்லிக் கொள்ளும் கோவி.கண்ணனுக்கு சவூதிமேல் ஏன் இவ்வளவு கொலை வெறி என்று தெரியவில்லை. சுவனப் பிரியன் பதிவுக்கு எதிர்ப்பதிவு போட்டதுபோல்,மு.க.ஸ்டாலின்,மணிசங்கர் அய்யர் மற்றும் யாரெல்லாம் ஜப்பானையும் அமெரிக்காவையும் ஒப்பிட்டு முன்னுதாரணமாகச்சொல்கிறார்களோ, அவர்களுக்கெதிராகவும் ஓர் பதிவு போடாதவரை அவரது கொலைவெறி தீரவில்லை என்பதே உண்மை!

பொங்கல் பண்டிகையை தமிழர்கள் அனைவரும் மதப்பாகுபாடின்றி கொண்டாட வேண்டுமென்ற இவரது பதிவில் நானிட்ட பின்னூட்டத்திற்கு இவரது சப்பைக்கட்டுகளையும் முஸ்லிம்கள் மீதான வன்மத்தையும் பார்க்கும்போது, சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதுதான் நினைவுக்கு வருகிறது.இவரது குறிப்பிட்ட பதிவில் பின்னூட்டத்தை தடுத்து வைத்திருப்பதால் அதுகுறித்த என் கருத்துக்களை தனியாக என் பதிவில் பதிவேன்.

Read more...

ஏழாம் அறிவு இரண்டாம் பாகத்தில் விஜயகாந்த்!!!

Wednesday, November 02, 2011

தமிழ் திரைப்படங்களில் பாகிஸ்தானைப் பற்றி சித்தரித்து போரடித்து விட்டதோ என்னவோ. தற்போது சீனா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார்கள்.

தீபாவளிக்கு வெளியான படங்களில் ஏழாம் அறிவு என்ற படம், சீனர்களின் வீரத்துறவியாக வணங்கப்படும் "டாமோ" 'சங்கரராமன் படுகொலை புகழ்' காஞ்சிபுரத்தில் வாழ்ந்த போதிதர்மராக சூர்யா நடிக்க A.R.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் போதிதர்மர் சீனாவுக்குச் சென்றபோது முதலில் சீனர்கள் தீயசக்தி என்று கருதி அவரை வெருத்ததனால் காட்டில் சுற்றிக்கொண்டிருந்தபோது அங்குள்ள கிராமத்தில் விஷக் காய்ச்சலால் பலர் மரணிக்கின்றனர். விஷக்காய்ச்சல் தாக்கிய ஒரு சிறுமியை போதிதர்மர், இந்தியாவிலிருந்து கற்றுச்சென்ற வைத்திய முறைகள் மூலம் குணப்படுத்தியதால், அம்மக்கள் அவரை மிகவும் மதிக்கின்றனர்.

பிறிதொரு சந்தர்ப்பத்தில் சீன பழங்குடியினரால் அந்த கிராமமக்கள் தாக்கப்பட்டபோது தன்னுடைய வர்மக்கலையால் அவர்களையும் விரட்டி அடித்ததால் காஞ்சிபுரம் போதி தர்மர் சீனாவில் 'டாமோ'வாகிறார்.

இதனிடையே, இந்தியாவின் பிராந்திய வளர்ச்சியைப் பிடிக்காத சீன அரசு, அத்தகைய விஷக்காய்ச்சல் கிருமியை இந்தியாவில் பரப்ப திட்டமிடுவதாகவும், அதை முறியடிக்க போதி தர்மரின் மரபணுக்களைத் தூண்டிவிட்டு அவரது சக்திகளை மீட்டெடுப்பதாக கதை ஒருவழியாக முடிகிறது.

ஏழாம் அறிவு படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜயகாந்த் நடிக்க "எட்டாம் அறிவு" எடுக்கப்பட்டால் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இமயமலைக்குச் சென்ற போதிதர்மரை சீன ராணுவம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் உதவியுடன் கடத்திச் சென்று ராவல்பிண்டியில் சிறைவைக்கிறது. அவரை மீட்க விஜயகாந்த் பாகிஸ்தான் செல்கிறார்.

இந்தச்சூழலில் அங்கு நடக்கும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு பாகிஸ்தான் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தான் பிரதமர் ஆனதால் வந்த விசயத்தையே விஜயகாந்த் மறந்துவிடுகிறார்.

இந்நிலையில் விஜயகாந்த் பாகிஸ்தான் பிரதமராகி விட்டதால், இனி தைரியமாக இந்தியாவிற்குள் ஊடுறுவலாமென திட்டம் தீட்டுகிறார்கள். இதை பிரதமர் என்ற முறையில் உளவுத்துறை தலைவர் விஜயகாந்திடம் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென்று விஜயகாந்துக்கு இந்திய தேசப்பற்று வந்து தொலைக்கிறது. கோபத்தில் பாகிஸ்தான் உளவுத்துறை தலைவரோடு விஜயகாந்த் ஒத்தைக்கு ஒத்தையாக பனியனுடன் சண்டையிடுகிறார்.

போதிதர்மருக்கு வர்மக்கலை தெரியும் என்றால் விஜயகாந்துக்கு மல்யுத்தம் கைகொடுக்கிறது. உளவுத்துறை காவலாளி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே விஜயகாந்தை நெருங்கும்போது அத்தனை குண்டுகளையும் தன்வாயில் கவ்வுகிறார். காவலாளியிடமிருந்த துப்பாக்கியிலுள்ள எல்லா தோட்டாக்களும் முடிந்து விடுகிறது. உடனே விஜயகாந்த் தன் வாயால் கவ்விய அத்தனை குண்டுகளையும் அவனை நோக்கி துப்புகிறார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த மற்ற காவலாளிகள் விஜயகாந்த் வாயிலிருந்து லிங்கம் கக்குவதாகக் கதைகட்டி விடுகின்றனர். விஜயகாந்தின் புகழ் வடஇந்தியாவிலும் பரவுகிறது.

இந்தியப் பிரதமராக இருக்கும் ராகுல்காந்தி, பாகிஸ்தான் பிரதமர் விஜயகாந்தை பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைக்கிறார். பிரதமர் ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்க மறுத்து, இந்தியா பாகிஸ்தானில் நடத்தும் எல்லைதாண்டும் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்தாதவரையிலும், கராச்சி தொடர்குண்டு வெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்ட குல்பர்கான் சிங்கை ஒப்படைக்க வேண்டும் என்று அதிரடியாக அறிவித்து, அதுவரை இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு வரப் போவதில்லை என்றும் அறிவிக்கிறார்.

இதனிடையே, இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இந்தியா பயிற்சி கொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சீனாவும் எச்சரிக்கிறது. பாகிஸ்தானுக்கெதிராக இந்தியாவைத் தூண்டுவதாக விஜயகாந்த் அமெரிக்காவை எச்சரிப்பதோடு, பொருளாதார மந்தநிலை மற்றும் வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டங்களால் ஏழைநாடாகி விட்ட அமெரிக்காவுக்கு இனி பொருளாதார உதவிகள் செய்யப்போவதில்லை என்றும் அறிவிக்கிறார்.

பாகிஸ்தான் சிறையிலிருக்கும் சூர்யாவை மீட்டுக்கொண்டு வருவதாகச் சொல்லிச்சென்ற விஜயகாந்த், திடீரென அந்நாட்டு பிரதமராகி விட்டதால் படத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் முருகதாஸ் திணறுகிறார். அப்போது, க்ராஃபிக்ஸ் யுக்தியைப் பயன்படுத்தி விஜயகாந்தை பாம்பாகவும், சூர்யாவை புறாவாகவும் மாற்றி இந்தியா கொண்டு வருவதுபோல் கதையை அமைத்து ஒருவழியாக படம் முடிவடைகிறது!

இந்தப் படத்தில் விஜயகாந்த் சொந்தக்குரலில் பாகிஸ்தான் கவ்வாலி பாடலைப் பாடும்படியும் செய்தால் துபாயில் டாக்ஸி ஓட்டும் படான்களும் படத்தை விரும்பி பார்ப்பார்கள்!

Read more...

மதவெறி தலைக்கேறி சாமியாடும் சுப்ர'சனியன்' சாமி!

Saturday, August 13, 2011


"I have travelled across the length and breadth of India and I have not seen one person is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such caliber, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage and therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their selfesteem, their native culture and they will become what we want them, a truly dominated nation"


Lord Macaulay’s address to the British parliament on 02-02-1855

பிரிட்டிஸ் காலணியாதிக்க சக்திகள் இந்தியாவுக்குள் வணிகநோக்கில் ஊடுறுவி இந்தியாவை கைப்பற்றுவதற்கு சில வருடங்களுக்கு முன்னதாக மெக்காலே என்ற பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். இந்தியாவைச் சுற்றிப்பார்த்துவிட்டு இறுதியா 02-02-1855 அன்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசும்போது இந்தியாவைப் பற்றி சொன்ன தகவல்களின் சுருக்கம்தான் மேற்கண்ட உரை. அதன் மொழியாக்கம்:

"இந்தியா முழுவதும் பயணித்தபோது ஒரேயொரு பிச்சைக்காரர் அல்லது திருடரையோ காண முடியாதளவுக்கு செல்வ வளமுள்ள தேசம்.இதன் சமூக மதிப்பு மற்றும் மேன்மையான மக்களைக் காணும்போது,முதுகெலும்பாக விளங்கும் இவர்களின் தெய்வீக மற்றும் பாரம்பர்ய பின்னணியை உடைக்கும்வரை இந்த தேசத்தை நம்மால் வெல்லமுடியும் என்று கருதவில்லை. ஆகையால், அவர்களின் பண்டைய கல்விமுறை மற்றும் நாகரிகத்தை மாற்றியமைத்து, இந்தியர்கள் அவற்றிலிருந்து அந்நியப்பட்டு,ஆங்கிலம்தான் சிறந்தது மற்றும் அவர்களுடையதை விடவும் சிறப்பானது என்று எண்ணும்போது, இந்தியர்கள் தங்கள் சுயமரியாதையை இழந்து நாம் விரும்பியவாறு அவர்கள் மாறும்போது உண்மையிலேயே நாம் அவர்களை வெற்றிகொள்ள முடியும்"

மொத்த தமிழ்நாட்டிலும் மூன்றிலக்கங்களைக்கூட தாண்டாது சுப்ரமணியன் சாமி என்ற அமெரிக்க உளவாளியின் ஜனதா கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை.இந்திய அளவில் அரசியல் கோமாளி என்று அறியப்படும் சுப்ரமணிய சாமி,சமீபத்தில் நடந்த (நடத்தப்பட்ட?) மும்பை குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து DAN ஆங்கில பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிப்பது எப்படி?(Analysis: How to wipe out Islamic terror) என்ற கட்டுரையில் இந்திய முஸ்லிம்களுக்கும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் எதிராக விஷம் கக்கியுள்ளார். இவனின் உளரலை வழக்கமான உளரல்களில் ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாதளவு பிரவீன் தொகாடியாவை மிஞ்சும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதியிருப்பது கண்டிக்கத்தக்கது.

//We need a collective mindset as Hindus to stand against the Islamic terrorist. The Muslims of India can join us if they genuinely feel for the Hindu. That they do I will not believe unless they acknowledge with pride that though they may be Muslims, their ancestors were Hindus. If any Muslim acknowledges his or her Hindu legacy, then we Hindus can accept him or her as a part of the Brihad Hindu Samaj (greater Hindu society) which is Hindustan. //

இந்திய முஸ்லிம்களின் முன்னோர்கள் ஒருகாலத்தில் இந்துக்கள் என்பதால்,இஸ்லாமிய தீவிரவாதத்திற்கெதிராக முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டுமாம்.நல்லது! ஒத்துழைக்கலாம். சு.சாமியின் முன்னோர்களால் தீவிரமாகத் தினிக்கப்பட்ட இந்துத்வா வர்ணாஸ்ரமக் கொள்கையிலிருந்து விடுதலைபெற்று இஸ்லாத்தை தழுவிய முன்னாள் இந்துக்களான இன்றைய முஸ்லிம்களுக்கு எதிரான இந்துத்வா தீவிரவாதங்களுக்கு எதிராக யாரிடம் ஒத்துழைப்பு கேட்பது என்பதை சு.சாமி தெளிவுபடுத்துவாரா?

குண்டுவெடிப்பின்போது ஏற்பட்ட சோகத்தில் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாகப் பேசுவது நியாயமானது.ஆனால்,அவ்வாறு பேசும் கருத்துக்கள் இன்னொரு சாராருக்கெதிரான விஷம் தோய்ந்த வார்த்தைகளாக இருப்பதை அறிவார்ந்த எவரும் நிச்சயம் ஏற்க மாட்டார்கள்.இந்தியாவின் முதல்நிலை பிரச்சினையாக 'இஸ்லாமிய' தீவிரவாதம் இருப்பதாகக் கதையளப்பது,அதைவிடவும் முதன்மைப் பிரச்சினையாக இருக்கும் இந்துத்வா தீவிரவாதத்தை பின்னுக்குத் தள்ளிவிடும் என்பதை தமிழக 'கோயபல்ஸ்' சுப்ரமணிய சாமி உணர்ந்தாரா என்று தெரியவில்லை!

//Fanatic Muslims consider Hindu-dominated India “an unfinished chapter of Islamic conquests”. All other countries conquered by Islam 100% converted to Islam within two decades of the Islamic invasion. Undivided India in 1947 was 75% Hindu even after 800 years of brutal Islamic rule. That is jarring for the fanatics.//

இந்தியாவை ஒருங்கிணைத்த மொகலாயர்களின் ஆட்சியில் முஸ்லிம்கள் பெற்ற பலன்களைவிட பன்மடங்கு பலன்களை அரசவை பார்ப்பன ஆலோசகர்கள் அனுபவித்த வரலாற்றை சு.சாமி திரிக்க முயல்கிறார்.இஸ்லாம் வெற்றிகொண்ட நாடுகளிலெல்லாம் 20 ஆண்டுகளில் 100% மக்களும் முஸ்லிம்களாக மதம்மாற்றப்பட்டார்கள் என்பது உண்மையெனில் 2011 இலும் 800 வருடங்களுக்கும் மேலாக இஸ்லாமியர்களின் ஆளுகைக்குள் இருந்த இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பது ஏன் என்பதற்கு திருவாளர் சுப்ரமணியன் என்ன விளக்கம் தரப்போகிறார்?

//India that is Bharat that is Hindustan is a nation of Hindus and others whose ancestors were Hindus. Others, who refuse to acknowledge this, or those foreigners who become Indian citizens by registration, can remain in India but should not have voting rights (which means they cannot be elected representatives).//

இந்தியா இந்துக்களின் தேசம் என்றும் அவர்களின் முன்னோர்களும் இந்துக்களே என்பதையும் ஒப்புக்கொள்ளாத, பதிவுகளில் மட்டுமே இந்தியர்களாக இருப்பவர்கள் இந்தியாவில் இருக்கலாமாம்,ஆனால் தங்களுக்கான மக்கள் மன்ற பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் ஓட்டுரிமை அவர்களுக்குக் கூடாதாம்! முன்னாள் இந்துக்களுக்கு சு.சாமி தரும் மரியாதையைப் பார்த்தீர்களா! மேலே இடம்பெற்றுள்ள மெக்காலேயின் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள இந்தியாவை விட்டுவைத்தவர்கள் யாரென்று சுப்பிரமணியனுக்கு தெரியுமா?

அதெல்லாம்சரி! குறுநில மன்னர்களின் பிரதேசங்களாக சிதறியிருந்த இந்தியா என்ற அகண்டபாரதம் யாரால் ஒருங்கிணைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டது என்பதை வந்தேறி வகையறா சு.சாமிக்கு யாராவது இந்திய வரலாறு பாடமெடுத்தால் நல்லது.அதை உச்சநீதிமன்றத்தில் குட்டுபட்டு வேறுவழியின்றி ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள சமச்சீர் கல்விமுறை பாடத்திட்டங்களிலிருந்து செய்தாலும் வரவேற்கத்ததக்கதே!

இந்தியாவில் முஸ்லிம்களின் தேசப்பற்றைக்குறைக்கூற சீன/அமெரிக்க உளவாளி சுப்ரமணிய சாமிக்கு சற்றும் உரிமையில்லை. இந்தியா எங்கள் தாய்நாடு மட்டுமல்ல! தந்தைநாடும்கூட!

ஜெய் அல் ஹிந்த்!!!

Read more...

டீவிரவாதி தெரியுமா?

Tuesday, July 26, 2011

தினமலர் தீவிரவாதிகள் விசயத்தில் எப்போதுமே கொஞ்சம் பாரபட்சம் காட்டும் என்பதற்கு இன்றைய செய்தி இன்னொரு சாம்பிள்! தினமலர் செய்தியை அப்படியே படித்துவிட்டு தலைப்பை மீண்டும் ஒருமுறை சத்தம்போட்டு சொல்லுங்க.

திருச்சி: திருச்சியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்திருந்த, டீ மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். அவரின் பின்னணியில் விடுதலைப்புலிகள் அல்லது தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

திருச்சி உடையான்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் என்கிற படையப்பா (44). இவர், கே.கே.,நகரில் உள்ள டீக்கடையில், டீமாஸ்டராக வேலை பார்கிறார். இவரது வீட்டில் ரகசியமாக வெடி குண்டுகள் தயாரித்து வருவதாக, கே.கே.,நகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கே.கே.,நகர் இன்ஸ்பெக்டர் நிக்ஷன், எஸ்.ஐ.,க்கள் பால்ராஜ், ஷீலா மற்றும் போலீசார் நேற்று இரவு ஏழு மணிக்கு உடையான்பட்டியில் உள்ள ராமகிருஷ்ணன் வீட்டை சோதனையிட்டனர்.அங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் இரண்டு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதை கண்டு போலீஸர் அதிர்ச்சியடைந்தனர். வெடிகுண்டு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.





வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராமு சம்பவ இடத்துககு வந்து வெடிகுண்டுகளை கைப்பற்றி பாதுகாப்பான முறையில் செயலிழக்க செய்தார். தொடர்ந்து வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பால்ரஸ் குண்டுகள், வயர் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றம் ஒன்னரை கிலோ வெடி மருந்தை கைப்பற்றினர்.இதுகுறித்து கே.கே.,நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த துணைகமிஷனர் ஜெயபாண்டியன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். ராமகிருஷ்ணனுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். கைப்பற்றிப்பட்ட வெடிகுண்டு மிகவும் சக்தி வாய்ந்தது என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், அந்த குண்டு வெடித்தால் பெரிய பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. கே.கே.,நகர் பகுதியில் பெரும்பாலும் இலங்கை மற்றும் மலேசிய தமிழர்கள் வசிக்கின்றனர். எனவே, இச்செயலில் விடுதலைப்புலிகள் யாரேனும் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.தினமலர்

எனக்கு என்ன வருத்தம் என்றால் பெரும் பொருட்சேதமும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைப் பதுக்கி வைத்திருந்த ராமகிருஷ்ணனை ஒரு இடத்தில்கூட தீவிரவாதி என்றோ அல்லது அவரது மதத்தையும் சேர்த்து __ தீவிரவாதி என்றோ செய்தி வெளியிடவில்லை.

தீவிரவாதம், தீவிரவாதி என்பதற்கெல்லாம் தினமலர் போன்ற பத்திரிக்கைகள் என்ன அளவீடு வைத்துள்ளன? டீவிரவாதி என்றாவது குறிப்பிட்டிருக்கலாமே!

Read more...

வருங்கால டாக்டருக்கு அவசர உதவி தேவை!

Monday, July 25, 2011

எத்தனையோ தினச்செய்திகள் பரபரப்பாக வந்துசென்றாலும் அவற்றில் ஒருசில செய்திகளே நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடந்தவாரம் நிகழ்த்தப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு செய்திகளைக் கேட்டு பதைபதைத்தவர்கள் நேற்றுமுன் தினம் நார்வேயில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு குறித்து கவலைப்பட்டனரா என்று தெரியவில்லை! மனித உயிர்கள்மீதான மதிப்புகூட நாட்டுக்குநாடு வேறுபடுமா என்ன?

இப்படித்தான், நேற்று வலைப்பூவில் ராஜ் தொலைக்காட்சி செய்தி குறித்த ஓர் பதிவை வாசித்தபிறகு அன்றிரவு தூக்கம் தொலைந்தது! செய்தியொன்றும் பரபரப்பானது அல்ல. ஆனால் ஏனோ தெரியவில்லை அதை வாசித்த பிறகு எப்படியாவது உதவமுடியுமா?என்ற எண்ண ஓட்டம் மனதை அலைக்கழித்தது. செய்தி என்னவென்றால்,

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(50). இவரது மனைவி லெட்சுமி(45). விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு, ராஜவேல்(17), என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் உள்ளனர்.

ராஜவேல் சிறுகடம்பூர் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில், 470 மதிப்பெண் பெற்று, பள்ளியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். கூலித் தொழிலாளியின் மகனான ராஜவேல், அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து, வேறுபள்ளியில் படிக்க வைத்தால், +2வில் அதிக மதிப்பெண்கள் பெறுவார் என பள்ளி ஆசிரியர்களும், மாணவனின் உறவினர்களும் கூறியதையடுத்து தங்கவேல், சிறுகடம்பூரில் இருந்த தனது வீட்டை விற்று, சேலம் மாவட்டம் வீரகனூரில் உள்ள ராகவேந்திரா பள்ளியில் மகனைச் சேர்த்து படிக்க வைத்தார். தற்போது செந்துறையில் உள்ள நமச்சிவாயம் என்பவரது வயலில், ஒரு கொட்டகையில் குடியிருந்து, விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.



ராகவேந்திரா பள்ளியில், +2 படித்த ராஜவேல் 1200க்கு 1,171 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றார். கூலித்தொழிலாளியின் மகனான ராஜவேலின் ஏழ்மை நிலையை அறிந்த ராகவேந்திரா பள்ளி நிர்வாகம், அவரது மருத்துவ பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களைப் பெற்று, சொந்த செலவில் மருத்துவ கவுன்சிலிங்குக்கு அனுப்பி வைத்தனர். கவுன்சிலிங்கில் 198.5 'கட் ஆப்' மதிப்பெண்கள் பெற்ற அவருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

ஆனால் அவரின் ஏழ்மை மருத்துவக்கல்லூரியில் சேரவிடாமல் அவரைத் துரத்துகிறது. மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல், ராஜவேலுவின் தந்தை தங்கவேலு தவித்து வருகிறார். மகனுடைய +2 படிப்புக்காக, வீட்டை விற்று விட்டு, விவசாய நிலத்தில் குடியிருந்து வரும் தங்கவேலு, மகனின் டாக்டர் பட்டப் படிப்புக்குப் பணம் கட்ட வழியின்றி திணறி வருகிறார். அதனால், தற்போது தங்கவேலுக்கு உதவியாக, ராஜவேலுவும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இதுகுறித்த செய்தி ராஜ் தொலைக்காட்சியில் வெளியாகி, அதை எங்களூர் வலைத்தளப் பதிவொன்றில் வெளியிட்டுள்ளார்கள்.

தேசியளவில் 16 வயதுடைய அனைவருக்கும் கல்வி என்ற மத்திய அரசின் கட்டாயக் கல்வி திட்டம் ஒருபக்கம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்திலும் கல்விக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எனினும், இவை எல்லாம் தொடக்க நிலையிலிருந்து குறிப்பிட்ட வகுப்புகள்வரை மட்டுமே கண்காணிக்கப்பட்டு வருகின்றன.கல்விக்கண் திறந்து கொண்டு எதிர்காலத்தில் பொறியாளராகவோ மருத்துவராகவோ வழக்கறிஞராகவோ ஆக வேண்டும் என்ற பலரது கனவுகள் SSLC, +2 தேர்வுகளுக்குப்பிறகு கானல்நீராக கலைவதற்குப் பின்னணியில் ஏழ்மையும் குடும்பச்சுமையும் உள்ளன!

மகனின் படிப்பாக வசித்த வீட்டை விற்றபின்னரும் மேல்படிப்புக்குச் செலவளிக்க வழியற்ற ஏழைகள் இருக்கும் நாட்டில்தான் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் போது யார்மீதோ கோபம் வந்தாலும், அது யாரென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று அலப்பரை செய்யும் அரசியல்வாதிகள், பல உயிர்களைக் காப்பாற்றும் சாத்தியமுள்ள ராஜவேலு போன்ற ஏழை பாரத ரத்னாக்களை அடையாளம் கண்டு உதவினால் புண்ணியமாகப் போகுமே!

இந்த மாணவனின் மேற்படிப்புக்கு உதவக்கோரி அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக இந்தச் செய்தியை உங்கள் தளத்தில் வெளியிட்டு, பாரத தேசத்திற்கு மேலும் ஒரு மருத்துவர் கிடைக்க உதவலாமே!

நன்றி: இந்நேரம்.காம்



அன்புள்ள சகவலைப்பதிவர்களே!
இச்செய்தியை வலைப்பதிவர்கள் மீள்பதிவு செய்வதன்மூலம் அரசின் கவனத்திற்குக்கொண்டு சென்று இந்த மாணவணுக்கு உதவ முடியுமே!

Read more...

தமிழக அரசியலில் அற்புதம்! - அதிமுக-திமுக கூட்டணி ஆட்சி!!

Thursday, April 14, 2011

பணப்பட்டுவாடா செய்யவிடாமல் தேர்தல் கமிஷன் கொடுத்த கெடுபிடிகளால் தமிழக வாக்காளர்களுக்குச் செல்ல வேண்டிய பணம் கிடைக்கவில்லை. இதனால் வெருத்துப் போன வாக்காளர்கள் துரதிஷ்ட வசமாக சுயமாக முடிவெடுத்து கருத்துக்கணிப்புகள் எல்லாம் பொய்த்துப்போய் எந்தக்கூட்டணியும் ஆட்சி அமைக்குமளவு பெரும்பான்மை பெறவில்லை.

உறுப்பினர்களைவிட அதிகமான கோஷ்டிககளைக் கொண்டுள்ள தமிழக காங்கிரஸ் கட்சியால் இனி காமராஜர் ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என்பதால் தங்கபாலுவை ஆளுநராக அறிவித்து மறைமுக காங்கிரஸ் ஆட்சி ஏற்படுதைத் தடுக்கும் நோக்கில் திமுக தலைவர் மு.கருணாநிதியும் அதிமுக தலைவி ஜெயலலிதாவுடன் கலந்தாலோசித்து திமுக-அதிமுக கட்சிகளை இணைத்து ஜெயலலிதா முதல்வராகவும் மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் அற்புதம் நடந்தேறுகிறது.

குழுக்களாகப் பிரிந்து கிடந்த திராவிடக்கட்சிகள் ஒன்றாகிவிட்டதால் இனி கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவையில்லை என்று கூட்டணியிலிருந்து ஒவ்வொருவராகக் கழட்டிவிடப் படுகிறார்கள். ஜூன்-1,2011 இல் தமிழகத்தின் புதிய சட்டசபை தொடங்குகிறது. வைகோ பேரவைத் தலைவராக இருந்து வழிநடத்தும்படி கருணாநிதியின் அன்புவேண்டுகோள் ஏற்கப்பட்டு, தனது முதல் உரையைத் தொடங்குகிறார்.

வைகோ: ஏறத்தாழ 37 ஆண்டுகளுக்குப்பிறகு அண்ணாவின் ஆட்சி மீண்டும் மலர்ந்துள்ளது. பெரியார்,அண்ணா ஆவிகளுடனும், கலைஞரின் ஆசியுடனும் நடக்கும் நல்லாட்சியில் நான் அவைத் தலைவராக வீற்றிருப்பதில் உவகை கொள்கிறேன். மூதறிஞர் செந்தமிழ் காவலர் கருணாநிதி ஐயா அவர்களின் வாழ்த்துரையுடன் அவைநடவடிக்கைகளைத் தொடங்கலாம்.

கலைஞர்: மாண்புமிகு முதல்வர் அன்புச்சகோதரி ஜெயலலிதா அம்மையார் தலைமையில் தளபதி ஸ்டாலின் இணைந்து நாம் வாக்களித்தபடி எல்லா திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும். இந்த ஆட்சியில் சேதுக்கால்வாய் தூர்வாரப்பட்டு கூடுதலாக நவீன ராமர் பாலமும் அமைக்கப்பட வேண்டும். இத்திட்டத்திற்கு "சேதுராமர் கால்வாய் பாலம்" என்று பெயரிடுகிறேன்.

ஜெயலலிதா: மாண்புமிகு மூதறிஞர் கருணாநிதி அவர்களின் திருவாயால் இத்திட்டத்திற்கு சேதுராமன் என்று பெயரிட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சகோ.ஸ்டாலினுடன் இணைந்து அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்தப் பாலம் வழியாக வடஇலங்கைக்கு பெரியார்-அண்ணா நல்லுறவு பேருந்து செல்லும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டாலின்: மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அம்மையார் சித்தப்பா M.G.R அவர்களின் பெயரையும் சேர்த்து வைத்திருந்தால் MGR ன் விசுவாசிகளான அண்ணன் பண்ருட்டியார் இன்னும் மகிழ்ச்சியடைந்திருப்பார். (தேமுதிகவில் சுதீஸ் கோஷ்டியால் ஓரங்கட்டப்பட்டதால் வேறுவழியில்லாமல் திராவிடக் குடும்பத்திற்கே திரும்பிவிட்டார்)

பண்ருட்டியார்: ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் எல்லோரும் ஒரே அணியாகியுள்ளோம். இதைக்காண 'வெள்ளை' எம்.ஜி.ஆர் நம்மோடு இல்லை என்பது வருத்தமாக உள்ளது. இனி எக்காரணம் கொண்டும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு கருப்பு பெயிண்ட் அடிக்க மாட்டேன்.

ஓ.பன்னீர் செல்வம்: துணைமுதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களே, நமது மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி சுட்டுக் கொல்கிறார்கள். இதை எப்படி தடுத்து நிறுத்துவது என்று ஆலோசிக்கலாமா?

பொன்முடி: மாண்புமிகு கடற்பாசி வளத்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்கள்தான் இதற்கு வழி சொல்ல வேண்டும்.

ஜெயக்குமார்: மாண்புமிகு இலவசங்கள் துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்களே. தமிழக மீனவர்களைச் சுடாத இலங்கை கடற்படைக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று அறிவிக்கலாம்.நிதியமைச்சர் பா.வளர்மதி இதற்கு ஒப்புக்கொள்வாரா?

பா.வளர்மதி: இலங்கை எல்லையில் அம்மா பெயரில் மிதக்கும் அரங்கம் ஒன்றை அமைத்து அதில் தினமும் கலைமாமணி நமீதாவின் தலைமையில் மானாட-மயிலாட நிகழ்ச்சிகளை நடத்தலாம். இதன்மூலம் இலங்கை கடற் படையினரின் கவனம் திரும்பும்போது,நமது மீனவர்கள் மீன் பிடித்து விட்டு பத்திரமாகத் திரும்பி விடலாம்.

செங்கோட்டையன்: ஊய்ய்.(விசில்.) சரியான திட்டம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல் ஒரே கல்லில் இரண்டு மீன்கள்! எப்படியோ இனி மீனவர்கள் உயிரோடு திரும்பினால்தான் ஆட்சிக்கு நல்லபேர் கிடைக்கும்! வாழ்க புரட்சித் தலைவி!

ஜெயலலிதா: அன்புத் தம்பி செங்ஸ் அவர்கள் சகோதரி பா.வளர்மதியை புரட்சித் தலைவி என்று தவறுதலாகச் சொல்லியிருக்கக்கூடும்.மாண்புமிகு அவைத் தலைவர் அவர்கள் அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிடும்படி உத்தரவிடுகிறேன்.

கலைஞர்:புரட்சித்தலைவி என்ற பட்டப்பெயரை சகோதரி ஜெயலலிதாதவிர வேறு யாருக்கும் கொடுப்பதை பார்த்துக்கொண்டு இந்த கருணாநிதி வ்சனம் எழுதிக்கொண்டு சும்மாயிருப்பானென்று யாரேனும் மூடநம்பிக்கைகொண்டு வைத்திருந்தால், தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

ஜெயலலிதா: மூதறிஞர் மு.கருணாநிதி அவர்கள் தனது ஓய்வுக்காலத்தை சினிமா பார்த்துக் கழிக்காமல் தனது பார்புகழ் செம்மொழிப் புலமைகொண்டு 'புரட்சித்தலைவி புராணம்' எழுதினால் வருங்கால சந்ததிகள் பயன்பெறுவர் என்று மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார் என்று நினைக்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வம்: மாண்புமிகு அம்மாவைவிட எனது எண்ணங்களைப் புரிந்தவர் எனக்குத் தெரிந்து யாருமில்லை.இதுபற்றி சகோ.ஸ்டாலினுடன் நேற்றே பேசினேன்.இதற்கான சிறப்புத் தீர்மானத்தை தம்பி திருமாவளவன் கொண்டுவந்தால் எவ்வித பரிசீலனையுமின்றி நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆட்சிப்பொறுப்பேற்கும் முன்பே ஒப்புதல் வழங்கிவிட்டார்.

ஜி.கே மணி (ஸ்...ஜால்ரா சத்தம் காதைப் பிளக்கிறது.) விஜய.T.R..சிலம்பரசன் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்து புதுக்கட்சித் தொடங்கப் போவதாக செய்தி வந்துள்ளதே அதுபற்றியும் பேசலாமே!

மு.கருணாநிதி: சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது. மீறிவந்தால் அரசியல்வாதிகள் சினிமாவிலும் 'நடிக்க' வேண்டிவரும் என்று பொதுவான எச்சரிக்கையை தம்பி கீ.வீரமணியிடம் சொல்லி விடுத்தால் தமிழினத்திற்கு நல்லது என்று நினைக்கிறேன்.

ஸ்டாலின்: அப்படிச்சொன்னால் உடன்பிறவா அன்புச் சகோதரி கற்புக்கரசி குஷ்பு வருத்தப்பட மாட்டாரா? அப்புறம்,சினிமாவளத்துறை அமைச்சர் தம்பி சரத்குமாரும் கோவிச்சுப்பார்.ஆகவே இப்பிரச்சினையை ஆறப் போடலாம்.

சுயேட்சையாகப் போட்டியிட்டுவென்ற டாக்டர் ராமதாஸ் இதைக்கேட்டதும் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்கிறார். பாமகவிலிருந்து விலக்கப்பட்ட டாக்டர் அன்புமணியும் கூடவே வெளிநடப்புச் செய்கிறார்.

அன்றைய அவை நடவடிக்கைகள் அனைத்தும் ஜால்ரா மயமாக இருந்தது. டாக்டர் ராமதாஸ் அன்புமணி தலைமையில் 2031 இல் ஆட்சிக்குவரும்வரை இனிமேல் அவைக்கு வரப்போவதில்லை என்றும் மீறி வந்தால் டாஸ்மாக் பாட்டிலால் என்னை அடியுங்கள் என்று சொல்லிவிட்டு அரசியல் துறவரம் போனதாக அரசு தொலைக்காட்சியான 'சன் நியூஸ்' தெரிவிக்கிறது.
*************
தமிழக அரசியல் உப்புசப்பு இன்றி போனதால் ஜூனியர் விகடன், நக்கீரன் ஆகிய பத்திரிக்கைகள் "30 நாட்களில் சரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி? "நக்கீரனின் கீரை வகைக் குழம்புகள்" போன்ற புத்தகங்களை வெளியிட்டு காலம்தள்ள முடிவு செய்துள்ளன.அதேபோல் சாட்டிலைட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் எந்த பரபரப்புமின்றி உழவர்உலகம்,கல்வி வழிகாட்டி போன்ற் நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்பின.வலைப்பூக்களில் "விடைபெறுகிறேன்" என்ற தலைப்பிட்ட பல பதிவுகள் பின்னூட்டமின்றி காணப்பட்டன.

பிரபல ?!வலைப்பதிவர் அதிரைக்காரணுக்கு தமிழக அரசு வலைமாமணி விருது வழங்கி, அவரின் பதிவுகளை தமிழக பாடநூல் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் திட்டமிட்டு உள்ளதாகவும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது! :)

பி.கு: ஒருமாத அரசியல் களேபரங்களையும், எந்தக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு என்ற ஜோதிட கணிப்புகளை கொஞ்சகாலம் மறக்க வேண்டி எழுதப்பட்டது. உண்மையில் இது நடந்து விட்டால் நான் வலைப்பதிவு எழுதுவதையே விட்டுவிடுவேன்!

Read more...

அப்பாவி வாக்காளனின் ‘இலவச’ கணக்கு

Wednesday, April 06, 2011

தேர்தலின்போது எந்தக் கட்சியின் கொள்கைகள் நல்லவை என்று ஆய்ந்து முடிவு எடுக்க விடாமல் மானாவாரியாக இலவசங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் வாக்காளர்கள் குழம்பியுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் இதோ நம்மால் ஆன சிறுமுயற்சி.தேர்தல் இலவசங்கள் மூலம் சராசரி ஆண்டு வருமானம்

  • திமுக ஆட்சிக்கு வந்தால் = ரூ.43,200.00
  • அதிமுக ஆட்சிக்கு வந்தால் = ரூ.52,740.00
  • தமிழக மக்களின் தனிநபர் அரசுக் கடன் = ரூ.15,000.00
  • மூவர் கொண்ட குடும்பத்தின் மொத்தக்கடன் = ரூ.45,000.00

வருமானம் – கடன்

  • திமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.43,200-ரூ.45,000 = -1,800.00 ரூ.
  • அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.52,740-ரூ.45,000= +7,740.00 ரூ.

இந்தக் கணக்குப்படி,இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் ஒவ்வொரு தமிழக குடிமகனுக்கும் தலா 1,800 ரூபாய் நஷ்டம் வருகிறது!

Read more...

தேர்தல் ஜுரமும் கூட்டணி நலன் விசாரிப்புகளும்

Sunday, February 13, 2011


தமிழக சட்டசபை இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடருக்கு எதிர்க்கட்சித் தலைவி செல்வி ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட சுகக்குறைவு காரணமாக மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் முழு ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால் கூட்டத்தொடர் முழுவதும் அவையில் கலந்து கொள்ளாமலிருக்க அனுமதி வேண்டி சிறப்புத் தீர்மானம் நிறைவேறியது.

இந்நிலையில் தேர்தல் கூட்டணி குறித்து குழம்பியுள்ள அரசியல்வாதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நலம் விசாரித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை. (வழக்கம்போல் இப்பதிவும் யாரையும் புண்படுத்த அல்ல:)

வைகோ: மேடம்! உங்கள் உடல்நிலைதான் தற்போதைக்கு முக்கியம். பூரண சுகமடையும்வரை ஓய்வெடுங்கள். உங்கள் உடல்நிலை குறித்து அறிந்ததும் போயஸ்கார்டனுக்கு ஐந்து தொகுதிகளைக் கடந்து நடைப் பயணமாகவே வந்தேன்.

ராமதாஸ்: அன்பு சகோதரி அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விபட்டதும் அனைத்து கூட்டங்களையும் ரத்து செய்துளோம். முப்பது தொகுதியிலும் தலைவர் கோ.க.மணி அவர்களின் தலைமையில் சிறப்புப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

விஜயகாந்த்: அம்மையாருக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் எனக்கு மனசுக்குச் சரியில்லை. தேவைப்பட்டால் புதிய ஆட்சியில் நமது கூட்டணி சட்டசபைக்கும்கூட வராமல் ஓய்வெடுக்கலாம்.சுகக்குறைவுக்குப் பின்னணி பாகிஸ்தான் தீவிரவாதிகளா என்று விசாரிக்கக்கோரி போராட்டம் அறிவிக்க இருக்கிறேன்.

கிருஷ்ணசாமி:அம்மா! உடல்நிலைதான் நமக்குமுக்கியம்.நம் கூட்டணியில் டாக்டர்களுக்குப் பஞ்சமில்லை. நீங்கள் பூரண குணமடைந்து புதிய அரசின் சட்டசபைக்குவர டாகடர்களாகிய நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.

ஜவாஹிருல்லா: கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் ஏழைகள் மட்டுமின்றி எதிர்கட்சியினருக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆம்புலன்ஸ் எதுவும் தேவைப் பட்டால் தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள் மேடம்.

நல்லகண்ணு:கொடநாடு எஸ்டேட்டில் நிம்மதியாக ஓய்வெடுக்கவேண்டிய அம்மையார் போயஸ் கார்டனில் சிரமப்படுவது கஷ்டமாகத்தான் உள்ளது. எல்லாம் அடுத்து நீங்கள் ஆட்சி அமைத்ததும் சரியாகிவிடும்.

சுப்ரமணியசாமி: ஜெயா மேடம் உட்ம்பு சரியில்லாமப் ஆனத்கு 2G அலைவரிசையே காரணம். மேடம் உடல்நிலை சர்யில்லாத் காரண்த்தால் தேர்தலில் போட்டியிடாமல் முத்லம்சராக சட்டதிர்த்தம்கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் பெடிசன் போடுவேன்.

ஜெயேந்திரர்: பொய் சாட்சிகளை நம்பி இறையாடியார்கள் கொலைகேஸில் சிக்கவைக்கப்பட்டதால் தமிழகத்தைப் பிடித்துள்ள பீடை அம்மையாரையும் விடவில்லை. இதற்காக கலவையில் சங்கரா ஹோமம் செய்தால் தீர்க்க சுகத்துடன் அம்மா அரியணை ஏற பகவான் நிச்சயம் அருள் பாலிப்பார்.

நடிகர் விஜய்: அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் தேர்தல் முடியும்வரை புதுப்படங்களில் நடிக்க வேண்டாம் என்று அப்பா அன்புக் கட்டளையிட்டுள்ளார். அம்மா நீங்க கவலைப்படாதீங்க. உங்களுக்கு ஒன்னு என்றால் எனக்கு ரெண்டு.நான் பிரச்சாரம் பண்ணனும்னு ஒருமுறை முடிவெடுத்துட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன்.

Read more...

1000 வெடிகுண்டு லாரிகளைக் காணவில்லை

Tuesday, January 25, 2011


2011 ஆங்கிலப் புத்தாண்டுக்கு முன்தினம் தினத்தந்தி மற்றும் தட்ஸ்தமிழில் வெளியான ஒரு செய்தியை வாசித்ததும் நெஞ்சம் "பக்..பக்" என்றோ "திக் திக்.."என்றோ அடிக்கவில்லை என்பதால் யாரும் என்னைக் கல்நெஞ்சன் என்று சொல்லிவிடாதீர்கள்.

காந்திஜீ தலைமையில் பெற்ற சுதந்திரத்தின் மகிமையை "2G" அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுகள் மூலம் அறிந்தோம். அதற்கு முன்பு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒதுக்கீடு செய்த நமது "COMMON WEALTH" ஐ போட்டி போட்டுக் கொண்டு ஆளுங்கட்சியினர் சிலர் விளையாடியதாலும் மத்திய-மாநில அரசுகள் மீதான நம்பிக்கை அதல பாதாளத்திற்கு சென்றது.

இந்த சூழலில் "நாடுமுழுவதும் 1000 வெடிகுண்டு லாரிகள் ஊடுறுவல்" என்ற செய்தி வெளியானதால் பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சர் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பதுபோல் உணர்ந்ததால்தான் கீழ்கண்ட செய்தி வெளியானதும் எவ்வித பக்கவிளைவும் ஏற்படவில்லை.


இதோ இந்தியாவின் (எத்தனையாவதோ) குடியரசு தினத்தை கொடியேற்றிக் கொண்டாடுகிறோம். (அடைப்புக்குறிக்குள் உள்ளதுக்கும் என் தேசபக்திக்கும் சம்பந்தமில்லை என்பது வேறுவிசயம்:). அதற்கு ஓரிரு வாரம் முன்னதாக வெளியான இன்னொரு செய்தியை வாசித்தபிறகு குபுக் என சிரிப்பு வந்தது. அது என்னவென்றால் நமது பிரதமர், சோனியா காந்தி (","வை கவனிக்கவும்) மற்றும் உள்துறை அமைச்சர், முதலமைச்சர் ஆகியோரைக் கொல்வதற்காக தமிழக கடற்கரையோரங்களில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படை ஊடுறுவியிருப்பதாகச் சொல்லப்படும் செய்தி!

மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் பதவி விலகி, பின்னர் 2G முறைகேடு மீதான விசாரணை தொடங்கிய நிலையில் இப்படி செய்தி வெளியானால் "குபுக்" என்று சிரிக்காமல் "குபீர்" என்றா சிரிக்க முடியும்? இதற்குமேலும் இப்பதிவை இழுக்க விரும்பவில்லை.

ஒவ்வொரு டிசம்பர்-6 லும், இழந்த பள்ளிவாசலை மீட்பதற்காக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பைக் காட்ட நாங்கள் திரளும்போதெல்லாம் ஐம்பது நாள் கழித்து நடக்கவிருக்கும் குடியரசு தினத்தை சீர்குலைக்க வரலாறு காணாத (புவியியல், அறிவியல், சமூகவியல், கணிதவியல்,தமிழ், ஆங்கில பாடங்கள் என்ன பாவம் செய்தனவோ!) மற்றும் மூன்றடுக்கு, நான்கடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு என்றெலாம் சொல்லி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்கள் இளைஞர்களைக் கைது செய்வீர்கள். ஆனால் 1000 வெடிகுண்டு லாரிகளும், தற்கொலைப்படையும் ஊடுறுவிய பிறகும் யாரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யவில்லை.

கடந்த சில வருடங்களாக மாலேகான், சம்ஜவ்தா என நாட்டின் பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கும் அரைக்கால் டவுசர் பாண்டிகளே காரணம் என்பது நிரூபனமாகிக்கொண்டிருக்கும்போதும், ஒரு CHANGE க்கு ஓரிரு அம்பிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்து, மதசார்பின்மையை பல் இளிக்க வைத்திருக்கலாமே?

ஒவ்வொரு வருடமும் கண்ணாடிக் கூண்டுக்குள் சுதந்திரமாக நின்று கொடி ஏற்றும் நாட்டின் முதல்,இரண்டாவது குடிமக(ளு)னுக்கு மூன்றாம்,நாலாந்தர குடிமக்களின் கோரிக்கை என்னவெனில், நாட்டை சீர்குலைக்க ஊடுறுவிய 1000 வெடிகுண்டு லாரிகளும், தமிழகத்தில் ஊடுறுவியதாகச் சொல்லப்பட்ட தற்கொலைப்படையினரும் எங்கே? என்பது மட்டுமே!

வெடிகுண்டுகளுடன் ஊடுறுவிய 1000 லாரிகளையோ அல்லது தற்கொலைப் படையினரை யாரேனும் கண்டால் தயவுசெய்து உடனடியாக பின்னூட்டம் போடவும்.:)

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்! !!! ஜெய் அல் ஹிந்த்

Read more...

நாம ஜென்மபூமி (நகைச்சுவை)

Tuesday, October 05, 2010

பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் மனமுடைந்து போய் இருப்பவர்கள் ரிலாக்ஸ் ஆகும் நோக்கில் வெட்டியின் சிறப்பு 'கடி'கள்!. பின்னூட்டத்திலும் கடிக்கலாம்!



வக்கீல்: இந்த கேஸில் ஹைகோர்டுல மேல்முறையீடு செய்யலாமா?

பாதிக்கப்பட்டவர்: வேணாம் சார் ரொம்ப செலவாகும்! நம்ம ராயபுரம் கபாலி அண்ணாத்தேகிட்டேயே போயிடுறேன்.

***********
போலீஸ் : கபாலி! கட்டப்பஞ்சாயத்து செய்யிறத நிறுத்தலேன்னா உன்னை உள்ளே தள்ளிடுவேன்.

கபாலி : அப்படி சொல்லாதீங்க சார்! இப்பவெல்லாம் கபாலி பஞ்சாயத்தும் நீதிமன்றமும் ஒன்னுதான்!

***********

ராமு: ஆட்டோ திருட்டுப்போன வழக்கில் என்ன தீர்ப்பு கிடைத்தது?

சோமு: எனக்கு ஒரு வீலும் திருடனுக்கு ரெண்டு வீலும் என்று தீர்ப்பு வழங்கி பிரிச்சுக் கொடுத்தாங்க!

***********
குப்பன் : அண்ணே! நம்ம கபாலி அண்ணனுக்கு குசும்பு ஜாஸ்தி!

சுப்பன் : எதை வச்சுப்பா சொல்றே?

குப்பன் : அரிவாளுக்குப் பதிலாகக் கையில் சுத்தியல வச்சிருக்கார்!

***********

வக்கீல் (1): கபாலியும் நீதிபதியும் என்ன சீரியஸா பேசிக்கிறாங்க?

வக்கீல் (2): முக்கியமான தீர்ப்பு விசயமா கபாலிகிட்ட டிஸ்கஸ் பண்றாராம்!

************

குமாஸ்தா: எதுக்குசார் நீதிபதி உங்க மேல கடுப்பாயிருக்கார்?

வக்கீல் : ஏதோ ஞாபகத்தில் "கனம் கபாலி அவர்களே" என்று சொல்லிட்டேன்

Read more...

தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்கள் - தினமலரின் இருட்டடிப்பு

Wednesday, June 23, 2010

தினமலர்.காமில் செம்மொழி மாநாட்டுக்காக பிரத்யேக இணையபக்கம் திறந்து, அதில் கோவை-உலகத் தமிழ் செம்மொழி மாநாடு குறித்த செய்திகளையும், சிறப்புக் கட்டுரைகளையும் தொகுத்து வழங்குகிறார்கள். நேற்று வெளியான "கம்யூட்டரும் தமிழும்" என்ற கட்டுரையில் தமிழை கணிமைப்படுத்துவதற்குப் பாடுபட்டத் தமிழர்கள் குறித்த தகவல்களில் அதிரை உமர் தம்பி பற்றிய ஒரு குறிப்புகூட இல்லை!

இதுகுறித்து தினமலர் ஆசிரியருக்கு coordinator@dinamalar.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தும் இதுவரை வெளியிடவில்லை. கட்டுரையாக வெளியிடாவிட்டாலும் சம்பந்தப்பட்ட கட்டுரையில் பின்னூட்டமாக அல்லது ஆசிரியர் பின்குறிப்பாக உமர்தம்பி குறித்த தகவலை இணைத்திருக்கலாம். தினமலரிடம் ஊடக தர்மத்தை எதிர்பார்க்க முடியாது. அதுவும் முஸ்லிம்கள் குறித்த விசயத்தில் தினமலரின் நேர்மை உலகறிந்தது என்பதால் இனியும் எதிர்பார்க்க முடியாது.

ஆங்கிலம் அறிந்தவர்கள் மட்டுமே கணினியைப் பயன்படுத்தலாம் என்ற நிலைமாறி கணிப்பொறி,கணினி என தமிழாக்கப்பட்டு உலகத் தமிழர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்து, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் நடக்கும் இணையத் தமிழ் மாநாட்டு அரங்கிற்கு "உமர்தம்பி" அரங்கு என்று பெயரிட்டுள்ளனர். தமிழ் கணிமைக்குப் பங்களித்தவர்களுக்கு செம்மொழி மாநாட்டில் உமர்தம்பி அவர்கள் பெயரால் விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமாதங்களாக வலைப்பூ முதல் இணையம், சஞ்சிகை, வானொலி என அனைத்து தரப்பிலும் உலகத் தமிழர்களின் கோரிக்கைக்குரல் ஒலிப்பது தினமலரு மட்டும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.

உமர்தம்பி அவர்களின் தமிழ்சேவையை இருட்டடிப்பு செய்ததோடு மட்டுமின்றி, தமிழ்கணிமை வளர்ச்சியில் தினமலர் நிறுனரையும் சந்தடிச்சாக்கில் குறிப்பிட்டு உள்ளது நகைப்பிற்குறியது. தினமலர் ஒருங்குறிக்குமாறி ஓரிரு வருடங்களே ஆகின்றன. மேலும், அது பயன் படுத்திவரும் "லதா" ஒருங்குறி எழுத்துரு சிலவருடங்களுக்கு முன்புதான் செம்மை படுத்தப்பட்டது. ஆனால் உமர்தம்பி அவர்களின் தேனீ வகை இயங்கு எழுத்துருக்கள் 2003 முதலே இணையத்தில் உலா வருகின்றன!

தமிழுக்கு தானமளித்த உமர்தம்பிக்கு தினமலரின் அங்கீகாரம் தேவையில்லை என்றாலும் உண்மையிலேயே தமிழர்கள்மீதும் தமிழ்மீதும் பற்று இருந்தால், தமிழை கணினியில் புகுத்துவதில் முன்னோட்டியாயிருந்த தமிழ் முஸ்லிம்கள் குறித்த தகவலையும் வெளியிட்டிருக்கலாம்.

தினமலர் வகையறாக்களுக்கு ஈராயிரம் ஆண்டுகளாக நீசமொழியாக இருந்துவந்த தமிழை வைத்து பிழைப்பு நடக்கும் என்றால் மட்டுமே 'தமிழ்பற்று' தலைதூக்கும். தமிழ் கணிமை வரலாற்றைச் சொல்லும் கட்டுரையின் தலைப்புக்கு "கம்யூட்டரும் தமிழும்"! என்று பெயரிட்டிருப்பதிலிருந்தே தினமலரின் செம்மொழித் தமிழ்பற்று பல்லிளிக்கிறது!

(பி.கு:தினமலருக்கு அனுப்பிய மடல் இன்று மாலைக்குள் வெளியிடப்படாத பட்சத்தில் எமது வலைப்பூவில் வெளியிடப்படும்)

அன்புடன்,
அதிரைக்காரன்

Read more...

குரங்குகளின் டார்வின் தியரி

Sunday, June 20, 2010

மூன்றாம் வகுப்பில் அல்லது அதற்கு முன்பு இந்தக் கதை பாடபுத்தகங்களில் படித்திருப்பீர்கள். அதே கதேதான் கிளைமாக்ஸ் மட்டும் மாற்றப்பட்டு, மடலில் வந்தது.

1) ஒரு ஊரில் வளவன் எனும் வணிகன் இருந்தான். அவன் ஊர் ஊராகச் சென்று தொப்பி விற்று வந்தான். கோடைக்காலத்தில் தொப்பிகளுக்கு அதிகத்தேவை இருக்கும் என்பதால் வகைவகையான தொப்பிகளை தன் சைக்கிளில் அடுக்கிக் கொண்டு ஊர் ஊராகச் சென்றான்.

2) உச்சிவெயில் தாண்டிய பிறகு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, அருகிலிருந்த மரத்தடியில் சற்று இளைப்பாரலாம் என்று உட்கார்ந்தான். இதமான காற்று மற்றும் வயிறு நிறைய சாப்பிட்டதாலும் ஊர் ஊராகச் சென்ற களைப்பில் கண்ணயந்து விட்டான். சுமார் இரண்டு மணிநேரம் ஆழ்ந்து தூங்கிவிட்டு, விழித்துப் பார்த்தால் அவன் கொண்டு வந்திருந்த தொப்பிகளை மரத்திலிருந்த குரங்குகள் எடுத்துக் கொண்டு சென்றிருந்தன. நூற்றுக்கணக்கான தொப்பிகளும் குரங்குகளிடம் இருப்பதால், எப்படி அவற்றைத் திரும்பப் பெறுவது என்று தெரியாமல் விழித்தான்.

3) "ச்...சே..கொஞ்சம் உஷாராக இருந்திருக்கலாமே என்று தன்னை நொந்து கொண்டு தலையில் கை வைத்து உட்கார்ந்தான். அவனின் பரிதாப நிலையை சிரித்துக் கொண்டே பார்த்த குரங்குகளும் தங்கள் தலையில் கைவைத்தன. எப்படியாவது குரங்குகளிடமிருந்து தொப்பிகளைத் திரும்பப் பெற்றால்தான் மறுநாளைக்கு விற்க முடியும்.

4) எல்லாமே கலை நுணுக்கத்துடன் செய்த தொப்பிகள். தலையிலிருந்து கையை எடுத்து தன் தொப்பியைக் கழற்றி உச்சந்தலையை சொரிந்து கொண்டே இந்த சிந்தனையை மனதில் ஓடவிட்டான். குரங்குகளும் தொப்பியைக் கழற்றி தங்கள் தலையைச் சொரிந்தன.

5) தான் செய்வதையே குரங்குகளும் செய்வதைப் பார்த்த வளவனுக்கு ஓர் ஐடியா தோன்றியது. தன் தொப்பியைக் கழற்றி குரங்குகளை நோக்கி வீசினான்.

6) உடனே குரங்குகளும் சற்றும் யோசிக்காமல் தங்கள் தொப்பியைக் கழற்றி வளவனை நோக்கி வீசின. தனது ஐடியா ஒர்க் அவுட் ஆகியதை நினைத்து மகிழ்ந்தவனாக கீழே கிடந்த தொப்பிகளைச் சேகரித்துக்கொண்டு அடுத்த ஊரை நோக்கிச் சென்றான்.
========================================================
ஐம்பது வருடம் கழித்து வளவனின் பேரனும் மாறனும் பரம்பரைத் தொழிலான தொப்பி வியாபாரத்தில் ஈடுபட்டான். வளவனுக்கு ஏற்பட்ட அதே அனுபவம் மாறனுக்கும் ஏற்பட்டது.

மீண்டும் ஒருமுறை...

2)
3)
4)
5)

ஆகிய பத்திகளைப் வாசித்து விட்டு அடுத்த பத்திக்குச் செல்லவும்.

7) பாய்ந்து வந்த ஒரு குரங்கு அந்தத்தொப்பியை எடுத்துக் கொண்டு மரத்தில் ஏறியது. குழப்பத்தில் தலையைச் சொரிந்து கொண்டு நின்றான். மாறனின் நிலையைப் பார்த்த ஒரு குரங்கு ஏன் தலையைச் சொரிந்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டது.

8) பரயாயில்லையே! குரங்குகளிலும் மனிதாபிமானமுள்ளவை உள்ளன என்று மகிழ்ந்து தன் உதவியற்ற நிலையை விளக்கினான். தன் தாத்தாவுக்கும் இது போன்ற இக்கட்டான நிலை ஏற்பட்டபோது இப்படித்தான் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு தொப்பிகளை மீட்டதாகச் சொல்லியதை குரங்கிடம் விளக்கினான்.

9) மாறனின் சோகக்கதையைக் கேட்டுக்கொண்டிருந்த குரங்கு, மாறனைப்பார்த்து ஏதோ சொல்லிவிட்டு மரத்திற்குத் தாவியது. மீண்டும் மாறன் தலையில் கை வைத்து உட்கார்ந்தான். அந்தக் குரங்கு மாறனிடம் அப்படி என்னதான் சொல்லி இருக்கும்?
.
.
.
.
.
.
.
.

.
.
.இன்னும் கீழே செல்லுங்கள்
.
.
.
.
.
.
.
.
.
.
.இன்னும் கீழே செல்லுங்கள்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.இன்னும் கீழே
.
.
.
.
.
.
.
.
..இன்னும்
.
.
.
.
.
.
.
.
..கீழே
.
.
.
.
.
.
.
.
.
.
.
"ஏம்லே! மனுசங்களுக்கு மட்டும்தான் தாத்தா இருப்பாராலே?"

Read more...

கஸ்டமர் சர்வீஸா கஷ்டமர் சர்வீஸா?

Friday, June 11, 2010

ஏர்டெல் செல்பேசி பயனருக்கு உள்வரும் அழைப்புகளில் பிரச்சினையாம்! வாடிக்கையாளர் சேவைக்கு அழைத்து தன் பிரச்சினையை முறையிடுகிறார். கஸ்டமர் சேவைப்பிரில் வேலை பார்ப்பவர்களுக்கு எப்படியெல்லாம் "கஷ்டம்" வருதுன்னு பாருங்க! (கேளுங்க:)

Read more...

சானியா மிர்சாவின் தேசப்பற்று!

Monday, April 19, 2010

டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சுஹைப் மாலிக்கைத் திருமணம் செய்து தனது இந்தியாவின் மீதான தேசப்பற்றை நிரூபித்துள்ளார்! இதை உணராமல் சங்பரிவார சில்லறைகள் சானியாவை நாடுகடத்த வேண்டும், அவருக்கு வழங்கப்பட்ட அர்ஜுனா விருதைத் திரும்பப் பெறவேண்டும் என்றெல்லாம் கூக்குரலிலிட்டார்கள். இந்து மாக்கள் கட்சியினர் கோவையில் சானியாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள்.

சென்ற மாதம்வரை சானியா மிர்சாவை இந்தியப் பெண்களுக்கு முன்மாதிரி, பின்மாதிரி என்றெல்லாம் ஒப்பிட்டும், அவரை முஸ்லிமாகப் பார்க்கவில்லை இந்தியராகவே பார்க்கிறோம் என்றெல்லாம் பேசியவர்கள்தான் தற்போது அவரின் திருமணத்தை எல்லை தாண்டிய தீவிரவாதமாகப் பிரச்சாரம் செய்து கல்யாணவீட்டில் ஒப்பாரி வைத்தனர்.

அதெல்லாஞ்சரி! தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று தலையைச் சொரிபவர்களுக்காக சட்டுபுட்டுன்னு விசயத்துக்கு வந்துடுறேன்.

India is my country and all Indians are my brothers and sisters. I love my country and I am proud of its rich and varied heritage. I shall always strive to be worthy of it. I shall give my parents, teachers and all elders respect and treat everyone with courtesy. To my country and my people, I pledge my devotion. In their well being and prosperity alone, lies my happiness.

இந்தியர்கள் அனைவரும் உடன்பிறந்தோர்" என்பது நம்நாட்டு குடிமக்கள் மனதார உறுதிமொழி ஏற்க வேண்டும். பள்ளிக்கூடம் முதல் பாராளுமன்றம் வரை இதையே முழங்குகின்றோம். ஒரு பாகிஸ்தானியரை திருமணம் செய்து இந்தியர்கள் அனைவரும் அவருக்குச் சகோதரர்கள் என்பதை நிரூபித்துள்ளார். இதை தேசபக்திக்கு சம்பந்தமில்லாத சங்பரிவாரங்களுக்கு யாராச்சும் எடுத்துச் சொன்னால் நல்லது!

Read more...

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா?

Monday, April 05, 2010

தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஓரிருவரிகொண்ட மென்பொருள் நிரழிகளை இலட்சக்கணக்காண ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் பல மென்பொருள் நிரழிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டுக்கு வைத்தவர் திரு.உமர் தம்பி அவர்கள்.

விண்டோஸ் 98 பயனர்கள் தமிழிணைய தளங்களை எவ்வித சிரமமுமின்றி கணினியில் பார்வையிடவும், யூனிகோட் ஒருங்குறியில் தட்டச்சவும் உமர் தம்பி உருவாக்கிய 'தேனீ' வகை எழுத்துருக்கள் மற்றும் நிரழிகள் இன்றும் பல தமிழ்தளங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் எழுத்துறுக்கள் (Theenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அவற்றிற்குண்டான கிரடிட்டோ எதிர்பாராது சேவையாற்றியவர்.

கணினித் தமிழ் தளங்களான சங்கமம், தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி திரட்டியான தமிழ்மணம், எழில்நிலா மற்றும் அதிரை.காமிலும் பல்சுவை கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுதப்பழகுவோம் HTML, யுனிகோடும் இயங்கு எழுத்துருவும், யுனிகோடும் தமிழ் இணையமும், யுனிகோடின் பன்முகங்கள்-RSS ஓடை-ஒரு அறிமுகம்,தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு மற்றும் பல கணினித் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நான்காம் இணையத் தமிழுக்காகச்செய்த தமிழ்ச்சேவை மகத்தானது. இ-கலப்பை தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்களில் உமர்தம்பியும் ஒருவர்.

சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் (INFITT) சார்பில் நடந்த மாநாட்டில் 'உமர்தம்பி அரங்கு' என்று பெயரிட்டிருந்ததாக தமிழூற்று மாஹிர் தெரிவித்திருந்தார்.

தமிழா,அன்புடன்,அதிரை வெப் கம்யூனிடி மற்றும் பல குழுமங்களிலிலும் உமர்தம்பி அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.

மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் என்பது தமிழ் கணிமை பயனர்களின் அவா!

தமிழக முதல்வரும், உலகதமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுவினரும் உரிய நேரத்தில் இதைச் செய்வார்களா?

உமர்தம்பி அவர்களை நினைவுகூறும் தமிழிணைய தளங்கள்,குழுமங்கள் மற்றும் தனிநபர் வலைப்பூக்களின் தொகுப்பை கீழ்கண்ட சுட்டிகளில் வாசிக்கலாம்.

இணைய தளங்கள்:
www.ta.wikipedia.org/wiki/உமர்_தம்பி
http://www.tamilmanam.net/m_thiratti_author.php?value=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&pageno=17
http://www.pudhucherry.com/pages/umar.html
http://www.satyamargam.com/index2.php?option=com_content&task=emailform&id=166&itemid=300131
www.geotamil.com/pathivukal/notice_unicode_umar.html
http://www.islamkalvi.com/portal/?p=77
http://ezilnila.com/archives/803
http://ezilnila.com/2009/07/umarthambi/
http://tamilnirubar.org/?p=9958
http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/unicode_dynamic_website.htm
http://www.pudhucherry.com/
http://umarthambi.sulekha.com/blog/post/2006/07/.htm
http://www.tmpolitics.net/reader/
http://www.desikan.com/blogcms/?item=theene-eot
குழுமங்கள்
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4845&mode=threaded&pid=71005
http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=1213.0
http://groups.yahoo.com/group/tamil_araichchi/message/4633
http://tech.groups.yahoo.com/group/e-Uthavi/message/579
http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/93c7eeb38bede818/814be493e9c363f6?hl=en&ie=UTF-8&q=csd_one
http://groups.google.com/group/Thamizmanam/browse_thread/thread/a510f4d1e236527c/deffa100a949050e#deffa100a949050e
வலைப்பூக்கள்:
http://valai.blogspirit.com/archive/2006/07/14/கணித்தமிழர்-உமர்தம்பி.html
http://muthukumaran1980.blogspot.com/2006/07/blog-post_24.html
http://akaravalai.blogspot.com/2006/07/blog-post.html
http://kasiblogs.blogspot.com/2006/07/blog-post.html

நிரழிகள்/மென்பொருள் தரவிறக்கம்
http://www.geocities.com/csd_one/UniConMagz.zip
http://www.geocities.com/csd_one/UWriterSetup.zip
http://www.geocities.com/csd_one/fonts/TheneeUni.zip

ஓரளவு மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.மேலதிக தகவலறிந்தவர்கள் தயவு செய்து கருத்துக்களை பின்னூட்டமிடவும். மேலே குறிப்பிடத் தவறிய சுட்டிகளையும் பின்னூட்டத்தில் தந்துதவினால் உமர்தம்பி அவர்கள் குறித்த தேட்ல்களுக்கு உதவியாக இருக்கும்.

Read more...

கதவைத் திறக்காதே போலீஸ் வரும்

Monday, March 29, 2010

மலையடிவார கிராமத்தின் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஓர் ஆசிரமத்தில் பூட்டிய அறைக்குள் பிரேமானந்தா,சங்கராச்சாரியார், தேவநாதன் குருக்கள் மற்றும் ஸ்ரீநித்தியானந்தா ஆகியோர் அதிமுக்கிய ஆலோசனைக்காகக் கூடியிருந்தனர். சாம்பிராணி புகையினால் கண் எரிச்சல் ஏற்பட்டு பிரேமானந்தா இருமியபோது வாயிலிருந்து லிங்கம் விழுகிறது.

சங்கரச்சாரியார்: "பிரேம்ஸுஜிக்கு புகையால் தோஷம்! கதவைத் திற காற்று வரும்!

நித்தியானந்தா: என்ன பெரியவாழ் கூப்பிட்டீர்களா?

சங்கராச்சாரியார்: "நீ ஒண்ணு! அடைத்த அறைக்குள் சாம்பிராணியை புகைய விட்டதால் பிரேம்ஸுஜிக்கு தொண்டையில் தோஷம். அறைக்கதவைத் திறந்தால் ரஞ்சிதமான காற்று உள்ளே வரும்னு சொன்னேன்!

நித்தியானந்தா: குத்திக்காட்டாதீங்கோ பெரியவாழ்! கேவலமாக இருக்கு!

தேவநாதன்: தற்போதைய சூழலில் கதவைத் திறந்தால் ரஞ்சிதமான காற்று வருதோ இல்லையோ போலீஸ் நிச்சயம் வரும்!பிரேம்ஸுக்கு ஜெயில்ல இருந்து பழக்கம் இருப்பதால் இது ஒரு பிரச்சினையில்லை.

பிரேமானந்தா: தம்பி தேவநாதா! ஏன் ராசா தேவையில்லாமல் என்னைய இழுக்கிறே? மூடிய அறைக்குள் இருப்பது கர்ப்பக்கிரஹம் மாதிரி இல்லே!

தேவநாதன்: பிரேம்ஸ்ஜி கோச்சுக்காதீங்க. உண்மையத்தானே சொன்னேன்.

சங்கராச்சாரியார்: வழவழன்னு பேசி நேரத்தை வீணடிக்காதீங்கோ. சட்டுபுட்டுன்னு முடிவுக்கு வாங்க. நம்மளமாதிரி தெய்வச்சேவை செய்பவர்களுக்கு சட்டரீதியில் வரும் சோதனைகளை எப்படி முறியடிப்பதுன்னு ஒவ்வொருத்தரா கருத்துச் சொல்லுங்கோ!

பிரேமானந்தா : சண்டைக்காரன் காலில் விழுவதைவிட சாட்சிக்காரன் காலில் விழலாம். பெரியவாழ் செய்தமாதிரி சாட்சிகளை பல்டியடிக்கச்செய்து வழக்குகளை புஸ்வானமாக்கலாம்.

தேவநாதன்: இது எல்லா சாமிகளுக்கும் சரியா வருமா? எங்களமாதிரி வருமானமில்லாத சாமிகள் கர்ப்பக் கிரகத்துக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறோம். பக்த அடியாட்கள் செல்வாக்கு இருந்தால்தான் இது சாத்தியப்படும்.

நித்தியானந்தா: மொதல்ல என்னை எப்படிக் காப்பாத்துவது என்று ஐடியா சொல்லுங்கய்யா!

தேவநாதன் : மெமரி கார்டுல பக்காவா பதிவு செய்திருப்பதால் அழித்தாலும் மீட்டெடுக்கும் சாஃப்ட்வேர் ஓசிலய கிடைக்குது. அதனால READ ONLY கோப்புகள் மாதிரி DELETE ONLY கோப்புகளை உருவாக்கச்சொல்லி பக்தர்களை ஊக்குவிக்க வேண்டும்.

பிரேமானந்தா: உருப்படியான ஆலோசனை சொல்லுங்க ராசா!

சங்கராச்சாரியார்: சன் டீவில காட்டுன வீடியோவ யாராச்சும் இப்ப வச்சிருக்கீங்களா?

தேவநாதன்: என்கிட்ட இருக்கு. நியூஸ்ல போட்டதும் மொபைல் போனில் ரெக்கார்ட் பண்ணி வச்சிட்டேன். எத்தனைதடவை போட்டுப்பார்த்தாலும் கிக் இல்லே பெரியவாழ்!

பிரேமானந்தா : இன்னும் திருந்தலையா ராசா? மொபைல் கேமராவுல ரெக்கார்ட்பண்ணுவது உமக்கு வியாதியோ என்னவோ?

சங்கராச்சாரியார்: பிரேம்ஸ்! அம்பியை வையாதீங்கோ. இப்போதைக்கு மொதல்ல அதைப் போட்டுப் பார்க்கலாம். அப்பதான் ஐடியா கிடைக்கும்.

(தேவநாதன் மொபைலில் படம் காட்டுகிறார்)

பிரேமானந்தா: பெரியவாழ்! வீடியோவுல தம்பி நித்தியானந்தன் சைடுல குத்தம் ஏதுமிருப்பது மாதிரி தெரியலையே!

(நித்தியானந்தன் ஆர்வமாக பிரேம்ஸை கவனிக்கிறார்)

தேவநாதன்: என்ன ஓய் பிரேம்ஸ்! பத்திரிக்கைக்காரன்களிலிருந்து ப்ளாக்கர்காரனுங்கவரை அக்குவேறா பிரிச்சி மேய்ஞ்சிட்டானுங்க. நீரு புதுசா குத்தமில்லைன்றீர்?

சங்கராச்சாரி: தம்பி பிரேம்ஸ் கொஞ்சம் புரியும்படி சொன்னா சுந்தரேச ஐயர்கிட்டச்சொல்லி நல்ல வழக்கறிஞரை ஏற்பாடு செய்யலாம். தெளிவா சொல்லுங்கோ.

பிரேமானந்தா: தம்பி நித்தியானந்தா டீவி பார்த்துக் கொண்டிருக்கும்போது நடிகை ரஞ்சிதா அறைக்குள் நுழைந்து காலை அமுக்கிவிட்டு,மாத்திரை எடுத்துக் கொடுக்குது.தம்பி சாப்பிட்டு விட்டு கட்டிப்பிடிச்சு ஆசிர்வதிக்குது. இதிலே எங்கே தப்பு தண்டா இருக்கு?

தேவநாதன்: தம்பி என்ன யாரையும் ஆள் வச்சு கொலையா செய்தார்? சூப்பர் பாயிண்ட் பிரேம்ஸ்ஜி.

சங்கராச்சாரி: ஓய் தேவநாதா உன் கொள்ளிக்கட்டை வாயை மூடிக்கிட்டு சும்மாக்கிட.

நித்தியானந்தன்: பிரேம்ஸ்ஜி இது மட்டும்தானா இல்லே வேறு ஏதாச்சும் சட்ட நுணுக்கமான பாயிண்ட்ஸ் உண்டா?

பிரேமானந்தா:அப்புறம்! நித்தியானந்தா ராசா ஒண்ணும் ரஞ்சிதாவிடம் சில்மிஷம் செய்யலே! நல்லா பாருங்க ரஞ்சிதாதான் தம்பிமேல ஏறிப்படுத்துச்சு! இந்த பாயிண்ட் படியும் தம்பிமேல குத்தமில்லை. அதனால இதையே காரணமாகச் சொல்லி தம்பிதப்பிச்சிடலாம். வேணுமின்னா ரஞ்சிதா நித்தியானந்தாவைக் கற்பழித்தாரென்று கேஸை திசை திருப்புங்கோ!

நித்தியானந்தாவுக்கு ஆனந்தக் கண்ணீர் வடிகிறது. பிரேம்ஸின் காலில் விழுகிறார். குனிந்து நித்தியானந்தாவைத் தூக்கி வாயிலிருந்து லிங்கம் எடுத்துக் கொடுக்கிறார். தேவநாதன் பக்தி பரவசத்துடன் பிரேம்ஸைப் பார்க்கிறார்.

சங்கராச்சாரியார்: எல்லாம் பகவான் செயல்! நம்ம கேஸ் எல்லாம் முடிஞ்சபின்னாடி தம்பி பிரேமானந்தாவை சின்னவாழாகப் பட்டாபிசேகம் செய்திட வேண்டியதுதான்!

அடுத்த சில நாட்களில் காஞ்சி சங்கராச்சாரியார் வழக்கில் சாட்சிகள் எல்லோருமே பல்டி அடித்துவிட்டதால் அரசு தரப்பில் போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யாததால் அனைத்து வழக்கிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார். மறுநாள் நித்தியானந்தாவும் விடுவிக்கப்படுகிறார். அறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பிரேமானந்தாவிற்கு நன்னடத்தை விதியின்கீழ் ஆயுள் தண்டனை 15நாள்சிறைத்தண்டனையாகக் குறைக்கப்பட்டு அதையும் ஏற்கனவே சிறையில் கழித்துவிட்டதால் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்.

வாயை வெச்சிக்கிட்டு சும்மா இருக்காமல் பிரேம்ஸை சீண்டியதால் தேவநாதனுக்கு பிரேம்ஸ் ஐடியா கொடுக்கவில்லை.

Read more...

கத்தரிக்காய் தினம்

Saturday, February 13, 2010

"காதலுமில்லை கத்தரிக்காயுமில்லை"என்று காதலையும் கத்தரிக்காயையும் சேர்த்து சொல்வது ஏனென்று பலருக்கும் தெரியாது.எனக்கும்கூட தெரியாது என்பதுதான் ஹைலைட்!

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி-14 ஐ காதலர் தினம் என்று கொண்டாடுகின்றனர். காதலர் தினம் என்ற போர்வையில் ஆண்-பெண் சிலர் எல்லை மீறுவதும், அவ்வாறு எல்லை மீறுபவர்கள்மீது சிலர் அத்துமீறுவதும் சமீப வருடங்களாக நடந்து வருகிறது.

காதல் மனசு சார்ந்த விசயம் என்று காதலுக்கு மரியாதை செலுத்துபவர்கள் மனசை எதற்கு ஐந்து நட்சத்திர விடுதியில் குடித்துவிட்டு ஆட்டம் போட வேண்டும்? வாய் நாற்றத்தைப் பொருட்படுத்தாமல் ஒரே ஸ்ட்ராபோட்டு எப்படித்தான் கூல்ட்ரிங்ஸ் சாப்பிடுகிறார்களோ! (அதான் சார் காதல் என்று எவனோ முனுமுனுப்பது கேட்கிறது)

தலைப்பை விட்டு எங்கோ போய்விட்டேன்! காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்பந்தம்? கத்தரிக்காய்க்கு ஒரு நியாயம் காதலுக்கு ஒரு நியாயமா? மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் உடல்நலத்துக்கும் நிலத்துக்கும் எப்படி நல்லதல்லவோ அதேபோல் மரபு மீறிய காதலும் நல்லதல்ல.

ஆகவே, பிப்ரவரி-14 ஐ கத்தரிக்காய் தினமாக அனுஷ்டிப்போம்! ஒருவழியா தலைப்புக்கு வந்துவிட்டேன். (எவண்டா அழுகிய கத்தரிக்காயை வீசினவன்?)

Read more...

தேசிய விலங்காக கழுதை தேர்வு!

Monday, November 23, 2009

தொடர் தோல்விகளாலும் உட்கட்சிப் பூசல்களாலும் துவண்டுபோயுள்ள சிலருக்கு உருப்படியாக அரசியல் நடத்த எதுவுமில்லை என்பதால் ரொம்ப அவசியமான தேசிய விலங்கு குறித்து கோஷம் போட்டு வருகிறார்கள்.இது ஒருபக்கமிருக்க தேசிய விலங்காக யாரைத் தேர்வு செய்வது என்று மிருகங்களும் தேர்தல் நடத்தினால் எப்படி இருக்கும்? - ஓர் கற்பனை.

நாக்பூர் காட்டில் 'சாது'வான விலங்குகளும் கொடூர விலங்குகளும் தேசிய விலங்காக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு மாநாட்டில் கூடியிருந்தன! காட்டு ராஜா சிங்கம் தனக்கென ஒதுக்கப்பட்ட அரியாசணத்தில் அரைக்கால் டவுசருடன் வீற்றிருந்தார்.இருகுரங்குகள் விசிறியால் வீசிக்கொண்டிருந்தன. மாநாட்டு நேரம் சரியாக நள்ளிரவு 12:00 மணிக்குத் தொடங்கியது.

சிங்கம்: மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய எனதருமை மிருகங்களே! நாம் இன்று குழுமியிருக்கும் நோக்கம் நம்மில் யாரை தேசிய விலங்காகத் தேர்வு செய்வது என்று முடிவெடுப்பதற்காக என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களில் யாரெல்லாம் தேசிய விலங்காகும் தகுதி இருப்பதாகக் கருதுகிறீர்களோ,தயவுசெய்து மேடைக்கு வந்து தங்கள் சிறப்பம்சங்களைச் சொல்லலாம். இறுடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் பெரும்பான்மை ஓட்டுகள் பெறுபவர் தேசிய விலங்காக அறிவிக்கப்படுவார் என்று பேசிவிட்டு, தலைமை தேர்தல் அதிகாரி நரியிடம் ஒவ்வொருவராகப் பேச அழைக்கும்படிப் பணித்தது.




நரி: முதலில் பன்றியை மேடைக்குப் பேசவருமாறு அழைக்கிறேன்.

பன்றி: மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தலைவர் சிங்கம் அவர்களே! துணைத்தலைவர் புலி மற்றும் சிறுத்தையாரே! கூடியிருக்கும் மிருகங்களே! எல்லோருக்கும் என் வணக்கம்! மகாவிஷ்ணுவுக்கு பிரியமானதால் தேசிய விலங்காக பன்றிகளே தகுதியானவை. உங்க பொன்னான வாக்குகளை பன்றிக்குச் செலுத்துவீர் என்றுகூறி அமர்கிறேன்.

நரி: (மனதுக்குள்) ம்..இவனுங்கப் பேரைக்கேட்டால் அமெரிக்காகாரன் முதல் ஆண்டிப்பட்டிக்காரன் வரைக்கும் நடுங்குறானுங்க. கெட்டகேட்டுக்கு தேசிய விலங்காம்! அடிசெருப்....) அடுத்து யானையார் என்ன சொல்லப்போகிறீர்கள்?

யானை: அவையோருக்கு என் பணிவான "ஓ"! மாண்புமிகு தேர்தல் அதிகாரி நரி அவர்கள் என்னை 'யானையார்' என்று அழைத்தார். பிள்ளையாரின் 'தல' என்பதால் அவ்வாறு அழைத்திருக்கிறார். சும்மாவா சொன்னார்கள் நரிகள் புத்திசாலிகளென்று!அதனால் ஆனைமுகத்தோனின் 'தல' யானையே தேசிய விலங்காகத் தகுதியுடையது.

நரி: (ஏம்லே.வருசாவருசா ஓம்பேரச்சொல்லி கலாட்டா பண்றது போதாதா?) அடுத்து சிறுபான்மை இனத்தைச் சார்ந்த ஒட்டகம் மேடைக்கு வரவும்.

ஒட்டகம்: அவையோருக்கு என் அன்பான சலாம்! என்னை சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவன் என்று சொன்னதை ஆட்சேபிக்கிறேன்.ராஜஸ்தான் முதல் அரபுநாடுகள் வரை நாங்கள் பரவி இருக்கிறோம்.அகண்ட பாரதம் உருவானால் அப்போது தேசியவிலங்காக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று குழப்பம் வருவதைத் தவிர்க்க எங்களையே தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்.

நரி:(போடாங் கொய்யால கொசுவும்தான் உலகம் பூரா இருக்கு.அதுக்காக?) நண்பர் குதிரை மேடைக்கு வரவும்.

குதிரை: பண்டைய மன்னர்களின் (அசுவமேத) யாகம் முதல் இன்றைய பாராளுமன்ற எம்பிக்களை விலை பேசுவதுவரை எங்கள் பெயர்(குதிரைபேரம்) அடிபடுகிறது. ஆகவே எங்களையே தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்.

நரி: (என்ன இருந்தாலும் உன் முதுகில சவாரி செஞ்சிடுறானுங்களே!) அடுத்து அண்ணன் 'சொரி'நாய் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்.

நாய்: எல்லோருக்கும் ஒரு லொள்ளு! நன்றியுள்ள எங்களைத் தவிர தேசிய விலங்காக இருப்பதற்கு யாருக்குத்தான் தகுதியுள்ளது?எனவே எங்களையே தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்.

நரி:(அப்ப ஏம்லே நன்றிகெட்ட நாயேன்னு திட்டுறானுங்க?) அடுத்து குரங்கு மேடைக்கு வரவும்.

குரங்கு: ராமருக்குப் பணிவிடை செய்ததன்மூலம் அரசியலுக்கு வந்தவன் நான். தன்னலமற்ற நீண்டகால அரசியல் பின்னணியை கருத்தில்கொண்டு குரங்கையே தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்.

நரி: (நீயி மிருகமா மனுசனா என்று இன்னும் முடிவுக்கு வரலே.அதனால ராமர் ஆட்சி மலர்ந்த பின்னாடி உன்னைப் பற்றி யோசிப்போம்) அடுத்து கரடியை மேடைக்கு அழைக்கிறேன்.

கரடி: ஏய்டண்டனக்கா! ஏய் டண்டனக்கா! உங்கள் கையிலிருப்பது ஓட்டு. அதை எனக்குப் போட்டு! மத்தவங்களுக்கு வைங்க வேட்டு. உடு ஜூட்டு!யக்காவ்..

நரி: (இவன் டயலாக்கைப் பார்த்தா கரடி மாதிரி தெரியலையே?) பூனை மேடைக்கு வரவும்.

பூனை: அவையோருக்கு என் அன்பான மியாவ்! காட்டிலும் நாட்டிலும் 'சாது' வான விலங்காக இருப்பதால் உங்கள் ஓட்டு பூனைக்கே!

நரி: (புலியப் பார்த்து பூனையும் சூடுபோட்டுக் கொண்டதாம். ஏன்டா உனக்கு இந்த ஆசை?) தம்பி எலி ஏதேனும் சொல்ல விரும்பினால் சொல்லலாம்!

எலி: மதமதவென்று பேசிய ஒருவர் ஆனைமுகத்தோன் விநாயகரின் 'தல' என்பதால் தன்னையே தேசிய விலங்காகத் தேர்வு செய்ய வேண்டினார். ஆனை முகத்தோன் விநாயகரின் வாகனமான எலிகளே தேசிய விலங்காகத் தகுதியுள்ளவையென எலிமையாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நரி: (மனுசங்க மொதல்ல விஷம் வச்சுக் கொல்றது உங்களைத்தான்! திருட்டுப்பசங்கடா நீங்க!) பாம்பு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

பாம்பு: சமீபத்தில் முதலமைச்சர் கருணாநிதி படமெடுப்பவர்களின் சொர்க்க பூமியாக தமிழகத்தை மாற்ற விரும்புவதாகச் சொன்னதை நினைவுறுத்தி, சிவபெருமானின் கழுத்தில் மாலையாகத் தொங்கும் பாம்பை விடவும் தேசிய விலங்காகும் தகுதி யாருக்கும் இல்லை என்பதால் பாம்பு உங்கள் சாய்ஸ்!

நரி: (முதல்வர் சினிமாப்படம் எடுப்பதைச் சொன்னாருடா டுபுக்கு) அடுத்து கழுதை என்ன சொல்லப்போறீங்க?

கழுதை: உழைப்பாளர்களின் தோழன் கழுதை.பொறுமையின் சிகரம் கழுதை! தேசிய விலங்காக கழுதையைத் தேர்வு செய்யும்படி கழுதையாகக் கத்திச் சொல்லிக் கொள்கிறேன்.

நரி: (கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசம்?) தங்கள் அருமை பெருமைகளைச் சிறப்பாக விளக்கிய மிருகங்களுக்கு நன்றி. இறுதியாக கூட்டணியிலுள்ள சிறுத்தை மற்றும் இதுவரை அரசியல் நடத்த உதவிய புலிகளும் தங்கள் கருத்தைச் சொல்லி விட்டால் தேர்தலை சுமூகமாக நடத்தி விடலாம்!

சிறுத்தை: சிலர் தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணிக்கு வந்து செல்கிறார்கள். வெற்றி பெற்றதும் அணிமாறுகிறார்கள். தமிழினத்தின் நிரந்தரக் காவலரான சிங்கத்தமிழன் கூட்டனியில் என்றும் ஒட்டிக் கொண்டிருக்கும் சிறுத்தைகளுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதால் புலிகளுக்குப் பிறகு தேசிய விலங்காக சிறுத்தையை அறிவிக்க மத்திய அரசை வற்புறுத்துமாறு சிங்கராஜாவைக் கேட்டுக் கொள்கிறேன்.

நரி:(அதான் ராஜபக்சேயுடன் பிரியாணி சாப்பிட அழைத்துச் சென்றார்களே?) மேதகு புலிகள் என்ன சொல்லப்போறீங்கன்னு ஒட்டுமொத்தத் தமிழினம் மட்டுமின்றி சிங்களரும் ஆர்வமாக உள்ளனர் என்பதால் உடனடியாக மெளனம் கலைக்கவும்.

புலி: புலிகளை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது. ஆண்டாண்டுகளாக ஆண்டுவந்த தமிழினம் இன்று அடிமைப்பட்டுக் கிடக்கிறது. புலிகளிடையே ஒற்றுமையில்லாததே இந்நிலைக்குத் தள்ளிவிட்டது. விஷமிகள் ஒன்றுகூடி இன்று புலிகளை தமிழ் தேசியத்திலிருந்தும் இந்திய தேசியத்திலிருந்தும் விரட்டியடிக்க முனைகின்றனர். மதவாத,இனவாதச் சக்திகளின் சூழ்ச்சியை மாண்புமிகு தலைவர் உணர்ந்து புலியையே தேசிய விலங்காகத் தொடரச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சிங்கம்: தேசிய விலங்காக விருப்பம் தெரிவித்த அனைவரும் தத்தமது கருத்துக்களைத் தெளிவாகச் சொன்னீர்கள். இன்னார்தான் தேசிய விலங்கு என்று அறிவிக்க நாமொன்றும் சர்வாதிகார அரசாங்கம் நடத்தவில்லை. அமெரிக்கா கைகாட்டும் யாரும் ஐநா சபை பொதுச்செயலாளர் ஆகலாம். இந்தா பிடிச்சுக்கோ என்று தூக்கிக் கொடுக்க இதுஒன்றும் நோபல் பரிசல்ல!

இங்குள்ள மின்னணு வாக்களிப்பு எந்திரத்தில் ஒவ்வொருவராக வந்து தங்கள் வாக்குகளைச் செலுத்துமாறு அழைக்கிறேன்.

எல்லா விலங்குகளும் வரிசையில் நின்று தங்கள் அடையாளஅட்டையைக் காட்டி வாக்களித்தன. சிறுசிறு மிருகங்கள் கருத்துக்கணிப்பு நடத்தி மற்ற விலங்குகளைக் குழப்பின.மூன்று கட்டமாக நடந்த வாக்குப்பதிவு முடிவுகள் மறுநாள் அறிவிக்கப்படுகிறது.

சிங்கம்:வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. பதிவான வாக்குகளில் கழுதை அதிக வாக்குகள் பெற்றுள்ளது. இன்று முதல் நமது தேசிய விலங்கு கழுதை என்று அறிவிக்கிறேன்" சபை கலையட்டும்! என்று கர்ஜித்தது.

(தேர்தல் முடிவில் திருப்தியடையாத தோல்வியுற்ற விலங்குகள் மின்னணு வாக்களிப்பு எந்திரத்தில் குளறுபடி நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டின. அதை நிரூபிக்கும்படி தேர்தல் ஆணையர் நரி பலமுறை அழைத்தும் யாராலும் நிரூபிக்க முடியவில்லை.

மறுநாள் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய கழுதை"கழுதைகளின் கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.வரும் 2015க்குள் நிலவுக்குக் கழுதையை அனுப்புவோம்! வாக்களித்த அனைவருக்கும் நன்றி! என்னைப்பார் யோகம் வரும்! என்று கத்தியது.

Read more...

தொழிலுக்கேற்றப் பெயர் (அல்லது) பெயருக்கேற்ற தொழில்

Wednesday, November 11, 2009

உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி கீழ்கண்ட தொழிற்பெயர்களை செம்மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் பெயரை மாற்றிக்கொள்ளவும் அல்லது பெயருக்கேற்ற தொழில் செய்யவும் வசதியாக இருக்கும். வழக்கம்போல் ஈமெயிலில் வந்தது.

Agriculturist = பச்சயப்பன்
Alcoholic = கள்ளபிரான்
Attentive Driver = பார்த்தசாரதி
Baker = சீனிவாசன்
Barber = கொண்டையப்பன்
Bartender = மதுசூதனன்
Batsman = தாண்டியப்பன்
Beggar = பிச்சை
Bowler = பாலாஜி
Builder = செங்கல்வராயன்
Cardiologist = இருதயராஜ்
Dairy Farmer = பசுபதி
Dentist = பல்லவன் / பல்லவி
Diabetologist = சக்கரபாணி
Doctor = வைத்தியநாதன்
Dog Groomer = நாயகன்
Driver = சாரதி
ENT Specialist = நீலகண்டன்
Exhibitionist = அம்பலவாணன்
Exorcist = மாத்ருபூதம்
Female Spin Bowler = திருப்புரசுந்தரி
Fiction writer = நாவலன்
Financier = தனசேகரன்
Horticulturist = புஷ்பவனம்
Hypnotist = சொக்கலிங்கம்
Javelin Thrower = வேலாயுதம்
Karate Expert = கைலாசம்
Kick Boxer = எத்திராஜ்
Landscaper = பூமிநாதன்
Lawyer = கேஸவன்
Magician = மாயாண்டி
Makeup Man = சிங்காரம்
Marriage Counselor = கல்யாண சுந்தரம்
Mentalist = புத்திசிகாமணி
Meteorologist = கார்மேகம்
Milk Man = பால்ராஜ்
Mountain Climber = மலைச்சாமி
North Indian Lawyer = பஞ்சாபகேஸவன்
Nutritionist = ஆரோக்கியசாமி
Ophthalmologist = கண்ணையன்
Painter = சித்திரகுப்தன்
Pediatrist = குழந்தைசாமி
Polevaulter = தாண்டவராயன்
Psychiatrist = மனோ
Sex Therapist = காமதேவன்
Singer = ராகவன்
Snake Charmer = நாகமூர்த்தி/நாகராஜன்/நாகம்மா
Spin Bowler = திருப்பதி
Stockist = பண்டாரம்
Sumo Wrestler = குண்டுராவ்
Weight Lifter = பலராமன்

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP