என்னவளே 'அடி' என்னவளே...

Thursday, December 27, 2007

திருமணத்திற்கு காதலர்களின் உரையாடல்களைக் கேட்பதிலுள்ள சுகமே தனி. இருகாதலர்களின் திருமணத்திற்கு முன்னரும் பின்னரும் நடந்த உரையாடலைப் படியுங்களேன்.

திருமணத்திற்கு முன்:

He: Yes. At last. It was so hard to wait.

She: Do you want me to leave?

He: NO! Don't even think about it.

She: Do you love me?He: Of course!

She: Have you ever cheated on me?

He: NO! Why you even asking?

She: Will you kiss me?He: Yes!She: Will you hit me?

He: No way! I'm not such kind of person!
She: Can I trust you?

He: Yes .

திருமணம் முடிந்து சில ஆண்டுகள் கழித்து நடந்த உரையாடல் எப்படி இருக்கும்?

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மேற்கண்ட உரையாடலைக் கீழிருந்து மேல்நோக்கி வாசிக்கவும்.

Read more...

வெட்டி ஜோதிடம்!

Sunday, December 16, 2007

நாளொன்றுக்கு எத்தனை மணிநேரம் நீங்கள் வெட்டியாகப் பொழுதைக் கழிக்கிறீர்கள் (அல்லது வெட்டிப்பேச்சு வலைப்பதிவுக்கு வருகிறீகள்:) என்று சொன்னால் உங்கள் வயதைச் சொல்ல முடியும்! கீழ்கண்ட கணக்கைச் செய்து விடையைப் பின்னூட்டினால் உங்கள் வயதைச் சொல்ல முடியும்! (ஹூம்..எப்படியெல்லாம் பின்னூட்டம் வாங்க வேண்டியுள்ளது!)

1) இன்றைய வெட்டிப்பொழுதுகள் _____ மணிநேரம். (உ..ம் “2”)

2) வெட்டிப்பொழுதை இரண்டால் பெருக்கிக் கொள்ளவும்.(2X2=4)

3) வரும் விடையுடன் ஐந்தைக் கூட்டவும்.(4+5=9)

4) வரும் விடையை ஐம்பதால் பெருக்கவும். (9x50=450)

5) உங்கள் பிறந்த நாள் இந்தவருடத்தில் கடந்திருந்தால் 1757 ஐ வரும் விடையுடன் கூட்டவும்; இன்னும் கடந்திருக்க வில்லை என்றால் 1756 ஐக் கூட்டவும்.(450+1757=2207)

6) வரும் விடையுடன் பிறந்த வருடத்தைக் கழிக்கவும்.(2207-1980=227)

7) தற்போது மூன்றிலக்க எண் (227) விடையாகக் கிடைக்கும்.

8) உங்களின் உண்மையான சொந்த வெட்டிப்பொழுதை (1) இல் இட்டு மூன்றிலக்க எண்ணைப் பின்னூட்டினால் உங்கள் வெட்டிப்பொழுதும், வயதும் சொல்லப்படும்.

அனேகமாக விடை தெரிந்திருக்கும். தெரியாத வெட்டியாளர்கள் மட்டும் பின்னூட்டவும். பெண்களின் பின்னூட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.!

Read more...

ஆணுறைகள் எரிப்பு - சங் பரிவாரங்களின் சதியா?

Saturday, November 24, 2007

நேற்று கண்ட செய்தியைப் படித்து விட்டு மனதுக்குள் நினைத்தை அடைப்புக் குறிக்குள் எழுதியுள்ளேன். பச்சையாக எழுதி இருப்பதால் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

தேனியில் ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான ஆணுறைகள் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்ததால் சலசலப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில் நாமக்கல்லுக்கு அடுத்த படியாக எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் உள்ள மாவட்டம் தேனி மாவட்டம். இந்த மாவட்டத்தில் எய்ட்ஸ் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு அலுவலகங்கள், தொண்டு நிறுவனங்கள், பெட்ரோல் பங்க், ரேஷன் கடை போன்றவற்றில் ஆணுறைகள் இலவசமாக தரப்படுகின்றன. இந்த நிலையில் தேனி கொட்டக்குடி ஆற்று தடுப்பணை அருகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆணுறைகள் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. (அதிர்ஷ்டவசமாக எரிக்கப்பட்ட உறைக்குள் எதுவும் காணப்படவில்லை!)

இதில் பல ஆணுறைகள் பாதி எரிந்தும், மீதி எரியாத நிலையிலும் இருந்துள்ளன. இவற்றின் உண்மையை உணராத சிறுவர்கள் ஆணுறையை எடுத்து பலூன்களாக ஊதி விளையாடி உள்ளனர்.(சில வருடங்களுக்கு முன்பே இவற்றை இலவசமாகக் கொடுத்திருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்காது!)

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் என்ன என்று பார்த்தபோதுதான் ஆணுறைகள் எரிக்கப்பட்டது தெரிய வந்தது.இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.விரைந்து வந்த அதிகாரிகள் ஆணுறைகள் அங்கு எப்படி வந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

(ஒரிஸ்ஸாவில் பாதிரியாரையும் குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களையும் எரித்துக் கொன்றதை ஆதாரத்துடன் சொன்னதையே கண்டு கொள்ளாத அரசு நிர்வாகம், சாதாரண ஆணுறைகள் எரிக்கப் பட்டதை விசாரித்து என்ன செய்வார்கள்?)

Read more...

கொடுத்து வைத்த சிறைக்கைதிகள்

Wednesday, November 21, 2007

படத்திலிருக்கும் கட்டிடம் IT பார்க் அல்லது ஐந்து நட்சத்திர விடுதி என்று நினைத்து விடாதீர்கள். குளுகுளு மலைப்பிரதேசத்தில் இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் சிறைச்சாலை. இதில் அடைக்கப்பட்டுள்ள ??? கைதிகள் கூடைப்பந்து,டேபில் டென்னிஸ் ஆகிய விளையாட்டுக்களுடன் உடற்பயிற்சி செய்வதற்கு ஜிம் வசதியும் உள்ளது.

குற்றங்களுக்காகத் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் நம்நாட்டு சிறைச்சாலைகளில் கொசுக்கடி, மூட்டைப்பூச்சி இவற்றுடன் அரசியல் நடத்த முடியாது என்பதால் 'நெஞ்சுவலி' என்று டாக்டரிடம் சர்டிபிகேட் வாங்கி கொஞ்ச நாட்கள் ஆஸ்பத்திரியில் ஓய்வெடுப்பார்கள். இதேபோன்ற சிறைச்சாலைகளை நம் நாட்டிலும் கட்டினால் இனிமேல் போலியாக நெஞ்சுவலி நாடகம் ஆட மாட்டார்கள்.

ஆஸ்திரியா நாட்டு சிறையைப் பார்த்ததும் தோன்றிய சில கற்பனை உரையாடல்கள்.
=======
நீதிபதி: குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத காரணத்தினால், கபாலியை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது.
கபாலி: என்னைக் கைவிட்டுடாதீங்க எஜமான். வேற ஏதாவது செக்சனில் தண்டனை கொடுக்க முடியாமன்னு பாருங்க சாமி.
=======
பக்கிரி: கபாலி ஸ்டார் ஹோட்டல்ல தங்கனும்னு ஆசைப்பட்டியே. போயி ரெண்டு எடத்துல பிக்பாக்கெட் அடிச்சிட்டு வா. ஒரு பதினைஞ்சு நாளைக்கு ஜாலியா உள்ளே போய்ட்டு வரலாம்.
=======
நீதிபதி: மன்னாரு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் மூன்று மாதம் சிறைத்தண்டனையும் ஐயாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கிறேன். அபராதத்தைக் கட்டத் தவறினால் மேற்கொண்டு மூன்று மாதம் சிறையில் கழிக்க வேண்டும்.
மன்னாரு: அபராதம் கட்டப் பணமில்லை எஜமான். டோட்டலா ஒரு வருசம் ஜெயில்லேயே போட்டுங்க சந்தோசமா இருப்பேன்.
========






















உங்களுக்கு ஏதாச்சும் தோணுதா? இருக்கவே இருக்கு பின்னூட்டப் பெட்டி.

Read more...

பத்து நிமிடத்தில் ஜாதகம் மாறியது!

Wednesday, November 14, 2007

இப்பதிவிற்கு நீங்கள் எழுதவிருக்கும் நூற்றுக்கணக்கானப் பின்னூட்டங்கள் வெளிவராமல் இருந்தால் தயவு செய்து என்னை யாரும் தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது! ஏனென்றால் நாளைக்கு (16-11-2007) அன்று துபாயைச் சுனாமி தாக்கும் என்று தமிழக ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார்!

முன்பெல்லாம் ஜோதிடர்கள் தொழில்,திருமணம் போன்றவற்றில் வெற்றி கிடைக்குமா? என்று கணித்துச் சொல்லி அப்பாவிகளிடம் காசு பார்த்தார்கள். ஆடு மாடுகள் காணாமல் போனால் வெற்றிலையில் மைதடவிப் பார்த்துக் கண்டுபிடித்துக் கொடுக்கும் பாரம்பர்யமுறைகள் கிளி,எலி ஜோஸ்யமாக முன்னேறியது.கணினி யுகத்தில் கம்ப்யூட்டர் ஜோதிடம் சென்னை மவுண்ட் ரோட்டிலும் ஹை கோர்ட் எதிர்புறமும் சக்கை போடு போட்டது!

போட்டோஷாப் டெக்னாலஜி இல்லாத காலத்திலேயே பிரபலங்களுக்கு ஜோதிடம் பார்ப்பதுபோல் பிளாக்& ஒயிட் போட்டோக்களை பிரேம் போட்டு மதுரையிலிருந்தும் கோவையிலிருந்தும் பலரை கோலிவுட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் இந்த ஜோதிடர்கள். தற்போதெல்லாம் இத்தகைய முச்சந்தி ஜோதிடர்களைக் காண முடியவில்லை.

மக்கள் அறியாமையில் இருந்த காலங்களில் அவர்களின் அச்சங்களையும் ஐயங்களையும் முதலீடாக வைத்து 'ஜோதிடக் கணிப்பு' என்ற பீலா விட்டு காசு பார்த்தார்கள். நாளாவட்டத்தில் அவர்களின் கணிப்புகள் வெறும் கற்பனைகள் என்பதைப் புரிந்து கொண்ட பிறகு சீவலப்புரி ஜோதிட சிகாமணிகள் தினத்தந்தியின் இலவச இணைப்புக்கு மட்டுமே கணித்துச் சொல்கிறார்கள்!

காலேஜில் படிக்கும்போது ஒரு ஜோதிடரிடம் நண்பர்களுடன் நானும் நாடி ஜோதிடம் பார்த்தேன். பெயர் கேட்டு விட்டு கையைப் பிடித்துக் கொண்டே என் ஜாதகத்தைப் 'புட்டு'ப் 'புட்டு' வைத்தார். (மலையாள ஜோதிடரோ?) கும்பலாக கைநீட்டியதால் ஒவ்வொருவராகக் கணித்துச் சொன்னார். சற்று நேரம் கழித்து மீண்டும் கை நீட்டினேன். பெயரைக் கேட்டார். உண்மையான பெயரைச் சொல்லாமல் 'முருகன்' என்று சொன்னேன். பத்து நிமிடத்தில் என் ஜாதகமே மாறியது!

எப்படியோ பதிவின் தலைப்பிற்கான காரணத்தைச் சொல்லியாச்சு! சுனாமி வருவதற்குள் பின்னூட்டம் போட்டு புண்ணியம் தேடிக்கொள்ளவும்.

பின்குறிப்பு: ஒரேயொரு பின்னூட்டம்கூட வரவில்லை என்றால் 'துபாயை சுனாமி தாக்கும் என்று நான் கணித்தது பலித்து விட்டது' என்று மீண்டும் அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்து விடுவார். மூடநம்பிக்கையை ஒழிக்கும் முயற்சியாக போலிப்பின்னூட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்! :-)

Read more...

நான் ஓர் அப்பாவி! - நரகாசுரன் சிறப்புப் பேட்டி!!

Tuesday, November 06, 2007

ஆன்லைனில் இருந்தபோது மெசஞ்சர் பெட்டி துள்ளியது. narakasuran@hellmail.com என்ற முகவரியிலிருந்து ஒருவர் சாட்டிங் பண்ண விரும்புவதாகக் காட்டியது. உடனடியாக ACCEPT பண்ணினேன்.

நரகாசுரன்: ஹலோ!

அதிரைக்காரன்: ஹலோ! ASL ப்ளீஸ்!

நரகாசுரன் : 50000+/M/NL

அதிரைக்காரன்: அடேங்கொப்பா! அதென்ன லொக்கேசன் NL ?

நரகாசுரன்: NL = நரகலோகம்

அதிரைக்காரன்: ஓஹோ! மோசமான லொக்கேசன்னு படிச்சிருக்கேன். அங்கு எப்படிப் போனீர்கள்?

நரகாசுரன்: நான் எங்கே போனேன். வலுக்கட்டாயமாக தள்ளி விட்டார்கள்.

அதிரைக்காரன்: ஓஹோ! எப்படியென்று சற்று விளக்க முடியுமா?

நரகாசுரன்: நான் கொடுமைப்படுத்துவதாகச் சொல்லி சிலர் கிருஷ்ணாவிடம் முறையிட்டுள்ளார்கள். உண்மை என்னன்னு விசாரிக்காமல் கிருஷ்ணாவும் என்னுடன் சண்டையிட்டு சிறைபிடித்து இங்கே தள்ளிட்டார். உண்மையில் நான் அவ்வளவு மோசமானவன் இல்லீங்க!

அதிரைக்காரன்: ஓஹோ! எப்படிச் சொல்றீங்க?

நரகாசுரன்: நான் கொடுமைக்காரன்னு சொல்லிதானே என்னை நரகத்துக்கு அனுப்புனார். என்னை விட மோசமான கொடுமைக்காரங்க சொகுசா பூமில சுத்திக் கொண்டிருக்கிறார்களென்று கேள்விப்பட்டேன். அவிங்களுக்கு ஒரு நாயம். எனக்கு ஒரு நாயமா?

அதிரைக்காரன்: கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்களேன். எவிங்களைப் பத்திச் சொல்றீங்க?

நரகாசுரன்: நரேந்திர மோடி

அதிரைக்காரன்: ஓ...! குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியா?

நரகாசுரன்: ஆமாங்க! இவர் ஆட்சியில நடந்தக் கொடுமைகளை போனவாரம் இண்டெர்நெட்டுல படிச்சிட்டு கண் கலங்கிடுச்சு!

அதிரைக்காரன்:உங்களுக்கே கண் கலங்கிடுச்சா!மோடியோட ஒப்பிடும்போது நீங்க அப்பாவிதான் Mr.நரகாசுரன்.

நரகாசுரன்: பின்னே என்னாங்க! குஜராத்தில் முஸ்லிம்கள மட்டும் குடும்பம் குடும்பமாகக் கொல்லலே. ராம பக்தர்களையும் ரயில் பெட்டிக்குள் வச்சு எரிச்சுக் கொன்றிருக்கானுங்க இவரோட ஆளுங்க!

அதிரைக்காரன்: பாவிகள்! எதுக்கு இப்படிச் செய்தார்கள்?

நரகாசுரன்:எல்லாம் இந்துத்துவா வெறி! கர்ப்பினிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவையும் கொன்னு நெருப்பில் வீசி எரிந்துள்ளார்களென்றால் பார்த்துக் கொள்ளுங்க!

அதிரைக்காரன்: இந்துத்துவா என்றால் வாழ்க்கை நெறின்னு சுப்ரீம் கோர்ட் நீதிபதி சொன்னாரே.

நரகாசுரன்: ஒருகாலத்தில் இருந்தது. முனிவர்களும் துறவிகளும் இதைப் பின்பற்றி அமைதியான வாழ்க்கை வாழ்ந்து காட்டியுள்ளார்கள். அதுவேறு; இவர்கள் பின்பற்றுவது இந்துத்துவா அல்ல! ஜந்துத்துவா!!

அதிரைக்காரன்: சரிசரி டென்சனாகாதீங்க.எப்படியோ உங்க புண்ணியத்துல மக்களெல்லாம் சந்தோஷமா இருக்கார்கள். ஜவுளி, பட்டாசு, இனிப்புக் கடைக்காரர்களும் சந்தோசமா இருக்காங்க. அவங்களுக்கு எதாச்சும் சொல்லனுமா?

நரகாசுரன்: என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு பொதுமன்னிப்புக் கொடுத்து பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் உண்மையான நரகாசுரர்களை இங்கு அனுப்பச் சொல்லி மத்திய அரசாங்கத்திடம் மக்களைப் போராடச் சொல்லுங்க! முதல் கட்டமாக மோடியை ஆட்சியிலிருந்து தூக்கி வீசும் நாள்தான் உண்மையான தீபாவளி!

அதிரைக்காரன்: Mr.நரகாசுரன். உங்களுடன் சாட்டிங்கில் உரையாடியதை அப்படியே என் வலைப்பூவில் போட்டு விடுகிறேன். மக்கள் படித்து விட்டு பின்னூட்டம் போடுவார்கள். முடிஞ்சா நீங்களும் ஒரு பின்னூட்டம் போட்டு மக்களுக்கு இச்செய்தி போய்ச்சேர உதவுங்கள்!

Read more...

நல்ல ஐடியா!

பேரூந்துகளில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் Footboard தொங்கிக் கொண்டு பயணம் செய்வதைத் தடுக்க முடியவில்லை. "ஏய் பொறம்போக்கு மேலே வா" என்று அன்பாகச் சொன்னாலும் படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதிலிருக்கும் த்ரில் வேறெதிலும் இல்லை. தமிழக அரசும் என்னென்னவோ செய்து பார்த்து கடைசியில் சோதனை அடிப்படையில் படத்திலுள்ளவாறு பேரூந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது.



முன்னாள் மாணவன்: அப்படியே அந்தக் கைப்பிடியையும் எடுத்துவிடால் நல்லது:-)

Read more...

பத்து செகண்டில் முட்டை உரிக்கலாம்

Friday, November 02, 2007

காலையில் அவசரமாக அலுவலகத்திற்குச் செல்பவரா நீங்கள்? டிஃபன் கூட சாப்பிட நேரமில்லையா? இனி அந்தக் கவலையில்லை!வீடியோவைப் பாருங்கள்.




நன்றி

முட்டைபோடாமல் ஒரு பின்னூட்டம் போட்டுச் செல்லுங்கள் :-)

Read more...

லட்ச ரூபாயில் அம்பானியை ஆண்டியாக்கலாம்!

Thursday, November 01, 2007

சிலநாட்களாக மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 20,000 புள்ளிகளைத் தாண்டியதால் இந்திய பங்குகளின் மதிப்பு எகிறியது.இந்த சைக்கில்கேப்பில் நம்பர் ஒன் பில்லியனராக இருந்த பில்கேட்ஸையும் அதற்கடுத்தடுத்த பில்லியனர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அனில் அம்பானி உலகின் நம்பர் ஒன் பில்லியனராகி விட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. மகிழ்ச்சி!


அம்பானி உலகின் முதல்நிலை பில்லியனர் ஆனதாலோ அல்லது இந்தியப் பங்குகளின் மதிப்பு உயர்ந்ததாலோ இந்தியர்களாகிய நமக்குப் பெருமையே தவிர ஏதேனும் பலன்கள் உண்டா என்று தெரியவில்லை. ப.சிதம்பரம் அவர்களின் பட்ஜெட்டினால் ஏழைகள் பரம ஏழைகளாகவும் பணக்காரர்கள் மென்மேலும் பணக்காரர்கள் ஆகும் வாய்புண்டு என்று சொல்லப்பட்டது ஓரளவு உண்மைதான் போலும்?



தற்போதைய உலகின் நம்பர்ஒன் பில்லியனராக இருக்கும் அம்பானியை பின்னுக்குத் தள்ளிவிட்டு நாற்பத்தைந்தே நாட்களில் உலகின் நம்பர் ஒன் பில்லியனராக நீங்கள் இருக்க ஆசையா? அம்பானியுடன் கீழ்கண்டவாறு ஒப்பந்தம் மட்டும் செய்தால் போதும்,நாற்பத்தி மூன்றாவதுநாள் அம்பானி, உலகிலேயே நம்பர் ஒன் ஒட்டாண்டி ஆகிவிடுவார்!






1) ஒப்பந்தப்படி அம்பானியின் வங்கிக் கணக்கில் ஒரு இலட்சம் ரூபாயை டெபாசிட் செய்யவும்.



2) அதை அம்பானி உங்களிடம் 45 நாட்களில் கீழ்கண்டவாறு திருப்பித் தர வேண்டும்.



3) நாளொன்றுக்கு ஒரு ரூபாயின் மடங்குகளில் அடுத்த நாற்பத்தைந்து நாட்களுக்கு அம்பானியின் கணக்கிலிருந்து உங்கள் வங்கிக் கணக்கிற்கு ஆட்டோமாடிக் டிரான்ஸ்பர் ஆகும்படி STANDBY INSTRUCTION கொடுக்கச் சொல்லவும்.(முதல் நாள் ரூ1.00 ,இரண்டாம் நாள் ரூ.2.00, மூன்றாம் நாள் ரூ.4.00, நான்காம் நாள் ரூ8.00 .......என்ற வீதத்தில்)



4)அம்பானியின் தற்போதைய சொத்துமதிப்பு 64 பில்லியன் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,560,000,000,000.00 (ஒரு அமெரிக்க டாலரின் தோரய மாற்றுமதிப்பு [Exchange Rate] ரூபாய்.40.00)



6) நாற்பத்தி இரண்டாவதுநாள் அம்பானியின் வங்கி இருப்பைவிட உங்களின் வங்கி இருப்பு அதிகரித்திருக்கும்.



7) நாற்பத்தி மூன்றாவது நாள் அம்பானி அம்பேல் ஆகி இருப்பார்!



8) இன்னும் குறைந்த நாட்களில் அம்பேல் ஆக ஆசைப்பட்டால், திருப்பித்தர வேண்டிய ரூபாய் வீதத்தை தேவைக்கேற்ப அதிகரிக்கலாம்.



9) வாழ்த்துக்கள் உலகின் வருங்கால நம்பர் ஒன் (பிராடு) பில்லியனரே!



பின்குறிப்பு: இந்த கணக்கை Ms-Excel லில் செய்து பார்த்தேன். கணக்குப்படி அம்பானி அம்பேல் 43 ஆம் நாளில் ஆகிறார். நீங்களும் செய்து பார்த்து பின்னூட்டமிட்டு பல பில்லியனர்களை உருவாக்க உதவலாமே!

Read more...

செக்ஸ் கல்வியாம் - அடி செருப்பால!

Saturday, October 27, 2007

நோட்டு,புத்தகம், பேனா,பென்சில்ஜியோமெட்ரிக் பாக்ஸ் இவற்றோடு இனி நம் வருங்கால வல்லரசு இந்தியாவின் பள்ளி மாணவ-மாணவிகள் மேலும் சில 'உபகரகணங்களை'யும் ?!எடுத்துச் செல்ல வேண்டி வரலாம்.

இந்தியா ஏற்கனவே எயிட்சில் வல்லரசாகி விட்டதால், செக்ஸ் கல்வியைப் பள்ளிப்பருவத்திலிருந்தே போதிக்க வேண்டும் என்று மத்திய அரசும் மனித வள மேம்பாட்டுத் (???) துறையும் செக்ஸ் கல்வியை பள்ளிப்பருவத்திலேயே நடைமுறைப்படுத்தப் போகிறார்களாம்!

எயிட்ஸ் விழிப்புணர்வுக்காகவே செக்ஸ் கல்வி என்றால் அதை ஏன் தனிப் பாடமாகச் பயிறுவிக்க வேண்டும்? திருக்குறளில் சொல்லப்பட்டுள்ள கற்பொழுக்கமே போதும் வாத்தியாரே!

புகைப்பழக்கம் உடலுக்குக் கேடு! மது நாட்டிற்கு, வீட்டிற்கு உடலுக்குக் கேடு என்றெல்லாம் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்து வந்தபோதிலும் சிகரெட் புகைப்பவர்களும் குடிகாரர்களும் குறையவில்லை. விழிப்புணர்வு என்ற பெயரில் ஆண்-பெண் அந்தரங்க உறவுகளை பள்ளியில் போதிப்பது எந்தவகையான விழிப்புணர்வை ஏற்படுத்துமோ தெரியாது!

சபலபுத்தி வாத்தியார்களிடமிருந்து மாணவிகளைக் காப்பதற்கே இன்னும் முறையான பாதுகாப்புகள் இல்லை; இந்த லட்சனத்தில் பள்ளிகளில் அதுவும் +1, +2 மாணவ-மணவிகளுக்கு செக்ஸ் கல்வியாம்! உருப்பட்ட மாதிரிதான்!

'கண்டங்கள்' பெயரை உச்சரித்த மாணவர்களை இனி 'காண்டங்கள்' பெயரை உச்சரிக்க வைத்து விடாதீர்கள்!
********
இனி தினமலரில் கீழ்கண்டவாறு தலைப்புச் செய்திகள் வந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை:
1) பள்ளியரையில் கசமுசா!
2) செக்ஸ் கல்வியில் இந்தமுறையும் மாணவர்கள் முதலிடம்!
3) "நமீதா மாதிரி ஆவேன்!" செக்ஸ் கல்வியில் நாஇலத்திலேயே முதலிடம் பெற்ற மாணவி பேட்டி.
*********
பின்குறிப்பு: செக்ஸியானப் பின்னூட்டத்திற்கு ஒரு பாக்கெட் xxXxx இலவசம்!

Read more...

நாடு NRI க்களுக்கு என்ன செய்தது?

Wednesday, October 24, 2007

நம்நாட்டு அன்னியச் செலாவணி இருப்பை கணிசமான அளவில் உயர்த்தியதில் NRI க்களின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கிறது. எந்த ஒரு நாட்டிற்கும் சர்வதேச வர்த்தகத்தில் அன்னியச் செலாவணிக் கையிருப்பு முக்கியப் பங்காற்றுகிறது. போக்ரான் அணுகுண்டு சோதனையால் கடுப்படைந்த அமெரிக்கா நம்நாட்டின் மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்த போதும் நமது பொருளாதாரம் சீர்குழையாமல் காத்ததும் NRI க்களே!

அரசியல்வாதிகளின் நாற்காலிச் சண்டைகள், கட்சித்தாவல்,ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல் கடமையே கண்ணென பணியாற்றி குருவி சேர்ப்பது போல் சிறுகச்சிறுக பணம் சேர்த்தாலும், NRI க்களின் சேமிப்புக்களுக்கு இருந்த மவுசு வங்கிகளிடம் வெகுவாகக் குறைந்து விட்டது. மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் NRI க்கள் வங்கிகள் மூலம் அனுப்பும் பணத்தை வங்கிக்கணக்கிலிருந்து எடுப்பதற்கும் வரி விதித்து மக்களின் கடும் அதிருப்திக்கு ஆளானார்.

நாட்டின் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கும் NRI க்களில் ஓரிருவரை ஆண்டுக்கு ஒருமுறை டெல்லியில் விழா நடத்தி ஜனாதிபதி கையால் விருது வழங்குவதோடு சரி. கோடிக்கணக்கான NRI க்களின் அவலங்களைக் கண்டு கொள்வதே இல்லை.

வெளிநாட்டு இந்திய தூதரகங்களில் இந்தியர்களுக்குக் கிடைக்கும் மரியாதையே தனி. துபாய் போன்ற பெருநகரங்களில் தூதரகச் சேவைகளுக்காக வெயிலில் காத்திருப்பவர்களைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கும்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, நம்நாட்டுப் பணமதிப்பு உயரும்போதும் நிச்சயமாக NRI க்கள் சந்தோசப்படமாட்டார்கள். பணமதிப்பு உயர்ந்தாலும் விலைவாசியும் சேர்ந்து உயர்வதால் அனுப்பும் பணத்தின் மதிப்பு NRI க்களைப் பொருத்த மட்டில் யாருக்கோ செல்கிறது. இந்தியப் பணம் ஆயிரம் ரூபாய் அனுப்ப வேண்டுமென்றால் 90 UAE திர்ஹம் கொடுத்தால் போதும்! ஆனால் தற்போது 95 திர்ஹம் வரை கொடுக்க வேண்டும்.
ஆயிரத்திற்கு ஐந்து திர்ஹம் என்றால் இருபதாயிரம் அனுப்பும் ஒருவர் மாதத்திற்கு நூறு திர்ஹம் (சுமார் ஆயிரத்து 1200 ரூபாய்) இழப்பு!

மட்டுமின்றி, UAE ஐப் பொருத்தவரை ரூம் வாடகை, பேச்சிலருக்கான கெடுபிடிகள் ஆகியக் காரணங்களால் ஏற்கனவே சாமான்ய NRI க்கள் மனஉளைச்சலில் நொந்து போயுள்ளார்கள். இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளுக்கு ஏற்றுமதிக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 25% விலை உயர்வு எதிர்பார்க்கப் படுகிறது.

வெளிநாட்டில்தான் கஷ்டப்படுகிறோம். ஓராண்டுக்கு அல்லது ஈராண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் விடுமுறையில் ஊர் சென்று வரலாம் என்று கிளம்பினால் ஏர்போர்ட்டிலிருந்து சுங்கத் துறையினரின் கெடுபிடி, உபரி லக்கேஜ் கட்டணம் முதல் டாக்சி டிரைவர்கள் வரை எல்லோரையும் சமாளித்து ஊர்வந்து சேர்ந்தால் குடும்பப் பிரச்சினைகளும் இருந்தால் அவற்றையும் சமாளித்து விடுமுறை முடித்து மீண்டும் பணிக்குத் திரும்புவதை நினைக்கும் போது NRI களின் நிலை ராணுவ வீரர்களின் நிலையை விடக் கொடுமையானது!

இப்படியாக உள்நாட்டு பணமதிப்பு உயர்வு, விலைவாசி உயர்வு, ஏர்போர்ட் கெடுபிடிகள் எனப் பல்வேறு சுமைகளோடு, குடும்பச் சுமையையும் சுமந்து கொண்டிருக்கும் பெரும்பாலான வெளிநாட்டு இந்தியர்களை நினைவுகூற சர்வதேச NRI க்கள் தினம் ஒன்றை அறிவித்து அவர்களுடன் குடும்பத்தினர் ஒருநாள் மட்டும் இலவசமாக தொலைதொடர்பு கொள்ள இந்தியப் பேரரசு உதவலாமே!

நாட்டிற்கு NRI க்கள் செய்ததைச் சொல்லிவிட்டேன்! இப்பொழுது சொல்லுங்கள் நாடு NRI களுக்கு என்ன செய்ததென்று?

Read more...

பாபி ஜிண்டால் ஜெயித்தால் நமக்கென்ன?

Monday, October 22, 2007

அமெரிக்காவின் லூசியானா மாகாண ஆளுனராக இந்திய வம்சாவழியைச் சார்ந்த பாபி ஜிண்டால் வெற்றி பெற்றிருக்கிறார். அமெரிக்காவில் பிறந்த ஒருவரை அமெரிக்கர்கள் மாகாண ஆளுநராகத் தேர்ந்தெடுத்துள்ளதை பலரும் பெருமிதப்பட்டு எழுதியுள்ளார்கள். தேசத்துரோகிகள்!!!

கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் என இந்தியாவிலிருந்து அமெரிக்க டாலருக்குச் சேவை செய்யச் சென்ற இந்தியர்களைப் பற்றியும் பெரிதாக விளம்பரம் செய்து தேசபக்தியை அவமதிக்கிறார்கள்!கல்பனா சாவ்லா அமெரிக்க விண்கலத்தில் வெடித்துச் சிதறிய விபத்தில் இறந்தார். சகமனுஷி என்பதற்காக இரங்கல் தெரிவிக்கலாம். அவர் பெயரால் விருது வழங்கும் அளவுக்கு அமெரிக்க மோகம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் விட்டு வைக்கவில்லை!

அமெரிக்க பல்கலைக் கழகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சார்ந்த பேராசிரியர் லோகநாதனின் இறுதிச்சடங்கில் அவரின் குடும்பத்தினர் கலந்து கொள்ளச் செல்வதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி சிறப்பு கவனம் எடுத்ததை சிலமாதங்களுக்குமுன் செய்திகளில் திரும்பத் திரும்பக் காட்டினார்கள்.

சமீபத்தில் சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவுக்கு வந்தபோது எல்லா பத்திரிக்கைகளும் ஏதோ விண்ணுல தேவதையே வந்திறங்கியதைபோல செய்தி வெளியிட்டனர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஒருபடி மேலே போய் சுனிதா வில்லியம்ஸ் இந்தியப் பெண்களின் முன்மாதிரி என்றார்.

சுனிதா வில்லியம்ஸ் அல்லது கல்பனா சாவ்லா போன்றவர்களால் இந்தியாவுக்கோ அல்லது இந்தியர்களுக்கோ எந்த நன்மையும் கிடையாது! சொல்லப்போனால் தீங்குதான்! இவர்களைப் போல் அமெரிக்கச் சேவகம் செய்தால்,பிரபலம் அடையலாம் என்ற எண்ணம்தான் வளரும்.

2020 இல் அமெரிக்காவுக்கு ஆப்படிக்க இருக்கும் இந்தியாவின் வல்லரசுக் கனவை இத்தகைய அமெரிக்க மோகம் தடுக்கும் என்பதை இந்தியாவை நேசிப்பவர்கள் உணர வேண்டும்.

என்னைப் பொருத்தவரை இந்தியாவில் படித்து, குறைந்த சம்பளமாக இருந்தாலும் இந்தியாவுக்காகவே உழைக்கும் உள்நாட்டு ஊழியர்கள்தான் பெருமிதப்படத்தகுதியானவர்கள். இதை அமெரிக்காவில் இந்தியன் ஒருவன் கக்கூஸ் கழுவினாலும் பெருமையாகத் தம்பமடிக்கும் தினமலர் போன்ற அமெரிக்க அடிவருடி பத்திரிக்கைகள் உணர வேண்டும்.

என்னதான் அமெரிக்காவுக்கு லாவனி பாடினாலும், தினமலரை டாய்லெட் டிஸ்யூவாகக் கூட வைத்துக் கொள்ளப்போவதில்லை என்பதை தினமலர் உணர்ந்து அடக்கிவாசிக்க வேண்டும்.

Read more...

ஜெயலலிதா செல்வியா அம்மாவா?

Wednesday, October 17, 2007

தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டுத்தொடரின் ஓரிரு நாட்களுக்கு முன்,ஜெயலலிதாவின் வீட்டிற்குள் அத்துமீறி ஒருவர் நுழைந்ததைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் செல்வி.ஜெயலலிதா அம்மையார் (அதுஎப்படி ஒருவரே செல்வியாகவும் அம்மையாராகவும் இருக்க முடியும்?) சந்திரபாபு நாயுடுவுக்கு சுமார் 65 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு வழங்கப் படுவதுபோல் தனக்கும் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகப் போகிறாராம்!

ஒரு முன்னாள் முதல்வரின் வீட்டில் அத்துமீறி ஒருவன் நுழையும் அளவுக்கு பாதுகாப்பில் மெத்தனமாக இருக்கக்கூடாது.ஒரு கன்னிப்பெண் (செல்வி) தனியாக இருக்கும்போது படுக்கையறை வரைக்கும் வந்தது தவறு! ஓ.பன்னீர் செல்வம் அவர்களும் முன்னாள் முதல்வர்தான்! தனக்குப் பாதுகாப்பில்லை என்று ஒருபோதும் சொல்லியதில்லை. (இதைத்தான் சிண்டுமுடிதல் என்பார்கள்)

இன்னொருபக்கம், அத்துமீறி நுழைந்தவன் ஏன் லஷ்கர் ஐ தொய்பா அல்லது அல்காயிதா தீவிரவாதியாக இருக்கக்கூடாது என்ற சந்தேகம் தப்பித் தவறி எந்த பத்திரிக்கைக்கும் வரவில்லை? சுடச்சுட செய்திகளை முந்தித்தரும் தினமலர்கூட இவ்விசயத்தில் கோட்டை விட்டது நியாயமா? என்ற கேள்விகள் எழுகின்றது :-)

டெய்ல்பீஸ்: ஜெயலலிதாவின் மகள் ஊட்டி கான்வெண்டில் படித்துக் கொண்டிந்ததாக பழைய புலணாய்வுப் பத்திரிக்கைகளில் முன்பு வாசித்த நினைவு.இன்னும் அதே கான்வெண்டில்தான் படிக்கிறாரா? என்று யாராச்சும் புலணாய்வு செய்து எழுதினால் நன்றாயிருக்கும்.

Read more...

710 ஐப் பற்றித் தெரியுமா?

Monday, October 15, 2007

காரோட்டும் பெண்களெல்லாம் முட்டாள்(ச்சி?)களாக இருப்பார்கள் என்று நினைக்கக் கூடாது. நேற்று ஒரு FORD காரின் உதிரிப்பாகங்கள் விற்கும் கடையில் நின்று கொண்டிருந்தபோது, அவசரமாக வந்த ஒரு பெண்மணி, 710 வேண்டும் என்றார்.

கடைக்காரருக்கு ஒன்றுமே புரியவில்லை? "710 என்றால் என்ன?" என்றார்.

பெண்மணி: "எஞ்சினின் நடுவில் இருக்கும். என்னுடைய காரின் "710 " தொலைந்து விட்டது; அதனால் புதிதாக ஒன்று வேண்டும்" என்றார்.

கடைக்காரர் மீண்டும் குழப்பத்துடன் ஒரு பேப்பரையும் பேனாவையும் அப்பெண்மணியிடம் நீட்டி "நீங்கள் கேட்கும் 710 எப்படி இருக்கும்?" என்று வரைந்து காட்டச் சொன்னார். அப்பெண்மணியும் ஒரு வட்டம் போட்டு, நடுவில் 710 என்று வரைந்து காட்டினார்.

ம்ஹூம்! கடைக்காரர் தலையைச் சொரிந்தவாறே, அம்மனி, நீங்கள் வரைந்துள்ள பாகம் என்னவென்று விளங்கவில்லை. என்னுடன் வாருங்கள். நான் காட்டும் காரில் அதைக் காட்டுங்கள் என்று ஒர்க்-ஷாப்பிற்கு அழைத்துச் சென்று அங்கு நின்ற இன்னொரு காரின் பானெட்டைத் திறந்து, 710 ஐக் காட்டச் சொன்னார்.

அட! அந்தக் காரிலும் 710 இருந்தது. முகம் மலர்ந்த அப்பெண்மணி 710 ஐத் தொட்டுக் காட்டினார். அப்பாடா! ஒருவழியாகக் கடைக்காரர் பெருமூச்சு விட்டார்!

கார் வைத்திருப்பவர்கள் கட்டாயம் 710 ஐ அறிந்து கொள்ள வேண்டும். 710 ஐப் பற்றி தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடலாம். யாரும் சரியான பின்னூட்டம் போடாத பட்சத்தில் பெண்மணி வரைந்து காட்டிய அசல் 710 இன் படத்திற்கான சுட்டி கொடுக்கப்படும்.

முதல் பத்து பின்னூட்டத்திற்குள் (சரியான விடையெழுதுவருக்கு ஒரு ஒரிஜினல் 710 அவரின் (சொந்தச் செலவில்) கொரியரில் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.

ஹும்!எப்படியெல்லாம் பின்னூட்டம் எழுதத் தூண்ட வேண்டியுள்ளது! நேரம்டா!

Read more...

கட்டையில போறவன்!

Monday, October 08, 2007

படத்திலுள்ள மனிதன் உண்மையிலேயே கட்டையில்தன் போகிறார்.ஆம்! படத்திலுள்ள கார் மரத்தினால் வடிவமைக்கப் பட்டதாம். ஓட்டுனர் ஒரு தச்சர் என்பதாக மடலனுப்பியவ்ர் சொல்கிறார்.






இனி யாராவது "கட்டையில போக" என்று திட்டினால் கோபப்படக்கூடாது!

Read more...

டென்மார்க் ஒரு இந்திய மாநிலம் ? - வேதாந்தியின் புதிய பத்வா

Friday, October 05, 2007

"நான் பாத்வா விதித்ததற்கு என்மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள். நான் பாத்வா விதித்தது போல் முன்னாள் மாநில அமைச்சர் ஹாஜி யாகூப் முஸ்லீம் மதத்தை பற்றி தவறாக சித்தரித்த தனிஷ் (டென்மார்க்) கார்டூனிஸ்ட் மீது பாத்வா விதித்திருந்தார்.ஆனால் அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் என் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - ராம் விலாஸ் வேதாந்தி. (முழு உளரல்)

தமிழக முதல்வர் கருணாநிதியின் நாக்கையும் தலையையும் வெட்டி கொண்டு வந்தால் எடைக்கு எடை தங்கம் பரிசு என்று கொலைவெறி கருத்தைச் சுதந்திரமாகச் சொன்ன ராம் விலாஸ் வேதாந்திதான் இவ்வாறு புலம்பியுள்ளார்.

வரவர சங் பரிவாரங்களின் உளரல்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது! நேற்றுதான் ராஜ் நாத்(த) சிங் உளரியதைப் பற்றி பதிவிட்டிருந்தேன். அதற்குள் நம் நநக்கு,தலெ ஸ்பெஷலிஸ்ட் ராம்விலாஸ் வேதாந்தி இவ்வாறு சொல்லியுள்ளார்.

இந்தியச் சட்டத்திற்கு எதிராகப் பேசினால், குற்றவியல் தண்டனை சட்டப்படி இந்தியாவில் எவரும் வழக்குப் போடலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கவும் செய்யலாம். அதேபோல் டென்மார்க் கார்ட்டூனிஸ்டுக்கு எதிராக பத்வா கொடுத்த முன்னாள் மாநில அமைச்சர் ஹாஜி யாகூப் மீது டென்மார்க்கில் வேண்டுமானால் நடவடிக்கை எடுக்கலாம்.

டென்மார்க் சார்பாக (அல்லது டென்மார்க் அரசு/ இண்டர்போல் கேட்டுக் கொள்ளத வரையில்) இந்தியாவில் அவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியாது என்பது வேதாந்திகளுக்குத் தெரியாதா? அல்லது "அகன்ற பாரதம்" திட்டத்தை டென்மார்க் வரைக்கும் நீட்டியுள்ளார்களா?

ஒன்னுமே புரியவில்லைடா சாமியோவ்!

Read more...

வாஜ்'பாய்' பெயரையும் மாற்ற வேண்டும்

Thursday, October 04, 2007

அடல் பிகாரி வாஜ்பாய் முஸ்லிம்கள் மீது கொண்டுள்ள அன்பினால்தான் வாஜ்'பாய்' என்று பெயர் வைத்துள்ளார் என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ, அதேபோல்தான் உள்ளது பா.ஜ.கவின் ராஜ்நாத்(த) சிங், சோனியா காந்தி தனது பெயருடன் 'காந்தி' என்று சேர்க்கக்கூடாது என்பதும்!

மகாத்மா காந்தி ராமரையும் ராமர் பாலத்தையும்? நேசித்தாராம்; அதுபோல் சோனியா காந்தியும் நேசிக்க வேண்டுமாம்! அப்போதுதான் காந்தியை மதிப்பதாக ஆகுமாம்! இல்லாவிட்டால் சோனியாவுடன் 'காந்தி' என்று சேர்க்கக் கூடாதாம்!

சோனியாவின் கணவர் பெயர் ராஜீவ் காந்தி என்பதால்தான் தன் குடும்பப் பெயரையும் சேர்த்து சோனியா காந்தி என்று வைத்துள்ளார். சோனியாவின் கணவர் பெயர் கந்தசாமி என்று இருந்திருந்தால் சோனியா கந்தசாமி என்றே வைத்திருப்பார் என்பதை ராஜ் நாத் சிங்கிற்கு யாராச்சும் எடுத்து சொன்னால் நல்லது

Read more...

மாண்புமிகு நீதிபதிகளுக்குச் சில கேள்விகள்

Tuesday, October 02, 2007

சேது சமுத்திரத் திட்டத்தை துரிதப்படுத்த் வலியுறுத்தி தி.மு.க கூட்டனிக் கட்சிகள் நடத்திய (அக்-1,2007) உண்ணாவிரதப் போராட்டத்தை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளதோடு, நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி கலைஞர் கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு தயங்கக்கூடாது என்றும் தங்கள் வானளாவிய அதிகாரத்தைக் காட்டியுள்ளனர்.இதனால் பாதியிலேயே உண்ணவிரதம் முடிக்கப்பட்டதாகச் செய்திகளில் அறிந்தோம்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள், "தனி அரசியல் கட்சிகளின் நியாயத்தை விட நாட்டு மக்களின் நலனே முக்கியம்" என்று சொல்லி கடையடைப்புப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தியது! இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளில், எதிர்ப்பைத் தெரிவிக்க காந்திய வழியிலான உண்ணாவிரதப் போராட்டத்தை அங்கீகரித்துள்ளது.

இத்தகைய போராட்டங்கள் ஆட்சியாளர்களுக்கு மக்களின் எதிர்ப்பை உணர்த்தும் என்பதை ஆங்கிலேய அரசுக்கு எதிரான காந்திய உண்ணாவிரதப் போராட்டங்கள் மூலம் அறிந்தோம்."தனி அரசியல் கட்சிகளின் நியாயத்தைவிட நாட்டு மக்களின் நலனையே மதிப்பதாகச் சொல்லும்" மாண்புமிகு நீதிபதிகளுக்குச் சில கேள்விகள்:

1) பாபர் மஸ்ஜித் வழக்கையும் அதனைத் தொடர்ந்த இடிப்பு வழக்கையும் பல வருடங்களாக இழுத்தடிப்பதும்,

2) கிருஷ்ணா கமிசன் அறிக்கையை முடக்கி வைத்து மென்மேலும் முஸ்லிம்களுக்கு அநீதி இழைப்பதும்,

3) ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த குஜராத் நரேந்திர மோடிய டிஸ்மிஸ் செய்ய பரிந்துரைக்காமலும், அடுத்தடுத்த முறையும் தேர்தலில் மதவெறியைத் தூண்டி மென்மேலும் வெறியூட்டி ஆட்சி செய்ய அனுமதிப்பதும்,

4) பால்தாக்கரே, ப்ரவீன் தொக்காடியா, ராமகோபாலன் போன்றவர்கள் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது விஷம் கக்கி பேச அனுமதிப்பதும்,

5) ஜெயலலிதாவின் மீதான பல்வேறு வழக்குகளையும் சாவகாசமாக விடுதலையாகும் வகையில் இழுத்தடிக்க அனுமதிப்பதும்,

6) சங்காராச்சாரியார் மீதான கொலை வழக்கை விசாரிக்க மறுப்பதும், கிட்டத்தட்ட விடுதலையாக வழிசெய்வதும்,

7) காவிரி,முல்லை பெரியாறு, பாலாறு என பல பிரச்சினைகளில் மாநில அரசுகள் தமிழகத்தைத் தொடந்து வஞ்சிக்க அனுமதிப்பதும்,

8) உருப்படாத விசயங்களுக்காகப் பலமுறை பா.ஜ.கவினரால் பாராளு மன்றம் முடக்கப்பட்டதும் etc..etc..ஆகியவையெல்லாம் பொதுமக்களின் நலனுக்கு எதிரானதாகத் தெரியவில்லையா?

அவற்றையெல்லாம் கண்டிக்கவோ அல்லது நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காத அரசுகளை கலைக்கவோ பரிந்துரைக்காத உச்சநீதிமன்றம், இந்திய நலனிற்காக தமிழகத்தின் சார்பில் வைக்கப்படும் கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லி உண்ணாவிரதம் இருப்பதைத் தடுப்பதோடு ஆட்சி கலைக்கப்படும் என்றும் மிரட்டுவது நியாயமா?

சேது சமுத்திர திட்டத்திற்கு இடையூறாக அறிக்கை விட்டும், ஊர்வலம் நடத்தியும் தமிழகத்தின் அமைதிக்கு அச்சுருத்தல் ஏற்படுத்தும் சங் பரிவாரங்களையும் பொதுமக்களின் நலனே முக்கியம் என்று கண்டிக்க முன்வருமா?

இடஒதுக்கீட்டிற்கு இடையூறாக இருக்கும் ஓரிரு நீதிபதிகள், நூறுகோடி இந்தியப் பிரஜைகளின் நலனுக்கு எதிராக தடுப்பாணை வழங்கி வாழ்வியல் உரிமையை தடுப்பதையும் மான்புமிகு நீதிபதிகள் கண்டிக்கலாமே?தமிழன் என்றாலே எல்லோருக்கும் இளிச்சவாய்ர்கள்தான் போலும்!

Read more...

திருவள்ளுவர் - ஆண்டாள் அழகர் காலேஜில் படிக்கவில்லை!

Saturday, September 22, 2007

ஆங்கிலேயர்களால் ஆதாம் பாலம் எனறு அறியப்பட்ட மணற்திட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு இன்று ராமர் பாலமாம்! பிற்காலத்தில் அனுமன் பாலம் என்று சொல்லப் பட்ட மணல் திட்டுகளை, தற்போது ராமர் பாலம் என்று சொல்வதன் நோக்கம், அனுமன் பெயரைச் சொல்லி அரசியல் நடத்துவதை விட ராமன் பெயரைச் சொல்லி மீண்டும் ரத்தஆறு ஓடவைக்கலாம் என்ற சூழ்ச்சி என்றே தமிழர்களாகிய நாங்கள் நினைக்கிறோம்.

இராமாயணமே கற்பனைக் கதை என்பதால் அதன் கதாநாயகன் ராமனும் கற்பனையே என்றும்; பாலம் கட்டுவதற்கு ராமர் எந்தக் கல்லூரியில் படித்தார் என்று தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வுடன் முதல்வர் கருணாநிதி கேட்டதற்கு, முடிந்தால் ராமரை வைத்து அரசியல் பண்ணும் மதவெறியர்கள் அறிவுப்பூர்வமாகப் பதில் சொல்லட்டும். அத்வானியோ அல்லது சோ ராமசாமியோ கலைஞருடன் நேருக்கு நேர் விவாதிக்கலாம்.

பா.ஜ.கவுடன் ஜெயலலிதா அமைக்கவுள்ள கூட்டனியில் விஜயகாந்துக்கும் சேர்ந்து கொள்ள ஆசை இருந்தால் அதைப்பற்றிச் சொல்வதற்கில்லை. ஆனால், கலைஞரை எதிர்க்கும் கூட்டனி பஜனையில் தானும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சம்பந்தமே இல்லாமல் விஜயகாந்த் 'நாயுடு' திருவள்ளுவரையும் கண்ணகியையும் கிண்டலடித்துள்ளார்.

இராமாயணம் காலம் தொட்டு தமிழர்கள் என்றாலே இளக்காரம்தான் போலும்! ஒருவேளை இராமாயணம் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு எழுதப்பட்டிருந்தால் ராவணனன் பாகிஸ்தானி என்றோ லஷ்கரே தோய்பா இயக்கத்தைச் சார்ந்தவன் என்றோ சித்தரிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அமெரிக்கா உதவியுடன் அல்காயிதாவைச் சார்ந்தவன் என்றும் கூடச் சொல்லப்பட்டிருக்கலாம்!

ராமர் பாலம் இருப்பது உண்மையே என்று நம்பினால் விஜயகாந்து தனது அடுத்த படத்தில் வில்லன்களை ராமர் பாலத்தில் விரட்டி விரட்டி அடிப்பது போல் சண்டைக்காட்சி எடுக்கட்டும். தமிழர்களின் ஓட்டுக்களை நம்பி அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால் தமிழர்களை இழிவு படுத்துவது ஆண்டாள்-அழகர் மைந்தனுக்கு அழகல்ல!

ராமர் எந்தக்கல்லூரியில் படித்து இஞ்சினியர் ஆனார்? என்று முதல்வர் கருணாநிதி கேட்டதற்கு விஜயகாந்துக்கு ஏன் கோபம் வரவேண்டும்? வேண்டுமானால் ராமர் இஞ்சினியர் பட்டம் பெற்றது ஆண்டாள்-அழகர் கல்லூரியில் என்று சொல்லி விட்டுப் போகட்டுமே!

(டொனேசன் எவ்வளவு கொடுத்தார் என்ற உபகேள்வி எழுந்தால் நான் பொறுப்பல்ல!:)

Read more...

கலைகள் வளர்த்த விரல்மாமணி சிலம்பரசன்

Sunday, September 02, 2007

நடிகர் விஜய்க்கும் இயக்குனர் ஷங்கருக்கும் டாக்டர் பட்டம் வழங்கிய சூடு அடங்கும் முன்னர் நேற்று கலைமாMoney பட்டங்களை தமிழ் சினிமா நடிகர்/நடிகைகளுக்கு வழங்கியுள்ளார் நமது 'கலைஞர் மாமணி'. சினிமாத் துறையின் மூலமே கலைகள் வளர்க்கின்றன என்ற ஆரிய மாயையில் இருந்து இன்னும் கலைஞர் அவர்கள் விடுபடவில்லை போலும்!

இந்த ஆண்டின் கலைமாMoneyகளில் விரல் மன்னன் 'சிம்பு' வளர்த்த ஆயகலைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

மொபைல் காவியம்:
நயந்தாரா என்ற சேரநாட்டு இளவரசியை விரட்டி விரட்டிக் காதலித்து, பின்னர் இளவரசி நயந்தாரா தெலுங்கு தேசத்திற்குச் சென்று சிற்றரசன் நாகார்ஜுனருடன் கலைச்சேவை செய்தார்.

இதனால் விரல்மன்னனுடன் ஊடல் எழுந்தது. இதன் உச்சக்கட்டமாக விரல்மன்னன் சிம்பு தனது கைப்பேசியில் பதிவு செய்திருந்த சேரநாட்டு இளவரசி நயந்தாராவுடன் நடத்திய அந்தப்புற கலைச்சேவையை மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதழ்கடி வித்தை:
இதே சேரநாட்டு இளவரசியின் இதழ்களைக் கடித்தபடி சென்னை சென்ரல் இரயில் ஸ்டேசனில் கட்-அவுட்டாக நின்று இந்தியா முழுவதும் தமிழகப் பண்பாட்டைப் பரப்பினார்.

கெட்டதமிழ்:
தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று அறிவித்தாலும் அறிவித்தார்கள் விரல் மன்னன் சிம்புவின் லேட்டஸ்ட் படத்திற்கு அழகான தமிழில் 'கெட்டவன்' என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.

இப்படியாக பல்வேறு வழிகளில் தமிழ், பண்பாடு, கலைகளை வளர்த்துவரும் விரல்மன்னன் சிம்புவுக்கு கலைமாMoney பட்டம் கொடுத்தது சரியா? உண்மையான கலைச்சேவை செய்த தகுதியுள்ள கலைமாமணிகளை அவமதிப்பதாகவே இருக்கிறது இந்த ஆண்டின் கலைமாMoney களின் தேர்வு!

எது எப்படியோ இம்மாதம் ஒளிபரப்பாகவிருக்கும் கலைஞர் டிவிக்கு சில மணி நேரங்களுக்கு ஒரு புரோகிராம் கிடைத்து விட்டது ;-)

Read more...

ஜார்ஜ் புஷ் கொடுத்த பத்வா!!!

Tuesday, August 14, 2007

தஸ்லீமா நஸ்ரின் என்ற பங்களாதேஷி பெண்மணியின் (ஒரு பெண் தனது கருப்பையில் யாருடைய கருவைச் சுமப்பது என்ற சுதந்திரம் உள்ளிட்ட) பல்வேறு சுதந்திரங்களுக்கு எதிராகச் சில முல்லாக்கள் பயங்கர பத்வா (Fatwa) கொடுத்துதைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றைப் படிக்கும் போது எனக்கு எழுந்த சந்தேகங்களை யாராச்சும் தெளிவு படுத்தவும்.

1) 'தஸ்லீமாவைக் கொன்றால் கணக்கற்ற பணம் வழங்கப்படும்' என்று ஹிந்துஸ்டான் டைம்ஸ் செய்தி சொல்கிறது. அப்படி வழங்கப்படும் பணத்தை ரொக்கமாகக் கொடுப்பார்களா? அல்லது காசோலையாகக் கொடுப்பார்களா? மிகமிக முக்கியமாக, அதற்கு வரிவிலக்கு உண்டா?

2) பின்லாடனை உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடித்துக் கொடுத்தால் ஜார்ஜ் புஷ் அரசினால் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என்று ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு பத்வா கொடுத்தார். அதற்கும் தற்போது தஸ்லீமாவுக்கு எதிராகச் சொல்லப்பட்ட பத்வாவிற்கும் என்ன வித்தியாசம்? ஜார்ஜ் புஷ்ஷின் பத்வாவைக் பெரிது படுத்தாத ஊடகங்கள், தஸ்லீமாவுக்கு எதிரான பத்வாவை மட்டும் ஊதிப் பெரிதாகுவது ஏன்?

3) எத்தனையோ இலக்கியங்களிலும் புராணங்களிலும் முனிவர்கள் பத்வா கொடுத்திருப்பதைப் படித்திருக்கிறோம்.சாதாரன விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு மனிதர்களை தவளை, பாம்பு, பல்லியாகவெல்லாம் உருமாற்றி பத்வா கொடுத்துள்ளார்கள். முனிவர்களின் பத்வாவுக்கு எதிராக யாருக் குரல் கொடுத்ததாகத் தெரியவில்லையே, ஏன்?

4) இந்தியப் பெண்களில் பலர், திருமணத்திற்கு முன்பு தவறான முறையில் உடலுறவு கொண்டவர்கள் என்று தன் அனுபவத்தைச் சொன்ன குஷ்புவுக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தினார்கள்.அதேபோன்றக் கருத்தைச் சொன்ன தஸ்லீமாவுக்கு எதிராக எந்த மகளிர் அமைப்பும் போராடவில்லை. ஏன்?

5) மதநம்பிக்கைகளைப் புண்படுத்துவது தண்டனைக்குறிய குற்றம் என்று நமது நாட்டுச் சட்டங்கள் சொல்கின்றன. இஸ்லாமிய நம்பிக்கைகளைப் புண்படுத்தும் விதமாக புத்தகம் எழுதியதை மேடைபோட்டு விளம்பரப் படுத்தி விழா எடுப்பதை சட்டம் அனுமதிக்கிறதா?

Read more...

சுதந்திரதின உளரல்கள்

  • இன்று 14-08-2007 பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது! நியாயமாகப் பார்க்கப் போனால் பாகிஸ்தானியர்களைவிட இந்தியர்கள்தான் கொண்டாட வேண்டும்!! இல்லாவிட்டால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அனைவரும் நம்நாட்டிலேயே தங்கி இருப்பார்கள்!

  • சர்க்கரை வியாதியஸ்தர்கள் அதிகமாக இருப்பதால் இனிமேல் தேசியக் கொடி ஏற்றும்போது, சாக்லெட் கொடுப்பதற்குப் பதிலாக முறுக்கு, சிப்ஸ் என இனிப்பற்ற பண்டங்களையும் கொடுக்கலாம்.

  • பாகிஸ்தானைச் சார்ந்த L.Kஅத்வானியை, பாகிஸ்தான் சுதந்திரதினப் பரிசாக மீண்டும் பாகிஸ்தானுக்கே கொடுத்து விடலாம். அதேபோல் அவர்களாக முஷராப்பை நமக்குப் பரிசாகத் தந்தால், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி ஏற்றுக் கொள்ளலாம்!

  • எல்லோரும் கடமையச் செய்தால் நாடு முன்னேறும். விடுமுறைகளால் ஒருநாள் உற்பத்தி குறைகிறது.ஆகவே,சுதந்திர தினத்தன்று விடுமுறை கிடையாது என்று அறிவிக்க வேண்டும்.

  • சுதந்திரப் போராட்டத் தியாகங்களை நினைவுகூராமல், பட்டிமன்றம் மற்றும் சினிமாப் படங்கள் மூலம் சுதந்திரதினத்தை போற்றுவோம் என்று விளம்பரம் செய்யும் தொலைக்காட்சி சேனல்களைத் தடைசெய்ய வேண்டும்.

  • மும்தாஜ், திரிஷா போன்ற கவர்ச்சி நடிகைகளை வைத்து சுதந்திரதின நிகழ்சிகள் என்று சுதந்திரத்தைல் கிண்டலடிக்கும் சேனல்களையும் தடை செய்ய வேண்டும்.

வேறு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் பின்னூட்டம் போட்டு வையுங்கள். யாருக்காவது உதவலாம்!

Read more...

சுவரில்லாமல் சித்திரம்

Monday, August 06, 2007

சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியுமா? என்று சிலர் மேதாவிகள்போல் கேட்பார்கள். படத்திலிருக்கும் இரண்டு வயதுச் சிறுவன் 'முடியும்' என்று நிரூபித்திருக்கிறான். கொடுமை என்னவென்றால் இச்சாதனையை அவனின் பெற்றோர்கள் பாராட்டவில்லையாம்! நீங்களாவது பாராட்டி ஊக்குவிக்கலாமே! :-)

Read more...

எலிகளின் மனிதக்குட்டி சோதனை

Wednesday, July 18, 2007

வலைப்பூக்களில் நீண்ட நாட்களாக எழுதிவரும் மூத்த உயர்சாதி எலியினால் பாதிக்கப்பட்ட இன்னொரு எலி, அந்த மூத்த உயர்சாதி எலிக்கு எதிராக போலியாகப் பின்னூட்டமிட்டு உயர்சாதி எலியின் பெயரைக் கெடுத்து வந்தது. உயர்சாதி எலிக்கும் சில போலிப்பெயர்கள் இருந்தாலும், தன் பெயரை நாறடிக்கும் போலி எலியை அடையாளம் கண்டுகொள்ள எலிக்குட்டி சோதனையைச் செய்து அத்தகைய பின்னூட்டங்களை இட்டது மூத்த உயர்சாதி எலிதானா? என்று உறுதிபடுத்திக் கொள்ளச் சொல்லி மன்றாடியது.

சம்பந்தமே இல்லாமல் தங்கள் இனத்தைச் சோதனைச் செய்யச் சொல்லியதால் எலிகள் அந்த உயர்சாதி மூத்த பதிவருக்கு எதிராக ஒன்றுகூடி, அவரைப் பழிவாங்கும் விதமாக 'மனிதக்குட்டி' சோதனை என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றன.

'மனிதக்குட்டி' சோதனை எப்படி இருக்கும் என்று படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Read more...

குப்பைத் தொட்டியில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ்!!!

விடாப்பிடியாக,வெட்கமில்லாமல் இன்னும் அமெரிக்க அதிபராக இருந்து கொண்டிருக்கும் ஜார்ஜ் புஷ்ஷை மிகச்சுலபமாக குப்பைத் தொட்டிக்கு அனுப்பலாம். மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் இதற்கு வழியேற்படுத்திக் கொடுத்த பில்கேட்ஸ் ஐயாவுக்கு மில்ல்லியன் நன்றிகள். என்பங்குக்கு நான் ஜார்ஜ் புஷ்ஷை குப்பைத் தொட்டிக்கு அனுப்பி விட்டேன். நீங்களும் அனுப்பிப் பார்க்கலாமே!

1) உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பில் வெற்றுக்கோப்பை புதிதாக உருவாக்குங்கள்.


2) அதற்கு என்று பெயர் மாற்றம் செய்யுங்கள்.

3) மவுஸால் அந்தக்கோப்பை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

4) விசைப்பலகையின் பட்டனை அழுத்துங்கள்.

5) மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 'ஜார்ஜ் புஷ்ஷை குப்பைத்தொட்டிக்கு அனுப்ப வேண்டுமா?' என்று கேட்கும்.



6) ஓக்கே என்று கொடுங்கள்.



7) உங்கள் கணினியின் குப்பைத்தொட்டியில் போய் பாருங்கள். அண்ணன் ஜார்ஜ் புஷ் மயங்கிக் கிடப்பார்!

Read more...

சிவாஜி - வெளிவராத கிளைமேக்ஸ் காட்சி!!!

Saturday, July 14, 2007

வில்லன்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பைக்கில் விரட்டிச் செல்கிறார்.

.

.

.

.

.

.

.
வில்லன்களும் விடுவதாக இல்லை; காற்றாய்ப் பறக்கிறார்கள்.

.

.

.

.

.

.

.

.

.

சூப்பர் ஸ்டாரின் பைக்கில் பெட்ரோல் குறைந்து கொண்டே வருகிறது....

.

.

.

.

.

.

.

.

.
பயங்கர ஷேசிங்....

.

.

.

.

.

.

.

.
வில்லன்களைப் பிடிக்க முடியவில்லை....

.

.

.

.

.

.

.

.

.
சூப்பர் ஸ்டார் மனம் தளரவில்லை...பைக்கில் பெட்ரோலும் தீர்ந்து விட்டது!

.

.

.

.

.

.

.அதனாலென்ன? படத்தைப் பாருங்க!

.

.

.

.

.

.

.
.
.
.
.
.
.
.








சும்மா அதிருதுல...!

Read more...

முக்காடு போடும் நிலையில் பிரதீபா மேடம்

Thursday, June 28, 2007

பிரதீபா படீல் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் அவரைப் பற்றி வெளியாகும் செய்திகள் சர்ச்சைக்குள்ளாகின்றன. (ராஷ்டிரபதி ஆணாபெண்ணா? என்ற சர்ச்சைகூட எழுந்தது:-). தன் பதவியைப் பயன்படுத்தி கொலையாளிகள் தப்பிக்க உதவினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது கூட்டுறவு வங்கி ஊழலில் முக்கிய பங்கு இருப்பதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மும்பை: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரதீபா பாட்டீல் தொடங்கிய வங்கி நிதியை அவரது தம்பியும், உறவினர்களும் சேர்ந்து சூறையாடியதால் வங்கி திவால் ஆகி விட்டதாக அந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இந்த வங்கி மீது ஏராளமான ஊழல் மற்றும் மோசடிப் புகார்களும் எழுந்துள்ளன. ஆனால் இவற்றுக்கும், பிரதீபாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று காங்கிரஸ் கூறுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பிரதீபா பாட்டீல் மீது சரமாரியாக புகார்கள், சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன.

முதலில் அவரது தம்பியை, கொலைக்குற்றத்திலிருந்து காப்பாற்ற முயற்சித்தார் பிரதீபா என்ற புகார் எழுந்தது. ஆனால் இந்ததப் புகார் பொய்யானது, பாஜக மோசமாக செயல்படுகிறது என்று காங்கிரஸ் கூறியது.

இந்த நிலையில் இன்னொரு மெகா புகார் பிரதீபா மீது எழுந்துள்ளது. கடந்த 1973ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் ஜல்கோவனில் பிரதீபா பாட்டீல் ஒரு கூட்டுறவு வங்கியை நிறுவினார். பெண்கள் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த கூட்டுறவு வங்கிக்கு பிரதீபா மகிளா சஹகாரி வங்கி என்று பெயர்.

இந்த வங்கியின் நிர்வாகத்தில் தற்போது பிரதீபா பாட்டீல் இல்லை. கடந்த 1994ம் ஆண்டு வரை இந்த வங்கி நிர்வாகத்தில் பிரதீபா பாட்டீல் இருந்தார். அதன் பிறகு விலகி விட்டதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது.

கடந்த 2003ம் ஆண்டு இந்த வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. பெண்கள் நலனுக்கான வங்கி என்ற பெயரில், பிரதீபா பாட்டீலின் உறவினர்களுக்கு மட்டும் கடன் கொடுக்கப்பட்டு வந்ததாலும், பின்னர் அவர்கள் வாங்கிய கடன் தொகையை தள்ளுபடி செய்ததாலும் இந்த அதிரடி நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்தது.

மேலும் வங்கி மீது கூறப்பட்ட ஊழல் மற்றும் மோசடிப் புகார்கள் குறித்து விசாரித்த அரசு சார்பிலான பிரதிநிதியான அமோல் கைர்னார், இதுதொடர்பாக வங்கி மேலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பினார்.

அந்த நோட்டீஸில், வங்கியின் இருப்புத் தொகைய விட கூடுதலான தொகைக்கு பிரதீபாவின் உறவினர்களுக்கு கடன் தொகை கொடுத்தது ஏன், உறவினர்கள் கட்டாத கடன் தொகையை தள்ளுபடி செய்தது எந்த அடிப்படையில், பிரதீபா பாட்டீலுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலைக்கு வழங்கப்பட்ட கடன் தொகைய ரத்து செய்தது ஏன் என்று பல கேள்விகளை அதில் கைர்னார் கேட்டிருந்தார்.

மேலும், வங்கி போர்டு இயக்குநர்களாக அரசு விதிப்பி, எஸ்.சி, எஸ்.டி சமுதாயத்தினரைத் தேர்ந்தெடுக்காமல், உறவினர்களை மட்டுமே தேர்ந்தெடுத்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதுதான் தற்போது பிரச்சினையைக் கிளப்பியுள்ளது. பிரதீபா பாட்டீலின் தம்பி திலீப் சிங் பாட்டீல் மற்றும் உறவினர்கள்தான் பெருமளவில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் வங்கிப் பணத்தை இஷ்டத்திற்கு எடுத்து செலவழித்ததால் தான் வங்கி சீர்குலைந்து போனதாக வங்கி ஊழியர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

இவர்களின் செயலால் வங்கிக்கு ரூ. 2.24 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாம். திலீப் சிங் பாட்டீலும் அவரது உறவினர்களும் வங்கி தொலைபேசியிலிருந்து சரமாரியாக பேசுவார்களாம். இதனால் தொலைபேசிக் கட்டணம் மட்டும் ஒருமுறை ரூ. 12 லட்சத்திற்கு வந்ததாம்.

இதேபோல, கார்கில் போர் வீரர் நல நிதிக்காக ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தைப் பிடித்துள்ளனர். ஆனால் அந்தத் தொகையை உரியவர்களிடம் சேர்க்காமல் அவர்களே பங்கிட்டுக் கொண்டார்களாம்.

ஆனால் இந்தப் புகார்களை காங்கிரஸ் கட்சி மறுக்கிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், இவை எல்லாம் பொய்யான புகார்கள். 1994ம் ஆண்டு முதல் இந்த வங்கிக்கும், பிரதீபா பாட்டீலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார் சிங்வி.

ஆனால் வங்கி திவாலனாதாக கூறி ரிசர்வ் வங்கி உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை எடுத்தது வரை பிரதீபா பாட்டீல் இந்த வங்கியின் இயக்குநர் பொறுப்பில் இருந்துள்ளார் என்ற தகவல் ஆதாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

2003ம் ஆண்டு வங்கி திவாலனாதாக அறிவிக்கப்பட்டபோது பிரதீபா முன்னிலையில்தான் அதுதொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவாம்.

பிரதீபா மீது எழுந்துள்ள அழுத்தமான புகார்களுக்கு, காங்கிரஸ் தரப்பிலிருந்து இதுவரை உறுதியான மறுப்பு வெளியாகவில்லை. இந்தப் பிரச்சினையை பெரிதுபடுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தீர்மானித்துள்ளது.
பர்தா அணிவது பிற்போக்குத்தனமானது; முஹலாயர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ளவே பர்தா அவசியமாக இருந்தது; தற்போது தேவை இல்லை" என்று எந்த நேரம் திருவாய் மலர்ந்தாரோ,அம்மனியின் பின்புலம் ஒவ்வொன்றாக வெளி வரத்தொடங்கி உள்ளன.

இவரைப் பற்றிய செய்திகளைப் பார்த்தால், பிரதீபா படீல் கூடிய சீக்கிரம் முக்காடு போடும்படியான நிலமை ஏற்பட்டால்,அதற்கு நிச்சயமாக எந்த முஹலாயர்கள் காரணமல்ல!

பதிவுக்குத் தொடர்பில்லாத சந்தேகம்: சாராயக் கடைக்குச் செல்லும்போதும், திவால் ஆகும்போது ஏன் ஆண்கள் முக்காடு போடுகிறார்கள்? என்ற சந்தேகத்தை தீர்த்து வைப்பவர் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்படுவார்!

Read more...

ராஷ்டிரபதி - ஆணா? பெண்ணா? புதிய குழப்பம்!

Saturday, June 16, 2007

முதன் முதலில் ஜெயலலிதா முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது எனக்கு எழுந்த சந்தேகம் போன்றே, ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் ஹிந்திக்காரர்களுக்கும் வந்துள்ளது.

ஜனாதிபதியை இந்தியில் `ராஷ்டிரபதி' என்று அழைக்கிறார்கள். இதுவரை ஆண்கள் மட்டுமே ஜனாதிபதியாக இருந்துள்ளனர். இதனால் அவர்களை `ராஷ்டிரபதி' என்றே அழைத்தனர்.

இப்போது, ராஷ்டிரபதி ஆண்பாலா? அல்லது பெண்பாலா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி-இடதுசாரி கட்சிகள் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளரான பிரதீபா பட்டீல் வெற்றி பெற்று ஜனாதிபதியானால் அவரை `ராஷ்டிரபதி' என்று அழைக்க முடியுமா? என்ற கேள்விக்குறி எழுந்து உள்ளது.

இதுபற்றி அரசியல் சட்ட நிபுணர் சுபாஷ் காஷ்யப் கருத்து தெரிவிக்கையில்; ராஷ்டிரபதி என்ற பெயர் ஆண்-பெண் ஆகிய இரு பாலாருக்கும் பொருந்தும் என்றும், எனவே பிரதீபா பட்டீல் ஜனாதிபதி ஆகும் பட்சத்தில் `ராஷ்டிரபதி' என்ற பெயரை மாற்ற வேண்டிய தேவை இல்லை என்றும் கூறினார்.

அதெல்லாம் இருக்கட்டும். நம்நாட்டு ஜனாதிபதியை பெரும்பாலும் 'ரப்பர் ஸ்டாம்ப்' என்றே சொல்வார்கள். (ஜனாதிபதி அப்துல் கலாம் விதிவிலக்கு). ரப்பர் ஸ்டாம்ப் ஆணா? பெண்ணா? என்ற சந்தேகம் யாருக்கும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ;-)

குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு பெண் வரவிருப்பது பற்றி கலாமிடம் கேட்டபோது மிகவும் அற்புதம் என்றார். இதுகுறித்து மேலும் கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

இதனிடையே மக்கள் தம்மை தொடர்பு கொள்ள வசதியாக தனிப்பட்ட இணைய தளம் ஒன்றை தொடங்க கலாம் திட்டமிட்டுள்ளார். யவத்மாலில் மாணவர்களுடன் உரையாடிய அவர், தம்மை www.abdulkalam.com என்ற இணைய தளத்தில் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும், இந்த இணைய தளம் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இணைய முகவரிகளுக்கு .com என்று முடிவடைந்தால் அவை Commercial சார்ந்த தளமுகவரி என்று புரிந்து கொள்ளப்படும். ஆகவே, .net என்றோ அல்லது .org என்றோ முடியும்படி பார்த்துக் கொள்ளலாமே!

Read more...

ஒரே நாளில் 500 ரவுடிகள் கைது - மாமூல் வாழ்க்கை பாதிப்பு?

Sunday, June 10, 2007

எனது சென்றமாதப் பதிவில் மதுரைக்காரர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தலைப்பிட்டதால் மதுரைக்காரர்களின் கண்டனத்திற்கு ஆளானேன். ஆகவே இந்த முறை சென்னைக்காரர்களின் கண்டனத்திலிருந்து தப்ப செய்தியை அப்படியே வைக்கிறேன். ஆனால் ஒரு கண்டிசன்! கடைசியில் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.


சென்னை நகரில் போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையி்ல் ஒரே நாளில் 500 ரவுடிகள் சிக்கினர். சென்னை நகரில் சமீப காலமாக கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன.இதையடுத்து சென்னை நகரில் ரவுடிகள் நடமாட்டத்தை ஒழிக்கவும், பழைய குற்றவாளிகளைப் பிடிக்கவும் காவல்துறை ஆணையர் லத்திகா சரண் உத்தரவிட்டார்.

இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரவுடிகளைப் பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்த வேட்டையில், 386 ரவுடிகள், 67 பழைய குற்றவாளிகள்,12 நீண்ட கால கிரிமினல்கள் சிக்கினர். கைது வாரண்ட் நிலுவையில் உள்ள 38 பேரும் இந்த வேட்டையின்போது சிக்கினர். ரவுடிகள் வேட்டை தொடரும் என காவல்துறை அறிவித்துள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/06/10/arrest.html

1) ரவுடி (Rowdy) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு "An uncultured, aggressive, rude, noisy troublemaker" என்று விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. நேற்று கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமா இதற்கு பொருத்தமானவர்கள்?

2) சென்னையில் மட்டும் சிலரைக் கைது செய்துவிட்டால் போதுமா? இதனால் உஷாராகி வேறு இடங்களுக்கு இடம் பெயரும் ரவுடிகளை எப்படி பிடிப்பதாக உத்தேசம்?

3) இப்படி திடுதிப்பென்று கைது வேட்டையைத் தொடங்கினால் மாமூல் வாழ்க்கை பாதிக்கப்படாதா?

மற்றபடி, வலைப்பதியும் அன்பர்கள் தங்களுக்குத் தெரிந்த ரவுடிகளைப் பற்றி பின்னூட்டம் மூலம் தகவல் கொடுத்து உதவலாமே!

(நல்லதாப் போச்சு நான் முந்திக்கிட்டேன் :-)))

Read more...

தமிழ்மணமும் G.ராகவனும் செய்த தவறுகள்!!!

Thursday, June 07, 2007




தமிழ்மணத்தில் ஆன்மீக மணத்துடன் அவ்வப்போது எழுதும் ஒரு மூத்த வலைப்பதிவருக்கு 251 வயது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்த தள்ளாத வயதிலும் கொடநாட்டு மகாராணி & தங்கத்தாரகையைப் பற்றி ஆதங்கத்துடன் எழுதியுள்ளார் இந்த முன்னாள் தமிழ்மணம் தாரகை!

வாழ்த்துக்கள் 251 வயது முதியவரே!


மேலும், 31-12-1969 முதல் ஏறத்தாழ 38 வருங்களாக (அப்ப நண்பர் காசிக்கு எத்தனை வயசுங்கோ?) தமிழ் வலைப்பூக்களை திரட்டி வரும் தமிழ் மணத்திற்கும் வாழ்த்துக்கள்!!!



Read more...

பாவம் பூண்டு!!! (டோண்டு அல்ல:-)

Sunday, June 03, 2007


சட்டத்திற்குப் புறம்பாக அனுமதியின்றி அதிமுக தலைமையகத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டதால் கொதிப்படைந்த முன்னாள் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தி.மு.கவை பூண்டோடு அழிப்பேன் என்று சபதமேற்றுள்ளார்.

கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் மருந்தாகவும் அன்றாட உணவுக்கு சுவையூட்டவும் பயன்படும் பூண்டை ஏன் அழிக்கவேண்டும்? பூண்டுக்கு கருணை காட்டுங்கள் ஜெயலலிதா அம்மையாரே!

Read more...

மறக்க முடியாத முத்தம்

Tuesday, May 22, 2007

உண்மையில் பெண்கள் மகா கில்லாடிகள்தான்! கண்ணைக் கட்டிக்கொண்டு வெவ்வேறு நபர்கள் முத்தம் கொடுத்தாலும் இதயப்பூர்வமான முத்தத்தை அடையாளம் கண்டுகொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள்! இந்தத் திறமை நம்மூர் பெண்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக அமெரிக்கப் பெண்களுக்கு உண்டு. பள்ளிப் பருவத்திலிருந்தே இத்தகைய பரவசமான அனுபவம் கிடைக்கப் பெற்றவர்கள் அல்லவா? வீடியோக் காட்சியைப் பார்த்து நீங்களே சொல்லுங்கள்.



மறக்காமல் உங்கள் பின்னூட்ட முத்தங்களை சரமாரியாக வாரி வழங்கலாமே!

Read more...

ராவணன் பாலம்?

Monday, May 21, 2007



சர்ச்சைக்குறிய ராமர் பாலம் பற்றி பலரும் எழுதியுள்ளார்கள். என் பங்குக்கு நானும் எழுதாவிட்டால் தமிழினத் துரோகியாகும் வாய்ப்புள்ளது. இதுபற்றி அத்வானியுடன் நடந்த நேர்காணல்!


அதிரைக்காரன்: வாங்க அத்வானி ஜி. நல்லா இருக்கீங்களா?


அத்வானி: நமஸ்தே அதிரைக்காரன்ஜி. நல்லா இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க?



அதிரைக்காரன்: (உங்கள் ஆட்சி போனதிலிருந்து) நல்லா இருக்கிறேன் ஜி.


அத்வானி: பேட்டியை எங்கு வைத்துக் கொள்வோம்? உங்களூர் ராஜாமடம் பாலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷை பேட்டி கண்டிருக்கிறீர்கள் என்று புஷ் பெருமையாகச் சொன்னார். அங்கேயே வைத்துக் கொள்ளலாமா?


அதிரைக்காரன்: இல்லை. உங்களுக்குப் பிடித்த ராமர் பாலத்தில் காலாற நடந்து கொண்டே பேசலாமே.


அத்வானி: (திடுக்கிட்டு) என்ன விளையாடுறீங்களா? ராமர் பாலம் எங்கிருக்கிறது? இருந்தாலும் அதன்மீது எப்படி நடக்க முடியும்?
அதிரைக்காரன்: இராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இருப்பதாக ஜெயலலிதா அம்மையார், சுப்ரமணியசுவாமி மற்றும் உங்கள் கட்சிக்காரர்கள் சொல்லி வருகிறார்களே?


அத்வானி: அடப்போங்க அதிரைஜி. அவங்களுக்கு அரசியல் பண்ண வேறு விசயம் எதுவும் கிடைக்கவில்லை.அதனால்தான் ராமர் பாலம் விசயத்தைக் கையிலெடுத்துள்ளார்கள்.


அதிரைக்காரன்: அப்படியா! நான் கூட ஏதோ உண்மையான பாலம்தான் இருக்குதோ என்று நினைத்து விட்டேன். ஆமா! ராமர் பாலம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?


அத்வானி: இதென்ன கேள்வி. அவர்களுக்கு எதிராகக்கருத்துச் சொல்ல எனக்கு என்ன செலக்டிவ் அம்னீஷியா? ராமர் பாலம் 17 இலட்சத்து ஐம்பதாயிரம் வருஷத்துக்கு முன்னாடி கட்டப்பட்டது. இந்தியாவின் பாரம்பரிய சின்னங்கள் காக்கப்பட வேண்டும் என்பதால்தான் நாங்களும் ராமர்பாலத்தை இடிக்கக் கூடாது என்கிறோம்.


அதிரைக்காரன்: "இடிக்கக்கூடாது" என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?


அத்வானி: ஆம்! இந்தியாவின் பாரம்பர்யச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.


அதிரைக்காரன்: உங்களால் இடிக்கப்பட்ட பாபர் மசூதியும் நம்நாட்டின் பாரம்பரிய சின்னம் தானே அதை ஏன் இடித்தீர்கள்?


அத்வானி: பழசை ஏன் கிளருகிறீர்கள்? வேறு ஏதாவது புதுசாகக் கேளுங்கள்.


அதிரைக்காரன்: 400 வருடங்களுக்கு முந்தைய பாபர் மசூதியை 15 வருடங்களுக்கு முன் இடித்தது பழைய விசயமா உங்களுக்கு? 17,50,000 வருடப் பாலம் மட்டும் புதிய விசயமா? நானூறு வருடங்கள் பழையதா 17,50,000 வருடங்கள் பழையதா?


அத்வானி: அதிரைஜி. கடலுக்கடியில் பாலம் இருப்பதை அமெரிக்காவின் நாஸா விண்வெளி மையம் சமீபத்தில் உறுதி படுத்தியுள்ளது. தெரியுமா?


அதிரைக்காரன்: விண்வெளியில் தினமும் புதுசு புதுசா கண்டுபிடிப்பதும், ஏற்கனவே கண்டு பிடித்தவை மறுக்கப்படுவதும் சகஜம். கடலுக்கடியில் இருப்பது ராமர் பாலம்தான் என்று நாஸா சொன்னதாக யார் சொன்னார்?


அத்வானி: பார்த்தீங்களா! நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள். தினமலரில் படங்களுடன் இது பற்றி செய்தி வெளியிட்டிருந்தார்களே.


அதிரைக்காரன்: நாஸாவின் குறிப்பின்படி இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படும் மணற்திட்டுகள் முன்பு பாலமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்றுதானே சொல்லப் பட்டுள்ளது.


அத்வானி: நாஸாவிற்கு ராமாயணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவேதான் மணல் திட்டு என்று புரியாமல் சொல்லியுள்ளார்கள். நாங்கள் அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தால் நாஸாவில் உள்ள விஞ்ஞானிகள் ராமாயணம் படிக்க ஏற்பாடு செய்வோம். பாரதத்தின் நன்மைக்காகச் சொல்லப்படும் எதையும் ஒப்புக் கொள்ளலாம்.


அதிரைக்காரன்: சேது சமுத்திரத் திட்டத்தால் பாரதத்திற்கு பொருளாதார நன்மைகள் உள்ளதை ஒப்புக் கொள்கிறீர்களா?


அத்வானி: தேவையில்லாமல் அடுத்தவர் மதநம்பிக்கைகளுடன் நீங்கள் விளையாடக்கூடாது. ராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு இடைப்பட்ட பாலம் அனுமாரால் கட்டப்பட்டது.

அதிரைக்காரன்: மண்டபத்திலிருந்து ராமேஸ்வரத்தை இணைக்கும் பாம்பன் பாலம் ஆங்கிலேயரால் 1911 இல் கட்டப்பட்டது.


கடலில் இயற்கையாக தோன்றி மறையும் மணல் திட்டுகளை பாலம் என்று சொல்வது சரியல்ல. எங்களூர் கடலில்கூட சில வருடங்களுக்கு முன் ராஜாமடம் ஆறு கலக்குமிடத்தில் மணற்திட்டு ஏற்பட்டு சிறிய தீவு போல இருக்கிறது. உலகின் பெரும்பாலான தீவுகள் மணற்திட்டுகளால்தான் ஏற்படுகின்றன.

அத்வானி: அதிரைஜி, கடலியல் பூகோல மாற்றங்களை நீங்கள் அறியாமல் பேசுகிறீர்கள். பல இலட்சம் வருடங்களுக்கு முன் இலங்கை இந்தியாவின் பகுதியாகவே இருந்தது. இடையில் கடல்புகுந்து இலங்கையை தனித்தீவாக மாற்றிவிட்டது.மேலும், பூமித் தட்டுக்கள் நகரும்போது நிலப்பரப்பிலும் கடற்பரப்பிலும் மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஏற்பட்ட மாற்றங்களால்தான் நம்நாட்டின் இமயமலை கூட உயர்ந்ததாகச் சொல்கிறார்கள். அப்புறம், உங்களூர் பெயரிலும் "ராம்" என்று என்று உள்ளதால் தேவைப்பட்டால் அதை பிறகு பேசிக்கொள்வோம். :-(

அதிரைக்காரன்: இதே லாஜிக்படி பார்த்தால் நீங்கள் இடித்த பாபர் மசூதி இருந்த பகுதியில் ராமர் பிறந்திருக்க வாய்ப்பில்லைதானே? பூகோல மாற்றங்களால் நில,நீர்ப்பரப்புகள் மாறும் போது, வட இந்தியாவில் சரயு நதியின் ஓட்டமும் ஏன் மாறி இருக்காது? அதன்படி, நீங்கள் சொல்லும் ராமர் பிறந்த இடம் தற்போதைய சரயு நதிக்கரையிலுள்ள அயோத்தி அல்ல என்றுதானே அர்த்தம்.


அத்வானி: நீங்கள் மீண்டும் மீண்டும் பழசைக் கிளறுகிறீர்கள். "ராமர்பாலம் பாதுகாப்பு" இயக்கத்திற்கு வந்துள்ள கரசேவகர்களைச் சந்திக்க வேண்டும். பேட்டியை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.




அதிரைக்காரன்: கரசேவகர்கள் கரத்தில் கடப்பாறையுடன் வந்துள்ளார்களே? வந்திருப்பது இடிக்கவா அல்லது கட்டவா?




அத்வானி: (திடுக்கிட்டு) தவறு நடந்துவிட்டது! "ராமர் பாலம் பாதுகாப்பு இயக்கம்" என்றதும் இவர்கள் பாலத்தை இடிக்க வேண்டுமோ என்று தவறாகப் புரிந்துகொண்டு கடப்பாறையுடன் வந்துள்ளார்கள். பேட்டியை சீக்கிரம் முடியுங்கள், அவசரப்பட்டு இடித்து விடபோகிறார்கள்.

***********************************

தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள மூன்று மாநிலங்கள் நதிநீர் ஆதாரங்களைத் தடுக்கிறார்கள். யாராலும் தடுக்க முடியாத கடல்நீர் ஆதாரங்களை வைத்து மாநிலத்தையும் நாட்டையும் முன்னேற்ற முயலும்போது ராமர் பாலம் என்ற பெயரால் சிலர் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.




ராமர் பாலத்தால் நன்மையடைந்தவர்கள் ஜெயலலிதாவும் இலங்கையும் மட்டுமே. ராமர் பாலம் எதற்கும் பயன்படாவிட்டாலும் எதிர்காலத்தில் ஜெயலலிதாவுடன் பி.ஜே.பி உறவுப் பாலம் அமைக்க நிச்சயம் பயன்படலாம். தமிழகம் மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் இப்பாலத்தை ராவணன் பாலம் என்பதே சரி.



ராமர் சார்! ஒரேயொரு வரம் தரவேண்டும். அதுவும் நம்நாட்டின் முன்னேற்றத்திற்காக மறுக்காமல் தர வேண்டும். அதாவது எங்களுக்காக மீண்டும் ஒரேயொரு முறை பதிமூன்று வருடங்கள் மட்டும் உங்கள் பரிவாரங்களுடன் வனவாசம் சென்று வந்தால் போதும்; நீங்கள் திரும்பி வருவதற்குள் நாங்கள் வல்லரசாகி இருப்போம்.



கொஞ்சம் பெரிய மனதுடன் இந்த உதவியைப் பண்ணுங்களேன். ப்ளீஸ்! :-)

Read more...

சற்றுமுன் காப்பியடித்தது?

Tuesday, May 15, 2007


வலைப்பூ நண்பர்கள் நடத்தும் "சற்றுமுன்" தளம் தொடங்கப்பட்ட புதிதில் உலகெங்கும் நடக்கும் செய்திகளை மொழிமாற்றி அல்லது முன்னுரையுடன் உடனுக்குடன் வெளியிட்டார்கள்.
சமீபத்தில் 'சற்றுமுன்" தளத்தில் வெளியாகும் பதிவுகள் பெரும்பாலும் தட்ஸ்தமிழ் டாட்காம் போன்ற தளங்களிலிருந்து காப்பி அடித்த செய்திகளாகவே இருக்கின்றன. (கஷ்டப்பட்டு செய்தி சேகரிக்கும் தட்ஸ்தமிழ்காரர்கள் வருத்தப்பட மாட்டார்களா?:)


பிறதளங்களை விட தட்ஸ்தமிழ் செய்திகளை தரும் வேகம் சிறப்பானது. மேலும் முன்பு தானியங்கு எழுத்துருவில் இருந்த தளத்தை, சமீபத்தில் யூனிகோட் எழுத்துருவுக்கு மாற்றி இருக்கிறார்கள். ஆகவே, அதில் வரும் செய்திகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்வதைப் படிப்பது சற்றுமுன் தளத்தை எந்த விதத்தில் வேறுபடுத்தும்?


வெவ்வேறு நாடுகளில், நகரங்களிலிருந்து பங்கேற்று ஆர்வமாக எழுதும் வலைப்பூ செய்தியாளர்கள் ஆங்காங்கு நடக்கும் அல்லது நாளிதழ்களில் வெளிவராத உள்ளூர் செய்திகளை பதியலாமே. இதன் மூலம் மற்ற செய்திகளை விட அதிக நம்பகத்தனமையைப் பெற முடியும்.


"சற்றுமுன்" நண்பர்கள் கவனிப்பார்கள் என்ற ஆதங்கத்தில் சொல்லி விட்டேன்.


அப்புறம், சற்றுமுன் வெளியான என் இன்னொரு பதிவையும் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கவும். :-)

Read more...

வயது வந்தவர்களுக்கு மட்டும்..

தயவு செய்து 18 வயதுக்கு குறைந்தவர்கள் இத்தளத்தைப் பார்வையிட வேண்டாம். பொறுமையை சோதிக்கும் தளம். தளத்திற்குள் நுழைந்ததும் ஏண்டா வந்தோம் என்று இருக்கும்.
நண்பர்களுக்கு மட்டுமல்ல, எதிரிகளுக்கும் பரிந்துரைக்கும் வசதியுடன் உள்ள இணைய தளம். விரும்பினால் இதுபோன்ற அனுபவத்தை இப்பதிவில் பின்னூட்டலாம் (அல்லது adiraiwala@gmail.com க்கும் மெயிலிடலாம்.)

Read more...

சூட்டிங் ஸ்பாட்டில் பாம்பு கடித்தது

Wednesday, May 09, 2007

பாம்பு படமெடுக்குமென்று தெரியும். சூட்டிங் ஸ்பாட்டிற்கே வந்து படமெடுத்த பாம்பைப் பற்றி தெரியுமா? தட்ஸ்தமிழ் டாட்காமில் SNAKE BITES ACTRESS ASHA IN SHOOTING SPOT என்று தலைப்பிட்டிருக்கிறார்கள்.



தமிழில் "நடிகை தொடையை கடித்த பாம்பு" என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். தமிழ் தலைப்புக்கும் ஆங்கில தலைப்புக்கும் வித்தியாசம் உண்டா என்று தெரியவில்லை.




எது எப்படியோ தமிழ் சினிமாக்களில் சூட்டிங் ஸ்பாட் எது? என்பதை பாம்பு நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறது.

Read more...

மின்மடலில் வந்த மஹாலட்சுமி

Saturday, May 05, 2007

நைஜீரியன் மோசடி (Nigerian Scam) பற்றி தெரிந்திருந்தால் உங்களுக்கு இப்பதிவில் செய்தி ஒன்றுமில்லை. நம் மின்மடலின் இன்பாக்ஸில் கவர்ந்திழுக்கும் தலைப்பில் சில மடல்கள் வந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளின் இராணுவ அதிகாரிகளின் மகள், மகன், வாரிசு என்ற அறிமுகத்துடன் அழகான ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும்.

சிலசமயம் அப்போதைய செய்தி நாயகர்களை முன்வைத்தும் எழுதப்பட்டிருக்கும். உதாரணமாக சதாம் ஹுசேனின் மருத்துவர், பாதுகாவலர் என்ற அறிமுகத்துடன் இருக்கும். மடலின் சாரம்சம் பத்து மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை உங்கள் பெயரில் உள்ளூர் வங்கிக்கு மாற்ற வேண்டும். அதற்காக உங்களைப் பற்றிய விபரங்களைக் கேட்டிருப்பார்கள். மாதிரிக்கு எனக்கு வந்த 1,000,001 ஆவது மின்மடலைப் பாருங்கள் :)

==================================================
TANFIRELD CHAMBERS AND ASSOCIATES LAW FIRM [w1h002@sino.net]

MANAGING PARTNER
TANFIRELD CHAMBERS AND ASSOCIATES LAW FIRM
TEL:+1-206-350-5553 FAX:+1-206-339-6617 w1h002@treffpunkt.cc

FINAL NOTIFICATION OF BEQUEST

Dear beneficiary,

On behalf of the Trustees and Executor of the estate of Late Engr.Jurgen Krugger; I once again try to notify you as my earlier letter was returned undelivered.I hereby attempt to reach you again by this same email address stated on the WILL. I wish to notify you that late Engr. Jurgen Krugger made you a beneficiary to his WILL. He left the sum of Seventeen Million One Hundred Thousand Dollars (USD$17,100.000.00 ) to you in the codicil and last testament to his WILL.

Being a widely travelled man, he must have been in contact with you in the past or simply you were recommended to him by one of his numerous friends abroad who wished you good. Engr. Jrgen Krgger until his death was a member of the Helicopter Society and the Institute of Electronic and Electrical Engineers. He was a very dedicated Christian who loved to be involved in charitable projects. His great philanthropy earned him numerous awards during his life time.

Late Engr. Jurgen Krugger died on the 13th day of December, 2004 at the age of 80 years, and his WILL is now ready for execution.According to him this money is to support your humanitarian activities and to help the poor and the needy in our society.Please if I reach you this time as I am hopeful, endeavour to get back to me with the following information as soon as possible to enable me conclude my job. Full name and Address,telephone and fax numbers as well as age and your identity card/drivers license/international passport.We hope to hear from you in no distant time.

Yours in Service,
BARRISTER WALTER HARDLEY ESQ.
====================================================

தேடிவந்த மஹாலட்சுமியை மறுக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் (பேராசையில்) பதில் கொடுத்தீர்கள் என்றால், நீங்கள் நைஜீரியன் மோசடி வலையில் சிக்கியுள்ளீர்கள் என்று அர்த்தம். உஷார் மக்களே!

நைஜீரியன் மோசடி பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த தளத்தைப் பாருங்கள்

Read more...

+91 9316048121 கொலைகார நம்பரா?

Wednesday, April 25, 2007

வழக்கம்போல ஏதாவது வெட்டியா எழுதலாம்னு ஈமெயில் இன்பாக்ஸைத் திறந்தால் "Deadly Numbers" என்று தலைப்பிட்ட மடல் வந்திருந்தது.

Hi All ,



Its very important news for all of you. Do not pick up calls from the Under given numbers. 9888308001, +91 9316048121, 9876266211, 9888854137, 9876715587 These numbers will come in red color, if the call comes up from these numbers. Its with very high wave length, and frequency. If a call is received on mobile from these numbers, it creates a very high frequency and it causes brain ham range.


It's not a joke rather, its TRUE. 27 persons died just on receiving calls from these numbers. Watch Aaj Tak (NEWS), DD News and IBN 7.


Forward this message to all u'r friends and colleagues, and relative


XXXXXX (இதுக்கு வலைப்பூக்களில் வேறு அர்த்தம். ஆனால் இங்கே அனுப்புனர் பெயரை மறைத்துள்ளேன் :-)


சில வருடங்களுக்கு முன் கலர் கலரான நோட்டீஸ்கள் கொத்து கொத்தா கிடக்கும். ஆர்வத்தில் எடுத்துப் படித்தால் குலை நடுங்கும்படியான செய்திகள் இருக்கும். இறுதியாக அந்த நோட்டீஸை 100-200 பிரிண்ட் போட்டு விநியோகிக்கனும். இல்லாவிட்டால் வயிறு வீங்கியோ அல்லது பேதில போயோ சாவு வரும் என்ற "சுபச்செய்தி" சொல்லப்பட்டிருக்கும். அதுமாதிரியான மிரட்டல்கள்தான் தொழில்நுட்பம் முன்னேறியுள்ளதால் மேற்கண்டவாறு கட்டுக்கதையாக இணையத்தில் வலம் வருகின்றன.



லேட்டஸ்ட் கேமரா ஃபோன்

இத்தகைய மிரட்டல்கள் மற்றும் பரபரப்பான (தினமலர்?) செய்திகளை உறுதி செய்வதற்கென்றே பல இணையதளங்கள் சேவையாற்றுகின்றன. குறிப்பாக www.sonpes.com இத்தகைய செய்திகளைப் பற்றிய புலணாய்வைப் புட்டு புட்டு வைக்கும். மேலும் கூகிலிலும் கிடைக்கலாம்.



இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், சுட்டியில் இச்செய்தியை வறுத்து எடுத்துள்ளார்கள். ஒட்டுமொத்த பதில்களின் சாராம்சம் "உண்மையல்ல; கட்டுக்கதை" என்றே சொல்கின்றன.


முக்கியமான பதில்களைச் சுருக்கமாக வைக்கிறேன்.


1) The ringing of your cell phone DOES NOT depend on the number where the ring is coming from... and it is not really known that ANY cell phone device thus far can cause any "brain hamarage"... if it can, you would see them regulated worse than guns !!! (அதானே! இதுமட்டும் சாத்தியப்பட்டால், இன்னேரம் ஜார்ஜ் புஷ்ஷுக்கு ஏகப்பட்ட மொபைல் கால் வந்திருக்குமே!)


2) You need to see a doctor , fast if you actually believe this. (தஞ்சாவூர் கோர்ட் எதிர்புறம் "பேனா வைத்தியர்"னு ஒருத்தர் இருந்தார். இன்னேரம் மொபைல் போன் வைத்தியராகி இருக்கலாம். எதுக்கும் அவரையும் ஒரு நடை பார்த்துடுங்க)


3) Dear Lord, if you really believed this Hell must have frozen over already. (இதைத்தான் செந்தமிழில் "கேக்குறவன் கேணையன்னா...K.R......" என்று சொல்வார்கள்.)
4) Neh...... It's just a man trying to seek atention. First it came from Pakistan, it's about a virus that can spread threw mobilephones. (எல்லை தாண்டிய தீவிரவாதம் எப்படியெல்லாம் செய்றானுங்க பாருங்க!)


5) First of all, wavelength has inverse relationship to frequency, so the higher the frequency, the smaller the wavelength. suppose it's true that your phone produce the high frequency, then I think the radiation from the frequency is not strong enough to damage your brain. Do you know how much power the microwave need just to warm th food? at least 700w, and how come the cell phone battery able to supply such high power. the radiation will be small, and you will not hear anything, since human's ears are only able to respond from 20 - 20,000 hz. we hear nothing outside that range. (இரு மொபைல் போனை வைத்து முட்டை அவிக்கலாம்னு ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்)


6) The first and the most effective organ can be heart and not mind for hi frequency (ரசிகவ் ஞானியார் கவனிப்பாராக!)


7) BUT THIS TRUE!!!! IT REALLY HAPPENED AND IAM THE 3RD GUY WHO DIED BECAUSE OF THIS. RIGHT NOW IAM WRITING FROM HELL!!!! (நியாயமா சொர்க்கத்துல இருந்துதானே எழுதியிருக்கனும். ஒருசமயம் இந்த சுபச்செய்தியை பரப்பியவரே இவர்தானோ?


அப்புறம், இது நமக்கு நூறாவது பதிவு. முந்தைய 99 பதிவுகளில் தொன்னூறுக்கும் மேற்பட்டவை உண்மையிலேயே வெட்டிதான். தமிழ்மணம் நட்சத்திரவாரத்தில் எழுதியவற்றிலும் ஒன்னு ரெண்டு போக மீதி எல்லாமே 100% வெட்டிதான். (நட்சத்திர வாரத்துல அதைத்தானே செய்ய முடியும்?).


வேலை மெனக்கெட்டு வெட்டியாக 100 பதிவுகள் எழுதியதற்கு முழுபக்க விளம்பரம்,வாழ்த்து தந்தியெல்லாம் வேண்டாம். முடிஞ்சா ஒரு பின்னூட்டம் போடுங்க (போட்டுத் தொலைங்க!)

Read more...

நடேசன் பார்க் அருகில் உளவுத்துறை அதிகாரி?

Sunday, April 22, 2007


நடேசன் பார்க் பற்றி கூகில் தேடியபோது இவர் சென்னை நடேசன் பார்க் அருகில் இருந்ததாக ஒரு ப்ளாக்கில் சொல்றாங்க.! உளவுத்துறை அதிகாரியாக இருக்க வாய்ப்புண்டு?

மூன்று வருடங்களுக்கு முன்னால் அந்த ஏரியாவில் இருந்திருக்கிறார். இன்று ப்ளாக்கர் மீட்டிங்கில் கலந்து கொண்டாரா என்று தெரியாது. யாரேனும் சந்தித்திருந்தால் அவரைக் கேட்டதாகச் சொல்லவும். :-)

Read more...

எயிட்ஸ் விழிப்புணர்வு கொழுந்து விட்டு எரிகிறது

Tuesday, April 17, 2007

தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் லாரி டிரைவர்களுக்கான எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் "எயிட்ஸை உலக அளவில் பரப்பிய ஹாலிவுட்" நடிகர் ரிச்சர்ட்ஸ் கேட், "எயிட்ஸை இந்திய அளவில் பரப்பிய கோலிவுட்" நடிகை ஷில்பா செட்டியை பிரச்சார மேடையில் வைத்து முத்தமிட்டதைத் தொடர்ந்து எயிட்ஸ் விழிப்புணர்வு கொழுந்து விட்டு எரிவதை கீழ்கண்ட படங்க உணர்த்துகின்றன.



இதைத்தான் சொந்த செலவுல சூன்யம் வைப்பது என்பார்களோ?

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP