அமெரிக்க அதிபருடன்...

Thursday, December 29, 2005

செப்டம்பர்-11 அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதற்கு உலகத் தலைவர்கள் அதிபர் புஷ்ஷுக்கு போன் செய்து இரங்கல் தெரிவித்தார்கள்.

சீன பிரதமர்,பாகிஸ்தான் அதிபர் மற்றும் அப்போதைய இந்தியப் பிரதமரின் உரையாடலை மட்டும் வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

சீனப் பிரதமர்: ஜனாதிபதி புஷ்! அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. பெண்டகனையே குறி வைத்திருக்கிறார்களென்றால் எதிரிகள் தைரியசாலிகள்தான்! ஒக்கா மக்கா!

எதற்கும் கவலைப்படாதீர்கள். பெண்டகனில் உள்ள அனைத்தும் எங்களிடம் ஒரு காப்பி உள்ளது. தேவைப்பட்டால் குறைந்த விலையில் அனுப்பி வைக்கிறேன்.

சில நாட்கள் கழித்து அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்த இந்திய பிரதமர் வாஜ்பாய் அவர்களும் அமெரிக்க அதிபரும் இணைந்து நிருபர்களை சந்தித்தனர்.

நிருபர்: இந்த தீவிரவாத தாக்குதல் பற்றி இந்தியாவின் கருத்து என்ன?

வாஜ்பாய்: தீவிரவாதத்தால் இந்தியாவும் பல வருடங்களாக கஷ்டப்படுகிறது. இதற்கு தகுந்த பதிலடியாக 10 மில்லியன் அப்பாவிகளையும் ஒரு சைக்கிள் ரிக்சா ஒட்டுபவரையும் கொல்லப் போகிறோம்.

நிருபர்: என்ன! சைக்கில் ரிக்சா ஒட்டுபவரை ஏன் கொல்ல வேண்டும்?

வாஜ்பாய்: "பார்த்தீங்களா புஷ்! நான் சொன்னேன்ல. மக்கள் 10 மில்லியன் அப்பாவிகளைக் கொல்வதைதப் பற்றி கவலைப் படமாட்டார்கள்" என்று சொன்னது உண்மையாகிவிட்டது!" என்றார்.

உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டவுடன் அவசரமாக புஷ்ஷுக்கு போன் செய்த பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷராப்.

முஷராப்: ஸாரி புஷ்! எவ்வளவு உயர்ந்த அழகான கட்டிடங்கள். அதில் வேலை பார்த்த அப்பாவிகள். ரொம்ப சாரி!

புஷ்: என்ன கட்டிடங்கள? பணியாளர்கள்? ஒன்றுமே புரியவில்லையே?

முஷராப்:(அவசரமாக) என்ன புரியலையா? அங்க மணி என்ன இப்போ?

புஷ்: காலை எட்டு மணி.

முஷராப்: ஓ சாரி. அப்ப இன்னும் ஒரு மணி நேரம் கழித்து போன் பண்ணுகிறேன்.

Read more...

அமைச்சர் தோற்றது ஏன்?

Tuesday, December 20, 2005

வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் தங்கி சமூக சேவையில் ஈடுபட்ட ஒரு கிறிஸ்தவப் பாதிரியாருக்கு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்து தரப்பினரும் சமய/இன பாகுபாடின்றி வழியனுப்பி வைக்க ஊர் மத்தியில் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சுற்றுவட்டார பதினெட்டு தொகுதி மக்களும் கூடி இருந்தனர்.

(இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பதினெட்டு பட்டின்னு சொல்லி வருவது?)

தொகுதி அமைச்சரைத் தவிர அனைத்து அழைப்பாளர்களும் சரியாக வந்து விட்டனர்.
நிகழ்ச்சி தொடங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் பரபரப்பாக அமைச்சரை எதிர்பார்த்து இருந்தனர்.

மழைக்காலமாதலால் மழை வரும் போல் இருந்தது. நிகழ்ச்சியும் தொடங்கி விட்டது. முக்கியஸ்தர்கள் பாதிரியாரைப் புகழ்ந்தும் நன்றி சொல்லியும் பேசினர். தொகுதி அமைச்சர் மட்டும் இன்னும் வரவில்லை. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் செல்போன் ஒலித்தது. மறுமுனையில் அமைச்சர். எதிர்பாராத விதமாக முதல்வர் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்திலிருந்து வரும் வழியில் டிராஃபிக் ஜாம் ஆகி விட்டதால் எப்படியும் வழியனுப்பு விழாவில் கலந்து கொள்வேன் என்று சொல்லி விட்டு போனைத் துண்டித்தார்.

அமைச்சர் இல்லாமல் வழியனுப்பு விழா முடிந்தால் அவ்வளவு நன்றாக இருக்காது. இந்த சமயசார்பற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டால்தான் அடுத்த தேர்தலிலும் அமைச்சருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். மிக முக்கியமாக இன்றோடு தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதை மனதில் கொண்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பாதிரியாரின் சிறப்புரைக்குப் பின் தொகுதி அமைச்சர் நன்றியுரை வழங்குவார் என்று அறிவிப்புச் செய்து பாதிரியாரை பேச அழைத்தார்.

பாதிரியார் மைக்கப் பிடித்து தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார். தான் பாதிரியாராக வந்தமுதல் நாள் சந்தித்த ஒரு பாவமன்னிப்பு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார். வழக்கம் போல் பிரார்த்தனைக் கூட்டம் முடிந்து பாவமன்னிப்பு வழங்கும் கூண்டில் அமர்ந்திருந்த போது ஒரு நபர் வந்து "ஃபாதர்! நான் கொடும்பாவங்கள் செய்து விட்டேன்! எனக்கு மன்னிப்பு வழங்குங்கள்! என்று கெஞ்சினார்" என்றும் அவர் செய்த பாவங்களைக் கேட்டபோது என்னடா வாழ்க்கை இது இவ்வளவு கொடியவனும் இருக்கிறானே?" என்று வெறுத்து பேசாமல் இந்த பணியையே விட்டு விடலாமா என்று யோசித்ததாகச் சொல்லி, அந்தப் பாவியின் பாவங்களைப் பட்டியலிட்டார்.
  • சுமார் 100 பேரிடம் பிக்பாக்கெட் அடித்தது.
  • பொய் சாட்சி மற்றும் ஆள்மாறாட்டம்.
  • பத்துக்கும் மேற்பட்ட கற்பழிப்புகள்
  • கணக்கற்ற கொலைகள்

பாதிரியாருக்கு மூச்சு வாங்கியது. இப்படிப்பட்ட பாவிகளும் நம் நாட்டில் இருக்கின்றனர். அவர்களையும் கடவுள் விட்டு வைத்திருக்கிறார் என்று தன் நீண்ட அனுபவங்களைச் சொல்லி அமர்ந்தார்.

அமைச்சர் தாமதமாக வந்ததுக்கு அவையோரிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு, தன் பங்குங்குக்கு பாதிரியாரை புழந்து தன் நன்றியுரையைத் தொடங்கினார்.



நம் அன்பிற்குறிய பாதிரியார் நமதூரை விட்டுச் செல்வது நமக்கு பேரிழப்பாகும். யாரும் அறியாத ஒரு ரகசியத்தைச் சொல்ல விரும்புகிறேன். நம் பாதிரியாரிடம் முதல் பாவமன்னிப்பு கோரியது யார் தெரியுமா? இதோ உங்கள் முன் இருக்கும் உங்கள் அன்பிற்குறிய அமைச்சராகிய நானே!!!
என்றார்.

இரண்டு நாள் கழித்து நடந்த வாக்களிப்பில் அமைச்சர் டெப்பாசிட் இழந்தார். அவர் சார்ந்திருந்த கட்சியும் ஆட்சி செய்யும் வாய்ப்பை இழந்தது. செயற்குழு கூடி அமைச்சரை கட்சியின் அடிமட்ட உறுப்பினர் பதிவிலிருந்தும் நீக்கப்பட்டார்.

முன்னாள் அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை. உங்களுக்கு புரிந்தால் சரி.

Read more...

இதையும் நம்பினால் நம்புங்கள்

Sunday, December 18, 2005

பிரேஸில் பெட்ரோல் எண்ணைக் குழாயில் அடைப்பு ஏற்பட்டதை சரி செய்ய முயன்றபோது கிடைத்த அதிர்ச்சி!

1) இது ஈராக் பெட்ரோலைக் குடிக்கும் அமெரிக்க முதலையல்ல.



2) பெட்ரோல் பம்பு தெரியும் இவை பெட்ரோல் பாம்பு


3)கொரக்கடைல் பர்ஸ்?


4)எதையும் முழுசா திண்ணக் கூடாது.

Read more...

பின்னூட்டம்

Saturday, December 10, 2005

இப்படத்திற்கான பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.



:-)))

Read more...

சொல்றதுக்கு ஒன்றுமில்லை!

Monday, December 05, 2005

மெய்யாலுமே சொல்றதுக்கு ஒன்னுமில்லேதான். நம் நாட்டில் மரணக்கிணறு பார்த்திருக்கிறோம். ஜெர்மனியிலுள்ள இந்தக் கிணற்றைப் பாருங்கள்.




பின்குறிப்பு: பிரம்மித்துப் போய் வாயைப் பிளந்து விடாதீர்கள். யாராவது அதுலயும் காரை பார்க்கிங் பண்ணிடப்போறாங்க!


அப்புறம் வழக்கம்போல பின்னூட்டமிட்டு வாழ வையுங்க!

Read more...

இனி நான் ஸ்கூலுக்கு போகமாட்டேன்...

Friday, December 02, 2005

அதிகாலையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் மகனை பள்ளிக்குச் செல்ல அன்பாக எழுப்பினாள் அந்த தாய். உரையாடல் இதோ:

தாய்: செல்லம்! எழுந்திருப்பா. ஸ்கூல் போக நேரமாயிடுச்சு

மகன்: போம்மா! நான் ஸ்கூல் போகமாட்டேன்!

தாய்: ஓ...அப்படீன்னா ஏன் போகமாட்டாய் என்பதற்கு ரெண்டு காரணங்கள் சொல்லனும்!

மகன்: ஹைய்யா...காரணம் ஒன்னு- குழந்தைகள் என்னை வெறுக்கிறார்கள். காரணம் இரண்டு- டீச்சர்களுன் என்னை வெறுக்கிறார்கள்!

தாய்: ஆஹ்..இவையெல்லாம் சரியானக் காரணங்களல்ல. எழுந்திருப்பா. ஸ்கூல் போக டயம் ஆயிடுச்சு!

மகன்: ம்ஹூம்...அப்படீன்னா ஏன் ஸ்கூல் போக வேண்டும் என்பதற்கு ரெண்டுக் காரணங்கள் சொல்லு!

தாய்: முதல் காரணம் நீ ஸ்சூலுக்கு இன்னும் சில வருடங்கள்தான் போகப்போகிறாய்.ஏன்னா உனக்கு இப்ப 52 வயது! இன்னொரு முக்கியமானக் காரணம் நீதான் அந்த ஸ்கூலுக்கு பிரின்ஸிபால்!



அதிரைக்காரன்: "என்ன வாசகரே! நீங்களும் வெறுத்துட்டீங்களா?" ;-)

Read more...

அ.மு. & அ.பி.

Thursday, November 24, 2005

இவை சங்கேத குறியீடுகள் அல்ல. அ.மு=அரசியலுக்கு முன், அ.பி. = அரசியலுக்குப் பின்!

நமது மாண்புமிகு அரசியல்வாதிகள் சாதாரணமாக அரசியல்வாதிகளாகி விடவில்லை. கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள்.

சமீபத்தில் திருச்சியில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய எம்பி எஸ்.எஸ்.சந்திரன் அமைச்சரின் 'கடந்த காலம்' குறித்துப் பேசி அமைச்சர்களை சங்கடத்தில் நெளிய வைத்தார்.

அதிமுகவின் உழவர் பாதுகாப்புத் திட்டம் குறித்து விளக்கவே அந்தக் கூட்டம் நடந்தது. அமைச்சர் ஓ.பி உள்ளிட்ட பல மாண்புமிகுக்கள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் எஸ்.எஸ். சந்திரன் தனது வாயை கோணியபடி பேசியதில் அறிந்து கொண்ட அரிய தகவல்கள்:

1) நான் திமுகவுல இருந்து விலகினபோது இந்த ராதாரவிப் பய என்னை அழைச்சுட்டுப் போயி வைகோகிட்ட விட்டுட்டு ஓடிப் போய்ட்டான். அங்கே சில காலம் இருந்து அவஸ்தைப் பட்ட பிறகு உயிர் தப்பினா போதும்னு வெளியேறி அதிமுகவுல சேர்ந்தேன். (டைக்கல திராவிட முன்னேற்றக் ழகம்!!!)

2) 35 வருசமா கருணாநிதி கூட இருந்து கவுன்சிலர் கூட ஆக முடியலை. ஆனா, அம்மாகிட்ட வந்த சில மாதத்திலேயே எம்பியாகிவிட்டேன். (பலே..பலே..)

3) நான் மட்டுமா?. இதோ மேடையிலே இருக்காரே அமைச்சர் அண்ணாவி. அவர் என்ன செஞ்சுகிட்டு இருந்தார் தெரியுமா?. பஸ்சுல விசில் அடித்து கண்டக்ரடா இருந்தார். இப்ப எவ்வளவு சொகுசா வாழ்றார் தெரியுமா என்றார். (சூப்பர் ஸ்டார் அமைச்சர்?)

4) அப்போது அண்ணாவி ஒரு பக்கம் நெளிய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்னொரு பக்கம் நெளிந்தார். (இவர் பெரியகுளத்தில் டீக் கடை நடத்தியவர், டீ மாஸ்டரும் இவரே).

இதுக்குப் பேருதான் உள்குத்தா? பின்னூட்டம் ப்ளீஸ்...

Read more...

ஈமெயில் கிடைத்ததா? இனி கவலையில்லை!!!

Monday, November 21, 2005

அதிக கொள்ளளவு கொண்ட இணைய மெயில்களை வழங்குவதில் Gmail,Rediffmail மற்றும் Yahoo! ஆகிய தளங்கள் முன்னிலையில் இருக்கின்றன. இவற்றிலெல்லாம் இல்லாத ஒரு வசதியை www.gawab.com என்ற தளம் வழங்குகிறது தெரியுமா!

பொதுவாக நாம் அனுப்பும் ஈமெயில்களை பெறுநர் கிடைக்கப் பெற்றாரா? என்று அறிந்து கொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் உண்டு. மேலும் சில உதவி கோரும் ஈமெயில்களை பெறுநர் இன்னும் படிக்கவில்லை என்று சொல்லி தட்டிக் கழிப்பர். எல்லாவற்றையும் விட முக்கியமாக வேலைக்கு அப்ளிகேசன் போட்டு விட்டு சம்பந்தப்பட்ட பெறுநர் நம் அப்ளிகேசணை பெற்றுக் கொண்டாரா என்ற கவலையும் இருக்கும்.

இவற்றை எல்லாம் தீர்த்து வைக்க அவுட்லுக் போன்ற இணைய மடல் திரட்டிகள் உதவுகின்றன. ஆனால் பெருநர் "Read Receipt Request!" என்ற அனுப்புனரின் கோரிக்கையை ஏற்றால் மட்டுமே சாத்தியம். www.gawab.com வழங்கும் இணைய மெயில் சேவையில் பெறுநர் உங்கள் மெயிலை திறந்து பார்த்ததும் தானாகவே அனுப்புனருக்கு மேற்கண்ட தகவலை அனுப்பி விடுகிறது.

இது அல்லாமல் உங்களின் ஹாட்மெயில் மடல்களையும் இம்மெயிலுக்கு பார்வர்ட் செய்வதன் மூலம் ஹாட்மெயிலிலிருந்து வரும் அனாவசிய இடநெருக்கடி (Clear Your Inbox!) எச்சரிக்கைகள் தவிர்க்கப்படும். யாஹூ குழுமங்களையும் இணைக்கலாம் என்று சொல்லியுள்ளார்கள். அதிக விபரம் தெரியவில்லை. அனுபவஸ்தர்கள் விசயங்களை பகிர்ந்து கொண்டால் பயணாக இருக்கும்.

(தொடர்ந்து வெட்டியாக இருக்கக் கூடாது என்பதால் காலங்கடந்த ஆனால் பயனுள்ள தகவல் என்று நினைக்கிறேன்!)

Read more...

வரிக்குதிரை என்ன கலர்?

Sunday, November 20, 2005

முந்தைய பதிவுகளில் இரண்டு போட்டோக்களைப் பார்த்து வியந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்தப் பதிவிலும் போட்டோ ஒரு இடம் பெற்றுள்ளது. கவனமாகப் பாருங்கள். ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க விரும்புகிறேன். ரொம்ப ஈசியான கேள்விதான். ஆனால் என்னிடம் பதில் இல்லை. உங்களிடம் இருந்தால் பின்னூட்டமிடுங்கள்.




"வரிக்குதிரையின் உடம்பில் இருக்கும் கோடுகள் கருப்பா? வெள்ளையா?"

பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டமிடுங்கள்; தெரியாதவர்கள் படத்தை பெரிதாக்கி வரிக்குதிரையின் கால் வழியே நுழைந்து வாய் வழியே வெளியேற முயற்சி செய்யுங்கள்!

(அட விளையாட்டுக்குத்தாங்க!)

Read more...

கொடும்பாவி ஆன்லைன்

Saturday, November 19, 2005

கொடும்பாவி எரிப்பது தற்போது புதிய கலாச்சாரமாகி விட்டது. யாரை எப்போது எங்கு கொடும்பாவி எரிப்பாங்கன்னே தெரிய மாட்டேங்குது.



குஷ்புக்கை ஜாக்கெட் பிரபலமாகும் போதே அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு அடிபட்டது. மு.க. ஸ்டாலினுக்கு எதிராக ஆளுங்கட்சியால் களமிறக்கப்படுவார் என்ற நேரத்தில் கற்பு பற்றி வாய்விட்டு சர்ச்சையில் மாட்டிக் கொண்டுள்ளார்.

(குஷ்பு=ஸ்டாலின்? அரசியல் கொடுமையடா! பாவம் தமிழ்நாட்டு மக்கள்!!!)

நம் மக்கள் விரும்பினால் கோவில் கட்டிக் கும்பிடுவார்கள். கோபம் வந்தால் கொடும்பாவியும் எரிக்கத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு குஷ்பு நிகழ்கால உதாரணம். ரஜினி சொல்லித்தான் மக்கள் அதிமுகவை வீட்டுக்கு அனுப்பினார்கள் என்ற மாயையை அடுத்த தேர்தலிலும் படத்திலும் ரஜினியை கிட்டத்தட்ட இமய மலைக்கு நிரந்தரமாக அனுப்பப் போனார்கள். மனுசன் தப்பிச்சுக்கிட்டார்!

குட்டைப்பாவாடை பற்றிய மதகுருமார்களின் கருத்துக்கு சானியா காட்டமாக பதில் சொன்னதாக நேற்று முன் தினம் படித்தேன். மறுநாள் நான் அப்படிச் சொல்லவே இல்லை. பத்திரிக்கைகள் திரித்து எழுதி விட்டன என்றார்.

http://www.deccanherald.com/deccanherald/nov182005/index21153820051117.asp

தன் மானம் குட்டைப்பாவாடை வழியாக காற்றில் பறந்தாலும் பரவாயில்லைன்னு அமெரிக்காவரை சென்று டென்னிஸ் விளையாடிய சானியாவை இந்தியப் பெண்களின் மாடலாகச் சொன்னவர்கள் நேற்று ஆந்திராவில் சானியாவின் கொடும்பாவியைக் கொழுத்தி இருக்கிறார்கள். இந்தியக் கலாச்சாரத்தையும் இந்தியர்களின் உணர்வுகளையும் புண்படுத்தி விட்டாராம். அதனால் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சொல்லி அகில பாரத வித்யார்த்தி பரிசத் கோரியுள்ளது.

Shouting “Down, down Sania” the ABVP protesters in Visakhapatnam slapped the posters with chappals and then burnt them. They demanded that she tender an apology for “hurting Indian tradition” by favouring sex before marriage. “She has hurt the sentiments of Indian people,” a protester said.

தான் குஷ்பு சொன்னதை ஆதரிக்கவில்லை இதையும் பத்திரிக்கைகள் திரித்து எழுதிவிட்டன என்று மறுத்துள்ளார்.

சானியா சொன்னது இதுதான் "Look, whether it's before or after marriage, people should have safe sex. And about pre-marriage sex, you can't stop people and hence the best way is to play it safe."

http://sify.com/news/fullstory.php?id=14012855

அடிப்பாவி குஷ்புவும் கிட்டத்தட்ட இதைத்தானே சொன்னார்(ள்)! ஒன்னுமே புரியலேடா சாமி!

உலக அழகி கிளெபோவாவும், Formula One புகழ் நரேன் கார்த்திக்கேயனும் குஷ்பு சொன்னதை ஆதரித்ததாகவும் சொல்றாங்க. இன்னும் ஓரிரு நாட்களில் இவர்களுக்கும் கொடும்பாவியா என்பது தெளிவாகிவிடும்.

எதுக்கும் யாராச்சும் ஆன்லைன்ல கொடும்பாவி எரிக்க வசதி உண்டாண்னு பார்த்துச் சொல்லுங்க!

Read more...

தத்துவ மழை!

Thursday, November 17, 2005

மழைபெய்வதை பற்றி கருத்துக் கேட்டால், ஒவ்வொருவரும் எப்படி பேசிக் கொள்வார்கள் என முன்பு எங்கோ படித்த ஞாபகம். அத்தோடு என்பங்குக்கு இன்னும் சில கருத்துக்கள்.




தொழிலாளிகள்

டெய்லர்: "கிழி கிழின்னு கிழிச்சிடுச்சு"

பெயிண்டர்: "கலக்கிடுச்சு"

லாண்டரிக்காரர்: "துவைச்சு எடுத்துடுச்சு"

நெசவாளர்: "பின்னி எடுத்துடுச்சு"

போலீஸ்காரர்: "மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டுச்சு"

அரசியல்வாதிகள்

ஓ.பன்னீர் செல்வம்: "அம்மா மனசுபோல வானமும் தாரளமா இருக்கு!"

கருணாநிதி: "காட்டாற்று வெள்ளத்தில் ஆளுங்கட்சியின் அராஜகமும் விரைவில் அடித்துச் செல்லப்படும்"

ஜார்ஜ் புஷ்:" உலகலாவிய தீவிரமழைக்கு எதிரான போரை அமெரிக்கா தொடர்ந்து நடத்திச்செல்லும்"


நடிகர்/நடிகைகள்:


ரஜினி: "மழை எப்போ வரும், என்கு வருமுன்னு யாருக்கும் தெரியாது. ஆனா கண்டிப்பா வரும்"

டி.ஆர்: "வானம் பொழிகிறது; தமிழர் மானம் அழிகிறது. ரோடெல்லாம் வெள்ளம்; சிம்புவுக்கு நல்ல உள்ளம்"

குஷ்பு:"கல்யாணத்துக்கு முன்பு மழையில் நனைந்து ஆட்டம் போடுவது சகஜம். பாதுக்காப்பாக நனைய வேண்டும். தனக்கு வரப்போகும் மணைவி மழையில் நனையாமல் இருக்க வேண்டும் என்று எந்த படித்த ஆண்மகனும் எதிர்பார்க்க மாட்டான். தமிழ்ப் பெண்கள் அனைவரும் மழையில் நனைந்தவர்கள்தான்!"

சுஹாசினி: " குஷ்பு சொன்னதில் தவறு இல்லை. அரசியல்வாதிகளுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு?"

Read more...

ஆட்டைக் கழுதையாக்கிய ஊர்

Tuesday, November 15, 2005

ஆட்டைக் கழுதையாக்கிய ஊர் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? அந்த புண்ணிய பூமியில்தான் அடியேன் அவதறித்தேன். சரி இப்போ அதுக்கு என்னன்னு கேட்காதீங்க. படத்தை நல்லா பாருங்க. ஏதாச்சும் வித்தியாசம் தெரிஞ்சா மறக்காம (கமெண்ட்) பின்னூட்டம் இடுங்க.






வழக்கம்போல சிறந்த/அதிக பின்னூட்டம் இடும் பாக்கியசாலிக்கு ****** உண்டு!!! ஆனால் ஒரு கண்டிசன் முதல் மற்றும் கடைசி பின்னூட்டதாரர்களுக்கு மட்டுமே பகிர்ந்து கொடுக்கப்படும். ஆட்டைக் கழுதையாக்கிய "அதிராம்பட்டினத்தில்" பிறந்தவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ள முடியாது?! (ஏற்கனவே கழுதையாக்கியது போதும்!)

இறைநேசன்: ஆஹா, போன தபா ஞானபீடம் முந்திக்கொண்டுவிட்டார். இந்த தபா விடக்கூடாது!

ஞானபீடம்: ஓஹோ..அப்படியா சங்கதி. கீழே போயி பாருங்க ஏற்கனவே நம்ம கமெண்டு வந்துடுச்சு!

Read more...

பாருங்க சார்! மாயமில்லை மந்திரமில்லை

Thursday, November 10, 2005

கீழுள்ள போட்டோவை உங்கள் கம்ப்யூட்டர் அருகே இருந்து நோக்கினால் சடகோபன் (Mr.Angry) வலது பக்கத்திலும் சாந்தா (Mrs.Calm) இடது பக்கத்திலும் தெரிவார்கள்.

அப்படியே 12 அடி தள்ளிப்போய் அதே போட்டோவை நோக்கினால் சடகோபன் இடது பக்கத்திற்கும் சாந்தா வலது பக்கத்திற்கும் போய் விடுவார்கள்.



Dr Aude Oliva (MIT) மற்றும் Dr Philippe Schyns (University of Glasgow) ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவான பொய்த்தோற்ற பிம்பம் (Optical Illusion).

மறக்காமல் பின்னூட்டமிட்டு தமிழ்மணத்தில் இப்பதிவை வாழவையுங்கள்.சிறந்த பின்னூட்டத்திற்கு வழக்கம் போல _____ உண்டு.

பின்னுட்டமிட யோசிப்பவர்: "_____?"

Read more...

குடி'மகள்'கள்

Friday, October 21, 2005

ஆண்களுக்கு நிகராக பெண்கள் எல்லா துறையிலும் சிறந்து விளங்குகிறார்கள். என்பதற்கு பல்வேறு எடுத்து காட்டுகளை கூறமுடியும். அடுப்பறையில் முடங்கி கிடந்த பெண்கள் விண்வெளியில் கால் பதிக்கிறார்கள். இன்றைய விஞ்ஞான உலகத்தில் பெண்கள் இல்லாத துறையே இல்லை. ஆனால் கீழுள்ள செய்தியைப் படித்ததும் அதிராமல் இருக்க முடியவில்லை.

சேலம் மாவட்டத்தில் "டாஸ்மார்க்" கடைகள் 238 உள்ளன. இவற்றில் கடந்த 2003 டிசம்பர் முதல் 2005 செப்டம்பர் வரை மதுபான விற்பனை ரூ.450 கோடியை எட்டி உள்ளது என்கிறார்கள். இவற்றில் 400 கோடி விஸ்கி, ரம், பிராந்தி விற்பனை மூலம் வந்தது. 50 கோடி 'பீர்' விற்பனையில் மட்டும் எட்டப்பட்டுள்ளது.

புள்ளி விவரமாய்ச் சொன்னால் 15 லட்சத்து 13 ஆயிரத்து 277 பெட்டிகள் (ஒரு பெட்டிக்கு 12 பாட்டில்கள் என்றால், 15 லட்சத்து 13 ஆயிரத்து 277 பெட்டிகளை 12 ஆல் பெருக்கிக் கொள்ள வேண்டும்) பிராந்தி, விஸ்கியும், 8 லட்சத்து 25 ஆயிரத்து 277 பெட்டி பீர்களும் விற்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாதமும் அரசு நிர்ணயித்த குறியீட்டை விட கூடுதலாக 20 சதவீதம் (120 சதவீதம்) விற்று மாநிலத்தில் 2-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது சேலம் மாவட்டம். ஆனால் இந்த சாதனைக்கு பின்னால் ஒரு அதிர்ச்சியான தகவலும் இருக்கிறது. இந்தளவு விற்பனைக்கு பெண்களும் காரணம் என்பதுதான் அது.

மதுப்பழக்கத்துக்கு அடி மையான கீழ்தட்டு வர்க்க பெண்களுக்கு லோக்கல் மதுக்கடைகள் என்றால், மேல்தட்டு பெண்களுக்கு இருக்கவே இருக்கிறது ஸ்டார் ஓட்டல் பார்கள். ஒருவருக்கு ஒருவர் அருகில் இருந்தால் கூட முகம் தெரியாத அளவுக்கு பரவி கிடக்கும் இருட்டு மறைத்து இருக்கும் ஸ்டார் ஓட்டல் பார்கள். அது போன்ற நாகரீக மங்கைகளை வெளியே அடையாளம் காட்டாது.

ஆனால, இந்த உண்மை சில பார்ட்டிகளின்போதும் மற்ற நிகழ்ச்சிகளின்போதும் வெளியே வந்துவிடுகின்றன. நாகரீகம் என்று கூறி பீர், ஒயின், ஓட்கா என்று "ஆல்கஹால்'' அதிகம் இல்லாதவைதான் என்று அவர்கள் சமாதானம் கூறினாலும் மருத்துவ உலகம் எச்சரிக்கை விடவே செய்கின்றன.

வெளிநாட்டில் இருந்து இந்தியா வுக்கு வந்த (ஆங்கிலேயர்கள் உள்பட) அனைத்துமே ஒன்று இந்தியாவை சுரண்டுவதாக இருக்கும். அல்லது இந்தியர்களின் உடல் நலனை சுரண்டு வதாக இருக்கும்.

இந்த வெளிநாட்டு மது பானங்களும் அப்படித்தான். இந்திய இளைஞர்களின் உடல்நலத்தை மெதுவாக சுரண்டுகிறது. இப்போது அது இளைஞிகளையும் சுரண்டுகிறது என்பது தான் அதிர்ச்சியான விஷயம்.

இளைஞர், இளம் பெண் கள் என வலைவிரிக்கும் மதுபான அரக்கனுக்கு அடிமையாகும் சிறுவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் எகிறுகிறது என்பது கூடுதல் ஷாக் செய்தி. பாருக்கு வரும் பலருக்கு 15 வயதைக் கூட தாண்டமல் இருப்பது அதிர்ச்சியான விஷயம்.

என்ன விசேஷம் என்று கேட்டால் `பர்த்டே பார்ட்டி' என்று கூலாக பதில் வருகிறது. பார்ட்டின்னா இப்போது கோகோ கோலாக்கள் மறக்கப்பட்டு... மரங்கொத்தி பீர்களும், கருப்பு இரவு பீர்களும் சிறுவர்களுக்கு ஞாப கத்துக்கு வருவதுதான் கலி காலம்.

இந்த ரிசல்ட் யாருக்கு லாபத்தை ஏற்படுத்தி இருக்கிறதோ, இல்லையோ... `டாஸ்மாக்' நிறுவனத்துக்கு லாபத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது. இதற்கு மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ஈட்டிய தொகை ஒரு எடுத்துக்காட்டு.

ஆனால் ஒவ்வொருவராக ஆக்ரமித்து இப்போது இளைஞர்கள், சிறுவர்களை யும் வலை விரித்து இருக்கும் மது அரக்கனால் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் எதிர்காலத்தில் பெரும் அபாயம் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Read more...

டாலர் கனவும் தேசப்பற்றும்

இன்று பிற்பகல் சன் செய்திகளில் "இந்திய இராணுவத் தேர்வுக்கு வந்தவர்கள், திருப்பி அனுப்பப்பட்டார்கள்" என்ற செய்தியை பெரும்பாலோர் கவனித்திருக்க மாட்டார்கள். அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

தேர்வு மறுக்கப்பட்டதற்குச் சொல்லப்பட்ட காரணம் +2 படித்த மாணவர்களை மட்டுமே,அதுவும் கணிதம்,பெளதீகம் படித்த முதல்பிரிவு கல்வி கற்றவர்களை மட்டுமே சேர்ப்பார்களாம். SSLC தேறியவர்களுக்கு அனுமதியே இல்லையாம்!

முட்டால்தனமான காரணமாகப்பட்டது. உயர் கல்வி படித்துவிட்டு அமெரிக்கா, இலண்டன், ஆஸ்திரேலியா என டாலர் வேலைக்காக வெளிநாட்டு தூதுவாலயங்களில் கால் வலிக்க கோர்ட் சூட் அணிந்து நுனிநாக்கு ஆங்கிலம் பேசி, டிகிரி மற்றும் பாஸ்போர்ட்டுடன் நிற்கும் நம் இளம் தலைமுறையினரின் டாலர் கனவுக்களுக்கிடையில், தேசத்திற்கு சேவை செய்யும் உன்னத பணிக்கு ஆர்வமாக வந்தவர்களை இப்படி திருப்பி அனுப்பலாமா?

தீவிரவாதம்,வழிப்பறி,கொலை,கொள்ளை என் சமூக குற்றங்களைத் தடுக்க மூச்சுத்திணரும் மத்திய மாநில அரசுகள் இதுபோல் தேசத்தொண்டாற்றும் ஆர்வத்தில் வருபவர்களை முகத்திலறைந்தாற்போல் செய்யலாமா? இந்த ஏமாற்ற மனநிலையில் ஊர் திரும்பும் அவர்களில் எத்தனை பேர் மனம் மேற்சொன்ன சமூக குற்றங்களைச் செய்ய சிந்தித்திருக்கும்?

இராணுவத்தில் சேர வருபவர்கள் வேறு வேலைக்கே வழி இல்லாதவர்கள் என்பது ஓரளவு உண்மை என்றாலும், நல்ல மரியாதை சலுகைகள் கிடைக்கின்றன என்ற சுயநலக் காரணங்களும் இருக்கவே செய்கின்றன். இருந்தபோதிலும் நாட்டைக்காக்கும் அரும்பணியில் உயிர் நீர்த்தால் அவை அனைத்தாலும் அவர்களுக்கு பிரயோஜனமில்லை.

இராணுவத்தில் சேர்வதை ஏதோ வர்த்தக நிறுவத்தில் வேலைச் செய்வது போன்ற மனநிலையில் வரும் புதிதாக சேர விரும்புபவர்கள் கைவிட வேண்டும்.

மேலும் மத்திய மாநில அரசுகள் குறைந்த பட்சம் தேசப்பாதுக்காப்பில் பள்ளிப்படிப்பின் அங்கமாக வைத்தால், துறை வல்லுநர்கள் கல்வி முடிக்கும் போது இராணுவத்தில் தொடரலாமே?

இவ்வாறு ஒரு சில வருடங்கள் தேசியப்பாதுகாப்புப் பயிற்சி பெற்று குடும்ப நிலையை உயர்த்த தனியார் நிறுவனங்களில் இணையத் தகுதி உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?

Read more...

விலை உயர்வைச் சமாளிக்க வழிகள்

Thursday, October 20, 2005

பெண்கள் சேலை எடுப்பது, சினிமாவுக்குப் போவதைக் குறைத்துக்கொண்டால் கேஸ் விலை உயர்வைச் சமாளிக்க முடியும் என்று மணிசங்கர் அய்யர் சொன்னதற்காக சென்னையில் அவரின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

இனி விலை உயர்வு வரும்போதெல்லாம் எப்படி கருத்துச் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்வது என நம்மால் ஆன ஆலோசனைகள்:

பேரூந்து கட்டண உயர்வு: மூன்று வீல் ஆட்டோவில் பயணம் செய்தால் அதிக கட்டணம் கொடுக்க முடியும் போது, நான்கு வீல் பேருந்துக்கு கட்டண உயர்வு நியாயமே!

இரயில் கட்டண உயர்வு: உல்கிலேயே மிகப்பெரிய நிறுவனம் இந்திய இரயில்வே. அந்த பெருமையை தக்கவைத்துக் கொள்ள, கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது.

தொலைபேசிக் கட்டண உயர்வு: இண்டெர்நெட்டில் செய்தியை அணுப்புவதால் ஃபாண்ட் பிரச்சினை இருக்கும். ஆனால் தொலை பேசியில் ஃபாண்ட் பிரச்னை இல்லையாதலால், வசதியைக் கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

விலைவாசி உயர்வு: அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், வியாபாரிகள் இலாபம் அடைகிறார்கள். வியாபரிகளும் நம் நாட்டு குடிமக்களே. சக குடிமக்களுக்கு இலாபம் கிடப்பதை நாம் மனப்பூர்வமாக வரவேற்கவேண்டும்.

தங்கம் விலை உயர்வு: தகரம் விலை குறைவாக இருப்பதால் யாரும் அதை மதிப்பதில்லை. ஆகவே, தங்கம் விலையை உயர்த்துவதன் மூலம் அதன் மதிப்பு இன்னும் கூடும்.

மணிசங்கர் அய்யர் சொன்னதற்கும் இப்பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பி சிண்டைப் பிய்த்துக் கொள்பவர்கள் கீழ்கண்ட கட்டண உயர்வையும் பொறுத்துக் கொள்க!

முடிவெட்டும் கட்டண உயர்வு: மேலே சொன்ன அனைத்துவகை விலை உயர்வால், எமது புதிய கட்டண உயர்வை வாடிக்கையாளர்கள் பொறுத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் = ரூ.20/- (ரஜினி,பாக்கியராஜ் ஸ்டைல்)
டிஸ்கோ= ரூ.18/- (கமல், மோகன் ஸ்டைல்)
கட்டிங் = ரூ.12/- (காது வெட்டுப்படாமல்)
மொட்டை=ரூ.10/- (ஒரு மாதம் கியாரண்டியுடன்)
ஷேவிங் = ரூ.7/- (புதிய பிளேடு+லோசன்)
,, ,, = ரூ.5/- (பழைய பிளேடு+ஹமாம் சோப்பு நுரை)
ஹீட்டர் = ரூ.3/- (முடியைப் பிடித்து இழுக்காமலும், சூடு வைக்காமலும்)

இவண்,
தமிழ்நாடு மருத்துவ (பட்டதாரிகள்?) முடிவெட்டுவோர் சங்கம்

பின்குறிப்பு: தற்போதுதான் தமிழ்மணத்தில் என் வலைப்பூவில் பச்சை பல்பு எறியுது. அனேகமா இப்பதிவைப் பார்த்துட்டு காசி மறுபரிசீலனை செய்யாமல் இருக்க வேண்டிக் கொள்வோமாக!

Read more...

"பசு" இஸம்

Tuesday, October 18, 2005

இதுவரை உலகில் பல இஸங்கள் இருந்துள்ளன. அவற்றை அறிந்து கொள்ள ஒரு எளிய வழி.

உங்களிடம் இரு பசுக்கள் இருந்து, அதில் ஒன்றை இல்லாதவருக்குக் கொடுத்தால் அது "சோசியலிஸம்" [SOCIALISM]

உங்கள் இரண்டு பசுக்களையும் அரசு எடுத்துக் கொண்டு, உங்களுக்கு இலவசமாக பால் கொடுத்தால் அது "கம்யூனிஸம்" [COMMUNISM]

உங்கள் இரு பசுக்களையும் அரசே எடுத்துக் கொண்டு, பாலை உங்களிடம் விற்றால் அது "பாசிஸம்" [FASCISM]

உங்கள் இரு பசுக்களையும் அரசு எடுத்துக் கொண்டு, நீங்கள் சுடப்பட்டால் அது "நாஜிஸம்" [NAZISM]

உங்கள் இரு பசுக்களையும் அரசு எடுத்துக் கொண்டு, ஒன்றை சுட்டு விட்டு, மற்றொன்றின் பாலைக் கறந்து வீணடித்தால் அது "பைருக்ராட்டிஸம்" [BUREAUCRATISM]

உங்களிடம் இரு பசுக்களில் ஒன்றை விற்று ஒரு காளை வாங்கி, இனப்பெருக்கம் செய்ய வைத்து உங்கள் பொருளாதாரத்தை உயர்த்தி, பிறகு அவற்றை விற்று ஓய்வு பெற்று வருமானம் கொழித்தால் அது முதலாளியத்துவம். [CAPITALISM]

Read more...

Microsoft இன் சுயநலம்

Wednesday, October 12, 2005

டாஸ், (DOS) மற்றும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் (MS Windows) ஆபரேட்டிங் சிஸ்டம் பயனர்கள் கீழ்கண்ட பெயர்களில் புதிய டைரக்டரியோ (Folder) அல்லது கோப்பின் பெயரோ (Filename) உண்டாக்க முடியாது. மேலும் ஏற்கனவே இருக்கும் கோப்பின் பெயரையும் மறுபெயரிட (Rename) முடியாது.

  • Aux
  • Nul
  • Con
  • COM0 to COM9
  • LPT0 to LPT9
  • PRN

இந்த குறைபாட்டை "இந்தியர்" ஒருவர்தான் முதலில் சுட்டிக்காட்டினார் என்றும் இதற்கு மைக்ரோசாப்டின் தொழில்நுட்ப வல்லுனர்களிடமிருந்தோ அல்லது பில்கேட்ஸிடமிருந்தோ சரியான காரணம் சொல்லப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. எந்த அளவு உண்மையோ?


மைக்ரோசாப்டின் இணைய தளத்தில் மேற்கண்ட பெயர்களை மைக்ரோசாப்ட் தனக்கென ரிசர்வ் (பிடித்தம்?) செய்து கொண்டிருப்பதாக சொல்கிறது. இது உண்மையில் சரியான விளக்கம்தானா அல்லது சமாளிபிகேசனா (சமாளிப்பு).

இந்த தளம் சொல்லும் காரணம் நியாயமாகப் படுகிறது. அறிந்தவர்கள் அலசி பின்னூட்டமிட்டால் பயனாக இருக்கும்.

Read more...

புஷ் விளையாட்டு

Saturday, October 01, 2005

நிலைமை எவ்வளவு சீரியசாக இருந்தாலும் இவர் பேசினால் சிரிப்புதான் வருகிறது. அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே அதிகம் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானவர் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஜூனியராகத்தான் இருக்கும்.

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் இவர் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. பிற நாடுகளின் கருத்தைப்பற்றிக் கவலைபடாமல் எடுத்த சபதத்தை நிறைவேற்ற இவர் படும் கஷ்டங்கள் ஏராளம்.

செய்ய வேண்டியதை செய்து முடித்து விட்டு பிறகு ஒப்பேற்றும் இவரின் கருத்துக்களில் உங்களுக்கு உடன்பாடில்லையா? இந்த படத்திலுள்ள லிங்கை திறந்து நீங்கள் கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாமே?



பி.கு: சுட்டியால் (Mouse) தூக்கிப் போட்டும் விளையாடலாம்.

Read more...

இலவசம்

Friday, September 30, 2005

இணைய தளங்களில் இலவச இரத்தப் பரிசோதனை செய்வது பற்றி ஒரு வலைப்பதிவர் சமீபத்தில் எழுதி இருந்தார். அதே போல் வேறு ஏதாவது உருப்படியா கிடைக்கிறதா என்று தேடியதில் "இலவச டிஜிட்டல் போட்டோ" பற்றிய தளம் கண்ணில் பட்டது.

உலகிலேயே நம்பர்.1 பணக்காரராக இருந்தாலும் இலவசமாக கிடைப்பதை வெருப்பதில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் இலவசமாக எது கிடைத்தாலும் அதை அடைய முயற்சிப்பார். உதாரணமாக ஒருநாள் சென்னை பீச் ரோட்டில் வேகமாக பைக்கில் வந்து கொண்டிருந்தவர், FREE LEFT TURN என்ற போர்டைப் பார்த்தவுடன் நேராக செல்லவேண்டிய அவர் இடதுபக்கம் திரும்பி விட்டார் என்றால் பாருங்களேன். (சும்மா ஜோக்குதான்).

இந்த தளத்தில் உள்ள கேமரா சாதாரண கேமராதான். இரண்டு ஸ்டெப்களைக் கடந்தால் நல்ல தரமான போட்டோ உடனடியாக எடுக்கப்படுகிறது. ஆச்சரியம் என்னவென்றால் உங்கள் கணினியில் கேமரா இணைக்கப்படாமலேயே போட்டோ எடுப்பதுதான். நீங்களும் முயற்சி செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பின்னூட்டமிடலாமே?

இலவச போட்டோ எடுக்க கிளிக் பண்ணவும்.

Read more...

குறைந்த முதலீட்டில் கட்சி ஆரம்பிப்பது எப்படி?

Friday, September 23, 2005

முன்பெல்லாம் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்குவது எப்படி என்றுதான் கையேடுகள் கிடைத்தன. காலமாற்றத்திற்கேற்ப டாபிக்கை மாற்ற வேண்டியுள்ளது. எனக்குத் தெரிந்த சில சுலபமான வழிகளைச் சொல்கிறேன்.

1) மார்க்கெட் இழந்த நடிகராக இருந்தால் நல்லது. (பப்ளிசிட்டி செலவு மிச்சம்.)

2) காவிரியில் தண்ணீர் விடச்சொல்லி மழைக்காலத்தில் அறிக்கை விடலாம். (பின்னாளில் காவிரித்தந்தை என்ற பட்டத்திற்கு உதவும்).

3) பெற்றோரிடம் தமிழில் பேசச் சொல்லி மாணவர்கள்,NRI க்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கலாம்.

4) திருட்டு VCD,DVD ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுப்பதோடு திருட்டு சாப்ட்வேருக்கு எதிராகவும் குரல் கொடுக்கலாம்.

5) பிரபலமானவர்களுக்கு எதிராக அடிக்கடி அறிக்கை விட்டால், அவர்களிடம் நிருபர்கள் உங்களைப்பற்றி கேட்கும் போது நீங்கள் இன்னாரின் பினாமி என்று உங்களை இலவசமாக பிரபலப்படுத்துவார்.

கட்சி ஆரம்பித்த பிறகு:

1) மாவட்ட, வட்டத்தலைவர்கள் என்று அவர்களைக் கேட்காமலேயே நீங்களே வெளியிடலாம். உங்கள் அறிக்கையைப் பார்த்த பிறகுதான் சம்பந்தப்படவர்களுக்கே தெரிய வேண்டும்.

2) மாநில மாநாட்டை எந்த கட்சியாவது மாநாடு நடத்தும் நாளில் வைத்தால் பொதுமக்கள் குழம்பி விடுவார்கள்.

3) தியேட்டரில் சினிமா பார்த்து விட்டு வெளியேறும் மக்களை போட்டோ எடுத்து, நல்ல கிராபிக் டிசைனரிடம் சொல்லி நீங்கள் அவர்களைப் பார்த்து கையசைப்பது போன்ற ஆளுயர போட்டோவை இணைக்கச் சொல்லி போஸ்டராக வெளியிட வேண்டும்.

4) உங்கள் தாத்தாவின் பெயரில் நினைவு மண்டபம் வைக்கச் சொல்ல வேண்டும். யாரும் கேட்டால் சுதந்திரத்திற்காக போராடியவர் என்று சும்மா சொல்லி வைக்கலாம்.

5) ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு இலவச செல்போன், இலவச லாப்டாப் கம்ப்யூட்டர் என்று யாரும் சொல்லாததை சொல்லி வைக்க வேண்டும்.

நிதி உதவி பெற:

1) வங்கிகளில் இதற்கான நேரடி வசதிகள் இல்லை. ஆனால் நீங்களே நிதி நிறுவனம் ஆரம்பிக்கலாம்.

2) கட்சி உறுப்பினர்களிடம் கட்சிக்கு முதலீடு செய்தால் ஆட்சிக்கு வந்த பின் 10 மடங்கு லாபத்தொகையுடன் திருப்பித் தரப்படும் என்று சொல்லலாம்.

தற்போதைக்கு இவையே சுலபமான வழிகளாகத் தெரிகின்றன. உங்களுக்கு ஏதாச்சும் ஐடியா இருந்தால் பின்னூட்டத்தில் கொடுத்து உதவுங்களேன்.

Read more...

சந்திரனில் இறங்கிய சந்திரன் நாயர்

Sunday, September 18, 2005

சந்திரனில் முதலில் காலடி வைத்த பெருமை அமெரிக்கா என்று எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அவர்களுக்கு முன்பே இறங்கி காலடி (செருப்படி?) வைத்த பெருமை இந்தியரையேச் சாரும். அத்தோடு நிலவில் டீக்கடை (பாலக்காட்டு நாயர் சாயாக்கடை) வைத்த பெருமையும் நம்மையே சாரும்!!!



நிலவில் இறங்கிய ஆல்ட்ரினும் நீல் ஆம்ஸ்ட்ராங்கும் நீண்ட பயணத்திற்குப் பின் மனித சஞ்சாரமற்ற பிரதேசத்திற்கு வந்திருக்கிறோம் என பெருமிதம் கொண்டிருந்த போது அவர்களிடம் "எந்தா ஆம்ஸ்ட்ராங் சாரே! ஸ்ட்ராங்கா சாயா வாணுமா?" என்று கேட்டு உபசரித்த இந்தியனை எண்ணி பெருமைப் படுவோம்.

புகைப்பட உதவி: சந்திரன் சாயாகடை - அமைதிக்கடல் - சந்திரமண்டலம்

Read more...

சர்தார் ஜோக்ஸ்

Friday, September 16, 2005

சர்தார்: நேற்று ரயிலில் சரியாத்தூங்க முடியவில்லை.
நண்பர்: ஏன்?
சர்தார்: மேல் பர்த் (Upper Berth) தான் கிடைத்தது
நண்பர்: கீழுள்ளவருடன் பேசி மாற்றிக் கொண்டிருக்கலாமே?
சர்தார்: செஞ்சிருக்கலாம். ஆனா கீழே யாரும் இல்லே.
***
சர்தார்: (தன் நண்பியிடம்) இரவுக்கு என் வீட்டுக்கு வா. யாரும் இருக்க மாட்டார்கள்.

(நண்பி அவ்வாறே சர்தாரின் விட்டுக்கு இரவு சென்றார். உண்மையில் யாருமே அங்கு இல்லை. சர்தார் உட்பட)
***
டீச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை
பெற்றெடுக்கிறாள்.

சர்தார்: (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுதவேண்டும்.
***
சர்தார்: (பணியாளிடம்) போயி செடிக்கு தண்ணீர் ஊத்து.
பணியாள்: நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது முதலாளி ஜி.
சர்தார்: அதனாலென்ன? குடையை எடுத்துக் கொண்டு போ.
***
சர்தார் இருபது ரூபாய் கொடுத்து ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார். பரிசு ஒரு கோடி விழுந்தது. கடைக்காரர் வரி பிடித்தம் போக 55 இலட்ச ரூபாய் கொடுத்தார். சர்தார் கோபமாக "யாரை ஏமாத்தப் பார்க்கறே?. ஒரு கோடி முழு பரிசையும் தா. இல்லேன்னா என் இருபது ரூபாய மரியாதையா திருப்பிக் கொடு என்றார்.
***
தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.
சர்தார்: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?
***
சர்தாரும் அவர் மணைவியும் விவாகரத்துக்கு மணு கொடுத்தனர்.
நீதிபதி: உங்களிட்ம் மூனு குழந்தைகள் உள்ளனர். இப்போ பிரிஞ்சீங்கன்னா? சிக்கல் வரும்.
சர்தார்: சரி. அப்ப நாங்க அடுத்த வருசம் வர்ரோம் ஐயா.
***
சர்தார் பெருமையாக தன் நண்பரிடம் சொன்னார்." என் தாத்தா சாகும் போது அமைதியாக எந்த சத்தமும் போடாமல் பஸ்சில் தூக்கத்திலிருக்கும்போது செத்தார். ஆனால் அவர் ஓட்டிக்கொண்டிருந்த பஸ் பயனிகள்தான் அலறிக் கொண்டே செத்தார்கள்"
***
சர்தார்: (ஆர்ட் காலெரியில்) ஐய்யோ ரொம்ப கொடூரமாக இருக்கிறது இந்த படம். மாடர்ன் ஆர்ட்டில் இதை எப்படி சொல்வீங்க?
சிப்பந்தி: ஸாரி சார் இது முகம் பார்க்கும் கண்ணாடி
***
இரண்டு சர்தார்கள் ஜாலியாக தனி விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது இரண்டு விமானக்களும் மோதிக் கொண்டு பஞ்சாபிலுள்ள சுடுகாட்டில் விழுந்து இறந்து விட்டனர். உள்ளூர் சர்தார்கள் அவர்களின் சடலங்களை தேடி மண்ணை தோண்டி வருகின்றனர். இதுவரை 500 சடலங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. இன்னும் தோண்டிக் கொண்டிருக்கிறார்களாம்.
***
ஒரு சர்தார் டாக்டரிடம் சென்றார். அவர் சிறுநீரை பரிசோதித்த டாக்டர், சில மருந்துகளைக் கொடுத்து, இதை சாப்பிட்டு வாங்க. உங்களூக்கு நீரில் கொஞ்சம் சர்க்கரை இருக்கு. எதுக்கும் மூன்று மாதம் கழித்து சிறுநீரை மறுபடியும் கொண்டுவாங்க பரிசோதித்துப் பார்ப்போம் என்றார். மூன்று மாதம் கழித்து மூன்று பெரிய கேணை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு டாக்டர்
முன் வைத்தார்.

டாக்டர்: என்ன இவை?
சர்தார்: நீங்கதானே மூன்று மாதம் கழித்து சிறுநீர் கொண்டு வரச்சொன்னீங்க.

Read more...

புதிய சினிமாக் கட்சி உதயம்!!!

Tuesday, September 13, 2005

அனைத்து சினிமா நடிகர்களும் கஷ்டப்பட்டுதான் சினிமாவிற்கு வருகிறார்கள். அவர்களில் சிலர் மட்டும் தங்கள் பிரபலத்தை பலமாக்கி வெவ்வேறு அவதாரம் எடுக்கிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு ஒரு நடுநிலை சினிமா+அரசியல் விமர்சனம் :-)

கீழுள்ள செய்திக்கும் இந்த செய்திக்கும் சம்பந்தமுண்டு. தொடர்ந்து படியுங்கள்.

தமிழக அரசியலில் சுருளிராஜனுக்குப்பின் நடிகர்கள் அரசியலில் பிரகாசிக்கவில்லை.

சுருளியுடன் சம காலத்தில் உச்ச நடிகராக இருந்த குண்டுக்கல்யாணம் காங்கிரசை விட்டு விலகி புதிய கட்சி தொடங்கி ஆட்சிக்கு வர ஆசைப் பட்டார். அவர் கனவு ஈடேறவில்லை. அரசியலை விட்டு ஒதுங்கினார்.

சுருளியால் கலையுலக வாரிசு என பிரகடனப்படுத்தபட்ட தவக்களை புது கட்சி தொடங்கி ஜொலிக்கவில்லை. லூஸ் மோகனும் புதுகட்சி கண்டார். பிறகு தி.மு.க.வில் இணைந்தார். இப்போது மீண்டும் விலகி தனியாக கட்சி நடத்துகிறார்.

குண்டுக் கல்யாணத்துக்கு காங்கிரஸ் மூலமும் லூஸ் மோகனுக்கு தி.மு.க. மூலமும் தான் எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகள் கிடைத்தன. தனி கட்சி கண்டு அவர்களால் இப்பதவிகளை பிடிக்க முடிய வில்லை.

வடிவேல் அரசியலுக்கு வருவார் எனபரபரப்பாக பேசப்பட்டது. தி.மு.க.வும் த.மா.கா.வும் கூட்டணி அமைத்த போது அதற்கு ஆதரவு அளித்தார். பின்னர் பா.ம.க. வுக்கும், வடிவேல் ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட வடிவேல் அரசியல் களத்துக்கு இழுத்து வரப்பட்டார்.

புது கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்த்த வேளையில் திடீரென்று பா.ம.க. போட்டியிட்ட பாராளுமன்றகு தொகுதிகளில் அக்கட்சிக் எதிராக ரசிகர்களை விட்டு பிரசாரம் செய்ய வைத்தார். வடிவேலின் பேச்சுக்கள் கேசட்டுகளாக தயாரிக்கப்பட்டு அனைத்து தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.அவர் முயற்சி பலிக்க வில்லை. வடிவேல் எதிர்ப்பையும் மீறி பா.ம.க. ஜெயித்தது. இதனால் அவரும் ஒதுங்கினார்.

ஓமக்குச்சி நரசிம்மன் இப்போது அரசியல் களத்தில் குதிக்கிறார். மதுரையில் ரைஸ்மில் நடத்திய இவர் `இனிக்கும் இளமை' படத்தில் வில்லனாக அறிமுகம் ஆனார். `சட்டம் ஒரு இருட்டறை' பிரபலமாக்கியது. ஊமை விழிகள், வைதேகி காத்திருந்தாள், புலன் விசா ரணை, அம்மன் கோவில் கிழக்காலே, போன்ற படங்கள் ஓமக்குச்சியின் `ஸ்டார்'' இமேஜை உயர்த்தின.

அரசியல் ஆசை இவரை திடீரென பற்றவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே இதற்கான வித்து ஊன்றப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் ரசிகர்களை போட்டியிட வைத்து ஆழம்பார்த்தார். பல பஞ்சாயத்துகளில் ஒமக்குச்சி மன்றத்தினர் கவுன்சிலர்களாக உள்ளனர்.

அதன் பிறகே ரசிகர் மன்ற அமைப்பை அரசியல் அமைப்பாக மாற்றும் வேலைகளை ரகசியமாக செய்தார். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி, வக்கீல் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி போன்றவற்றை மாவட்டம் தோறும் உருவாக்கி அவற்றுக் நிர்வாகிகளை நியமனம் செய்தார்.

பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ரசிகர்களுடன் ஆய்வு கூட்டங்கள் நடத்தி இதோ நாளை அரசியல் பிரகடனத்தையும் கட்சி பெயரையும் மதுரை மாநாட்டில் அறிவிக்கிறார். ஓமக்குச்சியின் அரசியல் கட்சி எடுபடுமா என்று சாதக பாதகங்களை அரசியல் விமர்சகர்கள் பேசத் தொடங்கி உள்ளனர்.

ஓமக்குச்சி கட்சியுடன் கூட்டணி அமைக்க பாரதீய ஜனதா விரும்பியது. ஆனால் 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கப் போவதாக ஓமக்குச்சி அறிவித்துள்ளார். தனக்குள்ள செல்வாக்கின் உண்மை நிலையை அறிய இந்த தேர்தலை பயன்படுத்துவது அவர் இலக்காக உள்ளது. தனித்து நிற்கும் பட்சத்தில் குறைந்த பட்சம் 10 தொகுதி களையாவது கைப்பற்ற முடியும் என்று அவர் நம்புகிறார்.

ஆளும் கட்சியான அ.தி.மு.க. 7 கட்சிகளுடன் களம் இறங்கும் தி.மு.க.ஆகிய இரு அணிகளின் அசுர பலத்தின் முன்னால் ஓமக்குச்சியால் தாக்கு பிடிக்க முடியுமா? என்று சந்தேகத்தை சிலர் கிளப்புகின்றனர். கடைசி நேரத்தில் பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து 3-வது அணியை ஓமக்குச்சி உருவாக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஓமக்குச்சிக்கு `நடிகர்' என்ற இமேஜில் கூட்டம் கூடலாம். ஆனால் வாக்கு வாங்குவது கடினம் என்கிறார். மக்கள் தமிழ் தேசம் தலைவர் ராஜ கண்ணப்பன்.

தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., இ.கம்யூனிஸ்டு, வ.கம்யூனிஸ்டு என ஒவ்வொரு கட்சிக்கும் தொகுதி தோறும் குறிப்பிட்ட சதவீதம் வாக்கு வங்கி உள்ளது. இதுவே 90 சதவீதத்தை எட்டும் மீதி உள்ள 10 சதவீத வாக்கு பொதுமக்களுடையது. அவர்கள் ஓட்டுக்களைத்தான் ஓமக்குச்சி நம்ப வேண்டும். அந்த ஓட்டுகள் கூட எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் விழலாம் என்று அடித்து சொன்னார் ராஜா கண்ணப்பன்.

ஓமக்குச்சி கட்சியில் அரசியல் அனுபவம் உள்ள மூத்த தலைவர்கள் இல்லாதது இன்னொரு குறையாக சொல்லப்படுகிறது. ரசிகர் மன்றத்தில் மாநில பொதுச் செயலாளராக ஓமக்குச்சிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ராமு வசந்தன். இவர் இதுவரை அரசியல் பணிகளில் ஈடுபடாதவர்.

புதியவர்களை வைத்து அரசியல் வியூகத்தை வெற்றிகரமாக வகுப்பது ஓமக்குச்சிக்கு சவாலாகவே இருக்கும் என்றார் சக நடிகர் ஒருவர்.நடிகர் என்பதால் ஓமக்குச்சிக்கு கூட்டம் கூடுவதில் குறை இருக்காது. சுருளி ராஜனைப்போல் சாதிப்பேன் என்று நம்பிக்கை யோடு சொல்கிறார் ஓமக்குச்சி. இதற்கு பக்க துணையாக மாநாட்டு பந்தல் முகப்புக்கு சுருளி ராஜன் பெயரையும் சூட்டி உள்ளார்.

காமராஜர், அண்ணா, காந்தி போன்ற தலைவர்கள் பெயரையும் பந்தலுக்கு சூட்டி துணையாக சேர்த்துக் கொண்டு உள்ளார். தேசிய கட்சி, திராவிட கட்சி, தலைவர்கள் படங்களுடன் அரசியல் பயணம் தொடங்கி உள்ள ஓமக்குச்சியின் அரசியல் வியூகம் புதுமையாகத்தான் இருக்கும் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் உலவுகிறது.

குண்டுக் கல்யாணம் உள்ளிட்ட நடிகர்கள் அரசியலில் பிரகாசிக்க முடியவில்லையே என்று ஓமக்குச்சியிடம் கேட்டபோது சுருளி ராஜன் கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்க வில்லையா? அவரைப் போல் என்னால் வர முடியும் என்று நம்பிக்கை யோடு சொல்கிறார்.

அ.தி.மு.க., தி.மு.க. போன்ற திராவிட கட்சிகளை வெறுப்பவர்களின் வாக்குகள் தனக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு அரசியலில் குதிக்கிறார். நம்பிக்கை பொய்க்குமாப பலன் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

திருத்தம்: தவறுதலாக பிரபலமான நடிகர்கள் பெயருக்குப் பதில் நகைச்சுவை நடிகர்களின் பெயரைப் போட்டு எழுதி விட்டேன். முடிந்தால் அந்தந்த இடத்தில் சரியான நடிகர்கள் பெயரைப் போட்டு மாற்றி படித்துக் கொள்ளுங்கள்.

Read more...

வெள்ளரசு

Thursday, September 08, 2005


உலகத்துல எங்கு எது நடந்தாலும், அதை அமெரிக்காவோடு ஒப்பிட்டு பேசுவது சிலருக்கு பிடிக்கும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவை மட்டம் தட்டுவதிலும் சிலருக்கு சந்தோசம்.

இனி அமெரிக்காவைத் தலை மேல தூக்கி வைத்து ஆடுபவர்கள், இதைப் படித்த பிறகாவது கொஞ்சம் அடக்கி வாசிப்பார்களாக (எனக்கும் அமெரிக்கா விசா கிடைத்திருந்தால் இது மாதிரி எழுதுவேனா?)

  • Inches of rain in new orleans due to hurricane katrina... 18
  • Inches of rain in mumbai (July 27th).... 37.1
  • Population of new orleans... 484,674
  • Population of mumbai.... 12,622,500
  • Deaths in new orleans within 48 hours of katrina...100
  • Deaths in mumbai within 48hours of rain.. 37.
  • Number of people to be evacuated in new orleans... entirecity..wohh
  • Number of people evacuated in mumbai...10,000
  • Cases of shooting and violence in new orleans...Countless
  • Cases of shooting and violence in mumbai.. NONE.
  • Time taken for US army to reach new orleans... 48hours
  • Time taken for Indian army and navy to reach mumbai...12hours
  • Status 48hours later...new orleans is still waiting for relief,army and electricty
  • Status 48hours later..mumbai is back on its feet and is business isas usual

USA...world's most developed nation!!!

India...third world country???

வாழ்க இந்தியா!!!

Read more...

கலர் கலரா காரணங்கள்

Friday, September 02, 2005

பெரும்பாலும் பலான சமாச்சாரத்தை மறைமுகமாகச் சொல்ல 'நிறங்கள்' (Colors/Colours') ஒரு குறியீடாக இருக்கிறது. நம் வாழ்க்கையில் 'கலர்' ஒரு அலாதியான விசயம். ஒவ்வொரு கலருக்கும் பின்னாடி ஒரு செய்தி இருக்கிறது. சில 'கலர்கள்' எந்தெந்த விசயத்துக்கு பயன் படுத்தப்படுகின்றன என முதலில் பார்ப்போம்.

பலான கலர்கள்

பச்சை (Green) = பலான விசயங்களைப் பேசும்போது குறிப்பிடப்படும். (என்ன இப்படி பச்சை பச்சையா பேசுகிறார் இவர்?)

சிகப்பு (Red) = பலான தொழில்? நடக்கும் இடத்தைக் குறிக்க (மும்பை சிகப்பு விளக்குப்பகுதியில் போலிசார் ரோந்து)

நீலம் (Blue) = பலான சினிமாவைக் குறிக்க பயன்படுத்தப் படுகிறது (பிரபல நீலப்பட மன்னன் நீலகண்டன் கைது)

மஞ்சல் (Yellow) = பலான புத்தகங்களைக் குறிப்பிட (சாந்தி தியேட்டர் அருகே மஞ்சல் புத்தகங்களை விற்ற வாலிபர் பட்டதாரி வாலிபர் கைது)

வர்த்தகம் மற்றும் அலுவலகம்:

வர்த்தக அலுவலக உபயோகங்களில் பெரும்பாலும் சிகப்பு அல்லது பச்சை பயன்படுத்தப் படும். ஆபிஸில் முக்கியமான ஃபைலில் சிகப்பு நாடா இடப்பட்டிருந்தால் 'அவசரம்' என்றும் பச்சை நாடா இடப்பட்டிருந்தால் 'சாதாரணம்' என்றும் அர்த்தம். இம்முறையை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிமுகப்படுத்தி இருக்க வேண்டும். தற்போதைய கணினி யுகத்தில் இதுப்போன்ற கலர்க்குரியீடு இருக்கிறதா என்று தெரியவில்லை. பெரும்பாலும் Post it Slip மஞ்சல் கலராக இருக்கும்.

பொருளாதார தேக்க நிலைக்கு Red Tapism என்பார்கள். நிதியமைச்சர் பொதுத்துறை பங்குகளை விற்க பச்சைக்கொடி காட்டிவிட்டார்.

டெலிபோன் டைரக்டரியில் மஞ்சல் பக்கங்கள் (Yellow pages) பிரபலம். White pages, Blue Pages, Greean Pages போன்ற சில நிறங்களும் பயன் படுத்தப்படுகின்றன.

பொதுவாக வாகன மற்றும் இதர எச்சரிக்கைகளைக் குறிக்க சிகப்பு, பச்சை, ஆரஞ்சு கலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜோஷியர்களும், வாஸ்து சாஸ்திரிகளும் கொஞ்சம் கலர்கலரா பீலா விட ஆரம்பிச்சுட்டாங்க. (உங்க ராசிக்கு மஞ்சல் சால்வை போடுக்கொண்டால் 40 தொகுதிகளிலும் ஜெயிச்சுடலாம், உங்க வீட்டுக்கு செந்நிற வர்ணம் பூசினால் ஓஹோன்னு இருப்பீங்க! etc)

கன்னியரைக் குறிக்கவும் தற்போது 'கலர்கள்' பயன்படுகின்றன (மச்சி சத்யம் தியேட்டர்ல நேத்து செம கலர்டா!)

இப்படி கலர் நம் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ளன. இவையல்லாமல் சில கலர்களின் பின்னனியை இந்த தளம் சொல்லுகிறது. இன்னொரு தளம் கலர் கலரா மனோதத்துவத்தை சொல்லுகிறது. நேரமிருந்தா போய் கலர் பாருங்க!

மறக்காம உங்கள் பின்னூட்டங்களையும் கலர் கலரா விட்டுட்டு போங்க.

Read more...

இன்ஷியல் பிராப்ளம் (Initial Problem)

Wednesday, August 31, 2005


இது சாதாரண மேட்டர்தான். பெரும்பாலும் இதுக்கு நாம் காரணம் இல்லை. பெற்றோர்களும் அவர்களின் பெற்றோர்களும் செய்தது நமக்கு சில நேரங்களில் தலைவலியாகிவிடும்.

இந்தியர் தவிர மற்றவர்கள் பெரும்பாலும் தந்தை பெயரையும் குடும்ப பெயரையும் பெயருக்குப் பின்னாள் இணைப்பார்கள். உதாரணமாக George W. Bush, சதாம் உசேன் அல் திக்ரிதி etc. மலையாளிகள் தங்கள் பெயருடன் வீட்டின் பெயரை அல்லது ஊரின் பெயரை சேர்த்துச் சொல்வார்கள். உ.ம். திருக்கோட்டியூர் மாதவன்.

தந்தையின் பெயரின் முதல் எழுத்தை இனிசியலாக வைப்பதில் உள்ள சங்கடம். பெயருடன் Initial (தந்தை பெயர்) ஐ இணைக்கும் போது, நம்மில் பெரும்பாலோர் தந்தை பெயரின் முதல் எழுத்தை பயன்படுத்துவோம். இது சிலருக்கு தர்ம சங்கடமாகி விடும். சில பெயர்களை குறிப்பிடுகிறேன்.

க.பால முருகன் - "கபால" முருகன்
C.காளிமுத்து - "சீக்காளி" முத்து.
E.ரசாக் - "ஈர" சாக்கு.
சோ.மாரிமுத்து - 'சோமாரி' முத்து. சோமாரி என்றால் மெட்ராஸ்காரர்களுக்கு கெட்ட கோபம் வரும்.

சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கலாம் அல்லது தந்தையின் முழு பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் முடிஞ்சா சிரிக்கலாம்.

பி.கு. : குரங்கு சிரித்தால் பயப்படுகிறது என்று அர்த்தமாம். யாருக்காவது மேலதிக தகவல் தெரிந்தால் எழுதிப் போடுங்க. மறக்காம இனிஷியலோடு பின்னூட்டமிடுங்க :-)))

Read more...

ராணுவமும் எயிட்சும்

Sunday, August 28, 2005

இந்த செய்தியைப் படித்ததும் வேதனை கலந்த சிரிப்பு வருகிறது. நம் நாட்டின் எல்லையை பாதுகாக்க அனுப்பப்பட்ட வீரர்கள் எல்லை தவறியுள்ளனர். ஆனால் இது வேறு மாதிரியான எல்லை தாண்டல். மேற்கொண்டு படிச்சுட்டு உங்க கமெண்டையும் ஒரு எல்லையோடு வச்சுட்டுப் போங்க.

எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் (பி.எஸ்.எப்) இடையே எய்ட்ஸ் நோய் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீரர்கள் இடையே நாடு முழுவதும் நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் 70 பேருக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து கவலையடைந்துள்ள அந்தப் படையின் டைரக்டர் ஜெனரல், ஐக்கிய நாடுகள் சபையில் எய்ட்ஸ் தடுப்புப் பிரிவின் உதவியை நாடியுள்ளார்.

இது குறித்து பிஎஸ்எப் படையின் டைரக்டர் ஜெனரல் மூஸாஹரி கூறுகையில்,
படையினர் இடையே எச்ஐவி பரவலைத் தடுக்கவும், எய்ட்ஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் ஐநா எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவுடனான மருத்துவ ஒப்பந்தம்.

முதல் கட்டமாக வீரர்கள் இடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். நோயைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்படும்.
மேலும் பிஎஸ்ப்பின் முக்கிய பயிற்சி மையங்களில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

மற்ற பாதுகாப்புப் படையினரோடு ஒப்பிட்டால் பிஎஸ்ப் வீரர்கள் இடையே எய்ட்ஸ் பரவல் மிகவும் குறைவு தான். இருந்தாலும் முன்னெச்சரிக்கையாகவே இந்த நடவடிக்கையை எடுக்கிறோம் என்றார்.

ஆயுதத்தை பயன் படுத்துங்க என்று சொன்னதை 'தவறாக' புரிந்து கொண்டார்களோ?

Read more...

NRI இந்தியர்கள்

Wednesday, August 24, 2005

ஈமெயிலில் வந்த விசயம். கேவலமாத்தான் இருக்கு. அதில் சில எனக்கும் பொருந்துகின்றன. அனுப்பியது ஒரு NRI நண்பன் (ஹும்...Hotmail சபீர் பாட்டியா மாதிரி இருப்பான்னு நம்பி அமெரிக்க சாப்ட்வேர் கம்பெனி ஸ்பான்சர் பண்ணியது. மூனு வருசம் ஓப்பி அடிச்சுட்டு, இப்போ பெட்ரோல் பங்குல 'பார்மேனா' இருக்கிறான் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும் என்பது வேறு விசயம்.)


இந்தியர்களை எளிதில் அடையாளம் காண்பது எப்படி?

  • சாப்பாட்டில் பெரும்பாலும் பூண்டு, வெங்காயம், மிளகாய் வாசனை தூக்கலாக இருக்கும்.
  • பரிசு பொருட்கள் வந்த Wrapper, Gift Box, Aluminium Foil போன்றவற்றை பத்திரமாக எடுத்து வைத்து திருபவும் பயன் படுத்துவார்கள்.
  • இரண்டு பெரிய சூட்கேசுடன் ஏர்ப்போட்டில் நின்று கொண்டிருப்பார்கள்.
  • விருந்துகளுக்கும் பார்ட்டிகளுக்கும் 2-3 மணி நேரம் தாமதமாக வருவார்கள்.
  • தபால் துறை முத்திரையிட மரந்த ஸ்டாம்பை இலாவகமாக உரித்து எடுத்து வைத்துக் கொள்வார்கள்.
  • டாய்லெட்டில் ஒழுகும் தண்ணீரை பிளாஸ்டிக் வாளியில் பிடித்து வைத்திருப்பார்கள்.
  • குழந்தைகளுக்கு செல்லப் பெயர் வைத்திருப்பார்கள். ஆனால் அவர்களுடைய பெயரோடு சம்பந்தமில்லாமல் இருக்கும்.
  • ஒருவரிடமிருந்து விடை பெறும் முன் குறைந்தது ஒரு மணி நேரமாவது வாசல் அருகே நின்று பேசிக் கொண்டிருப்பார்கள்.
  • குடும்பத்தினருடன் காரில் வெளியில் சென்றால், அதிகபட்சம் ஏற்ற முடிந்தவரை ஆட்களை ஏற்றிக் கொள்வார்கள். சிலர் மடிமேலும் உட்கார்ந்திருப்பார்கள்.
  • ரிமோட் கண்ட்ரோல், VCR, கார்பெட், பீரோ இவற்றை பிளாஸ்டிக் உரையால் மூடி வைத்திருப்பார்கள்.
  • நாற்பது வயதைத் தாண்டி விட்டபோதும் பெற்றோருடன் தங்கி இருப்பார்கள். இருந்தாலும் இதை பெருமையாக நினைப்பார்கள்.
  • தங்கள் மகளாக இல்லாதவரை, மற்றவரின் மகள் யாருடன் சேர்ந்து ஊர் சுற்றுகிறாள் என்று கண்ணும் கருத்துமாக கவனிப்பார்கள். முடிந்தால் வேறு யாரிடமாவது இவ்விசயத்தைச் சொல்லி 'பத்த' வைப்பதை தங்கள் கடமையாக நினைப்பார்கள்.
  • இரவு 11:00 மணிக்கு மேல்தான் Long Distance Calls பண்ணுவார்கள்.
  • வீட்டிற்கு வர தாமதமாகி விட்டால், மொபைளில் அழைத்து சாப்பிட்டாச்சா என்று கேட்பார்கள். அது இரவு 12:00 மணியானாலும் சரியே.
  • பெற்றோர்கள் யாராவது இந்தியர்களை வெளியிடங்களில் முதல்முறையாக சந்தித்து ஓரிரு நிமிடங்கள் பேசி விட்டு விலகி விடுவார்கள். வீட்டிற்கு வந்ததும் அவர்கள் உங்கள் உறவினர்கள் என்று சொல்வார்கள்.
  • வரவேற்பறையிலுள்ள ஷோபாவின் மேல் பெட்சீட்டைப் போட்டு மூடி வைப்பார்கள். புளுதியிலிருந்து அழுக்காகி விடாமல் இருப்பதற்காக!
  • உங்கள் திருமணத்திற்கு 600 பேருக்கு குறையாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்வார்கள்.
  • தங்கள் மகளின் கல்யாணவரன் விளம்பரம் கொடுக்கும் போது "Fair & Slim" என்று கொடுப்பார்கள். உண்மையில் அவர் எப்படி இருப்பார் என்பது வேறு விசயம்.
  • மற்றவர்களின் சொந்த விசயங்களை அரிந்து கொள்வதிலும், தேவையில்லாமல் தலையிட்டு மூக்கை நுளைப்பதிலும் ஆர்வம் காட்டுவார்கள்.

மேலே சொல்லப்பட்டதை படிக்கும் போது சந்தோசம் அடைந்திருப்பீர்கள். ஏனென்றால் உங்களுக்கே தெரிந்திருக்கும் அவற்றில் சில அல்லது பல உங்களுக்கும் பொருந்துகிறதால்!!!

:-) (-:

Be Indian Bye Indian!

I love India!!

ஜெய் ஹிந்த்!!!

Read more...

இந்தியாவின் கடனைத்தீர்க்க ஒரு எளிய வழி.

Thursday, August 18, 2005

சில வருடங்கள் வரை நம் நாட்டின் தனிநபர் வெளிநாட்டுக்கடன்? சுமார் 4,470 ரூபாயாக இருந்து வந்தது. இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கத்தால் அது கொஞ்சம் குறைந்துள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு செய்தியின் மூலம் இதனை அறியலாம்.

சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இந்தியாவின் கடனைத் தீர்ப்பதற்காக தன் பங்குக்கு ரூ. 3000க்கான காசோலையை அனுப்பினார். இந்த காசோலையை தமிழக அரசுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பி வைத்தது.

இதையடுத்து மாநில அரசு அதிகாரிகள், அந்த இளைஞரை வரவழைத்து காசோலையை அவரிடமே திருப்பிக் கொடுத்தனர். சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் (பெயர் குறிப்பிடப்படவில்லை) இந்தியாவின் கடன் தொகையை அறிந்து மலைத்துப் போனார்.

ஒவ்வொரு இந்தியரும் தலா ரூ. 3,000 செலுத்தினால் இந்தியாவின் கடன் தொகையை மொத்தமாக அடைத்து விடலாம் என்பதை அறிந்த அவர் உடனடியாக ரூ. 3,000க்கு வங்கியில் காசோலையை (டிமாண்ட் டிராப்ட்) எடுத்தார்.

இந்த காசோலையை குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அனுப்பி வைத்தார். அத்துடன் ஒரு கடிதத்தையும் இணைத்தார். அதில், இந்தியாவின் கடன் சுமைக்கு எனது பங்கை அனுப்பி வைத்துள்ளேன். இதை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுமாறும் கோரியிருந்தார்.

இந்தக் காசோலை கிடைக்கப் பெற்ற குடியரசுத் தலைவர் மாளிகை உடனடியாக அதை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது. காசோலையை சம்பந்தப்பட்ட நபரிடம் திருப்பிக் கொடுத்து விடுமாறு குடியரசுத் தலைவர் மாளிகை கேட்டுக்கொண்டது.

இதையடுத்து தமிழக அரசு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இளைஞரை வரவழைத்து அவரிடம் காசோலையை திருப்பிக் கொடுத்தனர். காசோலை திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டது என்பதற்கான ஒரு அறிக்கையையும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.

இந்தியாவின் கடனைத் தீர்க்க ரூ. 3,000 அனுப்பிய இளைஞரின் மாத சம்பளம் ரூ. 8,000 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்தியாவின் கடனைத் தீர்க்க வேண்டும் என்ற ஆவலால் தனது சக்தியையும் மீறி பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக்கடன்:


$98,232,000,000

Source: CIA World Factbook

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை:
1,065,070,607
Source: CIA World Factbook

நீதி: அதிக குழந்தை பெற்றால் இந்தியாவின் கடன் சுமை குறையும்?

Read more...

பெயர்க்காரணம்

Sunday, August 07, 2005

பெயர்-ஒரு அடையாளம். Nameology என்ற புது துறையே கூட தற்போது பிரபலம். வாஸ்து சாஸ்திரத்தில் கட்டிட அமைப்பை மாற்றி அமைப்பது போல், பெயரிலும் சில எழுத்துக்களை மாற்றி அமைக்கிறார்கள். பெயரை வைத்து இன்னும் என்னென்னமோ செய்றாங்க. அந்த அளவுக்கு பெயர் முக்கியமான ஒன்று.

பெயரில்லாமல் யாரும் இருக்க முடியாது (பெயரிலி?). பெயர் வைத்து அடையாளப் படுத்துவதை யார் கண்டு பிடித்தார்கள் என்று தெரியவில்லை. எல்லா மொழியிலும் நாட்டிலும் பெயரிடும் வழக்கம் இருக்கிறது. சிலருக்கு தன் பெயரை இன்னொருவருக்கு புரிய வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும்.

சிலரின் பெயரை வைத்து அவர் பிறந்த ஊர் பேசப்படும். சிலர் ஊர்ப்பெயரை தங்கள் பெயருடன் சேர்ந்த்து மகிழ்வர் (உதாரனம்: அதிரைக்காரன்..ஹி.ஹி..) இப்பழக்கம் எல்லா நாட்டிலும் உண்டு. எனக்குத் தெரிந்த சில பெயர்களையும் சம்பந்தப்பட்ட ஸ்தலங்கலையும் பட்டியலிடுகிறேன்.

இந்தியா:

  • சிதம்பரம் - தமிழ்நாடு
  • திருப்பதி - ஆந்திரா
  • காசி - உத்திரப் பிரதேசம்

உலகம்:

  • மக்கம் - சவூதி
  • மதீனா - சவூதி
  • வாஷிங்டன் - அமெரிக்கா

இவையன்றி சில பெயர்கள் எண்களைக் குறிக்கின்றன. (தமிழில் மட்டும்)

  • அஞ்சம்மா, அஞ்சப்பர் (5)
  • ஆறுமுகம் (6)
  • ஏழுமலை (7)
  • எட்டப்பன் (8)
  • நூறு முஹம்மது (100)
  • கண்ணாயிரம் (1000)
  • கோடீஸ்வரன் (10,000,000)

இது போல வேறு ஏதாவது வித்தியாசமான பெயர்கள் இருக்கிறதா?

* சம்பந்தப்பட்ட பெயருடையவர்கள் மன்னிக்க! (குறிப்பாக 'தமிழ்மணம்' காசி!)

** பெயரியல் (Nameology) போன்ற மூடநம்பிக்கைகளில் எனக்கு உடன் பாடில்லை.

Read more...

பயனற்ற கண்டுபிடிப்புகள் (Useless Inventions)

Sunday, July 31, 2005

மூளையைப் பயன்படுத்தி, கஷ்டப்பட்டு கண்டுபிடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகாத கண்டுபிடிப்புகளை தமிழமணம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் இலவச வெட்டி சேவையைத் தொடங்கியுள்ளோம். நமக்குத் தெரிந்த உபயோகமில்லாத கண்டுபிடிப்புகளின் பட்டியல் இதோ. முடிஞ்சா நீங்க புதுசா கண்டு பிடிக்க விரும்புவதையும் எழுதிப் போடுங்கடோய்...

  • A freezer for Eskimos.
  • AC adapter for solar calculators.
  • Air-Bag Motorcycle jacket.
  • Battery powered battery charger.
  • Battery-operated nuclear power plants.
  • Black Highlighter
  • Blinker Fluid.
  • Braille Drivers' Manual
  • Braille toilet paper.
  • Braille tv guide.
  • Braille tv remote control.
  • Breathable space suit.
  • Camcorder with braille-encoded buttons.
  • Candy bars with stannous fluoride added.
  • Car steering triangles -- doubles as anti-theft device.
  • Combs for bald-heads.
  • Cordless plumb line.
  • Dehydrated water.
  • Diet celery.
  • Digital clock-winder.
  • Digital computer.
  • Double-sided playing cards.
  • Ejector seats for helicopters.
  • Electric banana straightener.
  • Electric dog polisher.
  • Fireproof cigarettes.
  • Fireproof matches.
  • Flashbulb tester.
  • Foam rubber toothpicks.
  • Frictionless Sandpaper.
  • How-to cassettes for the deaf.
  • Ice skate sandals, for use in hot climates.
  • Inflatable anchor.
  • Inflatable PC -- The Ultimate Laptop!
  • Leather cutlery.
  • Lie detectors for politicians.
  • Low salt brine.
  • Money with negative face value.
  • Motorcycle seat-belts.
  • Non-intrusive alarm clock (raises a flag instead of ringing a bell).
  • Non-stick Cellotape.
  • Papier mache step ladder.
  • Parachute that opens automatically, upon impact.
  • Reversible garbage disposal.
  • Rubber Kleenex.
  • Screen door on a submarine.
  • Second-hand fireworks.
  • Self stick frying pan.
  • Soap Dissolver.
  • Solar powered flashlight.
  • Solar-powered pacemakers for elderly sunbathers.
  • Sugar coated insulin.
  • Unsinkable submarine.
  • Waterproof sponge.
  • Waterproof teabags.
  • Waterproof toilet paper.

மேலும் சில Made in Japan கண்டு பிடிப்புகள் போட்டோகளுடன் உள்ளன.

Read more...

சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்கிறேன்

Tuesday, July 19, 2005

சட்டம் என்பது அனைவருக்கும் பொது. அது சொல்றது சரியோ தவறோ, கட்டுப்பட்டு நாமெல்லாம் அதை மதித்து நடக்க வேண்டும். ஆனாலும் சில சட்டங்களைப் பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. நமக்கு சட்ட நுணுக்கமெல்லாம் தெரியாது. இருந்தாலும் யாராச்சும் வாசகர்கள் நிச்சயம் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

வருமான வரி:

உதாரணமாக ஒரு இலட்சம் வரை வருமான வரி கிடையாது. இது தற்போதைய சட்டம். பத்து வருடங்களுக்கு முன்பு ரூ.40,000 வரை வரி கிடையாது. ரூ.40,001 - ரூ.60,000 க்கு 20% வரி. ரூ.40,000 வரியில்லை! ரூ.40,001 இருந்தால் 20% வரி.

தெரிஞ்சுக்கத்தான் கேட்கிறேன், ஒரு ரூபாய் கூடினால் 40,000 போக மீதி 1 க்கு 20% வரி. அதாவது 20 பைசா! இதை வருமான வரி அலுவலகத்தில் எப்படி கட்டி இருப்பார்கள்?? அதற்கு எவ்வளவு செலவாகி இருக்கும்?

திருட்டு:

ஒருத்தன் ரெண்டு நாளா சாப்பிட வசதியில்லை. அன்னதானமும் கிடைக்கவில்லை! கடனும் வாங்க வாய்ப்பில்லை.ஹோட்டல்ல சும்மா போய் சாப்பாடு கேட்டா தர மாட்டாங்க. பக்கத்துல எதாவது கடையில கொஞ்சம் திருடி, கையும் களவுமா மாட்டிக்கிட்டா கொஞ்சம் தர்ம அடி கொடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்புவாங்க. அதுக்குப் பேரு மாமியார் வீடு. அங்கும் கொஞ்ச முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போடுவாங்க. மறுநாள் லோக்கல் ஜட்ஜ் 15 நாள் கடுங்காவல் தண்டனை கொடுப்பார். இனி 15 நாளைக்கு மூன்று வேலை சாப்பாடு! கவலையில்லை.

சும்மா சாப்பாடு கேட்டா தரமாட்டாங்க. ஆனால் திருடினால் 15 நாளைக்கு மூன்று வேலையும் சாப்பாடு கிடைக்கும். இது தெரிஞ்சா சாப்பாட்டுக்கு லாட்டரி அடிக்கும் எல்லோரும் திருட ஆரம்பிப்பார்கள். தெரிஞ்சுக்கத்தான் கேட்கிறேன் சட்டங்கள் குற்றத்தை தடுக்கவா அல்லது அதிகரிக்கவா?

இன்னும் நிறைய ஓட்டைகள் இருக்காம். உங்களுக்கு எதாச்சும் தெரிஞ்சா சொல்லுங்க புண்ணியமாப் போகும். யாரிடமும் சொல்ல மாட்டேன்!!!

Read more...

கோர்ட்டுக்கு வந்த வீரப்பன் கைது...!?

Saturday, July 16, 2005

காவல் ஆய்வாளர் சீருடையில், நீதிமன்றத்திற்கு கையெழுத்து போட வந்த நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார். நில ஆக்கிரமிப்பு தொடர்பாக வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் மீது சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றுள்ளார் மன்சூர். முன் ஜாமீன் நிபந்தனைப்படி தினமும் காலையும், மாலையும் ஜார்ஜ் டவுன் 15வது நீதிமன்றத்தில் ஆஜராகி அவர் கையெழுத்துப் போட வேண்டும். இதன்படி கடந்த 2 நாட்களாக இரு வேளையும் மன்சூர் கையெழுத்துப் போட்டார். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை அவர் நீதிமன்றத்திற்கு வந்தபோது அனைவரும் அவரைப் பார்த்து அதிர்ந்தனர். காரணம், போலீஸ் இன்ஸ்பெக்டர் உடையில் மன்சூர் அலிகான் வந்ததே.

மன்சூர் அலிகான் போலீஸ் சீருடையில் வந்ததற்கு மாஜிஸ்திரேட் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக மன்சூர் அலிகான் மீது வழக்கறிஞர் பாஸ்கர் என்பவர் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து உடனடியாக விரைந்து வந்த போலீஸார் மன்சூர் அலிகானை கைது செய்தனர். காவலர் சீருடையை தவறாகப் பயன்படுத்திய சட்டப் பிரிவின் கீழ் மன்சூர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அப்போது மன்சூர் அலிகான் போலீஸாரிடம் கூறுகையில், நான் சைதாப்பேட்டையில் படப்பிடிப்பில் இருந்தேன். இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.
நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட நேரமாகி விட்டதால் சீருடையை கழட்டாமல் அப்படியே வந்து விட்டேன். இன்ஸ்பெக்டர் உடையை வெளியில் அணிந்து வருவது தவறு என்பது எனக்குத் தெரியாது. வேண்டும் என்றே நான் இந்த உடையில் கோர்ட்டுக்கு வரவில்லை என்றார்.

இதையடுத்து மன்சூர் அலிகான் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கு முன்பு ஏகப்பட்ட வழக்குகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மன்சூர் அலிகான், ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்திற்கு இன்ஸ்பெக்டர் உடையில் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நமது பஞ்ச்:

"நல்ல வேலை கற்பழிப்பு சீன்ல நடித்து விட்டு வராம இருந்தாரே!"

நீங்களும் பஞ்ச் விடலாம்!

Read more...

பொம்பள சிரிச்சா...

Sunday, July 10, 2005

வர்த்தக விளம்பரங்களில், பொருட்களின் தரத்தை விட அதனை விளம்பரப்படுத்துபவரின் தரமே முன்னிலைப் படுத்தப்படுகிறது. குறிப்பாக எந்த விளம்பரத்திலும் பெண் மாடல்களின் ஆதிக்கம்தான் மேலோங்கியுள்ளதாக பொதுவான குற்றச் சாட்டு உண்டு. எனக்கு கண்ணை உரு/றுத்திய சில விளம்பரங்கள் பற்றி:

சமையல்:

ஆச்சி மசாலாவுக்கு தேவயானியும், மனோரமாவும் தேவை. உதயம் பருப்பின் தரத்தை சொல்ல சிம்ரன் தேவைப்படுகிறார். இவை கூட பரவாயில்லை பெண்கள் மிகவும் அறிந்த சமையல் பொருள் பற்றியது என்பதால் தேற்றிக் கொள்ளலாம்.

ஆனால் இவற்றை என்னவென்று சொல்வது?

சோப்பு:
சோப்பு விளம்பரங்களில் அழகான பெண்/நடிகை அதை உபயோகிப்பதாக சொன்னால்தான் மக்கள் வாங்குவார்களா?. லக்ஸ் சோப்பு விளம்பரத்திற்கு ஐஸ்வர்யா ராயும், பேன்டீன் சாம்பு விளம்பரத்திற்கு பிரீத்தி ஜிந்தா எல்லாத்தையும் தூக்கி எறியப் போகிறேன் எனச் ஓரக்கண்ணால் சிரித்து இரண்டு முறை சொல்ல வேண்டியுள்ளது. இதற்கு என்ன அர்த்தம்? லைப்பாய் சோப்புக்கு மட்டும் ஆண் மாடல்! ஏன் லக்ஸ் சோப்பை, விஜயை வைத்து விளம்பரப்படுத்தினால் விற்காதா? அல்லது லைப்பாய் சோப்பு ஆண்களுக்கு மட்டுமுள்ளதா?

கூல் டிரிங்ஸ்:

கூல் டிரிங்ஸ்ன்னா கொக்கோ கோலா என்று சொல்ல விக்ரம் மட்டும் போதாது கூட இரண்டு பெண் மாடல்கள் வேண்டும்!

சேவிங் லோசன்:

ஆண்கள் மட்டும் உபயோகிக்கும் சேவிங் லோசன், கிரீம் இவற்றிற்கு கூட பெண் மாடல்கள் தேவைப் படுகிறார்கள். என்ன கன்றாவிடா இது!

விளம்பரங்கள் தவிர்த்து சினிமாவிலும் பெண்மை கேவலப் படுத்தப் படுகிறது. நடிகைகளிடம் கிளாமராக நடிப்பீர்களா என்றால், கதைக்கு தேவை என்றால் கவர்ச்சி காட்டுவதில் தப்பில்லையாம்!

சீ..சீ.. நான் ஆச்சாரமான குடும்ப பெண். டூ பீஸில் நடிக்க மாட்டேன், தேவைபட்டால் சிங்கில் பீஸில் சில காட்சிகள் வருவேன்.! நீங்கள் ஏன் கவர்ச்சியாக நடித்துள்ளீர்கள் எனக் கேட்டால், கதைக்கு தேவைப்பட்டால், கவர்ச்சி காட்டுவதில் தப்பில்லையாம்! என்ன கதையா இது?

காதலனை நோக்கி ஓடி வரும் காதலி ஏன் ஸ்லோ மோசனில் ஓடி வருகிறார் எனத் தெரியவில்லை.

இதையெல்லாம் ஆணாதிக்க வக்கிரம் என்பதா? பெண்ணுரிமையின் வீழ்ச்சி என்பதா?

ஒன்னுமே புரியலே ஒலகத்திலே!


Read more...

அந்த இரண்டு ரூபாய் எப்படி வந்தது?

Saturday, July 09, 2005

பெரும்பாலும் வலைப்பூக்கள் வயது வந்தவர்களுக்கு மட்டும் எழுதப்படுவதால், நாற்பது வயது வரையுள்ள குழந்தைகள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். நம் ஜனாதிபதி. அப்துல் கலாம் அவர்கள் சமீபத்தில் நாகை வந்த போது என்னிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க மிகுந்த வேலைகளுக்கு மத்தியில் (இதுதான் இப்ப தமிழ்மணத்தில் ஸ்டைல்) இப்பதிவை எழுதுகிறேன்.

ராஜாவும், ஹாஜாவும் நண்பர்கள். அவர்களின் தோழி பூஜாவின் கல்யாணத்திற்கு ஒரு அன்பளிப்பு செய்ய விரும்பி தலா 25 ரூபாய் போட்டு ஒரு சிறிய சுவர்க்கடிகாரம் ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள். பணத்தை காசாளரிடம் கொடுத்து விட்டு சென்று விடுகிறார்கள்.

இவர்களைப் பற்றி நன்கு அறிந்த கடைக்காரர், பணத்தைக் செலுத்தி விட்டு தூரத்தில் சென்று கொண்டிருக்கும் அந்த இருவரிடமும், கடைக்கார பையனிடம் ஐந்து ரூபாயை கொடுத்து நான் தந்ததாக சொல்லி கொடு என்று ஐந்து ரூபாயை கொடுத்து அனுப்புகிறார்.

ஐந்து ரூபாயை கையில் வைத்திருக்கும் கடைப்பையன், எப்படியும் அவர்கள் பணத்தை கொடுத்து விட்டு சென்று விட்டார்கள். இதில் எவ்வளவு திருப்பி கொடுத்தாலும் அவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள். ஆகவே, இரண்டு ரூபாயை தனக்கு எடுத்துக் கொண்டு (வேலை முடிந்ததும் கடலை மிட்டாய் வாங்கித் தின்ன?) மீதி மூன்று ரூபாயை அவர்களிடம் கொடுத்து, விபரத்தை சொன்னான். அவர்களும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு, கிடைத்த மூன்று ரூபாயில் ஆளுக்கு ஒரு ரூபாய் ஐம்பது காசுகள் பிரித்துக் கொள்கிறார்கள்.

அன்பளிப்பு வாங்கிய வகையில் ஆளுக்கு ஒரு ரூபாய் ஐம்பது காசுகள் திரும்ப கிடைத்து விட்டன. எனில், ஒவ்வொருவருக்கும் ஆன செலவு:

இருவருக்கு (50.00- 3.00) = 47.00 ரூபாய்
திரும்ப கிடைத்தது = 3.00 ரூபாய்
சிறுவன் எடுத்துக் கொண்டது = 2.00 ரூபாய்
======
மொத்தம் 52.00 ரூபாய்
======

இருவரும் சேர்த்து முதலீடு செய்தது 50.00 ரூபாய். ஆனால் ரூபாய் 52.00 க்கு பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது? எனில் உபரியாக அந்த இரண்டு ரூபாய் எப்படி வந்தது?

Read more...

இந்த வார சிரிப்பு

Monday, July 04, 2005

ஒரு பிரபலமான கம்பெனியில் ஒருவர் மிகுந்த கஷ்டப்பட்டு வேலைக்கு சேர்கிறார். அவரை சேர்க்கும் போது முதல் மூன்று மாதங்களுக்கு உங்கள் அணுகுமுறையை வைத்துதான் பணி நிரந்தரம் கிடைக்கும் என்று சொல்லி சேர்த்தார்கள். அவரும் ஒப்புக் கொண்டு பணி செய்து வந்தார்.

வேலையில் சேர்ந்து ஒரு வாரம் கழிந்தது. வேலை மண்டை காய வைத்தது. அவருக்கு ஒதுக்கப் பட்டிருந்த தொலைபேசியிலிருந்து போன் செய்து டக்கென் சில எண்களை அழுத்தி "Bring me Coffee without suger" என்றார்.

மறு முனையில் போனை எடுத்தவர், அந்நிறுவனத்தின் இயக்குனர். கோபமாக, Idiot, Do you know withwhome you're taking? I am your Director!!" என்றார்.

உடனே, புதிதாக வேலையில் சேர்ந்தவர் மீண்டும், "Do you know with whome you're talking?" என்றார்.

அதற்கு மறு முனையிலிருந்தவர் "No" என்றார்.

"Thanks God!" என்று சொல்லி போனை பவ்வியமாக வைத்து விட்டு வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

இது போன்ற சம்பவம் உங்களுக்கு நடந்திருந்தால், அதையும் எழுதலாமே!

Read more...

அடடா...(1)

Friday, July 01, 2005

வளைந்து செல்லும் மலைப்பாதையில் ஒரு சுற்றுலா பேரூந்து முக்கி முக்கி ஏறிக் கொண்டிருந்தது. அதில் இருந்த அனைத்து பயணிகளும் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு காதல் ஜோடியைத் தவிர! வாகனங்கள் ஒதுங்க அமைக்கப் பட்டிருந்த நிறுத்தம் வந்ததும் அந்த காதல் ஜோடிகள் இறங்கிக் கொண்டார்கள்.

தோளில் கை போட்டுக்கொண்டு சிரித்துக் கொண்டே அவர்கள் அருகிலுள்ள கடையை நோக்கி
செல்லும்போது, மிகுந்த ஓசையுடன் ஒரு பாறை அவர்கள் வந்த பேரூந்தின் மீது விழுந்து பயணம் செய்த அனைவரும் நசுங்கி, இறந்து விட்டார்கள்.

அதிர்ச்சியுடன் திரும்பிய காதலன், "சே! நாமும் அந்த பேருந்தில் இருந்திருக்க வேண்டும்!" என்றான். அதுவரை ஆசையுடன் அவனுடன் வந்த காதலி, முதல் முறையாக அவனை வியப்புடன் நோக்கினாள்.

மேற்கண்ட சம்பவம் ஒரு கற்பனையே. எனினும், இதில் சில விஷயங்கள் இருக்கின்றன. அனேகமாக இதை இணையத்திலோ அல்லது ஈமெயிலிலோ படித்திருப்பீர்கள்.
நீங்கள், இதை ஏற்கனவே படித்திராவிட்டால், கீழ்கண்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்:

பாறை விழுந்து கண் முன்னே நொருங்கும் பேருந்தைப் பார்த்து, சே! நாமும் அந்த
பேருந்தில் இருந்திருக்க வேண்டும் என "ஏன்" காதலன் சொன்னான்?


விடை: யாரும் சொல்லாத பட்சத்தில் பின்னூட்டமிடப் படும்!

Read more...

சும்மா...

Monday, June 20, 2005

'சும்மா' என்ற வார்த்தையை பெரும்பாலான தென் இந்தியர்கள் அவரவர் மொழிகளில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உபயோகிக்கிறார்கள். "சும்மா" கெடந்த சங்கை ஊதிக் கெடுத்துப்புட்டான் என யாரும் "சும்மா" என்னை குற்றம் சொல்லாவிட்டால், "சும்மா" இது பற்றி அலசுவோம்.

ஏன் அதை தேவையில்லாமல் செய்தாய்? என்றால், "சும்மா" என்பது அத்தவறை சமாளிக்க உதவுகிறது.

காசு வேணாம்ப்பா. சும்மா வைத்துக் கொள்! என்றால் இலவசம் என பொருள்.

"சும்மா" சொல்லக் கூடாது சார்! இந்த வருஷம் கடுமையான வெப்பம்! என்றால் ஒரு நிகழ்வின் வீரியத்தை குறிக்க உதவுகிறது.

ஏய் கோ......., "சும்மா" கம்-முன்னு இரு - சென்னைத் தமிழில் அமைதியாக இரு என அர்த்தம்!

குறிப்பாக நம் தமிழர்கள், எதற்கெடுத்தாலும் "சும்மா" "சும்மா" (அடுக்குத் தொடர்?) "சும்மா" என்ற வார்த்தைய பிரயோகிக்கிறார்கள். ஏனெனில் பெரும்பாலும் "சும்மா" இருப்பது தமிழரின் பண்பு என ஒரு தமிழ் அறிந்த வட இந்திய நண்பர் சொல்கிறார். ஒருவகையில் இது உண்மை மாதிரி இருக்கு.

வட இந்திய மொழிகளிலோ அல்லது ஏனைய மொழிகளிலோ இது போன்ற "சும்மா" என்று அர்த்தப் படும் வார்த்தைகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் ஏறக்குறைய "Simply", "Just" என்ற வார்த்தைகள் இவ்வர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றன.

"சும்ம"னாங்காட்டியும் மழுப்பாமல் உங்கள் கருத்தையையும் "சும்மா" Comments-ல போட்டு வைத்தால் யாராவது "சும்மா" இருப்பவர்கள் பயன் பெறுவார்கள்!

Read more...

தமிழில் 'பந்தா' பண்ணுவது எப்படி?

Sunday, June 19, 2005

இப்பவெல்லாம் எப்படி 'பந்தா' பண்ணுறதுன்னு தெரியல. புதுசா எதுனாச்சும் சொன்னால், 'பந்தா'ண்ணு தெரிந்து விடுகிறது. ஏதோ எனக்குத் தெரிந்த 'பந்தாவான' தமிழ் வார்த்தைகளை பட்டியலிட்டுள்ளேன். புதுசா உங்களுக்கும் எதாச்சும் தெரிஞ்சா கொஞ்சம் போட்டு வையுங்களேன்.

  • மாப்ள், என் விசிட்டிங் கார்டை வச்சுக்க. போன மாசம்தான் 1000 பிரிண்ட் பண்ணுனேன். எல்லாம் காலி.
  • நான் ரொம்ப பிஸியா இருப்பேன். எதுக்கும் என் Mobile/Cell -ல கால் பண்ணு.
  • இப்பவெல்லாம் என் Inbox full ஆயிடுது. அவ்வளவு Email வருது.
  • சே... ஒரே புழுக்கம்பா. ஏசி இல்லாம இருக்கிறது கஷ்டம்.
  • மாமு. ஏண்டா நேத்து Online ல இருந்துக்கிட்டு Response பண்ணல? ஸாரிடா..என் lover கூட Video Chat பண்ணிக்கிட்டு இருந்தேன்.
  • என்ன மாப்ள. சூ புதுசா இருக்கு? அது என் கசின் London ல வாங்குனது. எனக்கு பிரஸன்ட் பண்ணினான்(ள்).
  • காப்பியா? டீயா மாமு? - தொண்டை கர கரப்பா இருக்கு Mountain Dev சொல்லு மச்சி.
  • சே...என்ன Pizza இது. நம்ம ஊரு மசால் தோசை மாதிரி இருக்கு?

Read more...

இவையின்றி தமிழ் சினிமா இல்லை.

Wednesday, June 08, 2005

தமிழ் சினிமா தொழில்நுட்பத்தில் உலகத்தரத்துடன் போட்டி போட்டு தயாரிக்கப்படுகின்றன. ஆனாலும் சுத்த 'தமிழ்' சினிமாவாக ஒப்புக் கொள்ளப்பட வேண்டுமெனில், சில காட்சிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அவை:

வில்லனை கைது செய்து போலீஸ் ஜீப்பில் ஏற்றும் போது, ஜீப் பின்புறமிருந்து வில்லன் தலையை வெளியில் நீட்டிக் கொண்டே:

'என்னை போலீஸ்ல மாட்டி விட்டுட்டோமுன்னு சந்தோசப் படாதே! கூடிய சீக்கிரம் வெளியில் வந்து உன்னையும் உன் குடும்பத்தையும் என்ன செய்றேன்னு பார்!

***
அடிபட்டவரை அல்லது நோயாளியை அவசர வார்டில் சேர்த்து, வெளியில் ஒருவர் குறுக்கும் நெடுக்குமாக கையைப் பிசைந்து கொண்டே நடந்து கொண்டிருப்பார். அவரிடம் டாக்டர் ஸ்டெத்தாஸ் கோப்பை தோலில் போட்டுக்கொண்டே:

நல்ல வேலை! பேஷண்டை சரியான நேரத்தில் கொண்டு வந்தீர்கள். இல்லாவிட்டால் சொல்றதுக்கே கஷ்டமா இருக்குது!


***
ஹீரோ அப்பதான் டூயட் பாடிவிட்டு சந்தோசமாக வீட்டுக்குள் இருப்பார். அப்போது சில போலீஸ்காரர்கள் பரபரப்பாக வீட்டுக்குள் வருவார்கள்

இன்ஸ்பெக்டர்: ராமநாதனை கொலை செஞ்சதுக்காக உன்னை கைது பண்றோம்.
ஹீரோ : சார்! நான் எதுவுமே செய்யலை1 எனக்கு ஒன்னும் தெரியாது!! நான் அப்பாவி!!!
கன்ச்டபில்: (விலங்கை கையில் மாட்டிக் கொண்டே) எல்லாத்தையும் ஸ்டேசன்ல வந்து பேசிக்கோ. நட!


***
பீச்சில் காத்துக் கொண்டிருக்கும் ஹீரோயினிடம், தாமதமாக வரும் போது
ஹீரோ: என்ன மாலா, லேட்டா வந்தேண்ணு கோபமா!
ஹீரோயின்: ஹும். என்னோட பேசாதீங்க!
ஹீரோ: ஸாரி டியர். வர்ர வழில ஒரு சின்ன வேலை!
ஹீரோயின்: இதைவிட வேறு என்ன முக்கியமான வேலை?
****
ஹீரோ தீவிரமாக வில்லன்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பார். அப்போது காமெடியன் ஒரு மரப் பெட்டியை இப்படியும் அப்படியும் ஆட்டி காமெடி வில்லனை ஏமாற்றி முதுகில் ஒரு குத்து விடுவார்.
***
குழந்தையை தூக்கிக் கொண்டு வில்லன்கள் காரில் வேகமாக போகும்போது. ஹீரோ சில மீட்டர் தூரம் விரட்டிக் கொண்டே வருவார். எனினும் வில்லன்கள் வேகமாக காரில் சென்று விடுவார்கள். அப்போது ஒரு பைக் ரோட்டில் கிடக்கும், உடனே ஹீரோ அதை நிமிர்த்தி ஏறி உட்கார்ந்து கொண்டு அதோடு ஒரு காலை ஊண்றியபடியே சாய்வாக ஒரு ரவுண்ட் அடித்து விட்டு வில்லன்களை 10 நிமிசம் விரட்டுவார். விரட்டி வரும் ஹீரோவை வில்லன் ஜன்னல் வழியாக துப்பாக்கியில் சுடவேண்டும். ஆனால் ஹீரோ லாவகமாக பைக்கை ஓட்டி காரின் ஜன்னல் வழியாக வில்லனை அடித்து குழந்தையை காப்பாற்றுவார்.
***
ஒரு செய்யாத குற்றத்திற்காக தேடப்பட்டு வரும் ஹீரோ ரொம்ப நாள் கழித்து வீட்டிற்கு வருவார். அப்போது அவரின் அம்மா ஆனந்தக் கண்ணீருடன் மகனை அணைத்துக் கொண்டு மகனே எப்படிப்பா இருக்கே? என்பார். உடனே மகன், "அம்மா, நான் நிரபராதின்னு நிரூபிச்சுட்டு அந்த ராமலிங்கத்தை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பேன். அதுவரை இப்படிதாம்மா போலீசுக்கு ஒழிந்து வாழ வேண்டும்" என்பார். மகனே உனக்கு என் கையால ஒரு வாய் சோரு ஊட்டி விடுறேன்பா. உனக்கு ப் பிடித்த மீன் குழம்பும் சோறும் இருக்கு என்று நடு ராத்திரியில் ஒரு தட்டில் சாதத்தை பிசைந்து ஆசையுடன் ஊட்டி விடுவார்.
***
வில்லன்கள் ஹீரோவை ஹைவேயில் விரட்டி வருவார்கள். அப்போது இரண்டு ரோடுகள் பிரியும். ஒரு ரோட்டின் ஓரமாக சின்ன டீ கடை இருக்கும். அதில் ஒரு சிறுவன் (ஹாஜா சரீப்) இருப்பார். மூச்சிறைக்க வந்த வில்லன்களில் ஒருவன், தம்பீ, இந்த பக்கம் சிகப்பு சட்டையுடன் ஒரு ஆள் வந்தானா? என்பார். உடனே அந்த சிறுவன் "ஆமாண்ணே, இதோ அந்த ரோட்டில்தான் போனதை நான் பார்த்தேன்" என்பான். வில்லன்களும் அச்சிறுவன் காட்டும் ரோட்டில் ஓடுவார்கள். ஆனால் ஹீரோ அதற்கு மறுபுறம் உள்ள ரோட்டிலிருந்து திரும்பி வந்து, சிறுவனைத் தட்டி கொடுப்பார்.
***
வாழ்க்கை வெறுத்து கதாநாயகன் கவலையுடன் வீட்டில் இருப்பார். தற்கொலை செய்ய முடிவெடுத்து தன் கட்டில் அருகே இருக்கும் ஒரு பாட்டிலை எடுத்து மூடியை திறந்து 'மடக், மடக்' என குடித்துவிட்டு, மயங்கி விழுவார். பாட்டில் அவர் கையிலிருந்து நழுவி விழும். அதில் சிகப்பு எழுத்தில் "விஷம்" என்று எழுதி இருக்கும்.
***
இவையல்லாமல் சில முக்கியமான அம்சங்களும் உண்டு.
  • நாற்பது வயது ஹீரோ கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பார். அவர் 18 வயது ஹீரோயினுக்காக உருகி உருகி காதலிப்பார்.
  • நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, கருப்பு கூலிங் கிளாசுடன் சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டே இருட்டில் வில்லன் விகாரமாக சிரித்துக் கொண்டே திரும்ப வேண்டும்.
  • ஹீரோவை முதன் முதலில் காட்டும் போது இரண்டு நிமிடத்திற்கு அவரின் சூவை மட்டும் காட்ட வேண்டும்.
  • டைட்டிலில் பெயர் போடும்போது 'மார்க்கெட்' இல்லாத நடிகரின் பெயரப் போடும்போது நட்புக்காக என்று கொட்டை எழுத்தில் போட வேண்டும்.
  • முதன் முதலாக சென்னைக்கு வந்து விட்டதை காட்ட சென்னை சென்ரல் ஸ்டேசனையும், வெளி நாட்டுக்குப் போய் விட்டதாக சொல்ல ஒரு பற்க்கும் பிளைட்டையும் காட்ட வேண்டும். மக்கள் புரிந்து கொள்வார்கள்.
  • ஹீரோக்களுக்கு புரட்சி மலையாளி, தன்மான கன்னடன், இளைய சிப்பாய் என்ற பட்டங்களையும் மறக்காமல் போட வேண்டும்.

இன்னும் சில காட்சிகள் உங்கள் மனதை கவர்ந்திருக்கலாம். அதையும் கொஞ்சம் எழுதிப் போடுங்களேன். புதிதாக தமிழ் சினிமா எடுப்பவர்களுக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும்.

Read more...

தொலைக்காட்சி நோயர்களுக்கு...

Tuesday, May 10, 2005

தகவல் தொழில்நுட்பம் தந்த தலைவலிகளில் தொலைகாட்சியும் ஒன்று என சொல்வோர்களுடன் நானும் சேர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன். உலக தொலைக் காட்சிகள் தங்கள் பாணியில் நிகழ்சிகளை நடத்திக் கொண்டு நாளொரு வண்ணம் புதுப் புது நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் பொழுது போக்கு சாதனமாக இருந்து வருகின்றன.
ஆனால், தமிழக தொலைக்காட்சி நேயர்களின் அல்லது அல்லது நோயர்களின் பாடுதான் பாவம். சன் டீவியும் ஜெயா டீவியும் மாறி மாறி நேயர்களை குழப்பி வருகின்றன. விளம்பரங்களுக் கிடையில் வரும் செய்திகளை விரும்பி பார்ப்பவர்களில் நானும் ஒருவன். சன், ஜெயா இரண்டையும் மாறி மாறி பார்த்து விட்டு மண்டை காஞ்சதுதான் மிச்சம்.
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல் செய்திகள் என்ற பெயரில் ஒருவர்மீது ஒருவர் மாறி மாறி குற்றச் சாட்டுக்களை சொல்லி கொள்கின்றனர். இரண்டு கட்சிகளும் தங்கள் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்து கொள்ளலாம். அதுக்காக இப்படியா?
இரு கட்சியினரும் கள்ள ஓட்டு போடவும் கலவரம் உண்டு பண்ணவும் அடியாட்களையும் குண்டர்களையும் திருமண மண்டபங்களில் தங்க வைத்திருப்பதாக இரு செய்திகளுமே சொல்கின்றன. இன்னும் ஒருபடி மேலே போய் திமுகவினர் கள்ள ஓட்டு போட 8-10 வயது சிறுவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திருப்பதாக திரும்பத் திரும்ப ஜெயா டீவி சொல்கிறது. கொஞ்சமாவது லாஜிக் வேண்டாம்?
பொய் செய்திகளை விடுங்க, சாதாரன செய்திகளுக்கிடையில் என்ன படிக்கலாம், சிறப்புக் கண்ணோட்டம் போன்ற நிகழ்சிகள் வேறு. இவை பயணுள்ளவையாக இருந்தாலும் அதற்கான நேரம் ஒதுக்கி சொல்ல வேண்டியதுதானே. அரை மணி நேரமும் ஏதாவது செய்தி சொல்லவேண்டும் என்று யார் அழுதது? உருப்படியான செய்தி ஏதும் இல்லாவிட்டால் இருப்பததை மட்டும் சொல்லி வேறு நிகழ்ச்சிய போட வேண்டியதுதானே.
இதாவது பரவாயில்லை சீரியல் அடிமைகளின் நிலைமைதான் ரொம்ப மோசம். சமீபத்தில் சன் டீவியில் ஒளிபரப்பாகும் "கணவருக்காக" தொடர்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் தன் கணவனுக்காக போராடும் ஒரு அபலைப் பெண்ணின் கதையை சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஏதாவது சஸ்பென்ஸ் வைக்க வேண்டும் என்பதற்காக எதையாவது வைத்து விட்டு மறுநாள் அது கனவு போலவும் நினைத்துப் பார்ப்பது போலவும் காட்டி பார்ப்பவர்களை கேணையனாக்குகிறார்கள்.
இன்னும் எத்தனை சீரியல்களில்தான் ராதிகா தியாகி வேடம் போடப்போகிறார் என்று தெரியவில்லை? இதுவரை நடித்த மூன்று சீரியல்களிலுமே தியாகியாக (சுதந்திர போராட்ட தியாகி அல்ல) பெண்களின் கண்ணீரை வெங்காயம் வர வழைப்பதை விட வரவழைக்கிறார்.
எல்லா சீரியல் கூத்தும் சன் டீவியில் மட்டும்தான் இருக்கிறது ஜெயா டீவியில் இல்லையா என்கிறீர்களா? அந்த சீரியல்களையெல்லாம் யார் பார்க்குறது?
இது அல்லாமல் இந்தியத் தொலைகாட்சிகளில் முதன் முறையாக என்ற அறிவிப்புடன் டப்பா தமிழ் படத்தை ஒளி பரப்புகிறார்கள். எந்த இந்திய தொலைக்காட்சி (அந்தந்த மாநில மொழிகள் படம் தவிர) தமிழ் படத்தை ஒளி பரப்புகிறது? உலக தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என்று கூட சொல்லலாம் தானே?
மற்றபடி பெப்சி உமாவிடம் போன் பண்ணுபவர்கள் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, உங்க குரல் ரொம்ப இனிமை, ரொம்ப நாள் முயற்சி செய்து இப்பதான் லைன் கிடைச்சுது என்று சொல்லாமல் இருக்க மாட்டார்கள். பதிலுக்கு உமாவும் ரொம்ப நன்றிங்க என்று சொல்வார் (தமிழ் பண்பாடு?).
சிட்டிபாபு, அர்ச்சனா போன் பண்ணிவிட்டு பேசுபவரின் ஊரிலிருந்து அல்லது பக்கத்து ஊரிலிருந்து பேசுவதாக சொல்லி உதார் விடுவார். பேசுபவரும் அதை நம்பி ஏமாளியாக பேசுவார். யாருமே (மொபைலில்) அழைக்கும் நம்பரை பார்ப்பதில்லையா அல்லது அழைக்கப்படும் நேயரிடம் கால்லர் ஐடி வசதி இல்லையா? ஹி..ஹி.. கோக்கரக்கோ குமாங்கோ.
மற்றபடி வேறு என்ன? பதில் போடுங்க அல்லது நீங்களும் சேர்ந்து தாளிங்க.. நன்றி. நேயர்களே! வாணாக்கம்!

Read more...

கிரிக்கெட் ம(ட்)டையர்கள்

Saturday, April 09, 2005

ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலும் சரி பாகிஸ்தானிலும் சரி. கிரிக்கெட் போட்டி என்ற பெயரால் மக்களை முட்டாளுக்கும் திருவிழா நடந்து வருகிறது. 11 முட்டாள்கள் விளையாடும் விளையாட்டை 11000 முட்டாள்கள் ரசிக்கிறார்கள் என்று பெர்னாட்ஷா சொன்னார்.
கிரிக்கெட்டின் பெயரால் இந்திய மக்களின் உழைக்கும் நேரமும் கோடிக்கணக்கான ரூபாய் பணமும்தான் வீணடிக்கப் படுகிறது. இதை விட கேவலம் கிரிக்கெட்டின் மீதான அபிமானத்தை வைத்து தேசபக்தி அளவிடப் பட்ட காலமும் உண்டு.
பண்டைய ரோம மன்னர்கள் இளைஞர்களால் மகுடத்திற்கு பாதகம் வந்து விடக் கூடாது என்ற சூழ்ச்சியில் ஒலிம்பிக் விளையாட்டிற்க்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் இளைஞர்களை கவனம் செலுத்த வைத்தார்கள். அதேமாதிரி? சூழ்ச்சிதான் கிரிக்கெட் மீதான பைத்தியமாக்கும் போட்டிகளும் என்பதை அறிந்தவர்கள் எத்தனை பேர்?
கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை நினைவில் வைத்திருக்கும் பைத்தியங்களிடம் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெயர் வேண்டாம், தற்போது நடந்த கார்கில் யுத்த தியாகிகள் சிலர் பெயராவது கேட்டால், டக் அவுட் ஆன கங்குளி முழி முழிப்பார்கள்.
சாதாரண குளிர்பானம் கூட நல்லது என்று சொல்ல டெண்டுல்கர் தேவை படுகிறார். அவர் ஸ்பான்சர் அல்லாத மற்ற குளிர்பாணத்தை அவ்வாறு சொல்லி விடுவாரா? அதற்காக அவருக்கு ஸ்பான்சர் கொடுக்கும் தொகையை நுகர்வோர் தலையில் கட்டுவதை அறியாமலா இருக்கிறோம்?
சாதாரண பொருளை பிரபலமானவர்களால் விளம்பரப் படுத்துவதன் மூலம் அதற்க்கு கிரிக்கெட் ரசிகனல்லாத சாமானியனும் அதிக விலை கொடுக்க நிர்ப்பந்திக்கப் படுகிறான்.
இத்தகைய கிரிக்கெட் விளையாட்டால் என்ன பயன்? கேட்டால் நாடுகளுக்கிடையே நட்புறவு வளரும் என்று ஒன்றுக்கும் உதவாத சப்பை கட்டு கட்டுவார்கள். அப்படி என்றால் இந்தியாவும் பாகிஸ்தானும் நல்ல நட்பு நாடுகளாக அல்லவா இருக்க வேண்டும்? ஆறு மாதத்திற்கு இந்தியா, பாகிஸ்தான் எல்லை தாண்டும் தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்லி படைகளை எல்லையில் குவிக்கும். அடுத்த ஆறு மாததிற்க்கு பிறகு அவற்றை குறைத்துக் கொண்டு இரு நாட்டிற்க்குமிடையே பஸ் விடுகிறோம் ரயில் விடுகிறோம் மற்றும் ஒண்டே மேட்ச் வைக்கிறோம் என்று முட்டாளாக்குவார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் 10 லட்சம் கிரிக்கெட் பைத்தியங்கள் இருக்கும். அவர்களுக்கு கொஞ்சம் உற்சாகப் படுத்த இந்த முறை சென்னையில் நடக்க இருந்த ஒருநாள் போட்டியை "ஜக்மோகன் டால்மியா" ரத்து செய்துவிட்டு வேறு மாநிலத்திற்கு அந்த வாய்ப்பை கொடுத்து விட்டாராம். காரணம் அவர்மீது தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தொடர்ந்த வழக்கு.
என்ன விளையாடுறீங்களா?

Read more...

இவர்களுக்கு வேறு வேலை இல்லையா?

Wednesday, April 06, 2005

தமிழக சினிமாக்காரர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் வேறு வேலையே இல்லை போலும். நடிக்க வந்துவிட்டு அரசியலும், அரசியல் பண்ண வந்துவிட்டு நடித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

சமீபத்திய உரசல் தமிழ் திரை படங்களுக்கு தமிழிலேயே பெயரிட வேண்டுமாம். இதற்கு தமிழ் மொழிப்போர் என்றும் பெயராம். முதலில் திரைப் பெயர் தமிழில் இருக்க வேண்டும் என்பார்கள். பிறகு தமிழ் நடிகர்கள் பெயரும் தமிழில் இருக்க வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள் (உ.ம். சிம்ரன்=சின்னம்மா, திரிஷா=முத்தம்மா etc).

நடிகர்கள் தரப்பில் நாங்கள் நடிக்கும் படங்களுக்கு என்ன பெயரிடுவது என முடிவு செய்வது பணம் போட்டு தயாரிக்கும் தயாரிப்பாளர்கள்தானே தவிர அரசியல்வாதிகள் அல்ல; நாங்கள் என்றைக்காவது அரசியல் கட்சிகளின் பெயரை மாற்றச் சொல்லி இருக்கோமா? என்று வேடிக்கையாகவும் "மாமனாரின் இன்பவெறி" என்று கூடத்தான் தமிழ் பெயரில் படம் வந்தது. அதுக்காக அவ்வகை படம் நல்ல படமாகி விட முடியுமா? என்றும் நடிகர் நாசர் கேட்கிறார்.

தமிழ்நாட்டில் படமெடுத்துக் கொண்டு தமிழ் மக்களின் பணத்தில் சம்பாதித்து கொண்டிருக்கும் இவர்களுக்கு (நடிகர்களுக்கு) தமிழில் பெயர் வைப்பதில் என்ன கஷ்டம்? Sorry சிரமம்? (கவனிக்க: அந்நிய மொழி ஊடுருவல் ).

பெங்களூரில் ஒழுங்கா தமிழ்படம் திரையிட முடியவில்லை. தியேட்டரை கொளுத்துறான். ஒவ்வொரு மாநிலத்திலேயும் ஒவ்வொரு சென்சார் விதிமுறை. தமிழ் நாட்டில் சென்சாரில் எதிர்க்கப்பட்ட படம் மும்பையில் சென்சார் இன்றி வரலாமாம்.

அது கிடக்கட்டும் தமிழ்பெயரில் படம் எடுத்துதான் தமிழை வளர்க்கப் போறாங்களா? அதில் இருக்கும் கலாச்சார சீரழிவை எப்போது எதிர்ப்பதாக திட்டம்? மணிரத்னம் எடுத்த படங்கலெல்லாம் சுத்த தமிழ் பெயர்கள்தான். அதில்தான் காதலி, காதலனை வாடா போடா என்று சொல்லி காதலிப்பாள்.

நடிக்க வந்துவிட்டு நடித்தோமா காசு பார்த்தோமா என்று போகாமல் மார்க்கெட் டல்லடிக்கும் நேரங்களில் அரசியலில் பரபரப்பை கிளப்புவதுதான் ரஜினி ஸ்டைல். பாட்சா பட வெள்ளி விழாவில் அரசியல்வாதிகளை (ஜெயலலிதாவை) சீண்டிய ரஜினி 10 வருடம் இப்போ வருவேன் அப்போ வருவேன் என்று சொல்லியே காலத்தை ஓட்டிவிட்டு, நான் குதிரை; யானை வீழ்ந்தால்தான் எழ முடியாது. ஆனால் நான் குதிரை சீக்கிரம் எழுந்துவிட்டேன் என்று சொல்லி அம்மாவின் காலடி சரணம் அடைந்து விட்டார்.

விஜய்க்கும் அஜீத்திற்கும் வேறு பிரச்சினை. இவர்கள் நடிக்கும் படங்களில் சண்டை இருக்கிறதோ இல்லையோ அதற்கு முன் வெளியிடப் படும் போஸ்டர்களில் "சொல்லாமல் அடிப்பேன்" போன்ற வார்த்தை யுத்தம்.

தற்போது விஜயகாந்த். இவருக்கும் தமிழ் நாட்டின் முதல்வராகி விட வேண்டுமென்ற ஆசை விடவில்லை. தனக்கு கூடும் விசிலடிச்சான் குஞ்சுகளின் ஆர்ப்பரிப்பை பார்த்து விட்டு நானும் இப்போ வருவேன் அப்போ வருவேன் என்று வசனம் பேச ஆரம்பித்து விட்டார். இவர் வழி தனிவழியாம்!

இன்னும், நேற்று வந்த தணுஸ், சிம்பு மட்டும்தான் அரசியலுக்கு வர வேண்டியிருக்கு.

தமிழக மக்களை ஆண்டவந்தான் காப்பாத்தனும்!

Read more...

About This Blog

Lorem Ipsum

Back to TOP